• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
கிருபன்

“காவல்துறையாவதே – சுவிஸ் தரைப்படையில் பயிற்சி பெறும் எனது கனவு!” – மனுசா

Recommended Posts

“காவல்துறையாவதே – சுவிஸ் தரைப்படையில் பயிற்சி பெறும் எனது கனவு!” – மனுசா

On Jan 26, 2020

13.01.2020 சுவிற்சர்லாந்தின் தரைப்படையில் பயிற்சி பெறத்தொடங்கிய மனுசா மக்களன்பன் எதிர்வரும் நவம்பர் மாதம் வரை இப்பயிற்சியைத் தொடர இருக்கின்றார். இவர் ஏற்கெனவே சுவிற்சர்லாந்தின் காவல்துறையில் எழுதுவினைஞராக மூன்றாண்டுகள் தொழிற்கல்வியை நிறைவு செய்தவர் ஆவார். அத்தொழிற்கல்வியை மேற்கொள்கின்ற போது, காவல்துறையின் சுற்றுக்காவல் நடவடிக்கையில் இவரும் பங்குபற்றியிருந்தார். “அந்த வேளையில் தான் காவல்துறையாக வர வேண்டும்” என விரும்பினார் மனுசா. தற்போது இவர் செய்து வரும் இந்த சுவிற்சர்லாந்தின் தரைப்படைப்பயிற்சி எதிர்காலத்தில் இவருடைய கனவை நிறைவேற்றுவதற்கான முதற்படியாகும்.

CEBF97ED-4FB3-4FF7-8D23-C823EED7D98A.jpe

மனுசாவிடம் தரைப்படைப்பயிற்சி பற்றி கேட்டேன். “இப்பயிற்சியைப்பெறுவது வாழ்க்கைக்கான ஒரு கல்வியாகும். இரண்டு கிழமைகள் தரைப்படைப்பயிற்சியிலேயே ஒழுக்கம், விடாமல் போராடுதல் போன்று பலவற்றை நான் கற்றுள்ளேன். பெண்ணான எனக்கு இது ஓர் சவால் எனவே எண்ணுகின்றேன். ஒரு இலக்கை அடைவதற்கு- அதற்காகப் போராட வேண்டும்- என்று என்னை நானே ஊக்கப்படுத்திக்கொள்வேன்.”

இதே நேரத்தில் சுவிற்சர்லாந்தில் பல ஈழத்தமிழர்கள் தரைப்படையில் இருக்கிறார்கள். குறிப்பிட்டுச்சொல்வதாக இருந்தால் சுவிற்சர்லாந்தின் தரைப்படையில் உயர்ந்த பதவியில் இருக்கும் துருபன் துச்சாதனன் சூரிச் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானமும் கற்று வருகின்றார். இவர் தான் தரைப்படையில் இருப்பது பற்றி ஊடகங்களுக்கு கருத்துக்கூறுகையில் “பன்முகப்பண்பாடுகளை அறியும் வேளையில் சுவிற்சர்லாந்தின் தரைப்படைச்சீருடையில் இருப்பதை விரும்புகின்றேன்!” – எனத் தெரிவித்துள்ளார்.

455EF01E-6F7B-4CDB-B359-9216002A4979.jpe

இதே வேளை மனுசா மக்களன்பன் காவல்துறையாக வர விரும்பி, தரைப்படையைப்பயிற்சியைப் பெற்று வருகின்றவர் – தமிழுலகில் தாய்மொழியையும், கலைத்துறையில் பரதநாட்டியத்திலும் ஈடுபட்டு வருபவர்- மிக மனவலிமையுடன் தரைப்படைப்பயிற்சியை மேற்கொண்டு வருகின்றார் எனது குறிப்பிடத்தக்கதாகும்.

செய்தி: நிதுர்ஷனா ரவீந்திரன்

https://www.thaarakam.com/news/110417

Share this post

Link to post
Share on other sites

எமது மக்களின் சுயதம்பட்டத்துக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது.

பிள்ளை பொலீஸ் அலுவலகத்தில் கிளார்க் இப்போ பொலீஸ் உத்தியோகத்துக்கு முயல்கிறாவாம். சந்தோசம் ஆனால் பேப்பரில போடும் அளவுக்கு இது சாதனையா என்ன 🤦‍♂️.

எனக்கென்னமோ இது சாமத்திய வீடு மாரி ஒரு தம்பட்டம் அடிக்கும் செயல்பாடு மாரியே விளங்குகிறது.

  • Like 2

Share this post

Link to post
Share on other sites
9 minutes ago, goshan_che said:

எனக்கென்னமோ இது சாமத்திய வீடு மாரி ஒரு தம்பட்டம் அடிக்கும் செயல்பாடு மாரியே விளங்குகிறது.

முன்னணி காவல் துறையோ அல்லது தரைப்படையோ அல்லது எந்த அரச சேவையாயினும், முதலில் இருக்கவேண்டியது பொறுப்பும் அடக்கமும் ,,எவ்வளவு அதி தீவிர சாதனைகளை செய்தாலும்.

இவர் இப்பொது செய்வது, சுவிஸ் இல் அரசுக்கு ஆற்ற வேண்டிய  கட்டாய கடமை (mandatory military training).

இதை தவிர்பதற்கே, எம்மவர்களில் கணிசமானவர்கள் சுவிஸ் குடி உரிமை எடுப்பதை 40 (எனது நினைவில் உள்ளது, 50 ஆகவும் இருக்க இடமுள்ளது) வயது வரை தவிர்த்தார்கள்.  

Share this post

Link to post
Share on other sites
25 minutes ago, goshan_che said:

எனக்கென்னமோ இது சாமத்திய வீடு மாரி ஒரு தம்பட்டம் அடிக்கும் செயல்பாடு மாரியே விளங்குகிறது.

இது அவர்களாக செய்தால் நீங்கள் சொல்வது போல இருக்கலாம்.

ஆனால் ஊடகம் தானாக போய் மூக்கை நுழைத்து பேட்டி எடுத்து போட்டா அந்த பிள்ளை என்ன தான் செய்ய முடியும்?

  • Like 2

Share this post

Link to post
Share on other sites
18 minutes ago, ஈழப்பிரியன் said:

இது அவர்களாக செய்தால் நீங்கள் சொல்வது போல இருக்கலாம்.

ஆனால் ஊடகம் தானாக போய் மூக்கை நுழைத்து பேட்டி எடுத்து போட்டா அந்த பிள்ளை என்ன தான் செய்ய முடியும்?

இதென்னையா,

நீங்கள் கேள்வி பட்டதில்லையா, முன்னம் ஒரு போத்தல் மெண்டிசுக்கு வீரகேசரியில் செய்தி போடும் ரிப்போர்டஸ் கூட இருந்தவை.

மோட்டார் சைக்கிளை ஸாண்ட்டில் விட்டு படம் எடுத்து போடேக்கயே தெரியணும் இது ஆர் சொல்லி நடக்குது என்று 😂

இதை ஏன் கிருபன் இங்கே காவி வந்தார் என்பதுதான் தெரியவில்லை.

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, goshan_che said:

ஏன் கிருபன் இங்கே காவி வந்தார் என்பதுதான் தெரியவில்லை

பெயர்கள் பிடித்திருந்தன😬

மனுசா மக்களன்பன்

துருபன் துச்சாதனன்

குடும்பப்பெயர்கள் மிகவும் வித்தியாசமாக உள்ளன!

Share this post

Link to post
Share on other sites

பிழை எங்கள் மீதுதான். இப்படியான ஆக்கங்களுக்கு எதிர்வினையாற்றுவது தவறு. மிகச் சுருக்கமான இரண்டு கடியுடன் நிறுத்தினால் , சிறிது  சிறிதாக மறைந்துவிடும்.

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, கிருபன் said:

பெயர்கள் பிடித்திருந்தன😬

மனுசா மக்களன்பன்

துருபன் துச்சாதனன்

குடும்பப்பெயர்கள் மிகவும் வித்தியாசமாக உள்ளன!

பெயர் ஒரு தினுசா இருக்கே என நானும் யோசிச்சேன். சீப் பப்ளிசிட்டி தேடுவதில் உள்ள ஆர்வத்தை பெயர்களே கட்டியம் கூறுகிறன 😂

2 hours ago, Kapithan said:

பிழை எங்கள் மீதுதான். இப்படியான ஆக்கங்களுக்கு எதிர்வினையாற்றுவது தவறு. மிகச் சுருக்கமான இரண்டு கடியுடன் நிறுத்தினால் , சிறிது  சிறிதாக மறைந்துவிடும்.

உண்மை.

இதே போல் யாழ்பாண மன்னன் என இன்னொரு மறை கழண்ட கேசும் உலாவுது😂

Share this post

Link to post
Share on other sites
Just now, goshan_che said:

பெயர் ஒரு தினுசா இருக்கே என நானும் யோசிச்சேன். சீப் பப்ளிசிட்டி தேடுவதில் உள்ள ஆர்வத்தை பெயர்களே கட்டியம் கூறுகிறன 😂

உண்மை.

இதே போல் யாழ்பாண மன்னன் என இன்னொரு மறை கழண்ட கேசும் உலாவுது😂

நெதர்லாந்திலிருந்து ... 

அவரையா கூறுகிறீர்கள் ?

Share this post

Link to post
Share on other sites
40 minutes ago, Kapithan said:

நெதர்லாந்திலிருந்து ... 

அவரையா கூறுகிறீர்கள் ?

அவரேதான், இம்சை அரசன் 😂

Share this post

Link to post
Share on other sites

சுவிசிலை பல்கலை கிடைத்த்வுடன்...டாக்டராகிட்டா என்று முகநூலிலை தம்பட்டமே அடிப்பாங்கள்.. அதுக்கு ஜால்ரா போடுற கூட்டமும் ஆண்டபரம்பரை அந்தப் பரம்பரையின்னு வாசித்திட்டே போகும் கடைசியில் ஒண்ணும் இருக்காது..

Share this post

Link to post
Share on other sites

ஆமிக்கு பொலிசுக்கு பிளைட் எஞ்சினியருக்கு படிக்கப்போறதெல்லாம் ஒரு செய்தியா வெளியிடுறாங்க.....
அய்யோ....அய்யோ 😎
அது சரி உது தனிநபர் விசயமெல்லோ🤔
 
Share this post

Link to post
Share on other sites
18 minutes ago, alvayan said:

சுவிசிலை பல்கலை கிடைத்த்வுடன்...டாக்டராகிட்டா என்று முகநூலிலை தம்பட்டமே அடிப்பாங்கள்.. அதுக்கு ஜால்ரா போடுற கூட்டமும் ஆண்டபரம்பரை அந்தப் பரம்பரையின்னு வாசித்திட்டே போகும் கடைசியில் ஒண்ணும் இருக்காது..

வட அமெரிக்காவில் காசுக்கு கவுரவ கலாநிதிப் பட்டம் பெற்று கூவிக்கூவி கொண்டாடி  பாட்டி வைக்கிறதெண்டு சொல்லுறவங்கள்.

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, Kapithan said:

வட அமெரிக்காவில் காசுக்கு கவுரவ கலாநிதிப் பட்டம் பெற்று கூவிக்கூவி கொண்டாடி  பாட்டி வைக்கிறதெண்டு சொல்லுறவங்கள்.

விட்டிட்டம்...அதுஒரு காலம் இருந்ததது அண்ணா..250 டொலர் பட்டம் ..அதுக்கு ஜெர்மன் சுவிலையும் கூப்பிட்டு பாராட்டு வைத்தவை..தெரியாதே..

Share this post

Link to post
Share on other sites
48 minutes ago, alvayan said:

விட்டிட்டம்...அதுஒரு காலம் இருந்ததது அண்ணா..250 டொலர் பட்டம் ..அதுக்கு ஜெர்மன் சுவிலையும் கூப்பிட்டு பாராட்டு வைத்தவை..தெரியாதே..

இப்ப பட்டம் கொடுக்கிறத  நிப்பாட்டிப் போட்டாங்களோ.

(எமது சமூகத்திலுள்ள வறுமையின் உச்சம் ? )

Share this post

Link to post
Share on other sites

வெளிச்சம் வந்தவுடனை அதை எடுக்கிறவை விட்டிட்டினம்...அதுவரை இங்கத்தை பேப்பர் காரருக்கும் உழைப்புத்தான்.....கனடாவில் கரிபடிந்த காலம்..

Edited by alvayan

Share this post

Link to post
Share on other sites

மனுசாவுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள். துருபனையும் வாழ்த்துகின்றேன். உங்கள் எங்கள் அன்பு ஆற்றல் ஆலோசனை வருமானம் தாயகத்தில் அல்லலுறும் நம்மவர்களுக்கும் பயன்பட வேண்டும். அவர்கள் போராடியதால் இரத்தம் சிந்தியதால்  மட்டுமே உங்கள் எங்கள் குடும்பங்கள் சுவிஸ் குடிமக்களாகும் வாய்ப்பு கிடைத்தது.  புலம் பெயர்ந்த நாம் ஈழ தாயகத்துக்கு இரத்தக்கடன் செலுத்த வேண்டியவர்கள் என்பதையும்  ஒருபோதும் மறக்கக்கூடாது. மறக்க மாட்டீர்கள் என்கிற நம்பிக்கையுடன் மீண்டும் உங்களை வாழ்த்துகிறேன்.

Edited by poet

Share this post

Link to post
Share on other sites
On 1/26/2020 at 7:55 AM, goshan_che said:

இதென்னையா,

நீங்கள் கேள்வி பட்டதில்லையா, முன்னம் ஒரு போத்தல் மெண்டிசுக்கு வீரகேசரியில் செய்தி போடும் ரிப்போர்டஸ் கூட இருந்தவை.

மோட்டார் சைக்கிளை ஸாண்ட்டில் விட்டு படம் எடுத்து போடேக்கயே தெரியணும் இது ஆர் சொல்லி நடக்குது என்று 😂

இதை ஏன் கிருபன் இங்கே காவி வந்தார் என்பதுதான் தெரியவில்லை.

On 1/26/2020 at 12:55 PM, goshan_che said:

பெயர் ஒரு தினுசா இருக்கே என நானும் யோசிச்சேன். சீப் பப்ளிசிட்டி தேடுவதில் உள்ள ஆர்வத்தை பெயர்களே கட்டியம் கூறுகிறன 😂

உண்மை.

இதே போல் யாழ்பாண மன்னன் என இன்னொரு மறை கழண்ட கேசும் உலாவுது😂

பேச முன்னர் ஒரு தரம் யோசி 
எழுதுமுன்னர் 2 முறை யோசி என்பார்கள் 

உங்கள் கருத்து ஏற்புடையது 
ஆனால் வார்த்தைகள்  அனாவசியமானவை 
இப்போ பேஸ்புக்கில் தட்டினாலே பல போட்டோக்களை எடுக்க முடியும் 
இது அவர் தனது சொந்த முகநூலில் ஏற்றிய படங்கள் 

அதை ஒரு குறுக்கு  தடவி எடுத்து தனது செய்தி பசியை தனித்திருக்கிறது. 

தமிழ் ஊடகம் என்று ஒன்று இல்லை 
காரணம் எந்த மூதேவியும் எனக்கு தெரிந்து குறைந்த பட்ஷம் 
ஒரு எழுத்து வகுப்புக்கு கூட போனதில்லை. 

சாதாரணமாக இங்கு நீங்கள் எந்த துறையில் பட்டம் எடுத்தாலும்  
ஜெனரல் கிளாஸ் என்று இரண்டு எழுத்து கிளாஸ்கள் பாஸ் பண்ணி இருக்க வேண்டும். 

Share this post

Link to post
Share on other sites

செய்தி: நிதுர்ஷனா ரவீந்திரன்

இவரும் அங்குதான் வசிக்கிறார் 
ஒரு வேலை பெண்களை வலிமை படுத்தும் எண்ணம் இருந்து இருக்கலாம். 

ஒன்று மட்டும் உண்மை அமேரிக்கா கனடா ஜெர்மனி போல அல்ல 
சுவிஸில் படித்து பாஸ் பண்ணுவது என்பது கல்லில் நார் உரிப்பதுபோலதான் 

ஆனாலும் ஜேர்மன் எமது இளைய தலைமுறை நான் பார்த்த மட்டில் 
மிகவும் முன்னேறி இருக்கிறார்கள் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும்விட 

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.