Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொரோனா வைரஸினை ஒத்த வைரஸினை உருவாக்கியுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ATHAVAN-NEWS-141.jpg

கொரோனா வைரஸினை ஒத்த வைரஸினை உருவாக்கியுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவிப்பு

கொரோனா வைரஸினை ஒத்த வைரஸினை உருவாக்கியுள்ளதாக அவுஸ்ரேலிய விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

மெல்பேர்னின் பீட்டர் டொகெட்ரி நிறுவகத்தை சேர்ந்த விஞ்ஞானிகளே கொரோனோ வைரஸினை ஒத்த வைரஸ்களை உருவாக்கியுள்ளனர்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆராய்ச்சியாளர்களுடன் இந்த வைரஸினை அவுஸ்ரேலிய விஞ்ஞானிகள் பகிர்ந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குபேய் மாநிலத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸின் மரபணு வரிசையை சீனா விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

எனினும் தங்களுடைய முயற்சி கொரோனா வைரஸ் குறித்த பல விடயங்களை அறிந்துகொள்வதற்கு மிக முக்கியமானதாக அமையும் என பீட்டர் டொகெட்ரி நிறுவகத்தின் தலைவர் யூலியன் டுரூஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இதன்போது அனைத்து சோதனை முறைகளையும் மாற்றியமைத்து சரிபார்க்கவும், அவற்றின் உணர்திறன் மற்றும் தனித்துவங்களை ஒப்பிட்டு பார்க்கவும் முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முயற்சி காரணமாக கொரோனா வைரஸிற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை விரைவில் முன்னெடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

http://athavannews.com/கொரோனோ-வைரஸினை-பிரதிபலிக/

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழில் மாவீரர் நாள் தடை உத்தரவு வழக்கு ஒத்தி வைப்பு    56 Views மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடை விதிக்கக் கோரும் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸாரின் விண்ணப்பம் மீதான விசாரணை நாளை  வரை  ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 106ஆம் பிரிவின் கீழ் பொதுத் தொல்லை என்ற வியாக்கியானத்தின் கீழ் இந்த விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்தனர். கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் நினைவேந்தலை நடத்துவதற்கு தடை கேட்டும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகள் வி.மணிவண்ணன், க.சுகாஷ், மாநகர சபை உறுப்பினர்கள் வரதாசா பார்த்திபன், மயூரன் உள்ளிட்ட 37 பேருக்கு எதிராக தடைக் கட்டளை வழங்குமாறும் இந்த விண்ணப்பம் செய்யப்பட்டது. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து உயிரிழந்த உறுப்பினர்களை நினைகூருவதற்காக நவம்பர் 21ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி மாவீரர் வாரம்  கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த மாவீரர் நாள் நிகழ்வுகளைத் தடுக்கும் வகையில் கட்டளை வழங்கவேண்டும்’ என்று பொலிஸார் விண்ணப்பத்தில் கேட்டுள்ளனர். அத்துடன் கோவிட் -19 தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டத்தையும் பொலிஸார் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது,  நாளைக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.   https://www.ilakku.org/யாழில்-மாவீரர்-நாள்-தடை-உ/
    • இலங்கையில் 20 ஆயிரத்தைக் கடந்த கொரோனா எண்ணிக்கை    34 Views இலங்கையில் இன்று மட்டும் 458 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என  அவர் கூறியுள்ளார். இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 20ஆயிரத்து 967ஆக அதிகரித்துள்ளது. 90க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் மருத்துவப் பல்கலைக்கழகமான ஜான்ஸ் ஹாப்கின்ஸ கூறும்போது, “கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவிய கொரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் 5,91,24,016 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,95,519 பேர் கொரோனாவுக்குப் பலியாகி உள்ளனர் என்று தெரிவித்துள்ளது.   https://www.ilakku.org/இலங்கையில்-20-ஆயிரத்தைக்-க/
    • நினைவு கூருவதற்கான தமிழரின் உரிமை மதிக்கப்பட வேண்டும் -PEARL அமைப்பு வலியுறுத்தல்    42 Views வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள பல மாவட்டங்களில், தமிழ்த் தேசிய நினைவு நாளான மாவீரர் நாளைக் கடைப்பிடிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளமை மிகவும் கவலையளிப்பதாயுள்ளது என  PEARL (PEOPLE FOR EQUALITY AND RELIEF IN LANKA) அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “தமிழர் நினைவுகூரல் மீதான தொடரும் அரச அடக்குமுறையின் நீட்சியே இத்தடைகளாகும். நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், இலங்கை அதிகாரிகளாற் கடுமையான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதைப் பேர்ள் வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும், சட்டச் செயன்முறைகளையும், கோவிட்-19 கட்டுப்பாடுகளையும் தவறாகப் பயன்படுத்தி, நினைவுகூர்வதைத் தடுத்து நிறுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் இப்புதுப்பிக்கப்பட்ட முயற்சிகளை எதிர்த்து நிற்பவர்களுடன் பேர்ள் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்த விழைகிறது. இலங்கையின் இராணுவத் தளபதியும், போர்க்குற்றவாளியெனக் குற்றஞ் சுமத்தப் பட்டுள்ளவருமான சவேந்திர சில்வா, கோவிட்-19 கட்டுப்பாடுகளை மேற்கோள்காட்டி, மாவீரர் நாள் நினைவேந்தல்கள் தடைசெய்யப்படும் எனக் கடந்த வாரம் தெரிவித்திருந்ததோடு, இவ்வுத்தரவை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அச்சுறுத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து, நினைவேந்தல் நிகழ்வுகளுக்காகத் தமிழீழ விடுதலைப் புலிகளின் துயிலும் இல்லங்களைச் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தவாறு துப்புரவு செய்ய முயற்சித்தவர்கள் பொலிசாரினால் தடுத்து நிறுத்தப்பட்டனர். வடக்கு மற்றும் கிழக்கில் துயிலும் இல்லங்களுக்கு அருகிற் பாதுகாப்புப் படையினர் சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளனர். துயிலும் இல்லங்கள் யுத்தத்தின் போதும், அதன் பின்னரும் இராணுவத்தினரால் இடித்தழிக்கப்பட்டன. இது அரசின் மேலாதிக்க உணர்வும், பழியுணர்வும் வெளிப்படும் விவரணங்களைப் பலப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு கொடுமையான செயலாகும். மேலும், உள்ளூர் நீதிமன்றங்கள் பொது நிகழ்வுகளுக்குக் குறிப்பாகத் தடைவிதித்துள்ளதோடு, பல தனிநபர்களுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி உள்ளிட்ட அரசியற் கட்சிகளுக்கும், நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கும், அவற்றிற் கலந்துகொள்வதற்கும் தடையுத்தரவு பிறப்பித்துள்ளன. கோவிட்-19 கட்டுப்பாடுகள் இத்தடைகளை நியாயப் படுத்துவதற்கான சாக்காகப் பயன்படுத்தப்பட்டாலும், சிவப்பு-மஞ்சட் கொடிகள் மற்றும் பதாகைகளைப் பயன்படுத்துவது போன்ற தீங்கற்ற நினைவுகூரற் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள தனிநபர்கள் தொடர்ச்சியாக இலக்குவைக்கப்படுவது, தமிழர் நினைவேந்தற் செயற்பாடுகளை, அவை பெரும்பான்மையினரின் விவரணங்களுக்குக் கீட்படியாத நினைவு மற்றும் எதிர்ப்புச் செயற்பாடுகளாக இருப்பதால் ஒடுக்குவது என்ற அரசின் நோக்கத்தைத் தெளிவாகப் புலப்படுத்துகிறது. நாம் குறிப்பாகப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், அவர்கள் நினைவேந்தற் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்களா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், இலக்கு வைக்கப்படுவது குறித்துக் கவலையுற்றுள்ளோம். நீண்ட காலமாக இடம்பெற்று வரும் இப்போராட்டங்களில் ஈடுபட்டு வரும் தனிநபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ள, அவர்களை மாவீரர் நாள் நினைவேந்தல்களிற் கலந்துகொள்வதிலிருந்து தடை செய்யும் நீதிமன்ற ஆவணங்களை நாம் கண்டுள்ளோம். இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை குறித்துக் கவனத்தை ஈர்ப்பதும், அதிகாரிகளுக்கு எரிச்சலூட்டுவதுமாகவுள்ள இப்போராட்டங்களில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மீது பரவலாக மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்களின் இன்னொரு வடிவமே இது. ‘இவ்வாறு சட்டச் செயன்முறையை முறைகேடாகப் பயன்படுத்துவது, நவம்பர் 27 ஆம் திகதி நினைவுகூரப்படும் மாவீரர் நாள் மற்றும் மே 18 ஆம் திகதி நினைவுகூரப்படும் தமிழின அழிப்பு நினைவு நாள் போன்ற நினைவேந்தல் நாட்கள் தொடர்பில் மேலதிக தடைகளுக்கும், கைதுகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் தளமமைத்துக் கொடுக்கும்,’ எனச் செப்தெம்பர் மாதத்தில் பேர்ள் எச்சரித்திருந்தது. தடைகளேதுமற்ற நினைவுகூரலானது, வடுக்கள் ஆற்றப்படுவதற்கும், போரில் இழக்கப்பட்டவர்களைக் கௌரவப்படுத்துவதற்கும் இன்றியமையாததொன்றாக, அவற்றுடன் பிரிக்கமுடியாதவாறு இணைந்துள்ளதுடன், 2009 இற்குப் பின்னர் தமிழ் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளில் ஒன்றாகவும் இருந்து வருகிறது. எனவே, மாவீரர் நாள் நினைவேந்தல்களைத் தடைசெய்வது, நினைவுகூர்வதற்கான தமிழர்களின் உரிமையின் ஏற்றுக்கொள்ளமுடியாத மீறலாகும் எனும் சந்தேகத்திற்கிடமில்லாச் செய்தியை இலங்கைக்கு அனுப்புமாறு பேர்ள் சர்வதேசச் சமூகத்தை வலியுறுத்துகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://www.ilakku.org/நினைவு-கூர்வதற்கான-தமிழர/
    • பின்தங்கிய கிராமங்களுக்கான புதிய வாழ்வாதாரத் திட்டம் முன்னெடுப்பு    51 Views கஞ்சிகுடியாறு குளத்தில் 50 ஆயிரம் மீன் குஞ்சுகளை விட்டதன் ஊடாக பின்தங்கிய கிராமங்களுக்கான புதிய வாழ்வாதாரத் திட்டம் ஒன்று ஆரப்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம், அன்புநெறி (USA) நிதி உதவியுடனும் Assist RR(SL) அனுசரனையுடனும் IMHO USA and Pladge to Restore என்ற அமைப்பின் ஒருங்கிணைப்புடனும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. திருக்கோயில் பிரதேச செயலாளர், கஞ்சிகுடியாறு மற்றும் தங்கவேலாயுதபுரம் கிராமங்களின் கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் நன்னீர் மீன் வளர்ப்பு மாகாண மற்றும் தேசிய உத்தியோகத்தர்கள், தாண்டியடி மக்கள் சேவைகள் ஒன்றியம் இளைஞர்கள், கஞ்சி குடியாறு மீனவர் சங்க உறுப்பினர்கள் இவர்களுடன் Assist RR இலங்கைக்கான பணிப்பாளர் ஆகியோர் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர். 24 11 2020 இன்று மதியம் திருக்கோவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கஞ்சிகுடிச்சாறு குளத்தில் நன்னீர் மீன் வளர்ப்பு திட்டமான திலாப்பியா மீன் குஞ்சுகள் 50000 பிரதேச செயலாளர் திரு கஜேந்திரன் தலைமையில் கஞ்சிகுடியாறு குளத்தில் விடப்பட்டது. ரூபாய் 125,000.00 பெறுமதியான இந்த மீன்குஞ்சுகள் மட்டக்களப்பு மீனவர் கூட்டுறவு திணைக்களத்தின் Nursary யில் 80 நாட்கள் வளர்க்கப்பட்டு சுமார் 2 தொடக்கம் 3 சென்டிமீட்டர் அளவு வளர்ச்சி அடைந்த நிலையில் இன்று இக்குளத்தில் விடப்பட்டுள்ளது. இந்த மீன் குஞ்சுகள் மூன்று மாதத்தின் பின்பு அறுவடை செய்யக் கூடிய அளவு வளர்ந்திருக்கும். இத்திட்டத்தின் ஊடாக கஞ்சிகுடிச்சாறு மீனவர் சங்கத்தின் 84  உறுப்பினர்களும் 5 மீன் வியாபாரிகளும் நேரடியாக பயனடைவர். மறைமுகமாக 350 குடும்பங்களும் , 5 மீன் வியாபாரிகளும், சுமார் 500 வாடிக்கையாளர்களும் பயனடைகின்றனர். இதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளர் மற்றும் முக்கியஸ்தர்கள் நன்னீர் மீன் வளர்ப்பு உத்தியோகத்தர்கள் ஆகியோருடன் நடைபெற்ற கலந்துரையாடலில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. *ரூபேஷ், சாகாமம், விழாவட்டவான் போன்ற குளங்களுக்கும் மீன்குஞ்சு வழங்குகின்ற திட்டத்தை விரிவுபடுத்துதல். *மீன் குஞ்சு வழங்குகின்ற திட்டத்துடன் இதனை நிறைவு செய்யாமல் தொடர்ந்து இந்த மீனவர் சங்கங்களை வலுவூட்டுதல் செயற்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்துதல். *சிறிய நீர் தடாகங்களை உருவாக்கிய அவற்றில் நன்னீர் மீன் வளர்ப்பு திட்டத்தை மேற்கொள்வதற்கு மானிய அடிப்படையில் உதவி செய்தல். இதற்கு தேவையான அனைத்து தொழில்நுட்ப உதவிகளும் மீனவர் கூட்டுறவு திணைக்களம் மூலமாக வழங்கப்படும். *தற்போது குளங்களில் இருந்து அறுவடை செய்யப்படுகின்ற மீன்கள் நேரடியாக வியாபாரிகளுக்கு விற்பனை செய்வது ஊடாக வியாபாரிகள் அதிக லாபம் அடைகிறார்கள் எனவே நேரடியாக மீன் மீன்பிடியில் ஈடுபடுகின்ற மீனவர்களுக்கு அதிக லாபத்தைப் பெற்றுக் கொள்கின்ற வகையில் மீன்களுக்கான பெருமதி சேர் திட்டத்தை உருவாக்குதல். *புகை கருவாடு க்கு அதிக கேள்வி நிலவுவதால் மீனை பதப்படுத்தி கருவாடு உற்பத்தியை மேற்கொள்வதற்கு விசேட கவனம் செலுத்துதல். *ஒரே நாளில் மீனை கருவாடாக பதப்படுத்துவதற்காக சாகாமம் மீனவர் சங்கத்திற்கு வழங்கப்பட்ட மீன் காயவைக்கும் இயந்திரத்தை உடனடியாக பாவனைக்கு கொண்டு வருகின்ற வகையில் ஒரு நிதியை கண்டுபிடித்து மீனவர்களுக்கு அதிக லாபத்தை பெற்றுக்கொடுத்தல். *சாகாமம் மீனவர் சங்கத்தால் மீன் காய வைக்கும் இயந்திரம் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகின்ற போது அதனை கஞ்சிகுடியாறு மீனவர் சங்கத்துக்கு வழங்குவதற்கு தேவையான ஒழுங்குகளை பிரதேச செயலாளர் துரித நடவடிக்கை மேற்கொள்வார். *வியாபாரிகளுக்கு மீன்களை வழங்குவதற்கு பதிலாக மீனவர் சங்கம் நேரடியாக மீன்களைக் கொள்வனவு செய்து விற்பனை செய்கின்ற திட்டத்தை உருவாக்குவதற்கு தேவையான நடைமுறைகளை மேற்கொள்தல். *குளங்களில் அதிக முதலைகள் இருப்பதால் அடிக்கடி மீன் வலைகள் பாதிப்புக்குள்ளாகும் நிலையில் மீனவர்கள் உடனடியாக தங்களுக்கு தேவையான வலைகளை கொள்முதல் செய்து தொழிலை மேற்கொள்வற்கான அவசர கடன் திட்டத்தை அறிமுகப்படுத்துதல். (மீனவ சங்கத்திற்குள் அதிக நிதியை கையாளுகின்ற வகையில் சிறந்த பொறிமுறை ஒன்றை உருவாக்குதல்) *நன்னீர் மீன்பிடி ஊடாக கிராமத்திற்குள் இருக்கின்ற ஏனைய நபர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்குதல். *நீண்டகாலமாக குறிப்பிட்ட சிலர் மாத்திரமே மீன்பிடியில் ஈடுபடுகின்ற அதேவேளை கிராமத்துக்குள் நீண்ட காலமாக இருக்கின்ற வர்களுக்கு மீன் பிடிப்பதற்கான அனுமதியை வழங்குகின்ற வகையில் புதிய அணுகுமுறை ஒன்றை உருவாக்குதல். *மீனவ சங்கத்தால் சேமிக்கப்படுகின்றன நிதியிலிருந்து ஏனைய தொழில் வாய்ப்புகளையும் உருவாக்குதல். *மீன்பிடியும் விவசாயமும் ஒன்றாக மேற்கொள்ளுகின்ற இப்பிரதேசத்தில் விவசாயத்துக்கும் கூடுதல் முக்கியத்துவம் வழங்குதல். *தற்போது யானை வேலி அமைக்கப்பட்டு கொண்டிருப்பதால் மகா மற்றும் யல ஆகிய இரண்டு போகங்களும் மேட்டுநில பயிர்ச்செய்கை மேற்கொள்ளுகின்ற வகையில் புதிய தொழில்நுட்பம் மற்றும் புதிய பயிர் (peanuts, watermelon, sweet corn) செய்கை திட்டங்களை மேற்கொள்தல் *திருக்கோயில் பிரதேசத்திலே விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய பகை பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்காக மட்டக்களப்பு சோலை விவசாய அமைப்பு எமது பிரதேசத்திற்குள் பணியாற்றுவதற்கு அழைத்தல். இன்று கலந்துரையாடி எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு செயல் வடிவம் கொடுப்பதற்கான கலந்துரையாடல் ஒன்றை வருகின்ற வாரங்களில் பிரதேச செயலாளர் தலைமையிலே கலந்துரையாடி தீர்க்கமான சில முடிவுகளை எடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது. https://www.ilakku.org/பின்தங்கிய-கிராமங்களுக்/  
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.