• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
Kavi arunasalam

பாழாக்கியவளை மணந்துவிடு

Recommended Posts

C9-FE9-C1-D-83-FA-4461-8-CB9-E9711-BEF2-

“வயது குறைந்த ஒரு பெண்ணை ஒரு ஆண்  பாலியல் வன்புணர்வு செய்தால், அந்த ஆணே பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும். அப்படி அந்த ஆண்  பாதிக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால் அவருக்குத் தண்டனை வழங்கப்பட மாட்டாது. அத்துடன் இத்திருமணம் இருவரதும் ஒப்புதல்களுடனேயே நடைபெற வேண்டும்

எங்கே இது நடைமுறையில் இருக்கிறது என்று பார்க்கிறீர்களா? நிச்சயமாக இது ஒன்றும் எங்களுடைய நாட்டாமையின் தீர்ப்பு அல்ல. துருக்கி நாட்டில் இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டுவர விரும்புகிறார்கள்.

இந்தச் சட்ட வரைபுக்கான விவாதமும் வாக்கெடுப்பும் இந்த வாரம் துருக்கிப் பாராளுமன்றத்தில் நடைபெற இருக்கிறது.

இப்படி ஒரு சட்டம் வந்தால் அது, சிறார்கள் மீதான சுரண்டல்களையும் அவர்கள் மீதான பாலியல் கொடுமைகளையும் அதிகமாக்கிவிடும். மேலும் `குழந்தைத் திருமணம், பாலியல் வன்கொடுமை இரண்டையும் சட்டபூர்வமாக்கி விடும்´  என்று பெண்களுக்கான உரிமைக்காகப் போராடும் Suad Abu-Dayyeh எச்சரித்திருக்கிறார்.

2016இல் இதே போன்ற ஒரு சட்டத்தை துருக்கியில் கொண்டுவர முயற்சித்து  துருக்கியிலும் வெளிநாடுகளிலும் எழுந்த எதிர்ப்பால் அது கைவிடப்பட்டிருந்தது. இப்பொழுது மீண்டும் முயற்சிக்கிறார்கள்.

ஆண்,பெண் இருபாலாரும் உடலுறவு வைத்துக் கொள்ளும் வயதெல்லை 18 என்பது துருக்கிச் சட்டத்தில் இருக்கிறது.

Share this post


Link to post
Share on other sites

பாழாகியவளை மணந்தபின் மீண்டும் வேறொரு பெண்ணை பாழாக்கினால் அவளையும் மணந்து கொள்ள வற்புறுத்துவார்களா.......!   🤔

Share this post


Link to post
Share on other sites

இஸ்லாமிய நாடுகளின் பெண்களுக்கான நீதிகளும் சட்டங்களும் வரையறைகளும் கேவலமானவை என்பது உலகறிந்ததுதான்.

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இஸ்லாமிய நாடுகளின் பெண்களுக்கான நீதிகளும் சட்டங்களும் வரையறைகளும் கேவலமானவை என்பது உலகறிந்ததுதான்.

அதற்கு காரணம் முஸ்லிம் நாடுகளின் சட்டங்கள் முஸ்லிம் மதம் சொல்கிறபடி அமைக்கபடுதே.

Share this post


Link to post
Share on other sites
18 hours ago, suvy said:

பாழாகியவளை மணந்தபின் மீண்டும் வேறொரு பெண்ணை பாழாக்கினால் அவளையும் மணந்து கொள்ள வற்புறுத்துவார்களா.......!   🤔

சாமிகளே, ஏன் உங்க சிந்தனை இப்படி போகுது?

ரெண்டாவது முறையும் தவறு செய்தால், வெட்டப்பட வேண்டும்..!

 • Like 3

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • கடந்த வெள்ளிக்கிழமை 21.02.2020 இரவு  யேர்மனி Bielefeld நகரத்தில் திருட வந்த ஒருவர் கொஞ்சம் அவதானம் இல்லாமல் நடந்திருக்கிறார் . Bielefeld  நகரில் Ummelner  வீதியில் இருந்த  அலுவலகக் கட்டிடத்தில் திருட வந்த இளைஞன் தனது சைக்கிளை அலுவலகத்துக்கு முன்னால் நிறுத்தி,  அதன்மேல் தனது  ஜக்கெற்றைக் கழட்டிப் போட்டு விட்டு அலுவலகத்தின் வாசல் கதவின் கண்ணாடியை உடைத்து உள் நுளைந்திருக்கிறான். வாசற்கதவின் கண்ணாடி உடைந்திருப்பதையும் சைக்கிள் ஒன்று அங்கே நிற்பதையும் அவதானித்த ஒரு பாதுகாவலர் உடனடியாக பொலீஸுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார். ஆனால் பொலீஸார் வருவதற்கு முன்னால் திருட வந்தவன் தப்பி ஓடி விட்டான். ஆனால் திருடுவதற்காக அங்கே  இருந்து எடுத்த பொருட்களை அவன் ஒரு இடத்தில் ஒன்றாகக் குவித்து வைத்திருந்ததை பொலீஸார் கண்டனர். கூடவே தனது அடையாள அட்டையையும் அங்கே தவற விட்டு விட்டுச் சென்றிருக்கிறான். பொலீஸாருக்கு தன்னை பிடிப்பதற்கு எளிதாக தனது சைக்கிள்,ஜக்கெற், அடையாள அட்டை எல்லாவற்றையும் வைத்து விட்டு எதற்காக அந்த முப்பது வயது இளைஞன்  அவசரமாகத் தப்பி ஓடினான் என்பது தெரியவில்லை. https://www.westfalen-blatt.de/OWL/Bielefeld/Bielefeld/4154866-Polizei-stellt-Diebesgut-sicher-Strafverfahren-gegen-Bielefelder-eingeleitet-Einbrecher-laesst-Ausweis-liegen    
  • சர்வதேசத்துக்கு மட்டுமல்ல சாதாரண பொதுமகனுக்கும் சிறீலங்காவின் உண்மை முகம் தெரியும். அதுகூடத் தெரியாமல் ஒரு பாரளுமன்ற உறுப்பினர். 
  • கும்ஸ், ரென்சன் வேண்டாம். உங்களுக்கு வயது 30க்குள்ளே என்பதால் பயப்படத் தேவையில்லை. எதற்கும் இந்த அட்டவணையைப் பார்த்து அவதானமாக நடந்து கொள்ளுங்கள்.
  • ஓம் இது ஒரு பெரிய பிரச்சனை இலங்கையில்.எங்களை மாதிரி இளசுகளை எல்லாம் முதியோர் பட்டியலில் சேத்துப்போட்டாங்கள் பாவிகள்.
  • இலங்கை அரசின் உண்மை முகத்தினை சர்வதேசம் தெரிந்து கொள்ளப் போகிறது :சி.சிறிதரன் கல்மடு வட்டார இணைப்பாளர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகளுடனான சந்திப்பு ஒன்று நேற்று பிற்பகல் ஆறு மணியளவில் இடம்பெற்றது கல்மடுவட்டார பிரதேச சபை உறுப்பினர் ச.ஜீவராசா தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ,பச்சிலைப்பள்ளி தவிசாளர் சுரேன் ,பிரதேச சபை உறுப்பினர்களான சிவமோகன் ,வீரபாகுதேவர் ஆகியோர் கலந்துகொண்டனர் இக் கலந்துரையாடலில் இதுவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பால் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்திகள் ஆராயப்பட்டதுடன் மேலும் செய்யப்பட வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது அதனைவிட குறித்த பிரதேசத்தில் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் மற்றும் அதன் தீர்வுகள் தொடர்பிலும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது இதன் போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இதுவரை எம்மால் இக் கிராமத்திற்கு பல்வேறு அபிவிருத்திப் பணிகளை செய்திருகின்றோம் அபிவிருத்தியை மட்டும் நாம் பார்க்கமுடியாது காணாமல் போனவர்களது பிரச்சனை ,காணிகள் விடுவிப்பு ,அரசியல் கைதிகளின் விடுதலை ,நிரந்தரமான அரசியல் தீர்வு என அனைத்து விடையங்களையும் சம நேரத்தில் கையாண்டு வருகின்றோம் நாளை மறுதினம் கூட ஜெனிவா கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது அதில் இலங்கை அரசின் பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர் இக் கூட்டத்தொடரிலையே இலங்கை அரசின் உண்மை முகத்தினை சர்வதேசம் தெரிந்து கொள்ளப் போகிறது இலங்கை ஐநா தீர்மானத்திருந்து விலகுவதாக அறிவிக்கப் போகிறது இலங்கை அரசு காலம் காலமாக திர்மானக்ளில் கைச்சாத்திடுவதும் கிழிப்பதும் கிழிப்பதுமாகவே உள்ளது இக் கூட்டத்தொடர் ரை தொடர்ந்து நாட்டில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது காணாமல் போனவர்களை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பின்னின்று அரசுக்கு எதிரான அழுத்தத்தினை கொடுப்பதாகவும் ,சில்வா விற்கான அமெரிக்க தடை போன்றவற்றை காரணம் காட்டி நாட்டின் அனைத்துப்பகுதிகளும் ஒரு கட்சியாக அறுதிப் பெரும்பான்மையை பெற சிங்கள அரசு பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளார்கள் ஆனால் வடக்குக் கிழக்கில் அரச முகவர்கள் ,கட்சிகள் , குழுக்கள் என நாற்பது கட்சிகள் போட்டியிட உள்ளனர் . இவர்கள் அனைவரும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு எதிராக வசைபாடப் போகின்றார்கள் ஆனால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பொது எதிரியான அரசுக்கு எதிராகவே பிரச்சாரத்தை முன்னெடுக்கப் போகிறது இத் தேர்தலில் கட்டாயம் இருபது ஆசனங்களை கூட்டமைப்பு பெற்றால் மட்டுமே வலுவான சக்தியாக இருக்க முடியும் ஆகவே எதிர் வரும் தேர்தலில் அனைவரையும் வீட்டுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். http://www.vanakkamlondon.com/இலங்கை-அரசின்-உண்மை-முகத/