Jump to content

கோட்டபாயவின் நடுநிலை வெளிவிவகாரக் கொள்கை வெற்றியளிக்குமா?  - யதீந்திரா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டபாயவின் நடுநிலை வெளிவிவகாரக் கொள்கை வெற்றியளிக்குமா?  - யதீந்திரா

நாங்கள் ஒரு சிறிய நாடு. உலக அதிகார மோதல்களுக்குள் நாம் தலையிட விரும்பவில்லை. நாங்கள் ஒரு நடுநிலையான வெளிவிவகாரக் கொள்கையையே கடைப்பிடிக்க விரும்புகின்றோம் – இது கோட்டபாய தனது பதவியேற்பு உரையில் கூறிய விடயங்கள். இலங்கையின் அரசியல் வரலாற்றில் நடுநிலை வெளிவிவகாரக் கொள்கை என்பது புதிய விடயமல்ல. வெளிவிவகாரக் கொள்கையில் நடுநிலை என்னும் நிலைப்பாட்டின் பிதாமகர் பண்டாரநாயக்க ஆவார். இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை என்பது இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்த இரண்டு பிரதான கட்சிகளின் கொள்கை நிலைப்பாட்டுடன் தொடர்புபட்ட ஒன்றாகும். இதன் பிதாமகர்களாக ஜக்கிய தேசியக் கட்சியின் ஸ்தாபகரான னு.ளு.சேனநாயக்கவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகரான பண்டாரநாக்கவுமே இருக்கின்றனர். இன்றுவரை இவ்விருவரும் போட்ட அடித்தளத்தில்தான் இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை நகர்ந்திருக்கின்றது அல்லது நகர்த்தப்பட்டிருக்கின்றது.

சேனநாயக்க வழிவந்த ஜக்கிய தேசியக் கட்சியின் வெளிவிவகாரக் கொள்கை என்பது முற்றிலும் மேற்கு சார்ந்தது. வெளிவிவகார விடயங்களில் நடுநிலையாக நிற்பது என்பது, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வழிவந்த மரபாகும். இதனை பண்டாரநாயக்கவின் வார்த்தையில் கூறுவதானால் : சிறிலங்கா எந்தவொரு குறிப்பான அதிகார மையத்தோடும் அல்லது கருத்தியலோடும் இணைந்திருக்க வேண்டியதில்லை. எங்களுடைய நாட்டிற்கு பொருத்தமான சமூகமொன்றை கட்டியெழுப்ப வேண்டும். அதற்கான விடயங்கள் முதலாளித்துவ மேற்குலகில் இருந்தாலும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் அதே போன்று, கம்யூனிச கிழக்குலகில் இருந்தாலும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதுதான் நடுநிலை வாதத்தின் தத்துவமாகும். இந்த அடிப்படையிலேயே சிறிலங்கா சுதந்திரக் கட்சி தனது வெளிவிவகாரக் கொள்கையை முன்னெடுத்திருந்தது. இந்த அடிப்படையில்தான் இலங்கை அணிசாரா நாடுகளின் அணியில் முக்கிய பங்குவகித்தது. இந்தக் காலத்தில் மேற்கு நாடுகளுடனும் நல்ல நட்புறவை பேணிக் கொள்வதிலும் அதே வேளை தாம் முற்றிலும் சோசலிச நாடுகளுக்கு சாய்வானவர்கள் அல்ல என்பதை காண்பிப்பதிலும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தெளிவான பாதையில் பயணித்திருந்தது.

அதாவது பணிப் போர் கால மோதல்களுக்குள் இலங்கை அகப்பட்டுவிடக் கூடாது என்பதில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி மிகவும் இறுக்கமான நிலைப்பாட்டை கொண்டிருந்தது. இந்த பின்புலத்தில்தான் 1947இல் ஜக்கிய தேசியக் கட்சியினால் மேற்கொள்ளப்பட்ட இங்கிலாந்து – இலங்கை பாதுகாப்பு உடன்பாட்டை விலக்கிக் கொள்வதில் பண்டரநாயக்கா வெற்றிபெற்றார். இதன் மூலம் பனிப் போர் நெருக்கடிக்குள் இலங்கை சிக்குப்படுவதை பண்டாநாயக்க வெற்றிகரமாக தடுத்திருந்தார். ஆனால் இந்த நிலைமை சோவியத் யூனியன் வீழ்ச்சியடையும் வரையில் வெற்றிகரமான கொள்கையாகவே இருந்தது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் இலங்கை வெளிவிவகாரக் கொள்கை சார்ந்த பாரிய நெருக்கடிகள் எதனையும் எதிர்கொள்ளவில்லை. ஆனால் முற்றிலும் மேற்கு சார்பான ஜக்கிய தேசியக் கட்சியின் காலத்திலேயே இந்தியாவின் நேரடியான தலையீடு நிகழ்ந்தது.

swrd

அப்போதைய ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஜக்கிய தேசியக் கட்சி – இலங்கை அதுவரை கடைப்பிடித்துவந்த அணிசாரா கொள்கையில் தளர்வை ஏற்படுத்தியதன் காரணமாகவே நெருக்கடிகளை எதிர்கொள்ள நேர்ந்தது. உண்மையில் ஜே.ஆர்.ஜெயவர்தனவின் கொள்கை நிலைப்பாடு அப்போதைய பணிப் போர் கால நெருக்கடிக்குள் இலங்கையை வீழ்த்தியது. இதன் காரணமாகவே அப்போதைய உலக ஒழுங்கில் சோவியத்தின் செல்வாக்கு மண்டலத்திற்குள் இருந்த இந்தியா சினமடைந்தது. அதன் விழைவாகவே இலங்கை விவகாரத்தில் இந்தியா நேரடியாக தலையீடு செய்தது. உண்மையில் இந்தியத் தலையீடு என்பது ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் வெளிவிவகார அணுகுமுறையில் ஏற்பட்ட தவறின் விளைவாகும்.

சோவியத்தின் வீழ்ச்சிக்கு பின்னரான உலக ஒழுங்கில் இலங்கையில் எவர் ஆட்சி செய்தாலும், விரும்பியோ விரும்பாமலோ அமெரிக்கா தலைமையிலான உலக ஒழுங்கை அனுசரித்து செல்ல வேண்டியவர்களாகவே இருந்தனர். சோவியத்தின் வீழ்ச்சிக்கு பின்னர் குறிப்பாக 1994களுக்கு பின்னர் இலங்கையின் வெளிவிவகார அணுகுமுறை என்பது முற்றிலும் விடுதலைப் புலிகளின் தனிநாட்டுக்கான போராட்டத்தை அடிப்படையாக் கொண்டே திட்டமிடப்பட்டது. இதில் ஜக்கிய தேசியக் கட்சி சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்னும் பாகுபாடுகள் இருந்திருக்கவில்லை. இரண்டு பிரதான கட்சிகளுமே, இலங்கை பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு நாடு என்னும் வகையிலேயே அதன் வெளிவிவகாரக் கொள்கை முன்னிறுத்தின. இந்தக் காலத்தில் புவிசார் அரசியல் நெருக்கடி தொடர்பில் சிந்திக்க வேண்டிய தேவையே இலங்கைக்கு இருந்திருக்கவில்லை.

Chandrika_Kumaratunga_and_Colin_Powell

இந்த பின்புலத்தில் இலங்கையின் வெளிவிவகார கொள்கை அணுகுமுறைகளை உற்று நோக்கினால், விடுதலைப் புலிகளுக்கு முன்னரான வெளிவிவகாரக் கொள்கை, விடுதலைப் புலிகளுக்கு பின்னரான வெளிவிவகாரக் கொள்கை என்னும் அடிப்படையில்தான் பிரித்து நோக்க வேண்டியிருக்கின்றது. விடுதலைப்புலிகள் காலத்தைய இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை என்பது முற்றிலும் விடுதலைப் புலிகளினால் ஏற்பட்டுள்ள பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ளுதல் என்னும் அடிப்படையில் திட்டமிடப்பட்டிருந்தது. இதுவே, இலங்கையின் அன்றைய வெளி நாடுகளுடனான உறவின் அச்சாணியாக இருந்தது. விடுதலைப் புலிகளுக்கு பின்னரான நிலைமையில்தான் இலங்கையின் இன்றைய வெளிவிவகாரக் கொள்கை தொடர்பான கரிசனை முதன்மை பெற்றிருக்கின்றது. இந்த இடத்தில்தான் சீனா என்பது பேசு பொருளாகியது. விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடிப்பதற்கான வெளிநாட்டு ஒத்துழைப்பில் சீனா முதன்மையான பங்களிப்பை வழங்கியிருந்தது. முக்கியமாக இறுதி யுத்தத்தின் போது பெருமளவிலான இராணுவ தளபாட உதவிகளை சீனா வழங்கியிருந்தது. இந்த பின்புலத்தில்தான் சீனாவிற்கும் மகிந்த ராஜபக்ச தலைமையிலான இலங்கை அராங்கத்திற்கும் இடையில் நெருக்கம் அதிகரித்தது. இது இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையில் சடுதியான மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவது தொடர்பில் பல இந்திய ஆய்வாளர்களும் தொடர்ச்சியாக எச்சரித்து வந்தனர். இவ்வாறானதொரு சூழலில்தான் 2015இல் ஆட்சி மாற்றமொன்று ஏற்பட்டது. இதற்கு பின்னால் வெளியாரின் தலையீடுகள் அதிகம் இருந்ததாக கூறப்படுகின்றது. தனது தோல்வியின் பின்னால் இந்திய உளவுத்துறை, அமெரிக்க மற்றும் பிரித்தானிய உளவுத்துறைகள் இருந்ததாக மகிந்த வெளிப்படையாகவே குற்றம் சாட்டியிருந்தார்.

Mahinda and chinese pre

இந்தப் பின்புலத்தில்தான் கோட்டபாய மீளவும் பண்டாரநாயக்காவின் நடுநிலை தத்துவத்தை நோக்கி திரும்பியிருக்கின்றார். ஆனால் பண்டாரநாயக்க நடுநிலை தத்துவத்தை முன்வைத்த காலமும் இன்றைய காலமும் ஒன்றல்ல. சீனா ஆசியாவின் ஒரு அதிகாரமாக எழுச்சியடைந்துவருவது உண்மையாயினும் கூட, இதனை அமெரிக்க – சீன பனிப்போர் காலம் என்று வரையறுக்கக் கூடிய சூழல் உருவாகிவிட்டதாக கூறமுடியாது. ஆனால் அதற்கான அறிகுறிகள் தெரிகின்றன என்பது உண்மைதான். இதனை ஒரு பல்துருவ உலக ஒழுங்கு என்று சிலர் வர்ணித்தாலும் கூட, அமெரிக்கா ஒரு உலக வல்லரசு என்னும் நிலையை இழந்துவிட்டதாக வாதிட முடியாது. ஒரு உலக வல்லரசு என்னும் நிலையில் இருக்கும் ஒரேயொரு நாடாக, இப்போதும் அமெரிக்காவே இருக்கின்றது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான், இலங்கை மீளவும் நடுநிலையான வெளிவிவகாரக் கொள்கைத் தத்துவத்தை நோக்கி பயணிக்கப் போவதான அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றது. நடுநிலையான வெளிவிவகாரக் கொள்கை என்று அழுத்திக் கூறுவதன் ஊடாக கோட்டபாய எதனை வலியுறுத்த விரும்புகின்றார்? சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் உருவாகப் போகும் பனிப் போரில் இலங்கை சிக்குப்பட்டுவிடக் கூடாது என்னும் முன்னெச்சரிக்கையுடன்தான் நடுநிலை தொடர்பில் பேசுகின்றாரா? அவ்வாறானதொரு கணிப்பு அவரிடம் இருப்பது உண்மையாயின் சீனாவை ஒரு எல்லைக்கு மேல் இலங்கைக்குள் அனுமதிக்கக் கூடாது. ஏற்கனவே சீனா எல்லை மீறியிருக்கும் விடயங்களில் ஒரு கட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டும். எவ்வாறு பண்டாரநாயக்க அமெரிக்க – சோவியத் அதிகார மோதலுக்குள் அகப்படுவதை தடுக்கும் வகையில், இங்கிலாந்து – இலங்கை பாதுகாப்பு உடன்பாட்டை விலக்கிக் கொண்டாரோ, அவ்வாறு கோட்டபாயவும் சீனாவுடனான ஹம்பாந்தோட்டை உடன்பாட்டை மீள் வரையறை செய்ய வேண்டும். ஹம்பாந்தோட்டை இராணுவ நோக்கங்களுக்கு பயன்படுத்தப்பட மாட்;டாது என்று உடன்பாட்டில் கூறப்பட்டிருந்தாலும் கூட, ஒரு வேளை இந்து சமூத்திர பிராந்தியத்தில் ஒரு யுத்தம் ஏற்படுமாக இருந்தால் சீனா ஹம்பாந்தோட்டை பயன்படுத்துவதை இலங்கையால் தடுக்க முடியாது. அவ்வாறானதொரு சூழலில் இலங்கை விரும்பியோ விரும்பாமலோ உலக அதிகார மோதலுக்குள் சிக்கப்படுவதை தவிர்க்க முடியாது. எனவே நடுநிலை கொள்கை என்பது கவர்ச்சிகரமான ஒன்றாக தெரிந்தாலும் கூட, இன்றைய உலக ஒழுங்கில் இலங்கையால் எவ்வளவு தூரம் இதில் வெற்றிகரமாக பயணிக்க முடியும் என்பது பெரிய கேள்விக்குறியே! இலங்கை நடுநிலையான வெளிவிவகாரக் கொள்கை ஒன்றில் பயணிப்பதற்கான உறுதிப்பாட்டை கொண்டிருந்தால் அதற்கு அமெரிக்கா – இந்தியா – சீனா ஆகியவற்றை சம தூரத்தில் வைத்துக் கொள்ளக் கூடிய உபாயமொன்றை கண்டுபிடிக்க வேண்டும்.

Gotabaya-Rajapaksa-and-Narendra-Modi

 

 

http://www.samakalam.com/செய்திகள்/கோட்டபாயவின்-நடுநிலை-வெள/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உக்கிரேன் ர‌ஷ்சியா பிர‌ச்ச‌னைக்கு பிற‌க்கு டென்மார்க் ஊட‌க‌ங்க‌ளும் எச்சைக் க‌ல‌ ஊட‌க‌ங்க‌ளாய் மாறி விட்டின‌ம் ந‌ண்பா......................உக்கிரேன் இஸ்ரேல் செய்வ‌து ச‌ரி என்று சொல்லுங்க‌ள் பார்த்தா ச‌ரியான‌ க‌டுப்பு வ‌ரும் ஆன‌ ப‌டியால் பார்ப்ப‌தை நிறுத்தி விட்டேன் போர் விதி மீற‌ல‌ இஸ்ரேல் செய்தும் அதை ச‌ரி என்று சொன்னால் இதை எப்ப‌டி ஏற்ப்ப‌து ந‌ண்பா.................... டென்மார்க் நாட்டின் அட‌க்குமுறை ப‌ற்றி யாழில் புது திரி திற‌ந்து உண்மை நில‌வ‌ர‌த்தை எழுத‌ போறேன் நேர‌ம் இருக்கும் போது வாசி ந‌ண்பா...........................
    • போட்டியில் கலந்துள்ள அஹஸ்த்தியன் வெற்றிபெற வாழ்த்துக்கள்! எங்கே மிச்சப் பேர் @ஈழப்பிரியன், @பையன்26?
    • த‌லைவ‌ரே பெரிய‌ப்ப‌ர் போன‌ கிழ‌மையே சொல்லி விட்டார் ம‌று ப‌திவு போட‌ முடியாது என்று சும்மா ஒரு ப‌திவு போட்டேன் ஓம் பெரிய‌ப்ப‌ர் ம‌ன‌சு மாறி இருப்பார் என்று பெரிய‌ப்ப‌ர் விடா பிடியில் இருக்கிறார் அது ச‌ரி த‌லைவ‌ரே போனா ஆண்டு நீங்க‌ள் பெற்ற‌ 5ப‌வுன்சில் ஈழ‌த்தில் பெரிய‌ மாளிகை க‌ட்டின‌தா த‌க‌வ‌ல் வ‌ருது.........கூடு பூர‌லுக்கு என்னை அழைக்க‌ வில்லை நீங்க‌ள் 2021 நான் வென்ற‌ 5ப‌வுன்ஸ்சின்  என‌து ஊரில் ஜ‌ந்து மாடி கொட்ட‌ல் க‌ட்டி விஸ்னேஸ் என‌க்கு அந்த‌ மாதிரி போகுது லொல்😂😁🤣.........................
    • துபாய் பஸ் ஸ்ராண்டை ஒட்டிய விவேகானந்தர் தெருவில் அவர் இருப்பதால் அங்கு வெள்ள பாதிப்பு இல்லை என்று அறிய கிடக்கிறது. 
    • அந்த ஜனாதிபதி கட்டிலில்... நாட்டு மக்கள் பலரும் படுத்து எழும்பியதை நாம் பார்த்தோமே...😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.