Jump to content

முன்னாள் பிரதமர் மல்றோனிக்குக் கனடியத் தமிழர் மரபு விருது


Recommended Posts

முன்னாள் பிரதமர் மல்றோனிக்குக் கனடியத் தமிழர் மரபு விருது

 
 
கனடியத் தமிழர் தேசிய அவையின் ஊடக அறிக்கை:

 

Brian-Mulroney.jpg
முன்னாள் கனடிய பிரதமர் பிறையன் மல்றோனி

1986 ல் தமிழ் மக்கள் அகதிகளாக கனடாவிற்கு படகு மூலம் வந்தடைந்த போது  அவர்களை மானசீகமாக வரவேற்றதை அங்கீகரிக்கும் விதமாக ‘கனேடியத் தமிழர் மரபு விருது’ மாண்புமிகு பிரதமர் பிரையன் மல்ரோனி அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இலங்கையில் இன அழிப்பில் இருந்து தப்பி ஓடிய 155 தமிழ் மக்கள், 1986 ஆகஸ்டில் தெற்கு நியூபவுண்ட்லாண்டிற்கு வந்தடைந்த போது அவர்களை ஏற்றுக்கொண்டார் பிரதமர் பிரையன் மல்ரோனி.

சில கனடியர்கள் ஆத்திரமடைந்து தமிழ் அகதிகளை மோசடி செய்பவர்கள், வரிசையை மீறுபவர்கள், மற்றும் விரும்பத்தகாதவர்கள் என்று அழைத்தனர். இப்படியான சூழ் நிலையில் அகதிகளைத் திரும்ப அனுப்ப முடியாதென்று பிரதமர் பிரையன் மல்ரோனி உறுதியாக இருந்தார். அவர் தேசிய ஊடகமொன்றுக்கு கூறும் போது ‘நாம் அகதிகளை திருப்பி அனுப்ப மாட்டோம்’ என்று அனைத்து கனடியர்களுக்கும் தெளிவாக தெரிவித்திருந்தார். ஒரு சில நாட்களில் 155 தமிழ் உறவுகளும் மொண்ட்ரியல் மற்றும் டொராண்டோவில் குடியேறி அங்கு அவர்கள் தொழில், குடும்பங்களுடன் புதிய வாழ்க்கையை கனடியர்களாக ஆரம்பித்தனர். பிரதமர் மல்ரோனி அவர்கள் தமிழ் அகதிகளுக்காக தொடர்ந்தும் வாதிட்டார். அன்று அகதிகளாக வந்த தமிழ் மக்கள் இன்று பெருமைமிக்க கனேடிய குடிமக்களாக வாழ்கின்றார்கள்.

கெளரவ. பிரையன் மல்ரோனி அவர்கள் தமிழர்களைப் பாதுகாக்கும் முயற்சியில் மிகவும் துணிச்சலாக ஈடுபட்டதற்காக கனடியத் தமிழர் தேசிய அவை, அவர்களுடய 10 ஆவது வருடாந்த விருந்துபசார நிகழ்வில், அனைத்து கனடியத் தமிழர்கள் சார்பாகவும் ‘கனடியத் தமிழர் மரபு விருதை’ வழங்கி பெருமை சேர்த்தனர்.

இந்த விருதை அவருடைய மகளான அமைச்சர் கரோலின் மல்ரோனி மற்றும் அவருடய பேத்தி மிராண்டா இருவரும் இராப்போசன விருந்தில் கலந்து கொண்டு ஏற்றுக் கொண்டதற்கு இருவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.


Caroline-Mulroney-.jpg
Minister Caroline Mulroney and daughter with Vijay Thanikasalam, MPP
Canadian Tamil Legacy Award

Canadian Tamil Legacy Award presented to The Right Honourable Prime Minister Brian Mulroney in recognition of his statesmanship in accepting Tamil Refugees in 1986 and beyond.

When 155 Tamil refugees, ran away from persecution in Sri Lanka, arrived off southern Newfoundland in August, 1986, it was Gus Dalton, a fishing captain who saved their life and it was Rt. Hon. Prime Minister Brian Mulroney who allowed them to become Canadians.

 

Some Canadians were outraged, and accused the refugees of fraud, queue jumping, and were called undesirable. As the controversy heated up, Prime Minister Brian Mulroney muted those who called for the return of the refugees.

 

He was unequivocal and he spoke for all Canadians when he told the national media, “we are not in the business of turning away refugees.” Within days, all of the 155 Tamils were settled in Montreal and Toronto, where they started careers, families and new lives.

Mr. Mulroney advocated for the Tamil refugees, who, today, are proud Canadian citizens. We like to thank Rt. Hon. Brian Mulroney for his timely and brave act to protect Tamils.

On behalf of Canadian Tamils, we like to honor Prime Minister Brian Mulroney by presenting “Canadian Tamil Legacy Award”.

https://marumoli.com/முன்னாள்-பிரதமர்-மல்றோனி/?fbclid=IwAR1sqWc9tCwsyLQyac3DFiBuRzZIkq1-gPLbYCJPflSgeAWOAoaWuImMFtQ

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.