Jump to content

யாழில் இந்திய குடியரசு தினக் கொண்டாட்டம்


Recommended Posts

ஈழமண்ணில் அப்பாவி மக்களை படுகொலை செய்த இந்திய அரசு அந்த மண்ணிலையே சுதந்திர தினம் கொண்டாடுறது உலகில் நடக்கும் அநீதிகளில் ஒன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில.. உலகத்தில.. எவ்வளவு சிக்கல்கள் கிடக்கு.. வீரகேசரி இல்ல .. ரவா கேசரி..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் இதே இந்தியர்களை பூமாலை போட்டு வரவேற்றோம்.
இவர்கள் தான் இரட்சகர்கள் என கும்பிட்டோம் . ரூப்பிதிரா மஸ்தானா என பாடல்கள் கேட்டோம்.

Link to comment
Share on other sites

38 minutes ago, colomban said:

ஒரு காலத்தில் இதே இந்தியர்களை பூமாலை போட்டு வரவேற்றோம்.
இவர்கள் தான் இரட்சகர்கள் என கும்பிட்டோம் . ரூப்பிதிரா மஸ்தானா என பாடல்கள் கேட்டோம்.

இந்தியாக்காரன் புகையிரதபதை அமைத்தான், வீடு கட்டி கொடுக்கிறான், கலாச்சார மண்டபம் கட்டிக்கொடுக்கிறான் , இப்படியாக சொந்த பணத்தை செலவு செய்து அபிவிருத்தி செய்யும்போது இதுக்கு மட்டும் குற்றம் சாட்டுவதில் பயனில்லை। நக்குண்டார் நாவிழந்தார்।  எனவே நாம் அதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் , வேறு வழி இல்லை। இல்லாவிட்ட்தால் அமெரிக்காக்காரன் இராக்கிலிருந்து போவதென்றால் நான் செலவழித்த பணத்தையெல்லாம் கொடு , இல்லாவிடடாள் போகமடடேன் என்ற நிலைமைதான்।

Link to comment
Share on other sites

இந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துவின் பிரியாவிடை நிகழ்வு இன்று!

 

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துவின் பிரியாவிடை நிகழ்வு இன்றைய தினம் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாநாயக்க குமாரதுங்க, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரும் மேலும் பல அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

https://www.virakesari.lk/article/74281


image_ac2321ee44.jpgThe country’s top political figures embroiled in political rivalry, cut across party lines yesterday to attend the farewell party hosted by outgoing Indian High Commissioner Taranjit Singh Sandhu at India House in Colombo. Prime Minister Mahinda Rajapaksa and UNP Leader Ranil Wickremesinghe are seen a cordial discussion with UNP Deputy Leader Sajith Premadasa within the frame. The other picture captures PM Rajapaksa with former President Chandrika Kumaratunga.(Pix by Kushan Pathiraja)

image_895fc5131a.jpgimage_890871a9ce.jpgimage_947a9307c5.jpgimage_99ba1e2d86.jpgimage_bbf09a1794.jpgimage_113777365e.jpgimage_b71baaf31e.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Vankalayan said:

இந்தியாக்காரன் புகையிரதபதை அமைத்தான், வீடு கட்டி கொடுக்கிறான், கலாச்சார மண்டபம் கட்டிக்கொடுக்கிறான் , இப்படியாக சொந்த பணத்தை செலவு செய்து அபிவிருத்தி செய்யும்போது இதுக்கு மட்டும் குற்றம் சாட்டுவதில் பயனில்லை। நக்குண்டார் நாவிழந்தார்।  எனவே நாம் அதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் , வேறு வழி இல்லை। இல்லாவிட்ட்தால் அமெரிக்காக்காரன் இராக்கிலிருந்து போவதென்றால் நான் செலவழித்த பணத்தையெல்லாம் கொடு , இல்லாவிடடாள் போகமடடேன் என்ற நிலைமைதான்।

இந்திய அமைதிக்காகும் படை என்ற பேரில் ஏன் வரவைத்தோம்

Link to comment
Share on other sites

3 hours ago, ampanai said:

இந் நிகழ்வில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாநாயக்க குமாரதுங்க, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரும் மேலும் பல அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

எல்லா கொலைஞர்களும் ஓரிடத்தில் இசைக்கச்சேரி வைக்கினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Gowin said:

எல்லா கொலைஞர்களும் ஓரிடத்தில் இசைக்கச்சேரி வைக்கினம்.

கிந்தியாவின் நாடி பிடித்து சரியாக கணித்திருக்கின்றார்கள்.அதானால் ஒற்றுமையாக ஒரு இடத்திற்கு வந்திருக்கின்றார்கள். :cool:

image_895fc5131a.jpg

எங்கை காணேல்லை?

image_890871a9ce.jpg

இஞ்சையும் காணேல்லை?

image_947a9307c5.jpg

ஒரு வேளை கூப்பிடேல்லையோ? சீச்சீ அப்பிடி இருக்காது.

image_99ba1e2d86.jpgimage_bbf09a1794.jpg

இந்த கூட்டத்திலையும் காணேல்லை?

image_113777365e.jpg

கட்சி எதிரிகள் கூட ஒண்டாய் இருந்து சிரிச்சு கதைக்கினம்.↕️

image_b71baaf31e.jpg

 டேய் சாப்பாட்டு மேசையிலையும் காணேல்லையடா?tw_open_mouth:

image_ac2321ee44.jpg

சிங்கம் வேறை ஒத்தையா செழிப்பா நிக்கிது :grin:

Bildergebnis für sampanthan

அப்ப நம்ம தல எங்கடா? தலய காணம்டா? டேய் தேடுங்கடா?சூதானமா தேடுங்கடா...

Link to comment
Share on other sites

பயங்கரவாதத்தை ஒழிக்க இலங்கையுடன் இந்தியா ஒன்றித்து நிற்கும்  -  உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங்

இந்திய - இலங்கை நாடுகளைப் பொறுத்தவரை தீவிரவாதமும், அடிப்படைவாதமும் இருநாட்டு மக்களுக்கும், அன்றாட வாழ்க்கை முறைக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கின்றன.


83697098_2713016758815485_76067864959946

எனவே அதனை முற்றாக ஒழிப்பதற்கு இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் அதேவேளை, இருநாடுகளுக்கும் இடையில் புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கும் இந்தியா தயாராக இருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்தார்.

இந்தியாவின் 71 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று மாலை கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

இலங்கை எனக்கும், இந்தியாவிற்கும் மிகவும் விருப்பத்திற்குரிய நாடாகும். இருநாடுகளுக்கும் இடையில் பலவருடகால நெருங்கிய பிணைப்பு காணப்படுவதுடன், இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களின் பின்னர் இந்நாட்டுடனான ஒருமைப்பாட்டை வெளிக்காட்டும் வகையில் இலங்கைக்கு விஜயம் செய்த முதலாவது வெளிநாட்டுத் தலைவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியாக என்பதன் ஊடாக இருநாடுகளுக்கும் இடையிலான வலுவான நட்புறவு புலனாகின்றது. அதுமாத்திரமன்றி பிரதமர் மோடியின் அவ்வருகை கடந்த 5 வருடகாலத்தில் இடம்பெற்ற 3 ஆவது விஜயமாக அமைந்திருந்தது.

அத்தோடு கடந்த நவம்பர் 16 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, தனது முதலாவது வெளிநாட்டு விஜயத்தை இந்தியாவிற்கு மேற்கொண்டதன் மூலம் நாம் கௌரவிக்கப்பட்டோம். வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவும் அவரது முதலாவது வெளிநாட்டு விஜயத்தை இந்தியாவிற்கே மேற்கொண்டார். அதேபோன்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் ஆகியோர் இலங்கைக்கு விஜயம் செய்தனர். மேலும் வெகு விரைவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இந்தியாவில் வரவேற்பதற்கான ஆயத்தங்களும் செய்யப்படுகின்றன.

இலங்கை - இந்திய நாடுகளுக்கு இடையிலான நல்லுறவைப் பொறுத்தவரை 2019 மிகவும் முக்கியமான ஆண்டாகும். தற்போது இலங்கையின் 9 மாகாணங்களிலும் செயற்படும் 1990 என்ற இலக்க 'சுவசெரிய' அம்பியூலன்ஸ் சேவை இந்திய உதவியுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. எயார் இந்தியாவின் துணை நிறுவனமான அலைன்ஸ் எயார் மூலம் யாழ்ப்பாணம் - சென்னை ஆகிய நகரங்களுக்கு இடையிலான விமானசேவை ஆரம்பிக்கப்பட்டது. இந்திய நிதியுதவியுடன் மாகோ தொடக்கம் மாந்தை வரையிலான புகையிரதப்பாதை புனரமைக்கப்பட்டது. இலங்கையில் 63 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கான இந்திய உதவித்திட்டமொன்று வழங்கப்பட்டதுடன், அதன்கீழ் கடந்த வருடம்வரை 47 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளன. அவற்றோடு யாழ்ப்பாண கலாசார நிலையம், றுஹுணு பல்கலைக்கழகக் கேட்போர்கூடம், டிக்கோயா வைத்தியசாலை உள்ளிட்ட மேலும் பல திட்டங்களும் இந்திய நிதியுதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

எமது இருநாடுகளுக்கும் இடையிலான உறவு மக்களை மையப்படுத்தியதாக அமைந்திருப்பதுடன், இருநாடுகளும் வளர்ச்சி கண்டுவரும் பொருளாதாரத்தைக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில் இளைஞர்களை வலுவூட்டும் வகையிலான திட்டங்களை அறிமுகப்படுத்துவது அவசியமாகும். இலங்கையின் முதன்மையான நட்புறவு நாடாகவும், முக்கிய முதலீட்டாளராகவும் இந்தியா விளங்குகின்றது. இருநாடுகளினதும் பொருளாதாரம் இணைந்ததாகக் காணப்படுவதுடன், அரச நிர்வாகம் மற்றும் சமூகக் கட்டமைப்புக்கள் ஒத்த தன்மையுடையவையாக அமைந்திருக்கின்றன.

அதேவேளை இருநாடுகளும் பொதுவான சவால்களுக்கும் முகங்கொடுக்க வேண்டியிருக்கிறது. தீவிரவாதமும், அடிப்படைவாதமும் எமது சமூகங்களுக்கும் அன்றாட வாழ்க்கை முறைக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கின்றன. எனவே பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பதற்கும், புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கும் இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு இந்தியா தயாராக இருக்கின்றது. அத்தோடு இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புத் தொடர்புகளைப் பொறுத்தவரை இருநாட்டு படையினருக்கு இடையிலான தொடர்புகளை வலுவாக்கல் மற்றும் பயிற்சிகளை வழங்குதல் ஆகியவை மூலம் உறுதிப்படுத்தப்படும். அத்தோடு எமது பாதுகாப்புத்துறைசார் நுட்பங்களில் இந்துசமுத்திரப் பிராந்தியம் மற்றும் கப்பற்பாதைகளின் பாதுகாப்பை உறுதிசெய்தல் முக்கியத்துவம் பெறுகிறது. இலங்கையின் பாதுகாப்பிலும் அபிவிருத்தியிலும் இந்தியா அக்கறை கொண்டிருக்கிறது. அந்தவகையில் இருநாடுகளினதும் அமைதி, பாதுகாப்பு, அபிவிருத்தி என்பவற்றை முன்நிறுத்தி இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு இந்தியா தயாராக இருக்கிறது.

https://www.virakesari.lk/article/74278

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ampanai said:

பயங்கரவாதத்தை ஒழிக்க இலங்கையுடன் இந்தியா ஒன்றித்து நிற்கும்  -  உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங்

சும்மா சிவனே எண்டு இருந்த ஈழத்தமிழினத்துக்கு துவக்கு சுடப்பழக்கினதே நீங்கள் தானே?
இப்ப பயங்கரவாதத்தை அழிப்பமாம்.
எங்கடை பிரச்சனையை தீர்த்து வையுங்கோ எண்டு கேட்டது ஒரு குற்றமா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.