nunavilan

பிரித்தானியாவில் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

Recommended Posts

பிரித்தானியாவில் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

by : S.K.Guna

coronavirus-5.jpg

பிரித்தானியாவில் இருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி அறிவித்துள்ளார்.

அவர்கள் இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

அவர்களின் அடையாளம் அல்லது அவர்கள் எங்கு சிகிச்சை பெறுகிறார்கள் என்பது குறித்த மேலதிக விவரங்கள் எவையும் வெளியிடப்படவில்லை.

இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் விற்றி (Chris Whitty) தெரிவிக்கையில்; நோய்த்தொற்றுக்குச் சிகிச்சையளிக்க மருத்துவமனைகள் நன்கு தயாராகியுள்ளன.

கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உடனடியாகப் பதிலளிக்க வலுவான நோய்த்தொற்றுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நோயாளிகளை அடையாளம் காணவும், மேலும் பரவாமல் தடுக்கவும் நாம் ஏற்கனவே விரைவாகச் செயற்பட்டு வருகிறோம்.

அத்துடன் உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் சர்வதேச சமூகத்துடன் பிரித்தானியா நெருக்கமாகச் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக சீனாவில் குறைந்தது 213 பேர் இறந்துள்ளனர். ஹூபேயில் மாகாணத்தில் 10,000 பேருக்கு இந்தப் பாதிப்பு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும் 18 நாடுகளில் 98 பேருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பினை உலக சுகாதார அமைப்பு நேற்று உலகளாவிய அவசரநிலையாக அறிவித்தது.

நன்றி bbc.co.uk

Share this post

Link to post
Share on other sites

நாம் இருக்கும் இடத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு வந்திருப்பதாகவும் தமது பிள்ளைகளை தமிழ் பள்ளிக்கூடத்துக்கு நாளை விட  யோசனையாக இருக்கென்றும் ஒரு பெற்றோர் எனக்குப் போன் செய்து கூறினார் . இறந்ததாக யாரும் கூறவில்லை. 

பிறைமறி ஸ்கூல் இற்கு பிள்ளைகள் போனார்களா என்றதற்கு ஓம் போனார்கள் என்று என்னிடம் ஏச்சும் வாங்கினார்.😁🤣

Share this post

Link to post
Share on other sites

இந்த தலைப்பில் யாரோ... எழுதிய, மூன்று கருத்துக்களை....
நான் வாசிக்க முன்னம் நீக்கிய... மோகன் அண்ணாவை, வன்மையாக கண்டிக்கின்றேன். 😝

நீக்கியது.... என்ன ✍️ கருத்தாக இருக்கும், எண்டு யோசிக்கிறதிலேயே...
இன்றைய வெள்ளிக்கிழமை, வீணாக போய் விடும் போலிருக்கு...... :grin:

  • Haha 2

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நாம் இருக்கும் இடத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு வந்திருப்பதாகவும் தமது பிள்ளைகளை தமிழ் பள்ளிக்கூடத்துக்கு நாளை விட  யோசனையாக இருக்கென்றும் ஒரு பெற்றோர் எனக்குப் போன் செய்து கூறினார் . இறந்ததாக யாரும் கூறவில்லை. 

பிறைமறி ஸ்கூல் இற்கு பிள்ளைகள் போனார்களா என்றதற்கு ஓம் போனார்கள் என்று என்னிடம் ஏச்சும் வாங்கினார்.😁🤣

முன்தோன்றி மூத்த தமிழன். ஆகவே தோன்றுவதெல்லாம் தமிழனில் இருந்தே தோற்றம் பெறும் என்பது அந்தப் பெற்றோர்களின் அசையாத நம்பிக்கை. ஆகவே அவர்களை ஏசவேண்டாம், போற்றுங்கள் சுமேரியரே! 😁😂🤣

Share this post

Link to post
Share on other sites
12 minutes ago, Paanch said:

முன்தோன்றி மூத்த தமிழன். ஆகவே தோன்றுவதெல்லாம் தமிழனில் இருந்தே தோற்றம் பெறும் என்பது அந்தப் பெற்றோர்களின் அசையாத நம்பிக்கை. ஆகவே அவர்களை ஏசவேண்டாம், போற்றுங்கள் சுமேரியரே! 😁😂🤣

பாஞ்ச்  அண்ணை.... 
தமிழ்ப் பள்ளிக் கூடத்துக்கு, அந்தப் பிள்ளைகள் போனால்.....
மற்ற தமிழ்ப் பிள்ளைகளுக்கும், அந்த வருத்தம்... தொத்தி விடும் என்ற பயத்தில், tw_cold_sweat:
ஆங்கில பிள்ளைகளுக்கு... அது தொத்தட்டும் என்று,
பிறைமறி ஸ்கூலுக்கு... அனுப்பிய பெற்றோர்,  பாராட்டுக்குரியவர்கள். :innocent:

தமிழன் என்றால்... இப்படித்தான் இருக்க வேண்டும். :grin:

Share this post

Link to post
Share on other sites

அகத்தியர் சொன்ன மாரி, 

அவரைக்காயை, கைபடாமல் அரைத்து

நாக்குப் படாமல் 40 நாள் நக்கினால்

கொரோனா வைரஸ் என்ன அணுக் கதிர்வீச்சே ஒண்டும் செய்யாது🤪

நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்ல.

நாமதான்........

Share this post

Link to post
Share on other sites

பெருங்காயத்தை கையில் கட்டிக் கொண்டு படுத்தாலும் வராதாம் 🤣
 
  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
31 minutes ago, ரதி said:

பெருங்காயத்தை கையில் கட்டிக் கொண்டு படுத்தாலும் வராதாம் 🤣

ரதி,  பெருங்காயத்தை.... வலது கையிலா, இடது கையிலா... கட்ட வேணும்❓
ஏனென்றால்... இப்ப  எனக்கு, தொண்டை நோகிற மாதிரியும், 🤢
குளிருற மாதிரியும் இருக்கு. 🤒  🤪

அது, "கொரோனாவாக" 💀.... இருக்குமோ.. எண்டு பயமாய்... இருக்கு. 
ப்ளீஸ்.... ஹெல்ப் மீ.....  :grin:

Share this post

Link to post
Share on other sites

யாழ்ப்பாணத்தானுக்கு பெருமை சேர்த்து செய்தி ஒன்று முகநூலில் வருகுது ..பருத்திதுறை ஓடக்கரை 28 வருசம் லண்டனாம் 48 வயதாம் ..3 பிள்ளையாம் உண்மையா 

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
14 minutes ago, alvayan said:

யாழ்ப்பாணத்தானுக்கு பெருமை சேர்த்து செய்தி ஒன்று முகநூலில் வருகுது ..பருத்திதுறை ஓடக்கரை 28 வருசம் லண்டனாம் 48 வயதாம் ..3 பிள்ளையாம் உண்மையா 

ஆமாம். நானும் பார்த்தேன்! சீனனின் கடையில்  வாத்து வறையும் சோறும் திண்டவர் மண்டையைப் போட்டுவிட்டார் எண்டு மூக்கால அழுகின்ற கதைதானே😳

Mitcham பகுதியில் கொரோனா வைரஸ் தாக்கி தமிழர் இறந்திருந்தால் சுமே ஆன்ரி ஏரியா முழுவதும் இப்போது முள்ளுக்கம்பி வேலிக்குள்தான் இருக்கும்😂🤣

செய்தி புனைவாளர்களுக்கு சமூகவலைத் தளங்கள் இருக்குமட்டும் கொண்டாட்டம்தான்.

பிரித்தானியாவில் ஒருத்தரும் இன்னமும் கொரோனா வைரஸினால் மரணிக்கவில்லை. York பகுதியில் சீனாவிலிருந்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு மாத்திரம் தொற்றியுள்ளது என்பதுதான் உறுதிப்படுத்தபட்ட செய்தி. 

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, ரதி said:

பெருங்காயத்தை கையில் கட்டிக் கொண்டு படுத்தாலும் வராதாம் 🤣
 
எனக்கொரு பயம்,

நாங்கள் இப்படி ஜாலியா எழுத, அதை மூண்டு மொக்கு கேசுகள் வாட்சப்பில கொப்பி பண்ணி போட, நாளைக்கு எனக்கே இதுகளை forward பண்ணப்போது சனம் 😀

5 hours ago, தமிழ் சிறி said:

ரதி,  பெருங்காயத்தை.... வலது கையிலா, இடது கையிலா... கட்ட வேணும்❓
ஏனென்றால்... இப்ப  எனக்கு, தொண்டை நோகிற மாதிரியும், 🤢
குளிருற மாதிரியும் இருக்கு. 🤒  🤪

அது, "கொரோனாவாக" 💀.... இருக்குமோ.. எண்டு பயமாய்... இருக்கு. 
ப்ளீஸ்.... ஹெல்ப் மீ.....  :grin:

அண்ண உது அதுதான்.....

ரெண்டு உள்ளிய உடச்சு காதுக்க வையுங்கோ....

ரெண்டு கைலயும் பெருங்காயத்தை கட்டுங்கோ...

கொஞ்சம் மஞ்சள், கடுகு, உப்பு, மிளகு இதோட வெந்தயத்தை கலந்து நெற்றில வையுங்கோ.

பிறகென்ன....

காலம்பறை எழும்பினோன குழம்பு வைக்க வேண்டியதுதான் 😀

Share this post

Link to post
Share on other sites
29 minutes ago, goshan_che said:

அண்ண உது அதுதான்.....

ரெண்டு உள்ளிய உடச்சு காதுக்க வையுங்கோ....

ரெண்டு கைலயும் பெருங்காயத்தை கட்டுங்கோ...

கொஞ்சம் மஞ்சள், கடுகு, உப்பு, மிளகு இதோட வெந்தயத்தை கலந்து நெற்றில வையுங்கோ.

பிறகென்ன....

காலம்பறை எழும்பினோன குழம்பு வைக்க வேண்டியதுதான் 😀

கோசான் தம்பி,  
இதைத்தான்  எமது முன்னோர்கள் "ரசம்" என்று  சொன்னார்கள்,
கொரோனாவுக்கு....  "ரசம்" தான்... நல்ல மருந்து என்று, அப்பவே...
எமக்குத் தெரிந்த விடயம் என்றாலும்,

நாங்கள்... பாம்புக் கறி, வவ்வால் கறி  சமைத்து சாப்பிடாததால்...
இது வரை  தமிழரிடம்...    கொரோனா எட்டியும், பார்க்க வில்லை.

"வரும் முன் காப்போம்"... என்று ,
இந்த ரசத்தை, கிழமைக்கு ஒரு முறை...  காய்ச்சி குடியுங்கள்.  :)

Edited by தமிழ் சிறி

Share this post

Link to post
Share on other sites
12 hours ago, தமிழ் சிறி said:

ரதி,  பெருங்காயத்தை.... வலது கையிலா, இடது கையிலா... கட்ட வேணும்❓
ஏனென்றால்... இப்ப  எனக்கு, தொண்டை நோகிற மாதிரியும், 🤢
குளிருற மாதிரியும் இருக்கு. 🤒  🤪

அது, "கொரோனாவாக" 💀.... இருக்குமோ.. எண்டு பயமாய்... இருக்கு. 
ப்ளீஸ்.... ஹெல்ப் மீ.....  :grin:

ஒரு மங்கள காரியமாக சிறித்தம்பி எங்களைத் தன் வீட்டுக்கு வரச்சொன்னவர், அங்கு போனால் அவருக்கு வந்திருக்கும் கொரோனா எங்களுக்கும் தொத்தி மங்களம் பாடிவிடுமோ.... என்று இப்போ பயமாயிருக்கிறது. 😩

Share this post

Link to post
Share on other sites
13 hours ago, தமிழ் சிறி said:

கோசான் தம்பி,  
இதைத்தான்  எமது முன்னோர்கள் "ரசம்" என்று  சொன்னார்கள்,
கொரோனாவுக்கு....  "ரசம்" தான்... நல்ல மருந்து என்று, அப்பவே...
எமக்குத் தெரிந்த விடயம் என்றாலும்,

நாங்கள்... பாம்புக் கறி, வவ்வால் கறி  சமைத்து சாப்பிடாததால்...
இது வரை  தமிழரிடம்...    கொரோனா எட்டியும், பார்க்க வில்லை.

"வரும் முன் காப்போம்"... என்று ,
இந்த ரசத்தை, கிழமைக்கு ஒரு முறை...  காய்ச்சி குடியுங்கள்.  :)

அண்ணை,

தமிழ்ல ரசவாதம் என்று ஒரு சொல் இருக்கிறது. ஆங்கிலத்தில் alchemy என்பர். பல மூலப்பொருட்களை கலந்து அதன் மூலம் இல்லாத ஒன்றை உருவாக்குதல் அல்லது இருக்கும் ஒன்றை வேறொன்றாக்குதல் (பித்தளையை தங்கம் ஆக்குதல்).

உங்கட ரசத்திலயும் ஏதும் ரசவாத விளையாட்டுகள் இருக்குமோ?

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.