Jump to content

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ரூ.100 கோடியை அளித்த அலிபாபா நிறுவனர்


Recommended Posts

 
கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க சுமார் நூறு கோடி ரூபாய் நிதியை, அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர் ஜாக் மா சீன அரசுக்கு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேகமாக பரவி வரும் இந்த வைரசால் சீனாவில் இதுவரை 170 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் சீனாவின் பெரும் பணக்காரரான ஜாக் மா, தனது தொண்டு நிறுவனம் வாயிலாக சீன அரசுக்கு நிதியுதவி அளித்துள்ளார்.

இதில் சுமார் 41 கோடி ரூபாய் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள, இரண்டு அரசு ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு வழங்கப்பட உள்ளது. மீத தொகை நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் என, அமெரிக்க நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

https://www.polimernews.com/dnews/98719/கொரோனா-வைரஸ்-தடுப்புமருந்தை-கண்டுபிடிக்க--ரூ.100கோடியை-அளித்த-அலிபாபாநிறுவனர்

 

 

கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவில் 2,000 கிளைகளை மூடிய Starbucks

கொரோனா வைரஸ் பீதியால் ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனம் சீனாவில் தனது 2 ஆயிரம் கிளைகளை மூடியுள்ளது.

அமெரிக்க கார்பரேட் நிறுவனமான ஸ்டார்பக்ஸ், சீனாவில் 4 ஆயிரத்து 292 கிளைகளை இயக்கி வந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 50 சதவீத கடைகளை மூடியுள்ளது.

நோய் பரவலை தடுக்கும் அரசின் நடவடிக்கைகளுக்கு  ஒத்துழைப்பு வழங்கும் வகையிலும் பொது சுகாதாரத்தை கருத்தில் கொண்டும் தனது கடைகளை மூடியுள்ளதாக ஸ்டார்பக்ஸ் விளக்கம் அளித்துள்ள நிலையில், பங்கு சந்தையில் அந்த நிறுவனம் படு வீழ்ச்சியை கண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://www.polimernews.com/dnews/98628/கொரோனா-வைரஸ்-தாக்குதலால்சீனாவில்-2,000-கிளைகளை-மூடியStarbucks

 

 

கொரோனா வைரஸ் பரவுவதால் சீனாவில் திரையரங்குகள் மூடல்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவில் திரையரங்குகள் ஒட்டுமொத்தமாக மூடப்பட்டுள்ளதால், பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

சர்வதேச திரைப்படங்களின் வருவாயில் சீனா முக்கிய பங்களித்து வருகிறது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரவதால், சீனாவில் சுமார் 70 ஆயிரம் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இதே நிலை தொடர்ந்தால் 200 கோடி டாலர் வரை இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல் 3 நாள் புத்தாண்டு விடுமுறை கொண்டாட்டத்தில் மட்டும், திரைப்படங்கள் வாயிலாக 50 கோடி டாலருக்கு மேல் வசூல் ஆன நிலையில், தற்போது வெறும் 20 லட்சம் டாலரே கிடைத்து இருக்கிறது. சீனாவில் தயாரிக்கப்பட்ட 6 பெரிய திரைப்படங்களின் வெளியீடு காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

https://www.polimernews.com/dnews/98756/கொரோனா-வைரஸ்-பரவுவதால்சீனாவில்-திரையரங்குகள்மூடல்

 

சீனாவில் ஹூபே மாகாணத்தில் மெக்டோனால்டு உணவகங்கள் மூடல்

அமெரிக்க துரித உணவு நிறுவனமான மெக்டொனால்ட்ஸ் சீனாவின் ஹூபே மகாணத்தில் உள்ள அனைத்து உணவகங்களையும் மூடியுள்ளது.

அந்த மாகாண தலைநகரான ஊகானில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மெக்டோனால்டு நிறுவனம் கூறியுள்ளது.

இதுகுறித்த தகவல் மெக்டொனால்டின் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ் கெம்ப்சின்ஸ்கி தெரிவித்துள்ளார். ஆனால் சீனாவின் பிற இடங்களில் மூவாயிரம் விற்பனை நிலையங்கள் திறந்த நிலையில் உள்ளதாகவும், அவர் கூறினார்.

https://www.polimernews.com/dnews/98731/சீனாவில்-ஹூபே-மாகாணத்தில்மெக்டோனால்டு-உணவகங்கள்மூடல்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.