Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

கே.டி கருப்புத்துரையும் சில்லுக் கருப்பட்டியும்

Recommended Posts

போன வார இறுதிகளில் பார்ப்பதற்கு என்ன புதிய தமிழ் படம் வந்து இருக்கு என என் ஐ. பி ரிவி யில் வந்த புதிதாக வந்த படங்களின் வரிசையை பார்த்துக் கொண்டு இருக்கும் போது இரண்டு படங்களின் பெயர்கள் கண்களில் தட்டுப்பட்டன. அப் படங்களின் பெயர்களை இதற்கு முதல் கேள்விப்பட்டும் இருக்கவில்லை. சிறியளவில் கூட இவை பற்றி வாசித்து இருக்கவும் இல்லை. ஆனால் பெயர்களில் இருக்கும் வழக்கத்துக்கு மாறான சொற்கள் என்னை கொஞ்சம் கவர்ந்திழுக்க 'சரி பார்ப்பம்' என்று பார்க்கத் தொடங்கினேன்.

ஊரிலிருக்கும் போது சீனி, மா, பருப்பு போன்றவற்றை சுற்றி வரும் பேப்பர்களில் எதிர்பாராவிதமாக நல்லதொரு கவிதையோ மனசுக்கு பிடிக்கும் ஒரு கதையின் சிறு பகுதியோ வந்து இருக்கும். வாசித்து பார்க்கும் போது மனசுக்குள் அப்படி ஒரு இனிய உணர்வுகளைத் தரும். அவ்வாறான ஒரு உணர்வைத்தான் இந்த திரைப்படங்கள் எனக்கு தந்தன.

அத் திரைப்படங்கள்.

1. கே.டி. (எ) கருப்புத் துரை
2. சில்லுக்கருப்பட்டி

கே.டி. (எ) கருப்புத் துரை

வயது போன ஒருவர் இறக்காமல் மற்றவர்களுக்கும் பாரமாக இருந்தால் அவரது குடும்பத்தினரே ஒரு சடங்கொன்றின் மூலம் அவரை கருணைக் கொலை செய்யும் வழக்கம் இப்பொழுதும் தமிழகத்தின் தென் மாவட்டக் கிராமங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடை பெறுகின்றது. அப்படி ஒரு கிராமத்தில் (கல்லுப்பட்டி) ஒரு முதியவரை அவரது பிள்ளைகளும் குடும்பத்தாரும் கொல்ல முயலும் போது அதை அறிந்த பின் அங்கிருந்து வெளியேறுகின்றார் இந்த படத்தின் கதானாயகனான ஒரு முதியவர்.

வாழ்வின் அந்திமத்தில் உதறி எறியப்பட்டவர் வாழ்வின் ஆரம்பத்திலேயே தூக்கி எறியப்பட்டு கோவில் ஒன்றில் வளர்ந்து வரும் ஒரு வாண்டுவை (பொடியனை) சந்திக்கின்றார். 

மேலே எழுதியிருப்பதை வாசிக்கும் போது படம் ஏதோ சோகப்படம் போன்று போகும் என நினைத்தால்...அவ்வாறு அல்ல அந்த படம். அந்த முதியவருக்கும் சின்ன பொடிப்பயலுக்கும் இடையில் உருவாகும் கள்ளமற்ற அன்பும், இருவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளும், கும்மாளமும் தான் மிச்ச படம் முழுதும்.  அதுவும் மட்டன் பிரியாணிக் காட்சிகள்..... படம் முடிய பிரியாணியை உடனே சாப்பிட வேண்டும் என தவிக்க செய்வன (நான் ஒரு பிரியாணி பிரியனாக்கும்)

முதியவர் தன் நிறைவேறாத சின்ன சின்ன ஆசைகளைச் சொல்ல, சிறுவன் அதை நிறைவேற்ற செய்யும் வேலைகளையும் சம்பவங்களையும் மிகவும் நெகிழ்ச்சியான காட்சிகளின் வாயிலாக காட்டி அருமையான உணர்வுகளை கடத்துகின்றார் இயக்குனர்.

தப்பி போன முதியவரின் பெயரில் இருக்கும் சொத்தை தம் பெயரில் எழுதி எடுத்த பின் கொல்வதற்காக அவர் குடும்பம் இறுதியில் ஆள் வைச்சு கண்டு பிடிக்கின்றது. சிறுவனது புத்திக் கூர்மையை கண்டு அவனுக்கு சென்னையில் பள்ளியில் படிக்கும் வாய்ப்பு வருகின்றது. இருவரும் பிரிந்தார்களா..முதியவரை கொன்றார்களா எனும் கேள்விகளுக்கான பதில்களுக்கு நெகிழ்ச்சியான முடிவுகளுடன் படம் நிறைவு பெறுகின்றது.

இத் திரைப்படத்தின் காட்சிகளில் இருக்கும் துல்லியம்,  இருளும் ஒளியும் கலந்த பொழுதுகள், பின்னனி இசை, இரண்டு கதாப்பாத்திரங்களினதும் சிறந்த நடிப்பு (அந்த பொடியனின் நடிப்பு அப்படி ஒரு துள்ளல்) என எல்லாம் சேர்ந்து நல்லதொரு அனுபவத்தை தந்தன.

மனித மனங்களுக்குள் இருக்கும் நெகிழ்ச்சியான உணர்வுகளை ரசிப்பவர்கள் தவற விட வேண்டாம் இந்த பெரிசையும் பெடியையையும்.

maxresdefault.jpg

 • Like 7
Link to post
Share on other sites

சில்லுக்கருப்பட்டி

மனிதர்களது நான்கு பருவங்களினூடாகவும் தவழ்ந்தும், ஊடுருவியும் கடந்து செல்லும் காதலை, ஆண் பெண் இடையிலான உறவை நான்கு வெவ்வேறு சிறு திரைப்படங்களினூடாக ஒன்றாக கோர்த்து எடுக்கப்பட்ட படம் தான் சில்லுக்கருப்பட்டி. நான்கு கதைகளிலும் காதல், பரிவு, காமம் என்பன இழையோடி மென்னுணர்வுகளை தருகின்றன.

அந்த நான்கு கதைகள்

பிங்க் பேக்:

குப்பை பொறுக்கும் பதின்ம வயது சிறுவனுக்கும் மாடி வீட்டில் வசிக்கும் பதின்ம வயதில் இருக்கும் வசதியான  சிறுமிக்கும் இடையில் பிங்க் நிற குப்பை பை ஒன்றின் மூலம் உருவாகும் பரிவையும், அக்கறையையும், காதலையும் சொல்கின்றது இந்த கதை. முதல் 10 நிமிடம் கொஞ்சம் அலுப்பை தருவது போல இருந்து பின் கதையின் களமும் போக்கும் புரிபடத் தொடங்கும் போது படத்தில் இழையோடும் கள்ளமற்ற மனங்களின் அன்பை புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

ஒரு சிறு கவிதை இச் சிறு படம்.

காக்கா கடி:

தகவல் தொழினுட்ப துறையில் வேலை செய்யும் இளைஞனுக்கு (மீம்ஸ் உருவாக்குகின்றவராகவும் உள்ளார்) கலியாணம் முற்றாகி வரும் வேளையில் prostate cancer (அல்லது ஆண் குறி தொடர்பான ஒரு புற்று நோய்) என்று தெரியவர கலியாணம் தடைப்பட்டு விடுகின்றது. தனக்கு இந்த இளம் வயதிலேயே கான்சரா என அறிந்து நிலை குலைந்து போகின்ற அந்த இளைஞனுக்கும் share taxi யில் பயணிக்கும் பெண்ணுக்கும் இடையில் உருவாகும் சந்திப்பு காதலாக மாறி விரிகின்றது.

ஒரு காகத்தின் நட்பைக் கூட உன்னதமாக நினைக்கும் அப் பெண்ணுக்கும் ஈற்றில் ஒற்றை விதையுடன் (one ball) வாழப் போகின்ற அவருக்கும் இடையில் விரியும் காதலும் பரிவுமாக படம் அமைகின்றது

Turtle walk

நவ நீதன் எனும் 8 வருடங்களுக்கு முன்னர் மனைவியை இழந்தவருக்கும் யசோதா எனும் முதிர் கன்னிக்கும் இடையிலான காதலை ஒரு சிறு காதல் கவிதையை மென்மையான குரலில் சொல்வது போன்று சொல்லிச் செல்கின்றார்கள். இடையில் ஆமை முட்டையை சேகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் (அதாவது என்னைப் போல ஒம்லெட் போடாமல்..) சொல்கின்றார்கள்.

எத்தனை வயது சென்றாலும் அன்பை பரிமாற இன்னொரு துணை மனுசருக்கு தேவைப்படுகின்றது. அதுவும் தனிமையில் இருப்பவர்களுக்கு தனக்கே தனக்கு என்ற ஒரு உறவை மனசு தேடிக்கொண்டு தான் இருக்கும். அந்த தேடலை காதலை இப் படம் அழகாக காட்டுகின்றது.

எனக்கு இவ் படத்தில் இருக்கும் ஒரே ஒரு ஆதங்கம் முதியவர்களுக்கிடையிலான காதலைக்  காட்டுவதற்கு கூட பெண் (லீலா சாம்சன்) மண முடிக்காமல் (அதாவது கன்னியாகவே... ) இருப்பதாக காட்டி வழக்கமான தமிழ் பட Stereo type சாயலை தவிர்த்து இருக்கலாமே என்பது தான்.

ஹே அம்மு

கலியாணம் முடித்து 3 பிள்ளைகளுக்கும் தாயான அம்மு குடும்ப சூழ் நிலையில் தன்னை கணவர் ஏறேடுத்தும் பார்ப்பதில்லை என்ற ஏக்கத்துடன் கணவருடனான உடலுறவு கூட ஒரு இயந்திரத்தனமான செயல்பாடாக, கணவருக்கான sleeping tablet போன்று அமைந்து விட்டதெனும் கவலை மேலோங்கி கோபத்தில் வாழ்கின்றார். நாளாந்தம் வேலைக்கு போய் உழைத்துக் கொட்டும் கணவரும் இதை எப்படி சமாளிப்பது  என்று தெரியாமல் இருக்கும் போது Alexa  எனும் கேட்ட கேள்விகளுக்கு பதில் தரும் Amazon பொருள் நுழைகின்றது. அதன் பின் நடப்பவற்றை கண்ணியம் குறையாமல் காட்சிகளுடன் இடையிடையே சிரிப்பையும் மூட்டி காட்டியிருக்கின்றார்கள்.

நான்கு கதைகளிலும் இது தான் கொஞ்சம் சிக்கலான கதை. ஆனால் இதை பார்க்கின்ற 35 வயதை கடந்த கலியாணம் கட்டிய ஆணுக்கும் பெண்ணுக்கும் இந்த வகையான பிரச்சனைகள் ஏதாவது ஒரு கால கட்டத்தில் ஏற்பட்டு இருக்கும். தமிழ் சினிமாவில் பேசாப் பொருளாக இருக்கும் இதை பேசியிருக்கின்றார்கள்.

நான்கு கதைகளையும் காதல், பரிவு, துணை என்ற இழைகளினூடாக கட்டி ஒரு திரைப்படமாக ஆக்கியிருக்கின்றார்கள்.

இன்னொரு தவிர்க்க தேவையில்லாத சினிமா படம்.

sillu-karupatti-review-banner.jpg

 • Like 5
 • Thanks 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரைவாசிக்க கதையை நீங்களே கூறிவிட்டீர்களே.😃 இருந்தாலும் பார்த்துவிட்டு எழுதுகிறேன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

போன வார இறுதிகளில் பார்ப்பதற்கு என்ன புதிய தமிழ் படம் வந்து இருக்கு என என் ஐபி ரிவி யில் வந்த புதிதாக வந்த படங்களின் வரிசையை பார்த்துக் கொண்டு இருக்கும் போது இரண்டு படங்களின் பெயர்கள் கண்களில் தட்டுப்பட்டன. அப் படங்களின் பெயர்களை இதற்கு முதல் கேள்விப்பட்டும் இருக்கவில்லை. சிறியளவில் கூட இவை பற்றி வாசித்திருக்கவில்லை. ஆனால் பெயர்களில் இருக்கும் வழக்கத்துக்கு மாறான சொற்கள் என்னை கொஞ்சம் கவர்ந்திழுக்க 'சரி பார்ப்பம்' என்று பார்க்கத் தொடங்கினேன்.

ஊரிலிருக்கும் போது சீனி, மா, பருப்பு போன்றவற்றை சுற்றி வரும் பேப்பர்களில் எதிர்பாராவிதமாக நல்லதொரு கவிதையோ மனசுக்கு பிடிக்கும் ஒரு கதையின் சிறு பகுதியோ வந்து இருக்கும். வாசித்து பார்க்கும் போது மனசுக்குள் அப்படி ஒரு இனிய உணர்வுகளைத் தரும். அவ்வாறான ஒரு உணர்வைத்தான் இந்த திரைப்படங்கள் எனக்கு தந்தன.

அத் திரைப்படங்கள்.

1. கே.டி. (எ) கருப்புத் துரை
2. சில்லுக்கருப்பட்டி

கே.டி. (எ) கருப்புத் துரை

வயது போன ஒருவர் இறக்காமல் மற்றவர்களுக்கும் பாரமாக இருந்தால் அவரது குடும்பத்தினரே ஒரு சடங்கொன்றின் மூலம் அவரை கருணைக் கொலை செய்யும் வழக்கம் இப்பொழுதும் தென் மாவட்டக் கிராமங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடை பெறுகின்றது. அப்படி ஒரு கிராமத்தில் (கல்லுப்பட்டி) ஒரு முதியவரை அவரது பிள்ளைகளும் குடும்பத்தாரும் கொல்ல முயலும் போது அதை அறிந்த பின் அங்கிருந்து ஒரு வெளியேறுகின்றார் இந்த படத்தின் கதானாயகனான ஒரு முதியவர்.

வாழ்வின் அந்திமத்தில் உதறி எறியப்பட்டவர் வாழ்வின் ஆரம்பத்திலேயே தூக்கி எறியப்பட்டு கோவில் ஒன்றில் வளர்ந்து வரும் ஒரு வாண்டுவை (பொடியனை) சந்திக்கின்றார். 

மேலே எழுதியிருப்பதை வாசிக்கும் போது படம் ஏதோ சோகப்படம் போன்று போகும் என நினைத்தால்...அவ்வாறு அல்ல அந்த படம். அந்த முதியவருக்கும் சின்ன பொடிப்பயலுக்கும் இடையில் உருவாகும் கள்ளமற்ற அன்பும், இருவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளும், கும்மாளமும் தான் மிச்ச படம் முழுதும்.  அதுவும் மட்டன் பிரியாணிக் காட்சிகள்..... படம் முடிய பிரியாணியை உடனே சாப்பிட வேண்டும் என தவிக்க செய்வன (நான் ஒரு பிரியாணி பிரியனாக்கும்)

முதியவர் தன் நிறைவேறாத சின்ன சின்ன ஆசைகளைச் சொல்ல, சிறுவன் அதை நிறைவேற்ற செய்யும் வேலைகளையும் சம்பவங்களையும் மிகவும் நெகிழ்ச்சியான காட்சிகளின் வாயிலாக காட்டி அருமையான உணர்வுகளை கடட்துகின்றார் இயக்குனர்.

தப்பி போன முதியவரின் பெயரில் இருக்கும் சொத்தை தம் பெயரில் எழுதி எடுத்த பின் கொல்வதற்காக அவர் குடும்பம் இறுதியில் ஆள் வைச்சு கண்டு பிடிக்கின்றது. சிறுவனது புத்திக் கூர்மையை கண்டு அவனுக்கு சென்னையில் பள்ளியில் படிக்கும் வாய்ப்பு வருகின்றது. இருவரும் பிரிந்தார்களா..முதியவரை கொன்றார்களா எனும் கேள்விகளுக்கான பதில்களுக்கு நெகிழ்ச்சியான முடிவுகளுடன் படம் நிறைவு பெறுகின்றது.

இத் திரைப்படத்தின் காட்சிகளில் இருக்கும் துல்லியம்,  இருளும் ஒளியும் கலந்த பொழுதுகள், பின்னனி இசை, இரண்டு கதாப்பாத்திரங்களினதும் சிறந்த நடிப்பு (அந்த பொடியனின் நடிப்பு அப்படி ஒரு துள்ளல்) என எல்லாம் சேர்ந்து நல்லதொரு அனுபவத்தை தந்தன.

மனித மனங்களுக்குள் இருக்கும் நெகிழ்ச்சியான உணர்வுகளை ரசிப்பவர்கள் தவற விட வேண்டாம் இந்த பெரிசையும் பெடியையையும்.

கட்டுரையை நம்பி படம் பார்க்கப்போறன்.. ஏதும் பிழை எண்டால் திரும்ப வந்து இருக்கு நிழலிக்கு. 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இரண்டும் நல்ல படம்,  Netflix லும் பார்க்கலாம்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 1/30/2020 at 12:17 AM, உடையார் said:

இரண்டும் நல்ல படம்,  Netflix லும் பார்க்கலாம்

நன்றி உடையார்.  Netflix இல் இரண்டு படங்களையும் பார்த்தேன்.

நிழலியின் குறிப்பு இல்லாவிட்டால் இப்படியான நல்ல படங்களை பார்த்திருக்கவே மாட்டேன். இரண்டு படங்களினதும் இயக்குநர்கள் பெண்கள் என்பதும் கவனிக்கத்தக்கது!

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 1/30/2020 at 7:05 AM, நிழலி said:

நான்கு கதைகளையும் காதல், பரிவு, துணை என்ற இழைகளினூடாக கட்டி ஒரு திரைப்படமாக ஆக்கியிருக்கின்றார்கள்.

இன்னொரு தவிர்க்க தேவையில்லாத சினிமா படம்.

நான் இப்பொழுதுதான் இந்த சில்லு கருப்பட்டியை  Netflixல் பார்த்துவிட்டு எழுதுகிறேன்.. 

Pink bag: கள்ளமற்ற அன்பை காட்டுகிறது. மாஞ்சாவிற்கு ஏதும் நடந்துவிடுமே என கொஞ்ச கவலையும் எட்டிப்பார்த்தது.

காக்கா கடி: prostate cancer பற்றிய சமூகத்தின் பார்வை மாறவேண்டும் என சொல்கிறது.. முகிலனின் நிலையை உணர்ந்து வரும் காதல்..

Turtle walk: அந்திம கால காதல், பரிவு. இது எல்லோருக்கும் அமைவதில்லை. ஆனால் இப்பொழுது இந்த அந்திம காதலும் அதிகளவில் பேசப்படுகிறது. 

Hey Ammu: ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியாக, அட்டவனைப்படுத்தப்பட்ட வாழ்க்கை வாழும் அனேகரின் வாழ்க்கை, விரைவில் சலிப்படைந்துவிடுவதை கூறுகிறது. 

வாழ்கையின் நான்கு படிகள் பற்றிய விவரணப்படம் போன்ற மாதிரிஇருந்தாலும் பார்க்க வேண்டிய படம்.. 

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வண்ணத்திரைப்பகுதியில் மல்லிகைவாசத்தின் படைப்புகளை காணவில்லை வருத்ததிற்குரியது ,மீண்டும் வந்து எனது பார்வையில் என்று அவரது பாணியில் எழுதவேண்டும், மிகத்திறமையான விமர்சகர் , படம் பார்க்காவிட்டாலும் அவரது விமர்சனங்களை வாசிப்பது ஒரு இனிமையான அனுபவம்.நல்ல விமர்சனம் நிழலி , சில்லுக்கருப்பட்டி திரைப்படம் பார்த்தேன் மோசமில்லை , முதலில் உங்கள் விமர்சனத்தை படம் பார்ப்பதற்கு முன் படித்திருந்தால் படத்தை அதிகமாக ஒன்றிப்பார்த்திருப்பேன் எனநினைக்கிறேன்.

Link to post
Share on other sites

கே.டி (எ) கருப்புத்துரையில் காட்டப்படும் வயதானவர்கலுக்கு செய்யும் கருணைக் கொலைக்கு பெயர் தலைக்குத்து என்று ஊடகவியலாளரும் பத்தி எழுத்தாளருமான என். சரவணன் என் முக நூல் பகிர்வொன்றில் குறிப்பிட்டு இருந்தார். தலைக்குத்து பற்றி இணையத்தில் தேடிப் பார்த்தும் எதுவும் கிடைக்கவில்லை.

எவருக்காகது இந்தியாவின் தென் மாவட்டங்களில் நிகழும் இந்த 'தலைக்குத்து' சடங்கு பற்றி மேலதிகமாகத் தெரியுமா?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 1/30/2020 at 5:18 AM, Kapithan said:

கட்டுரையை நம்பி படம் பார்க்கப்போறன்.. ஏதும் பிழை எண்டால் திரும்ப வந்து இருக்கு நிழலிக்கு. 

கண்டிப்பாக ஏமாற மாட்டீர்கள். உறுதிப்பாடு எனது. நான் சமீபத்தில் குடும்பத்துடன் (திரைப்படம் பார்க்கக்  குடும்பத்துடன் செல்வதே என் வழக்கம். அதுவும் வாய்ப்பு அமைந்ததால், தமிழ்ப் படங்களைத் திரையரங்கத்திற்குச் சென்றுதான் பார்ப்போம்) கண்டு களித்த, உணர்ந்த படங்கள் இவையிரண்டும். நிழலி தம் விமர்சனத்தின் மூலம் மெருகேற்றியுள்ளது பாராட்டுக்கு உகந்தது. 

On 1/30/2020 at 1:35 AM, நிழலி said:

சில்லுக்கருப்பட்டி

மனிதர்களது நான்கு பருவங்களினூடாகவும் தவழ்ந்தும், ஊடுருவியும் கடந்து செல்லும் காதலை, ஆண் பெண் இடையிலான உறவை நான்கு வெவ்வேறு சிறு திரைப்படங்களினூடாக ஒன்றாக கோர்த்து எடுக்கப்பட்ட படம் தான் சில்லுக்கருப்பட்டி. நான்கு கதைகளிலும் காதல், பரிவு, காமம் என்பன இழையோடி மென்னுணர்வுகளை தருகின்றன.

அந்த நான்கு கதைகள்

பிங்க் பேக்:

குப்பை பொறுக்கும் பதின்ம வயது சிறுவனுக்கும் மாடி வீட்டில் வசிக்கும் பதின்ம வயதில் இருக்கும் வசதியான  சிறுமிக்கும் இடையில் பிங்க் நிற குப்பை பை ஒன்றின் மூலம் உருவாகும் பரிவையும், அக்கறையையும், காதலையும் சொல்கின்றது இந்த கதை. முதல் 10 நிமிடம் கொஞ்சம் அலுப்பை தருவது போல இருந்து பின் கதையின் களமும் போக்கும் புரிபடத் தொடங்கும் போது படத்தில் இழையோடும் கள்ளமற்ற மனங்களின் அன்பை புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

ஒரு சிறு கவிதை இச் சிறு படம்.

காக்கா கடி:

தகவல் தொழினுட்ப துறையில் வேலை செய்யும் இளைஞனுக்கு (மீம்ஸ் உருவாக்குகின்றவராகவும் உள்ளார்) கலியாணம் முற்றாகி வரும் வேளையில் prostate cancer (அல்லது ஆண் குறி தொடர்பான ஒரு புற்று நோய்) என்று தெரியவர கலியாணம் தடைப்பட்டு விடுகின்றது. தனக்கு இந்த இளம் வயதிலேயே கான்சரா என அறிந்து நிலை குலைந்து போகின்ற அந்த இளைஞனுக்கும் share taxi யில் பயணிக்கும் பெண்ணுக்கும் இடையில் உருவாகும் சந்திப்பு காதலாக மாறி விரிகின்றது.

ஒரு காகத்தின் நட்பைக் கூட உன்னதமாக நினைக்கும் அப் பெண்ணுக்கும் ஈற்றில் ஒற்றை விதையுடன் (one ball) வாழப் போகின்ற அவருக்கும் இடையில் விரியும் காதலும் பரிவுமாக படம் அமைகின்றது

Turtle walk

நவ நீதன் எனும் 8 வருடங்களுக்கு முன்னர் மனைவியை இழந்தவருக்கும் யசோதா எனும் முதிர் கன்னிக்கும் இடையிலான காதலை ஒரு சிறு காதல் கவிதையை மென்மையான குரலில் சொல்வது போன்று சொல்லிச் செல்கின்றார்கள். இடையில் ஆமை முட்டையை சேகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் (அதாவது என்னைப் போல ஒம்லெட் போடாமல்..) சொல்கின்றார்கள்.

எத்தனை வயது சென்றாலும் அன்பை பரிமாற இன்னொரு துணை மனுசருக்கு தேவைப்படுகின்றது. அதுவும் தனிமையில் இருப்பவர்களுக்கு தனக்கே தனக்கு என்ற ஒரு உறவை மனசு தேடிக்கொண்டு தான் இருக்கும். அந்த தேடலை காதலை இப் படம் அழகாக காட்டுகின்றது.

எனக்கு இவ் படத்தில் இருக்கும் ஒரே ஒரு ஆதங்கம் முதியவர்களுக்கிடையிலான காதலைக்  காட்டுவதற்கு கூட பெண் (லீலா சாம்சன்) மண முடிக்காமல் (அதாவது கன்னியாகவே... ) இருப்பதாக காட்டி வழக்கமான தமிழ் பட Stereo type சாயலை தவிர்த்து இருக்கலாமே என்பது தான்.

ஹே அம்மு

கலியாணம் முடித்து 3 பிள்ளைகளுக்கும் தாயான அம்மு குடும்ப சூழ் நிலையில் தன்னை கணவர் ஏறேடுத்தும் பார்ப்பதில்லை என்ற ஏக்கத்துடன் கணவருடனான உடலுறவு கூட ஒரு இயந்திரத்தனமான செயல்பாடாக, கணவருக்கான sleeping tablet போன்று அமைந்து விட்டதெனும் கவலை மேலோங்கி கோபத்தில் வாழ்கின்றார். நாளாந்தம் வேலைக்கு போய் உழைத்துக் கொட்டும் கணவரும் இதை எப்படி சமாளிப்பது  என்று தெரியாமல் இருக்கும் போது Alexa  எனும் கேட்ட கேள்விகளுக்கு பதில் தரும் Amazon பொருள் நுழைகின்றது. அதன் பின் நடப்பவற்றை கண்ணியம் குறையாமல் காட்சிகளுடன் இடையிடையே சிரிப்பையும் மூட்டி காட்டியிருக்கின்றார்கள்.

நான்கு கதைகளிலும் இது தான் கொஞ்சம் சிக்கலான கதை. ஆனால் இதை பார்க்கின்ற 35 வயதை கடந்த கலியாணம் கட்டிய ஆணுக்கும் பெண்ணுக்கும் இந்த வகையான பிரச்சனைகள் ஏதாவது ஒரு கால கட்டத்தில் ஏற்பட்டு இருக்கும். தமிழ் சினிமாவில் பேசாப் பொருளாக இருக்கும் இதை பேசியிருக்கின்றார்கள்.

நான்கு கதைகளையும் காதல், பரிவு, துணை என்ற இழைகளினூடாக கட்டி ஒரு திரைப்படமாக ஆக்கியிருக்கின்றார்கள்.

இன்னொரு தவிர்க்க தேவையில்லாத சினிமா படம்.

sillu-karupatti-review-banner.jpg

நீங்கள் குறிப்பிட்ட பருவ வரிசையின்படி மூன்றாவது, நான்காவது கதைகளை இடம் மாற்றியிருக்கலாமோ எனத் தோன்றுகிறது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 1/30/2020 at 1:17 AM, உடையார் said:

இரண்டும் நல்ல படம்,  Netflix லும் பார்க்கலாம்

On 2/2/2020 at 11:51 AM, கிருபன் said:

நன்றி உடையார்.  Netflix இல் இரண்டு படங்களையும் பார்த்தேன்.

நிழலியின் குறிப்பு இல்லாவிட்டால் இப்படியான நல்ல படங்களை பார்த்திருக்கவே மாட்டேன். இரண்டு படங்களினதும் இயக்குநர்கள் பெண்கள் என்பதும் கவனிக்கத்தக்கது!

எனக்கு, சினிமா படங்கள் பார்ப்பதில் ஆர்வம், நேரம் இல்லை என்றாலும்,
மனைவி.. சில நாடகங்களை,  "யூ ரியூப்பில்"   பார்ப்பார்.

நீங்கள் எல்லோரும்.. அந்தப் படம் நன்றாக இருக்குது,  என்பதால்...
அதனை...  Netflix இல்  பார்க்க, உள்ள... வழி, விதி முறைகளை கூற முடியுமா?  

Edited by தமிழ் சிறி
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
24 minutes ago, நிழலி said:

கே.டி (எ) கருப்புத்துரையில் காட்டப்படும் வயதானவர்கலுக்கு செய்யும் கருணைக் கொலைக்கு பெயர் தலைக்குத்து என்று ஊடகவியலாளரும் பத்தி எழுத்தாளருமான என். சரவணன் என் முக நூல் பகிர்வொன்றில் குறிப்பிட்டு இருந்தார். தலைக்குத்து பற்றி இணையத்தில் தேடிப் பார்த்தும் எதுவும் கிடைக்கவில்லை.

எவருக்காகது இந்தியாவின் தென் மாவட்டங்களில் நிகழும் இந்த 'தலைக்குத்து' சடங்கு பற்றி மேலதிகமாகத் தெரியுமா?

படுத்த படுக்கையாகி வெகு நாட்கள் மரணம் போராட்டத்தில் இருப்பவர்களை எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டி இளநீர் கொடுக்கும் வழக்கம் தென்மாவட்டங்களில்  அக்காலத்தில் உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உடலைக் குளிர்ச்சியாக்குவது எனக் கூறிக் கொள்வார்களாம். முடிந்தால் அம்முதியோர்க்கு விருப்பமானவற்றைச் செய்து/கொடுத்து மனதையும் குளிர்விப்பார்களாம். படத்தில் காட்டுகிற மு. இராமசாமி போன்று ஓரளவு ஆரோக்கியமானவர்களுக்குச் செய்ததாய்த் தான் கேள்வியுறவில்லை என்று என் 99 வயது ஆச்சி (பாட்டி; படத்தின் ஒரு பகுதியை கணினியில் காண்பித்தேன்; ஏனெனில் மு.இராமசாமியின் வீடு எங்களுக்கு அருகாமையில்) கூறுகிறாள். எனினும் இதனை நான் நியாயப்படுத்தவில்லை. எப்படிச் செய்தாலும் கொலை கொலைதான். கருணைக் கொலைக்கு அனுமதியுள்ள இடங்களில் கூட, அவர்களின் விருப்பத்தின் பேரிலேயே நடைபெற வேண்டும் என்ற கருத்துள்ளவன் நான்.

 • Like 1
Link to post
Share on other sites
34 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

கண்டிப்பாக ஏமாற மாட்டீர்கள். உறுதிப்பாடு எனது. நான் சமீபத்தில் குடும்பத்துடன் (திரைப்படம் பார்க்கக்  குடும்பத்துடன் செல்வதே என் வழக்கம். அதுவும் வாய்ப்பு அமைந்ததால், தமிழ்ப் படங்களைத் திரையரங்கத்திற்குச் சென்றுதான் பார்ப்போம்) கண்டு களித்த, உணர்ந்த படங்கள் இவையிரண்டும். நிழலி தம் விமர்சனத்தின் மூலம் மெருகேற்றியுள்ளது பாராட்டுக்கு உகந்தது. 

நீங்கள் குறிப்பிட்ட பருவ வரிசையின்படி மூன்றாவது, நான்காவது கதைகளை இடம் மாற்றியிருக்கலாமோ எனத் தோன்றுகிறது.

நானும் இவ்வாறு தான் நினைத்தனான். பருவங்கள் ஏறுவரிசையில் அமைந்து இருந்திருக்கும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

படுத்த படுக்கையாகி வெகு நாட்கள் மரணம் போராட்டத்தில் இருப்பவர்களை எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டி இளநீர் கொடுக்கும் வழக்கம் தென்மாவட்டங்களில்  அக்காலத்தில் உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உடலைக் குளிர்ச்சியாக்குவது எனக் கூறிக் கொள்வார்களாம். முடிந்தால் அம்முதியோர்க்கு விருப்பமானவற்றைச் செய்து/கொடுத்து மனதையும் குளிர்விப்பார்களாம். படத்தில் காட்டுகிற மு. இராமசாமி போன்று ஓரளவு ஆரோக்கியமானவர்களுக்குச் செய்ததாய்த் தான் கேள்வியுறவில்லை என்று என் 99 வயது ஆச்சி (பாட்டி; படத்தின் ஒரு பகுதியை கணினியில் காண்பித்தேன்; ஏனெனில் மு.இராமசாமியின் வீடு எங்களுக்கு அருகாமையில்) கூறுகிறாள். எனினும் இதனை நான் நியாயப்படுத்தவில்லை. எப்படிச் செய்தாலும் கொலை கொலைதான். கருணைக் கொலைக்கு அனுமதியுள்ள இடங்களில் கூட, அவர்களின் விருப்பத்தின் பேரிலேயே நடைபெற வேண்டும் என்ற கருத்துள்ளவன் நான்.

சுப. சோமசுந்தரம் அவர்களே....
எனது பாட்டி, இப்போது உயிருடன் இருந்திருந்தால்... 
அவவுக்கு, இப்ப  150 வயது தாண்டியிருக்கும். 💓

அவ.....  சொல்லிய கதை இது.
மண் ஆசை, பொன் ஆசை... பிடித்த  மனிதர், 
நோய் வாய்ப்பட்டு, படுக்கையில் கிடந்து, 
மலம், சலம்... கழிக்க முடியாமல்...    உயிருக்கு போராடும் போது....

ஒரு கிண்ணம்...  பசும் பாலை கொடுக்க வேண்டுமாம்,
அதுக்கும்... உயிர் போகா விடில்,  அவர் விரும்பிய மண்ணை, 
பொன்னை (பெண்ணை அல்ல)  அதே... பசும் பாலில் கலந்து கொடுத்தால்....

சிவனே... என்று, அவர் உயிர் பிரியுமாம்.

பிறகென்ன  தாத்தாவுக்கு... அந்திரட்டியும்,  திவசம்  எண்டு, ஒரே கொண்டாட்டம்  தான்.  :grin:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

எனக்கு, சினிமா படங்கள் பார்ப்பதில் ஆர்வம், நேரம் இல்லை என்றாலும்,
மனைவி.. சில நாடகங்களை,  "யூ ரியூப்பில்"   பார்ப்பார்.

நீங்கள் எல்லோரும்.. அந்தப் படம் நன்றாக இருக்குது,  என்பதால்...
அதனை...  Netflix இல்  பார்க்க, உள்ள... வழி, விதி முறைகளை கூற முடியுமா?  

Netflix Germany க்கு மாதாமாதம் சந்தா கட்டினால்தான் உண்டு! ஆனால் ஆங்கில, ஜேர்மனிய படங்களை பார்க்கும் ஆர்வம் இல்லையென்றால் சந்தா கட்டுவது வேஸ்ற்!

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, கிருபன் said:

Netflix Germany க்கு மாதாமாதம் சந்தா கட்டினால்தான் உண்டு! ஆனால் ஆங்கில, ஜேர்மனிய படங்களை பார்க்கும் ஆர்வம் இல்லையென்றால் சந்தா கட்டுவது வேஸ்ற்!

ஓசி.... எண்டால், எட்டிப் பார்க்கலாம்... என நினைத்தேன். 😜

நாங்கள், அதுக்கு........ சரிப்பட்டு,  வர மாட்டம். :grin:

தகவலுக்கு, நன்றி கிருபன் ஜீ.  :)

Link to post
Share on other sites
2 hours ago, தமிழ் சிறி said:

ஓசி.... எண்டால், எட்டிப் பார்க்கலாம்... என நினைத்தேன். 😜

நாங்கள், அதுக்கு........ சரிப்பட்டு,  வர மாட்டம். :grin:

தகவலுக்கு, நன்றி கிருபன் ஜீ.  :)

Netflix இல் இணைந்தால் முதல் மாதம் இலவசமாக பார்க்க முடியும். முதல் மாசம் முடிவதற்கு முதல் நாள் உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லி விலகி விடலாம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நிழலி said:

Netflix இல் இணைந்தால் முதல் மாதம் இலவசமாக பார்க்க முடியும். முதல் மாசம் முடிவதற்கு முதல் நாள் உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லி விலகி விடலாம்.

நிழலி...  உண்மையில்,  
இங்கு பதியப் பட்டுள்ள, கருத்தாளர்களின்  எழுத்தை பார்த்துத் தான்...
"கே.டி கருப்புத்துரையும் சில்லுக் கருப்பட்டியும்" எனும் படத்தை...
பார்க்க,  ஆசைப் பட்டேன். :)

மலிந்தால்... சந்தைக்கு வரும் தானே....
அது வரை,  பொறுத்திருப்போம்  :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, தமிழ் சிறி said:

....

மலிந்தால்... சந்தைக்கு வரும் தானே....
அது வரை,  பொறுத்திருப்போம்  :)

தமிழ் சிறீ ஐயா,

சந்தைக்கு வராமலே காணாமல் போன படங்களும் உண்டு.. !

img1140103021_1_1.jpg

ஏறக்குறைய இம்மாதிரி கதைக் கரு கொண்ட "தலைமுறைகள்" என்ற பாலு மகேந்திராவின் படம், தற்பொழுது எங்கும் கிடைப்பதில்லை..

ஆகவே, கூந்தல் இருக்கும்போதே அள்ளி முடியுங்கள்..!

நெட்ஃப்ளெக்ஸில் தற்காலிகமாக கணக்கு தொடங்கி படத்தை பாருங்கள்..! :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ராசவன்னியன் said:

தமிழ் சிறீ ஐயா,

சந்தைக்கு வராமலே காணாமல் போன படங்களும் உண்டு.. !

img1140103021_1_1.jpg

ஏறக்குறைய இம்மாதிரி கதைக் கரு கொண்ட "தலைமுறைகள்" என்ற பாலு மகேந்திராவின் படம், தற்பொழுது எங்கும் கிடைப்பதில்லை..

ஆகவே, கூந்தல் இருக்கும்போதே அள்ளி முடியுங்கள்..!

நெட்ஃப்ளெக்ஸில் தற்காலிகமாக கணக்கு தொடங்கி படத்தை பாருங்கள்..! :)

ராஜ வன்னியன்... சார்,
"அட்றா சக்கை.. அம்மன் கோயில் புக்கை."
என்று...  இலங்கையில் சொல்வார்கள்.
நிழலியும், நீங்களும்...  "கூந்தல் இருக்கும்போதே அள்ளி முடியுங்கள்..!" 💯
என்று  சொன்னது..... சிரிப்பாகவும், சிறப்பாகவும் இருந்தது. :)
 
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 1/29/2020 at 9:05 PM, நிழலி said:

மனிதர்களது நான்கு பருவங்களினூடாகவும் தவழ்ந்தும், ஊடுருவியும் கடந்து செல்லும் காதலை, ஆண் பெண் இடையிலான உறவை நான்கு வெவ்வேறு சிறு திரைப்படங்களினூடாக ஒன்றாக கோர்த்து எடுக்கப்பட்ட படம் தான் சில்லுக்கருப்பட்டி. நான்கு கதைகளிலும் காதல், பரிவு, காமம் என்பன இழையோடி மென்னுணர்வுகளை தருகின்றன.

இரண்டு நல்ல படங்களைப் பார்க்க கிடைத்ததற்கான புண்ணியம் உங்களுக்கு வந்து சேரும் நிழலி.

சில்லுக் கருப்பட்டி படத்தில்,

விடலை பருவத்துக் காதல்

இளைஞர் காதல்

குடும்பத்தின் காதல்

முதியவர் காதல்

என்ற ஒழுங்கில்தான் வந்திருக்க வேண்டும்.  ஏனோ தெரியவில்லை குடும்பத்துக் காதலை  கடைசிக்கு கொண்டு போய் விட்டார்கள்.

நல்லதொரு படம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ராசவன்னியன் said:

ஏறக்குறைய இம்மாதிரி கதைக் கரு கொண்ட "தலைமுறைகள்" என்ற பாலு மகேந்திராவின் படம், தற்பொழுது எங்கும் கிடைப்பதில்லை..

ராசவன்னியன் இந்தப் பக்கமாக ஒரு தடவை போயிட்டு வாங்களேன்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Kavi arunasalam said:

ராசவன்னியன் இந்தப் பக்கமாக ஒரு தடவை போயிட்டு வாங்களேன்

இணைப்பிற்கு மிக்க நன்றி, திரு. கவி ஐயா..!

ரொம்ப நாளா இந்தப்படத்தை பார்க்கவேண்டுமென நினைத்திருந்தேன்..

விருப்பம் கைகூடிவிட்டது..

இந்த 'கே.டி' படத்தை சக நண்பர் ஒருவர் தருகிறேன் என இன்று சொல்லியுள்ளார்.. இரண்டையும் பார்த்துவிட வேண்டியதுதான்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தமிழ் சிறி said:

ராஜ வன்னியன்... சார்,
"அட்றா சக்கை.. அம்மன் கோயில் புக்கை."
என்று...  இலங்கையில் சொல்வார்கள்.
நிழலியும், நீங்களும்...  "கூந்தல் இருக்கும்போதே அள்ளி முடியுங்கள்..!" 💯
என்று  சொன்னது..... சிரிப்பாகவும், சிறப்பாகவும் இருந்தது. :)
 
https://einthusan.ca/movie/watch/tnBz/?lang=tamil

இதில் இலவசமாக பார்க்கலாம்

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நிழலி உங்களுடைய பட விமர்சனம் வாசித்துவிட்டு நேற்று இரவு சில்லு  கருப்பட்டி  படம் பார்த்தேன்.
ஆபீசில் என்னுடன் வேலை பார்க்கும் தமிழக நண்பரும் கூட நல்லதொரு படம் என கூறியும் இருந்தார்.
நாலு குட்டி கதைகளும் கவிதையாக படமாக்கப்பட்டு இருக்கிறது. 
அதில் வரும் எல்லா கதாபாத்திரங்களும் மனசுக்குள் வந்து குந்தி இருக்கிறார்கள்.
ஒவ்வொரு கதையும் முடிய மனசு லேசாக ஆனதை போல் இருக்கிறது.
குறிப்பாக அந்த நாலு பெண் கதாபாத்திரங்களும் மிக அருமை.
ஆண் கதாபாத்திரங்களும் அப்படியே. 
அந்த ஷேர் ஆட்டோவில் வரும் பெண்ணை போல எங்காவது ஒரு பெண்ணை சந்திக்க மாட்டமா என்று மனசு ஏங்குகிறது. 
எனக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம் இந்த படத்தில்... மனிதர்களை மனிதர்களாக காட்டி உள்ளார்கள்.
வில்லத்தனம் கிடையாது, முழுக்க முழுக்க சராசரி மன உணர்வுகளை படம் பிடித்து காட்டி இருக்கிறார்கள்.
ஆகமொத்தத்தில் ரம்மியமானதொரு திரைப்படம்.
கருத்து எழுதி பார்க்கும் ஆவலை கூட்டிய அனைவருக்கும் நன்றி.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.