Jump to content

கே.டி கருப்புத்துரையும் சில்லுக் கருப்பட்டியும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இந்த இரு படத்தையும் விரும்பி பார்த்தேன் ...நிழலி எழுதி இருக்கா விட்டால் இந்த படத்தை பார்த்திருக்க மாட்டேன் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இந்த இரு படங்களையும் பார்த்திருந்தேன்.......! மிக மிக அருமையான படங்கள்.இப்பவும் மனசுக்குள் நிக்குது.......!

87/88 ம் ஆண்டு என்று நினைக்கிறேன். இந்தியன் ஆர்மி ஊரடங்கு சட்டம்  அமுலில் இருந்த நேரம், எமது வீட்டுக்கு முன் வீட்டில் இருந்த ஒரு அக்கா அவ முழுகிவிட்டு வந்தவ முற்றத்தில் பொடியள் இளநி வெட்டி குடிக்கிறதை பார்த்து விட்டு தானும் வாங்கிக் குடித்தவ....அன்றிரவு அவவுக்கு சன்னியாக்கி குளிர்காச்சலால் அடுத்தடுத்த நாள் இறந்து விட்டா. பின்பு அவாவை ஒரு வண்டியில் வைத்து விறகுகளையும் ஏற்றிக்கொண்டு வெள்ளைக்கொடியும் பிடித்துக்கொண்டு ஒரு குளத்து மேட்டில் வைத்து எரித்துவிட்டு வந்தார்கள்.....!

சமீபத்தில் பிரெஞ் சானலில் ஒரு படம் வியாட்னாமிய படமாய் இருக்கலாம் ,நீங்கள் யாரும் கூட பார்த்திருக்கலாம், அதுவும் இந்த முதியோர் சாவு சம்பந்தமான படம். முதியோர்களை முதுகில் சுமந்து கொண்டுபோய் அவர்களுக்காக இருக்கும் ஒரு உயர்ந்த மலையில் விட்டு விட்டு வருவார்கள்.அந்த மலையில் ஏராளமான காகங்கள் இருக்கும்.மேலே நீங்களே யோசித்து கொள்ளுங்கள். மலைக்கிராமத்து  கதை.நிறைய சுவாரஸ்யமான காட்சிகள்  உண்டு. நான் அதை இடையில் இருந்துதான் பார்த்தேன்......!  🤔

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் "கே.டி என்கிற கருப்புதுரை" படத்தை பார்க்க நேர்ந்தது.. மிக நன்றாக உள்ளது.
முதியவருக்கும், சிறுவனுக்கும் இடையே உருவாகும் நட்பையும் நேசத்தையும் நெல்லை, மதுரை தமிழில் திருநெல்வேலி மலைச்சாரலோடு உருவாக்கியிருப்பது மிக அருமை..

படத்தை இதுவரை பார்க்க முடியாதவர்களுக்கு கீழே இணைப்புகள்உள்ளன,  அவைகள் நீக்கப்படுமுன் பார்த்து ரசிக்கவும்..!

***

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.