Jump to content

யாழ். பல்கலை வளாகத்தில் பௌத்த விகாரைக்கான கலசம் வைக்கும் நிகழ்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Kili-2.jpg

யாழ். பல்கலை வளாகத்தில் பௌத்த விகாரைக்கான கலசம் வைக்கும் நிகழ்வு

கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரைக்கான கலசம் வைக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) காலை 6.15 மணியளவில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, குறித்த பல்கலைக்கழக வளாகத்தில் நான்கு வணக்கஸ்தலங்கள் அமைப்பதற்கு தலா ஒரு ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டது.

எனினும் அந்த இடத்தில் ஏனைய வணக்கஸ்தலங்களை அமைப்பதற்கு சம்மந்தப்பட்டவர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

நான்கு வணக்கஸ்தலங்களும் சம அளவு உயரத்தை கொண்டதாக அமைய வேண்டும் என்பது பல்கலைக்கழகத்தின் ஏற்பாடாகும்

இந்த நிலையில் இந்து வணக்கஸ்தலம் அமைப்பதற்கு எவ்வகையான தெய்வ வழிபாட்டினை மேற்கொள்வது என்பது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படாமலும் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் கோயிலை கட்டுவதற்கான இழுபறி நிலை காணப்படுகின்றமையாலும் குறித்த வணக்கஸ்தலம் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இதேவேளை கிறிஸ்தவ வணக்கஸ்தலம் அமைப்பதற்காக ஏற்பாடுகளை கத்தோலிக்க மறைமாவட்டம் ஏற்பாடுகளை செய்திருந்தது.

குறித்த ஏற்பாடுகளில் ஏற்பட்ட தாமதம் குறித்து பொதுவான நிலைப்பாடு எடுப்பது தொடர்பாகவும் தென்னிந்திய திருச்சபையின் பேராயர் கலாநிதி டானியல் செ.தியாகராஜா, பல்கலைக்கழக பீடாதிபதி ஏ.அற்புதராஜா பேசியிருந்தார்.

எனினும் குறித்த வணக்கஸ்தலத்திற்கான வரைபடம் தயாரிக்கப்பட்டதாக கூறப்பட்ட போதிலும் அது இன்றுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், கிறிஸ்தவ வணக்கஸ்தலத்தினை பொது வழிபாட்டிற்கமைவாக கட்டுவதற்கு தென்னிந்திய திருச்சபை முழுமையான ஒத்துழைப்பினை வழங்கும் என பேராயர் தெரிவித்திருந்தார்.

இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் வணக்கஸ்தலத்தினை அமைத்து கத்தோலிக்கர்கள், கிறிஸ்தவர்கள் அனைவரும் வணங்கககூடிய வகையில் பொதுவான கட்டடத்தினை அமைப்பதற்கான திட்டம் கைவசம் உள்ளதாகவும் பல்கலைக்கழக சமூகம் சம்மதம் தெரிவிக்குமிடத்து பொறுப்பேற்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

http://athavannews.com/யாழ்-பல்கலை-வளாகத்தில்-ப/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவன் ஏற்கெனவே எங்கே எப்படி கட்டவேண்டும் என்று திட்டம் போட்டு வைத்துள்ளான். உடனே செய்து முடித்து உரிமையும் கொண்டாடுறான். எங்கடையலும் இருக்குதுகள் ஆற அமர்ந்து, குலாவி முடிவெடுக்கிறதுக்கிடையில் அவன் அடுத்த விகாரைக்கு அடிக்கல் போட்டுவிடுவான்.

Link to comment
Share on other sites

6 hours ago, தமிழ் சிறி said:

நான்கு வணக்கஸ்தலங்களும் சம அளவு உயரத்தை கொண்டதாக அமைய வேண்டும் என்பது பல்கலைக்கழகத்தின் ஏற்பாடாகும்

சம அளவுல வணக்கத்தலங்களை அமைகிறது நல்ல விஷயம்.

இதுல தமிழ்ச் சனம் வழமைபோல எவனாவது செய்யட்டும் என்று ஆளுக்காள் காத்திருக்கீனம் போலவிருக்கு.

Link to comment
Share on other sites

21 hours ago, தமிழ் சிறி said:

ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் கோயிலை கட்டுவதற்கான இழுபறி நிலை காணப்படுகின்றமையாலும் குறித்த வணக்கஸ்தலம் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இலங்கைல இருக்கிற சைவப் பெரியார்கள் தங்கட சொந்த பெயர், புகழ்களுக்காக, தங்கட குடும்ப சொத்தாக அரண்மனைகளை கடுறார்கள் ஒழிய, இது போன்ற நல்ல வேலைகளை செய்ய முன்வருவதில்லை. 

அப்பிடியான சுயநலவாதிகள் ஒருபக்கம் இருக்க, நல்லூர் கோவில் போன்ற கோவில்கள் நினைச்சால் ஒரு கோவில் கட்டுறது சின்ன விஷயம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.