• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
ampanai

யாழில் இந்திய குடியரசு தினக் கொண்டாட்டம்

Recommended Posts

 

 

Share this post


Link to post
Share on other sites

ஈழமண்ணில் அப்பாவி மக்களை படுகொலை செய்த இந்திய அரசு அந்த மண்ணிலையே சுதந்திர தினம் கொண்டாடுறது உலகில் நடக்கும் அநீதிகளில் ஒன்று.

Share this post


Link to post
Share on other sites

ஊரில.. உலகத்தில.. எவ்வளவு சிக்கல்கள் கிடக்கு.. வீரகேசரி இல்ல .. ரவா கேசரி..👌

Share this post


Link to post
Share on other sites

ஒரு காலத்தில் இதே இந்தியர்களை பூமாலை போட்டு வரவேற்றோம்.
இவர்கள் தான் இரட்சகர்கள் என கும்பிட்டோம் . ரூப்பிதிரா மஸ்தானா என பாடல்கள் கேட்டோம்.

Share this post


Link to post
Share on other sites
38 minutes ago, colomban said:

ஒரு காலத்தில் இதே இந்தியர்களை பூமாலை போட்டு வரவேற்றோம்.
இவர்கள் தான் இரட்சகர்கள் என கும்பிட்டோம் . ரூப்பிதிரா மஸ்தானா என பாடல்கள் கேட்டோம்.

இந்தியாக்காரன் புகையிரதபதை அமைத்தான், வீடு கட்டி கொடுக்கிறான், கலாச்சார மண்டபம் கட்டிக்கொடுக்கிறான் , இப்படியாக சொந்த பணத்தை செலவு செய்து அபிவிருத்தி செய்யும்போது இதுக்கு மட்டும் குற்றம் சாட்டுவதில் பயனில்லை। நக்குண்டார் நாவிழந்தார்।  எனவே நாம் அதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் , வேறு வழி இல்லை। இல்லாவிட்ட்தால் அமெரிக்காக்காரன் இராக்கிலிருந்து போவதென்றால் நான் செலவழித்த பணத்தையெல்லாம் கொடு , இல்லாவிடடாள் போகமடடேன் என்ற நிலைமைதான்।

Share this post


Link to post
Share on other sites

இந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துவின் பிரியாவிடை நிகழ்வு இன்று!

 

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துவின் பிரியாவிடை நிகழ்வு இன்றைய தினம் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாநாயக்க குமாரதுங்க, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரும் மேலும் பல அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

https://www.virakesari.lk/article/74281


image_ac2321ee44.jpgThe country’s top political figures embroiled in political rivalry, cut across party lines yesterday to attend the farewell party hosted by outgoing Indian High Commissioner Taranjit Singh Sandhu at India House in Colombo. Prime Minister Mahinda Rajapaksa and UNP Leader Ranil Wickremesinghe are seen a cordial discussion with UNP Deputy Leader Sajith Premadasa within the frame. The other picture captures PM Rajapaksa with former President Chandrika Kumaratunga.(Pix by Kushan Pathiraja)

image_895fc5131a.jpgimage_890871a9ce.jpgimage_947a9307c5.jpgimage_99ba1e2d86.jpgimage_bbf09a1794.jpgimage_113777365e.jpgimage_b71baaf31e.jpg

Edited by ampanai

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, Vankalayan said:

இந்தியாக்காரன் புகையிரதபதை அமைத்தான், வீடு கட்டி கொடுக்கிறான், கலாச்சார மண்டபம் கட்டிக்கொடுக்கிறான் , இப்படியாக சொந்த பணத்தை செலவு செய்து அபிவிருத்தி செய்யும்போது இதுக்கு மட்டும் குற்றம் சாட்டுவதில் பயனில்லை। நக்குண்டார் நாவிழந்தார்।  எனவே நாம் அதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் , வேறு வழி இல்லை। இல்லாவிட்ட்தால் அமெரிக்காக்காரன் இராக்கிலிருந்து போவதென்றால் நான் செலவழித்த பணத்தையெல்லாம் கொடு , இல்லாவிடடாள் போகமடடேன் என்ற நிலைமைதான்।

இந்திய அமைதிக்காகும் படை என்ற பேரில் ஏன் வரவைத்தோம்

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, ampanai said:

இந் நிகழ்வில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாநாயக்க குமாரதுங்க, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரும் மேலும் பல அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

எல்லா கொலைஞர்களும் ஓரிடத்தில் இசைக்கச்சேரி வைக்கினம்.

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, Gowin said:

எல்லா கொலைஞர்களும் ஓரிடத்தில் இசைக்கச்சேரி வைக்கினம்.

கிந்தியாவின் நாடி பிடித்து சரியாக கணித்திருக்கின்றார்கள்.அதானால் ஒற்றுமையாக ஒரு இடத்திற்கு வந்திருக்கின்றார்கள். :cool:

image_895fc5131a.jpg

எங்கை காணேல்லை?

image_890871a9ce.jpg

இஞ்சையும் காணேல்லை?

image_947a9307c5.jpg

ஒரு வேளை கூப்பிடேல்லையோ? சீச்சீ அப்பிடி இருக்காது.

image_99ba1e2d86.jpgimage_bbf09a1794.jpg

இந்த கூட்டத்திலையும் காணேல்லை?

image_113777365e.jpg

கட்சி எதிரிகள் கூட ஒண்டாய் இருந்து சிரிச்சு கதைக்கினம்.↕️

image_b71baaf31e.jpg

 டேய் சாப்பாட்டு மேசையிலையும் காணேல்லையடா?tw_open_mouth:

image_ac2321ee44.jpg

சிங்கம் வேறை ஒத்தையா செழிப்பா நிக்கிது :grin:

Bildergebnis für sampanthan

அப்ப நம்ம தல எங்கடா? தலய காணம்டா? டேய் தேடுங்கடா?சூதானமா தேடுங்கடா...

  • Haha 2

Share this post


Link to post
Share on other sites

பயங்கரவாதத்தை ஒழிக்க இலங்கையுடன் இந்தியா ஒன்றித்து நிற்கும்  -  உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங்

இந்திய - இலங்கை நாடுகளைப் பொறுத்தவரை தீவிரவாதமும், அடிப்படைவாதமும் இருநாட்டு மக்களுக்கும், அன்றாட வாழ்க்கை முறைக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கின்றன.


83697098_2713016758815485_76067864959946

எனவே அதனை முற்றாக ஒழிப்பதற்கு இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் அதேவேளை, இருநாடுகளுக்கும் இடையில் புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கும் இந்தியா தயாராக இருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்தார்.

இந்தியாவின் 71 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று மாலை கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

இலங்கை எனக்கும், இந்தியாவிற்கும் மிகவும் விருப்பத்திற்குரிய நாடாகும். இருநாடுகளுக்கும் இடையில் பலவருடகால நெருங்கிய பிணைப்பு காணப்படுவதுடன், இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களின் பின்னர் இந்நாட்டுடனான ஒருமைப்பாட்டை வெளிக்காட்டும் வகையில் இலங்கைக்கு விஜயம் செய்த முதலாவது வெளிநாட்டுத் தலைவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியாக என்பதன் ஊடாக இருநாடுகளுக்கும் இடையிலான வலுவான நட்புறவு புலனாகின்றது. அதுமாத்திரமன்றி பிரதமர் மோடியின் அவ்வருகை கடந்த 5 வருடகாலத்தில் இடம்பெற்ற 3 ஆவது விஜயமாக அமைந்திருந்தது.

அத்தோடு கடந்த நவம்பர் 16 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, தனது முதலாவது வெளிநாட்டு விஜயத்தை இந்தியாவிற்கு மேற்கொண்டதன் மூலம் நாம் கௌரவிக்கப்பட்டோம். வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவும் அவரது முதலாவது வெளிநாட்டு விஜயத்தை இந்தியாவிற்கே மேற்கொண்டார். அதேபோன்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் ஆகியோர் இலங்கைக்கு விஜயம் செய்தனர். மேலும் வெகு விரைவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இந்தியாவில் வரவேற்பதற்கான ஆயத்தங்களும் செய்யப்படுகின்றன.

இலங்கை - இந்திய நாடுகளுக்கு இடையிலான நல்லுறவைப் பொறுத்தவரை 2019 மிகவும் முக்கியமான ஆண்டாகும். தற்போது இலங்கையின் 9 மாகாணங்களிலும் செயற்படும் 1990 என்ற இலக்க 'சுவசெரிய' அம்பியூலன்ஸ் சேவை இந்திய உதவியுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. எயார் இந்தியாவின் துணை நிறுவனமான அலைன்ஸ் எயார் மூலம் யாழ்ப்பாணம் - சென்னை ஆகிய நகரங்களுக்கு இடையிலான விமானசேவை ஆரம்பிக்கப்பட்டது. இந்திய நிதியுதவியுடன் மாகோ தொடக்கம் மாந்தை வரையிலான புகையிரதப்பாதை புனரமைக்கப்பட்டது. இலங்கையில் 63 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கான இந்திய உதவித்திட்டமொன்று வழங்கப்பட்டதுடன், அதன்கீழ் கடந்த வருடம்வரை 47 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளன. அவற்றோடு யாழ்ப்பாண கலாசார நிலையம், றுஹுணு பல்கலைக்கழகக் கேட்போர்கூடம், டிக்கோயா வைத்தியசாலை உள்ளிட்ட மேலும் பல திட்டங்களும் இந்திய நிதியுதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

எமது இருநாடுகளுக்கும் இடையிலான உறவு மக்களை மையப்படுத்தியதாக அமைந்திருப்பதுடன், இருநாடுகளும் வளர்ச்சி கண்டுவரும் பொருளாதாரத்தைக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில் இளைஞர்களை வலுவூட்டும் வகையிலான திட்டங்களை அறிமுகப்படுத்துவது அவசியமாகும். இலங்கையின் முதன்மையான நட்புறவு நாடாகவும், முக்கிய முதலீட்டாளராகவும் இந்தியா விளங்குகின்றது. இருநாடுகளினதும் பொருளாதாரம் இணைந்ததாகக் காணப்படுவதுடன், அரச நிர்வாகம் மற்றும் சமூகக் கட்டமைப்புக்கள் ஒத்த தன்மையுடையவையாக அமைந்திருக்கின்றன.

அதேவேளை இருநாடுகளும் பொதுவான சவால்களுக்கும் முகங்கொடுக்க வேண்டியிருக்கிறது. தீவிரவாதமும், அடிப்படைவாதமும் எமது சமூகங்களுக்கும் அன்றாட வாழ்க்கை முறைக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கின்றன. எனவே பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பதற்கும், புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கும் இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு இந்தியா தயாராக இருக்கின்றது. அத்தோடு இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புத் தொடர்புகளைப் பொறுத்தவரை இருநாட்டு படையினருக்கு இடையிலான தொடர்புகளை வலுவாக்கல் மற்றும் பயிற்சிகளை வழங்குதல் ஆகியவை மூலம் உறுதிப்படுத்தப்படும். அத்தோடு எமது பாதுகாப்புத்துறைசார் நுட்பங்களில் இந்துசமுத்திரப் பிராந்தியம் மற்றும் கப்பற்பாதைகளின் பாதுகாப்பை உறுதிசெய்தல் முக்கியத்துவம் பெறுகிறது. இலங்கையின் பாதுகாப்பிலும் அபிவிருத்தியிலும் இந்தியா அக்கறை கொண்டிருக்கிறது. அந்தவகையில் இருநாடுகளினதும் அமைதி, பாதுகாப்பு, அபிவிருத்தி என்பவற்றை முன்நிறுத்தி இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு இந்தியா தயாராக இருக்கிறது.

https://www.virakesari.lk/article/74278

Share this post


Link to post
Share on other sites
25 minutes ago, ampanai said:

பயங்கரவாதத்தை ஒழிக்க இலங்கையுடன் இந்தியா ஒன்றித்து நிற்கும்  -  உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங்

சும்மா சிவனே எண்டு இருந்த ஈழத்தமிழினத்துக்கு துவக்கு சுடப்பழக்கினதே நீங்கள் தானே?
இப்ப பயங்கரவாதத்தை அழிப்பமாம்.
எங்கடை பிரச்சனையை தீர்த்து வையுங்கோ எண்டு கேட்டது ஒரு குற்றமா?

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • பிரேரணைகளில் இருந்து தன்னிச்சையாக விலக முடியாது பெரும்பான்மை நாடுகளின் ஆதரவு வேண்டும் என்கின்றார் வாசு!     by : Jeyachandran Vithushan மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டிருக்கும் அனைத்து பிரேரணைகளில் இருந்தும் தனித்து நீங்க முடியாது என்றும் பெரும்பான்மை நாடுகளின் ஆதரவுடனே விலக முடியும் என இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். குறித்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த அவர், 2015ஆம் ஆண்டு ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டுவந்த 30/1 பிரேரணையை கடந்த அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சராக இருந்த மங்கள சமரவீர தன்னிச்சையாக கைச்சாத்தினார் என்றும் அவர் குற்றம் சாட்டினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “அவ்வாறான பிரேரணைக்கு கைச்சாத்திடுவதாக இருந்தால் அந்த விடயம் தொடர்பாக அமைச்சரவைக்கு தெரிவித்து அனுமதியை பெற்றுக்கொள்வதுடன் நாடாளுமன்றத்திற்கும் அறிவித்திருக்க வேண்டும். ஆனால் அமைச்சரவைக்கும் தெரிவியாது, ஜனாதிபதிக்கும் அறிவிக்காமலே மங்கள சமரவீர இந்த பிரேரணையில் கைச்சாத்திட்டனர். அத்துடன் கடந்த ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேரவையின்போதும் குறித்த பிரேரணையின் 40/1க்கும் கடந்த அரசாங்கம் கைச்சாத்திட்டிருக்கின்றது. ஆனால் எமக்கு எதிராக யுத்தக்குற்றம் தெரிவித்து ஜெனிவா மனித உரிமை பேரவைக்கு பிரேரணை கொண்டுவந்த அமெரிக்கா, மனித உரிமை பேரவையில் இருந்து விலகியுள்ளது. அவ்வாறான நிலையில் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கிவந்த நாங்கள் பிரேரணையில் இருந்து நீங்குவதால் எந்த பிரச்சினையும் இல்லை. இதில் கைச்சாத்திட்ட மங்கள சமரவீரவுக்கு பிரச்சினை ஏற்படலாம். ஏனெனில் அவர் இலங்கை அரசாங்கத்தின் அனுமதி இல்லாமலே அதில் கைச்சாத்திட்டிருக்கின்றார். அவர்களின் நடவடிக்கை தேசத்துரோக செயலாகும்” என கூறினார். http://athavannews.com/பிரேரணைகளில்-இருந்து-தன்/
    • கட்சியில் இருந்து விலகிச்சென்றவர்களுக்கு ரவூப் ஹக்கீம் முக்கிய அறிவிப்பு           by : Yuganthini ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிச்சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைந்து  கொள்ளுமாறு  கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அழைப்பு விடுத்துள்ளார். ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் 29 ஆவது பேராளர் மாநாடு, கண்டி-  பொல்கொல்ல பகுதியில் இடம்பெற்றது. இதன்போது குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ரவூப் ஹக்கீம் மேலும் கூறியுள்ளதாவது, “சரியாகவோ, பிழையாகவோ, தடுமாற்றத்தின் காரணமாகவோ அல்லது ஏனைய காரணங்களினாலோ கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களுக்கு மீண்டும் இணைவதற்கு அழைப்பு விடுக்கின்றேன். இந்த இயக்கத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்ற நாள்முதல் எவரையும் வலுக்கட்டாயமாக கட்சியிலிருந்து விலக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எந்ததொரு செயற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை. எமது முன்னாள் செயலாளர் நாயகம் அஸன் அலியை ஞாபகப்படுத்துகின்றேன். இந்தக் கட்சியில் இருந்து அவர் விலகியிருப்பது குறித்து கவலைப்படுபவர் என்னை விட வேறு எவரும் இருக்க முடியாது” என குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/கட்சியில்-இருந்து-விலகி/
    • சஜித்தின் கருத்தால் ஏமாற்றமடைந்த கூட்டமைப்பு!   by : Jeyachandran Vithushan இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மீது அமெரிக்கா விதித்த பயணத் தடை குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்த கருத்துக்களால் ஏமாற்றமடைந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கில் 85% வாக்குகளைப் பெற்ற பின்னரும், பாரபட்சமின்றி நீதியை மட்டுமே எதிர்பார்க்கும் தமிழ் மக்களின் அடிப்படை நிலைப்பாட்டை பிரேமதாச பாராட்டவில்லை என்பது ஏமாற்றமளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இராணுவ தளபதிக்கு விதித்த பயண தடை தொடர்பாக கருத்து பதிவிட்டிருந்த சஜித் பிரேமதாச, “இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பயணத் தடை விதிக்கப்படுவது வருந்தத்தக்கது மற்றும் துரதிர்ஷ்டவசமானது. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான தேசிய முயற்சியை முன்னெடுத்தவர்களில் இவரும் ஒருவர்” என குறிப்பிட்டிருந்தார். கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சஜித் பிரேமதாசவிற்கு வெளிப்படையான ஆதரவை வழங்கியிருந்தது. இருப்பினும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் அவர் தோல்வியடைந்திருந்தார். இந்நிலையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக புதிய கூட்டணிக்கு சஜித் பிரேமதாச தலைமை தாங்கவுள்ள நிலையில் தற்போது இராணுவ தளபதி விவகாரம் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் ஒரு முரண்பாட்டை தோற்றுவித்துள்ளது. http://athavannews.com/tna-disappointed-with-sajith/
    • பொறியியலாளர் மணமகனை எதிர்பார்த்த ஆசிரியை ஒருவர் ஒன்பது இலட்ச ரூபா பணத்தைக் கொடுத்துஏமாந்த சம்பவமொன்று வெலிமடை, அம்பகஸ்தோவை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.வெலிமடை அரச பாடசாலை ஆசிரியை ஒருவரே பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டமை குறித்து, அம்பகஸ் தோவை பொலிஸ் நிலையத்தில் சனிக்கிழமை முறையிட் டுள்ளார்.40 வயதான அந்த ஆசிரியை, ஒரு பொறியியலாளரைத் திருமணம் செய்வதே தனது இலக்கு என்று கூறி, தனது பெற்றோர் பார்த்த அனைத்து மாப்பிள்ளைகளையும் நிராகரித்து வந்துள்ளார்.இதையடுத்து, பொறியியலாளர் மணமகனுக்கு, ஆசி ரியையான மணமகள் தேவை என்ற பத்திரிகை விளம்பரத்திற்கமைய தனது விண்ணப்பத்தை அனுப்பியுள்ளார்.அதைத் தொடர்ந்து கடிதங்கள் பரிமாறப்பட்டதுடன், கையடக்கத் தொலைபேசி மூலமும் இருவரும் தொடர் புகளை ஏற்படுத்தி வந்தனர். இந்நிலையில், நேரடியான சந்திப்புகளும் இடம்பெற்றன.இச்சந்திப்புகளில் திருமணத்திற்கான தினமும் குறிப் பிடப்பட்டது. அந் நிலையில், மணமகன் குறிப்பிட்ட ஆசிரியையிடம் புதிய காரொன்று எடுக்க வேண்டி யுள்ளது. அதற்கு ஒன் பது இலட்சம் ரூபா - தேவையாகவுள்ள தென்று கூறவே, ஆசி ரியையும் குறிப்பிட்ட பணத் தொகையை வங்கியிலிருந்து பெற் றுக் கொடுத்துள்ளார்.அப்பணத்தைப் பெற்ற பொறியிய லாளர் மணமகன், ஆசிரியையு டன் இருந்த அனைத்து தொடர்புகளையும் துண்டித்துக் கொண் டார். ஆசிரியை, பொறியியலாளர் மணமகனுடன் பல முறை தொடர்பு கொள்ள முயற் சித்தும், பயன் கிடைக் கவில்லை . தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவ்வாசிரியை, அம்பகஸ் தோவை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். https://www.madawalaenews.com/2020/02/9_24.html
    • இது தொடரை நான் இத்துடன் முடித்துக் கொள்கிறேன். இத்தனை நாட்களாக இத்தொடருக்கு வந்து வாசிதது பச்சைகள் தந்த யாழ்கள உறுப்பினர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி கூறிக்கொள்வதோடு இங்குவந்து எழுதாவிட்டாலும் என் பதிவை வந்து வாசித்துச் சென்ற யாழ்கள வாசகர்கள் அனைவருக்கும் என் மனத்தார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். தொடர்ந்தும் நான் யாழில் பயணிப்பதற்கான முக்கிய காரணம் நீங்கள் எல்லோரும்தான். உங்கள் ஆதரவு என்னை மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டும் ஒரு உந்து சக்தியாகஇருக்கும் என்பதில் ஐயமில்லை.