Jump to content

மற்றொரு சதியா: மாற்ற முடியாத விதியா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மற்றொரு சதியா: மாற்ற முடியாத விதியா?

காரை துர்க்கா   / 2020 ஜனவரி 28

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்கள், கூட்டமைப்புக்குள் மீளவும் வருவதில், எந்த விதமான பிரச்சினைகளும் இல்லை. ஆனால், அவ்வாறானவர்கள் நொண்டிச்சாட்டுகளைக் கூறித் திரிகின்றனர், என தெரிவித்துள்ளார்.   

“மாற்று அணியொன்று தேவையில்லை; மாற்று அணியொன்றை உருவாக்குவதென்பது, தமிழ் மக்களுக்கு எதிராகச் செய்யப்படுகின்ற மாபெரும் சதியாகும். அத்துடன், கூட்டமைப்புக்குள் இப்போது எந்தப் பிரச்சினையும் இல்லை. நாங்கள் எல்லாவற்றையும் சுமூகமாகத்தான் பேசித் தீர்த்துக் கொண்டு வருகின்றோம்.தேர்தல் சம்பந்தமாகக் கூட, சுமூகமான தீர்வுகள் ஏற்பட்டு உள்ளன. எதிலும், எந்தப் பிரச்சினைகளும் இல்லை” எனவும், அவர் மேலும் தெரிவித்து உள்ளார்.   
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்கள், கூட்டமைப்புக்குள் மீளவும் வருவதில், எந்த விதமான பிரச்சினைகளும் இல்லை” எனச் சுமந்திரன் தெரிவிப்பது போல, அதுவோர் இலகுவான காரியமா, நடக்கக் கூடிய காரியமா?   

நேற்று வரை, ‘நீயா நானா’ என, எலியும் பூனையும் போல இருந்தவர்கள், இன்று முதல் ‘நகமும் தசை’யுமாக இருப்பார்களா? தங்கள் பகையை மறந்து, எங்கள் (தமிழ் மக்களுடைய) பிரச்சினை பற்றிச் சிந்திக்கும் அரசியல் முதிர்ச்சி, எந்தத் தமிழ்த் தலைவரிடம் தற்போது இருக்கின்றது?   

கூட்டமைப்பிலிருந்து பிடுங்குப்பாடுகளோடும் முரண்பாடுகளோடும் வெளியேறியவர்கள்,  வெளியேறியும் உடனடியாவே புதிதாகத் தனிக்கட்சிகள் அமைத்து அரசியல் செய்பவர்கள், இலகுவாக இவற்றையெல்லாம் உதறித் தள்ளி விட்டு, மீண்டும் வருவார்களா? 

சரி! அவ்வாறாக அவர்கள் மீள வந்தாலும், கூட்டமைப்புக்குள் அவர்களினதும் அவர்களது கட்சிகளினதும் வகிபாகம் என்ன?   

அரசியல்வாதிகள் (தலைகள்) அனைவருமே, தலைமை தங்களுக்கே வேண்டும் என, அடிபடுகின்ற இக்காலப் பகுதியில் மீளவருபவர்கள், கூட்டமைப்பின் தலைமை சொல்லுவதை, சிரமேற் கொண்டு செயற்படத் தயாராக இருக்கின்றார்களா?   

“மாற்று அணி உருவாகுவதாக இருந்தால், அது தமிழ் மக்களின் ஒற்றுமையை, மிக மோசமாகப் பிளவுபடுத்துகின்ற ஒரு நோக்கம் ஆகும்” எனவும், சுமந்திரன் தெரிவித்து உள்ளார். இது ஏற்றுக் கொள்ளக் கூடிய உண்மையாகும்.   

ஆனாலும், சிதறும் தமிழ் மக்களின் ஒற்றுமை, சிதையும் தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தி என, அனைத்தையும் மறந்தே, தமிழ் மக்களின் மத்தியில் புதிதாகக் கட்சிகளும் அணிகளும் உருவாகி வருகின்றன.   

மறுவளமாக, புதிதாகக் கட்சிகள் முளைப்பதற்கு, தாய்க்கட்சிகளும் தெரிந்தோ தெரியாமலோ காரணமாக உள்ளன என, ஏன் கூற முடியாது? ஆனால், இதை அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கின்றார்களா?   

தமிழ் மக்களது விடுதலைக்கான அறப் போராட்டம், ஆயுதப் போராகத் தோற்றம் பெற்றது. அக்காலப் பகுதியான எண்பதுகளில், பிரிவினைகள் பல்கிப் பெருகி, பல ஆயுதப் போராட்ட இயக்கங்கங்கள் தோற்றம் பெற்றன. பின்னாள்களில், அவை தங்களுக்குள் முரண்பட்டுக் கொண்டன.   

அவர்கள், தங்களுக்கு இடையிலான உள்முரண்பாடுகள், தங்கள் இனத்தின் பலத்தைப் பாதிக்கும் என, எக்காலத்திலும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. 

அன்று அவர்கள், தாங்களும் தங்கள் இயக்கங்களுமே மேலானவை எனக் கருதின. அதுபோலவே, இன்று தமிழ் அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் தாங்களும் தங்கள் கட்சிகளுமே புனிதமானவை; விவேகமானவை என்றே கருதுகின்றன.   

ஆகவே, தமிழ்த் தலைவர்கள், கடந்த காலத்தைப் படிப்பினையாகக் கொண்டு, பாடம் படிக்கவும் இல்லை; இனியாவது படிக்கத் தயாராகவும் இல்லை என்பதே, வேதனையிலும் வேதனையாக இருக்கின்றது.   

இதற்கிடையே, மாற்று அணி என்பது, தேவை இல்லாததாக இருந்தாலும், தமிழ் அரசியல்வாதிகள் மட்டுமன்றி, தமிழ் மக்கள் கூட, மாற்று அணி தொடர்பில் அவ்வப்போது சிந்தித்து உள்ளார்கள்; சிந்தித்து வருகின்றார்கள் என்பதை, ஏற்றுக் கொள்ள வேண்டியே உள்ளது.  

அது ஏன்? 

அரசியல்வாதிகளின் பார்வையில் நோக்குகையில், தங்களுக்கிடையே புரிந்துணர்வு இன்மையால், மாற்று அணிகளைப் புதிதாகத் தோற்றுவிக்கின்றார்கள். மக்களின் பார்வையில், ஏற்கெனவே இருக்கின்ற கட்சிகளின் மீது, நம்பிக்கை குறைதல்; நம்பிக்கை இல்லாமல் போவதால் மாற்று அணிக்கு ஆதரவு வழங்குகின்றார்கள்.    

நாம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் என, எல்லோரும் கதைத்துக் கொண்டாலும், அங்கு கூட, தமிழரசுக் கட்சியின் ஆதிக்கமே, அதிகமாக உள்ளது என, மக்கள் பேசிக் கொள்கின்றார்கள். 
தமிழ் மக்களின் தாய்க்கட்சி; தந்தை செல்வாவால் ஸ்தாபிக்கப்பட்ட கட்சி (1949) எனப் பல காரணங்களால், தமிழரசுக் கட்சிக்கு, தமிழ் மக்கள் மத்தியில் நற்பெயர் உண்டு.  

 யுத்தம் 2009இல் ஓய்ந்திருந்தாலும், தமிழ் மக்கள் சத்தம் இல்லாத யுத்தத்துக்குள்ளேயே வாழ்ந்து வருகின்றனர். ஆனால், கடந்த ஒரு தசாப்தம் காலங்களில், போர் இல்லாது போருக்குள் வாழும் மக்களை, தமிழரசுக் கட்சியால் எந்தளவு தூரம் அமைதி நிலைக்கு இட்டுச் செல்ல முடிந்தது?   

இந்நிலையில், கூட்டமைப்பின் தலைமை என, பிற தமிழ் அரசியல் கட்சிகளது தலைவர்கள், தமிழரசுக் கட்சியின் தலைமை மீதே, சுட்டு விரல் நீட்டிக் குற்றங்களையும் குறைகளையும் கொட்டித் தீர்க்கின்றனர்.   

கூட்டமைப்பில், தமிழரசுக் கட்சியின் பங்காளிக் கட்சிகளாக, டெலோவும் புளொட்டும் இருக்கின்றன. அவை, கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சியுடன் சமநிலையில் உள்ளனவோ, சகிப்புத்தன்மையுடன் உள்ளனவோ என, அவர்களுக்கு மட்டுமே தெரியும்.   

ஆனால், பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைவது தொடர்பில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் யதார்த்தபூர்வமாகக் கருத்துத் தெரிவித்து உள்ளார்.  

“அதாவது, கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்கள், உள்நுழைவதே சிறப்பானது; அதேவேளை, கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்கள் அனைவரும், இரண்டு மாதங்களுக்குள் மீண்டும் கூட்டமைப்புக்குள் வருவதென்பது, சாத்தியக் குறைவாகவே உள்ளது. ஏனெனில் அந்தளவுக்குப் பிரிவுகள் வளர்ந்து விட்டன” என்று கூறி உள்ளார்.   

மீண்டும், இணைய முடியாதவாறு விலகல்கள் வலுப் பெற்று விட்டன. இது தொடர்பில், யாருடைய வாதம் சரி; யாருடைய வாதம் பிழை எனத் தமிழ் மக்களுக்குப் பரிபூரணமாகத் தெரியாது. ஆனால், பாதிக்கப்பட்டு ஆண்டியாக அலையும் தமிழ் மக்களுக்காக, கட்சி மறந்து, இணைந்து செயற்பட மறுப்பவர்கள், தமிழ் மக்களின் பிரதிநிதிகளா?   

“ஒற்றுமையில்தான், எமது எதிர்காலம் உள்ளது. தற்போது முக்கியமானதொரு காலகட்டத்தில் உள்ளோம். இதில் நாங்கள் அனைவரும், ஒருமித்து ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என, சம்பந்தன் வலியுறுத்தி உள்ளார்.   

“கூட்டமைப்பின் தலைமை மாறினால், அதில் இணையத் தயார் என, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் தெரிவித்திருக்கும் கருத்து, என்னைப் பொறுத்தவரையில் நல்ல விடயமாகப்படுகின்றது. அவரை உள்வாங்கும் போது, கூட்டமைப்பு பலமான சக்தியாகத் திகழும்” என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்து உள்ளார்.   

இவ்வாறாக, ஒற்றுமை பற்றியும் பிரிந்தவர்களை மீளவும் இணைப்பது தொடர்பிலும் பொதுவெளியில் உரையாடி வருகின்ற கூட்டமைப்பின் பிரமுகர்கள், அதற்குச் செயல் வடிவம் கொடுக்க, களம் இறங்க வேண்டும். 

தமிழரசுக் கட்சியின் தலைமையில் பிரதான பாத்திரம் வகிப்பவராக சுமந்திரன் உள்ளார். அவர் சட்டப்புலமை, மொழிப்புலமை, பேச்சாற்றல், இராஜதந்திரம் எனப் பல திறமைகளைத் தன்வசம் கொண்டு உள்ளார். தற்போதைய நிலையில், தமிழ் மக்களுடைய அரசியலை, முன்கொண்டு செல்வதற்குத் தேவையான நபர்.   

ஆனாலும், அவர் அரசியலுக்குள் அரசியல் செய்து, கூட்டமைப்பிலிருந்து விலகியவர்களை, விலக வைக்கப்பட்டவர்களை மனமுவந்து உள்வந்து இணைவதற்கான களத்தை உருவாக்க வேண்டும்.   

இதை செய்யத் தவறுமிடத்து, மாற்று அணியொன்றை உருவாக்குவதென்பது, தமிழ் மக்களுக்கு எதிராகச் செய்யப்படுகின்ற மாபெரும் சதி என்றால் கூட, மாற்றாகப் பல அணிகள் உருவாகிக் கொண்டே இருக்கும். அத்தகைய போக்கில் மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது.   

இவ்வாறாக உருவாகி வருகின்ற மாற்று அணிகள், கூட்டமைப்புக்குச் சவாலாக அமையாது விடலாம். பெருமளவிலான வாக்குகளைப் பெற்று, நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெறாது விடலாம். ஆனாலும், பெருமளவிலான தமிழ் வாக்குகளைச் சிதைக்க அவற்றினால் முடியும்.  மக்களுக்கு வாக்களிப்பில் இருக்கும்  ஆர்வத்தைத் தவிடுபொடி ஆக்க முடியும்.    

இலங்கையில், கடந்த 70 ஆண்டு காலமாக, சிங்கள - தமிழ் இனப்பிணக்கைத் தீர்க்கும் முகமாக, பல உடன்படிக்கைகளும் ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன.   

அவை அனைத்தும், தோல்வியிலேயே முடிவடைந்தன. இதற்கு முற்று முழுதாகக் கடந்த அரசாங்கங்களைக் குறை கூற முடியாது. ஆகக்குறைந்தது, ஒரு சதவீதமான தவறையேனும், தமிழ்த் கட்சித் தலைவர்களும் இயக்கத் தலைவர்களும் கூட்டாக ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.  

 ஆகவே, ‘நீ சரியா, நான் சரியா’ என வேண்டாத பட்டிமன்றம் செய்வதை விடுத்து, நாங்கள் (தமிழ் மக்கள்) சரியாக வாழ்வதற்கான வழிவகைகளை, ஏற்படுத்த வேண்டும்; ஏற்படுத்துவார்களா?  

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மற்றொரு-சதியா-மாற்ற-முடியாத-விதியா/91-244617

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மின்னம்பலம்  சர்வே : விழுப்புரம் விஸ்வரூபம் எடுப்பது யார்? Apr 15, 2024 21:54PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் விழுப்புரம்(தனி) தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்ரவிகுமார் மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் பாக்யராஜ் போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் பாமக சார்பில் முரளிசங்கர் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் இயக்குநர் மு.களஞ்சியம் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக விழுப்புரம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  விழுப்புரம்,  திண்டிவனம்(தனி) ,  விக்கிரவாண்டி,  திருக்கோயிலூர்,  உளுந்தூர்பேட்டை மற்றும் வானூர் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிகுமார் 42% வாக்குகளைப் பெற்று மீண்டும்இரண்டாவது முறையாக விழுப்புரம் தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் பாக்யராஜ் 34% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்.  பாமக வேட்பாளர் முரளிசங்கர் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்,  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இயக்குநர் களஞ்சியம் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, விழுப்புரம் தொகுதியில் இந்த முறையும் ரவிகுமார் வெற்றி பெற்று விடுதலை சிறுத்தைகளின்கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-vilupuram-constituency-who-wins-the-race/   மின்னம்பலம் மெகா சர்வே: நாகப்பட்டினம்… வெல்லப் போவது யார்? Apr 16, 2024 08:32AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் நாகப்பட்டினம் (தனி) தொகுதியில்  திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ)  சார்பில் வை.செல்வராஜ் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் சுர்ஜித் சங்கர் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் எஸ்.ஜி.எம்.ரமேஷ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்த்திகா போட்டியிடுகிறார். சிபிஐ, அதிமுக வேட்பாளர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில்,  இத்தொகுதி மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக நாகப்பட்டினம்  நாடாளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருத்துறைப்பூண்டி (தனி),  நாகப்பட்டினம்,  வேதாரண்யம்,  திருவாரூர்,  நன்னிலம் மற்றும் கீழ்வேளூர் (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்… சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜ் 49% வாக்குகளைப் பெற்று நாகப்பட்டினம் தொகுதியில் முன்னிலை பெறுகிறார்.  அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கர் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம்.ரமேஷ் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்த்திகா 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, நாகப்பட்டினம் தொகுதியில் இந்த முறை வை.செல்வராஜ் வெற்றி பெற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpi-candidate-vai-selvaraj-will-win-with-49-percent-votes-in-nagapattinam-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: சேலம்… வெற்றிக் கனி பறிப்பது யார்? Apr 16, 2024 10:34AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் சேலம் தொகுதியில் திமுக சார்பில் செல்வகணபதி களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் விக்னேஷ் போட்டியிடுகிறார். பாமக சார்பில் அண்ணாதுரை போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின்சார்பில் க.மனோஜ்குமார் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக சேலம் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  சேலம் (மேற்கு),  சேலம் (வடக்கு),  சேலம் (தெற்கு),  எடப்பாடி,  வீரபாண்டி மற்றும் ஓமலூர்  பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் செல்வகணபதி 45% வாக்குகளைப் பெற்று சேலம் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் விக்னேஷ் 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் அண்ணாதுரை 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் க.மனோஜ்குமார் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, சேலம் தொகுதியில் இந்த முறை செல்வகணபதி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-selvaganapathy-will-win-with-45-percent-votes-in-salem-parliamentary-constituency/   மின்னம்பலம் மெகா சர்வே: தூத்துக்குடி… யார் கப்பலில் வெற்றிக் கொடி? Apr 16, 2024 13:55PM IST  2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? தூத்துக்குடி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ரொவினா ரூத் ஜேன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, தமாகா ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான தூத்துக்குடி, விளாத்திக்குளம், திருச்செந்தூர்,  ஒட்டப்பிடாரம்,  கோவில்பட்டி மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் கனிமொழி 50% வாக்குகளைப் பெற்று மீண்டும் தூத்துக்குடி தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரொவினா ரூத் ஜேன் 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தூத்துக்குடி தொகுதியில் இந்த முறை கனிமொழி வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-kanimozhi-won-tuticorin-loksabha-constituency-in-minnambalam-mega-survey/   மின்னம்பலம் மெகா சர்வே : விருதுநகர் Apr 16, 2024 14:46PM IST   2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாணிக்கம் தாகூர் மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் சி.கவுசிக் போட்டியிடுகிறார். காங்கிரஸ், தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்குஎன்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருப்பரங்குன்றம்,  திருமங்கலம்,  சாத்தூர்,  சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் பகுதிகளில் நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 45% வாக்குகளைப் பெற்று மீண்டும் விருதுநகர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர் 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சி.கவுசிக் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, விருதுநகர் தொகுதியில் இந்த முறையும் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்று மீண்டும் காங்கிரசின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-virudhunagar-constituency-result-congress-manickam-thakoor-wins-dmdk-came-second-place/
    • பையா உடல்நலத்தைக் கவனாமாகப் பேணவும் ........!   
    • இதே போல் அளுத்கடையில் 1000 ரூபா கொத்தை 1900 ரூபாய்க்கு விற்றவர் கைது.    
    • நீங்கள் பூலோக சொர்க்கம் இலண்டன் வந்ததில்லையா? https://www.swlondoner.co.uk/life/14082023-five-bizarre-london-scams-that-you-need-to-know-about   https://theculturetrip.com/europe/united-kingdom/england/london/articles/13-scams-all-tourists-should-avoid-in-london கனடாவில் ஒவ்வொரு மனிதனும் யேசு, புத்தர்தான் போலும்? சுய அனுபவம். இலண்டனில், பரிசில் ஒரு கணிசமான விலையுள்ள பொருளை, பையை கண்ணுக்கு புலப்படும் வகையில் காரில் விட்டு நாம் யாரும் காரை பார்க் செய்வதில்லை. ஒன்றில் கையோடு எடுத்துப்போவோம் அல்லது டிக்கியில் பூட்டுவோம். கொழும்பில் சர்வசாதாரணமாக காரில் இவற்றை விட்டு போகிறார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.