Jump to content

மீண்டும் கண்கலங்கினார் நடிகர் சூர்யா !


Recommended Posts

சென்னை சோழிங்கநல்லூரில் அகரம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சூர்யா, உணர்ச்சிவசப்பட்டு மீண்டும் கண்கலங்கினார்.

சென்னை சோழிங்கநல்லூர் சத்யபாமா கல்லூரி வளாகத்தில் “அகரம் அறக்கட்டளை 10 ஆண்டுகளாக கடந்து வந்த பாதை” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நடிகர் சூர்யா, அவரது தந்தையும் நடிகருமான சிவக்குமார், அவரது சகோதரரும் நடிகருமான கார்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அகரம் நிர்வாகிகள் மற்றும் அறக்கட்டளையின் மூலம் பயின்று வரும் மாணவர்கள் 3 ஆயிரம் பேரும் நிகழ்வில் பங்கேற்றனர்.

முதலாவதாக பேசிய நடிகர் சிவக்குமார், எத்தனை படங்கள் நடித்து கோடி கோடியாய் சம்பாதித்தாலும் அகரம் தான் சூர்யாவின் அடையாளம் என்றும், உழவன் பவுண்டேசன் தான் கார்த்தியின் அடையாளம் என்றும் கூறினார்.

சிவக்குமாரைத் தொடர்ந்து பேசிய நடிகர் கார்த்தி, தன்னை யாருடனாவது ஒப்பிடும் தவறான பழக்கம் தனக்கு இருந்தது என்றார். அப்படி இருக்கக் கூடாது என்றும், நாம் யாரை விடவும் உயர்ந்தவர்களோ தாழ்ந்தவர்களோ இல்லை, ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள் என்றும் கூறினார்.

இறுதியாக மேடையேறிய நடிகர் சூர்யா, கலகலப்புடன் சிரித்துக்கொண்டே பேச்சைத் தொடங்கினார். பின்னர் அறக்கட்டளை நிர்வாகிகளின் பங்களிப்புகள் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய சூர்யா, அறக்கட்டளையின் பொறுப்பாளரான ஜெயஸ்ரீ என்பவரை பாராட்டி பேசும்போது அவரது மகனை கட்டியணைத்து கண்கலங்கினார்.

https://www.polimernews.com/dnews/98331/மீண்டும்-கண்கலங்கினார்நடிகர்-சூர்யா-!

 

கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும் அகரம் தான் என் அடையாளம் - நடிகர் சூர்யா

அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருப்பதாகவும், மாணவர்களை ஆசிரியர்கள் சாதிப் பெயரை சொல்லி திட்டுவது தொடர்ந்து வருவதாகவும் நடிகர் சூர்யா ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.

நடிகர் சூர்யாவின் "அகரம் அறக்கட்டளை" துவங்கப்பட்டதன் 10-ம் ஆண்டு விழா சென்னையில் தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில், நடிகரும், சூர்யாவின் தந்தையுமான சிவக்குமார், சகோதரர் கார்த்தி மற்றும் அகரம் அறக்கட்டளையில் பயின்ற மாணவர்கள் திரளானோர் பங்கேற்றனர். விழாவின் தொடக்கமாக மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் பேசிய சூர்யா,... குடும்பம், சமூகம் மற்றும் செய்யும் தொழில் ஆகிய மூன்றுக்கும் மாணவர்கள் சரிசமமாக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நடிப்பின் மூலம் கூடுதலாக சம்பாதித்து அகரம் அறக்கட்டளையின் வாயிலாக இன்னும் அதிகமாக உதவுவேன் என்று உறுதியளித்த அவர், சமூகத்தை பற்றியும் சிந்திப்பதுதான் வாழ்க்கை என்றார்.

பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் சாதிப் பெயரை சொல்லி திட்டுவது போன்ற நிகழ்வுகள் வருத்தமளிப்பதாகவும் சூர்யா கூறினார்.

அறக்கட்டளை நிர்வாகிகளின் அர்ப்பணிப்பு உணர்வை குறிப்பிட்டு பேசிய சூர்யா, குடும்பத்தைக் காட்டிலும் அகரம் அறக்கட்டளைக்காக அதிக நேரம் செலவழிக்கும் ஜெயஸ்ரீ-யின் குழந்தையை ஆரத்தழுவி கண்கலங்கினார்.

முன்னதாக பேசிய நடிகர் சிவக்குமார், இன்னும் 100 படங்களில் நடித்து கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும், "அகரம்" தான் சூர்யாவின் அடையாளம் என்று பெருமிதத்துடன் கூறினார்.

https://tamil.news18.com/news/entertainment/actor-suriya-speech-at-agaram-foundation-san-247321.html

 

இவ்விழாவில் நடிகர் சிவக்குமார் பேசுகையில்,

“உங்களுக்கெல்லாம் அகரம் என்கிற அறக்கட்டளை இருக்கு, அதன் உரிமையாளர் ஒரு நடிகர் இருக்கிறார், இன்னொரு ஹீரோ அவருக்கு உதவியாக இருக்கிறார்.

நான் பிறந்தபோது எனக்கு யாரும் இல்லை. நான் பிறந்து ஒரு வயது இருக்கும்போது என்னுடைய தந்தை இறந்துவிட்டார். அவர் சிவப்பா, கருப்பா என்று கூட தெரியாது. எனக்கு நான்கு வயதிருக்கும்போது, எஸ் எஸ் எல் சி படித்து முடித்து கல்லூரிக்கு செல்ல வேண்டிய 16 வயது அண்ணன் பிளேக் நோயால் இறந்துபோனார்.

என்னுடைய கிராமங்களில் உச்சக்கட்ட பஞ்சம். கம்பு, கேழ்வரகு, சாமை போன்றவை விளையவில்லை மனிதனின் உயிரை கொல்லும் எருக்கஞ்செடி, அரளிவிதை வளர்ந்தது. அந்த மாதிரி கடுமையான சூழ்நிலையில் நான் பிறப்பதற்கு முன்பு என்னுடைய ஒரு அண்ணன், எட்டு வயதில் அக்கா இறந்துவிட்டனர், பிளேக் நோயால் ஒரு அண்ணன் இறந்துபோனார். அதன்பின் ஒரு அக்கா இருந்தார்கள். நான் கடைசி ஐந்தாவது பையனாக இருந்தேன். என்னுடைய அம்மா என்னை வளர்த்ததால் இங்கு நான் உங்கள் முன்னே நிற்கிறேன். நான் போயிருந்தால் அகரமும் இல்லை, சூர்யாவும் இல்லை, கார்த்தியும் இல்லை. அந்த தாய்க்குதான் நீங்கள் நன்றி சொல்லவேண்டும்.

அப்போது ஒரு சவரண் நகையின் விலை 12 ரூபாய். நான் இரண்டாவது படிக்க இரண்டு ரூபாய், எனது அக்கா மூன்றாவது படிக்க மூன்று ரூபாய். மொத்தம் ஐந்து ரூபாய். ஒரு சவரண் நகைக்கு பாதியாக இருந்தது படிப்பு செலவு அதனால் என்னுடைய அக்காவின் படிப்பை நிறுத்திவிட்டு, என்னை படிக்க வைத்தார்கள்” என்றார்.

Link to comment
Share on other sites

“எனக்கு ஒப்பிடும் தவறான பழக்கம் இருந்தது”- மனம் திறந்த கார்த்தி..!

http://www.puthiyathalaimurai.com/newsview/63969/Actor-Karthi-speech-at-Akaram-event

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.