• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
கிருபன்

ஒரே சார்ஜர்: சண்டைக்குத் தயாராகும் ஆப்பிள்!

Recommended Posts

ஒரே சார்ஜர்: சண்டைக்குத் தயாராகும் ஆப்பிள்!

138.jpg

 

ஒரு காலத்தில் எத்தனை மொபைல் ஃபோன்களை வாங்கினாலும் ஒரே மாதிரியான மைக்ரோ USB சார்ஜர்களைத் தான் கொடுப்பார்கள். மொபைல்ஃபோன் வைத்திருந்த யாரும் சார்ஜரைத் தேடி அலைந்ததில்லை. ஆனால், 2020ஆம் ஆண்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம், கையில் வைத்திருக்கும் ஒவ்வொரு கேட்ஜட்டுக்கும் ஏற்ப விதவிதமான சார்ஜர்களை கையில் வைத்துக்கொண்டிருக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறோம். இப்படி ஒரு டிவைஸிலிருந்து இன்னொரு டிவைஸுக்கு மாறும்போது, பழையதாகிப் போகும் சார்ஜர்களை மீள் உருவாக்கம் செய்வதில்லை. எங்காவது வீசிவிடுவது வழக்கமாகிப்போனது. இதனால், அதிகமான எலக்ட்ரானிக் குப்பைகள் உருவாவதாக வருத்தம் கொண்டது ஐரோப்பிய யூனியன். எனவே, இதனை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக புதிய சட்டம் ஒன்றை உருவாக்கியிருக்கின்றனர்.

எல்லா கேட்ஜட்களுக்கும் ஒரே மாதிரியான சார்ஜர் உருவாக்குவது பற்றிய வாக்கெடுப்பு ஐரோப்பிய யூனியனின் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதில், 582க்கு 40 என்ற விகிதத்தில் வாக்கு பதிவானதால், ‘ஒரே சார்ஜர்’ தேவை என முடிவெடுக்கப்பட்டது. இது மற்ற கம்பெனிகளைவிட ஆப்பிள் நிறுவனத்தையே அதிகம் பாதிக்கும்.

2020 வரையிலான அத்தனை அப்கிரேடட் வெர்ஷன் மாடல்களையும் ரிலீஸ் செய்துவிட்ட ஆப்பிள், அதன் பல்வேறு தொழிற்சாலைகளின் மூலம் 100 கோடி லைட்னிங் சார்ஜர்களை தயார் செய்துவிட்டது. எனவே, இப்போது அனைத்து மாடல்களிலும் பயன்படுத்தக்கூடிய வகையில் சார்ஜர்களை உருவாக்கச் சொல்வதும், அதற்கேற்ப இனி உற்பத்தி செய்யும் ஸ்மார்ட்ஃபோன்களை மாற்றச் சொல்வதும், எதிர்பார்ப்பதைவிட அதிகமான எலக்ட்ரானிக் குப்பைகள் உருவாகும் என்று எதிர்வாதம் வைத்திருக்கிறது ஆப்பிள்.

ஆப்பிள் நிறுவனத்தின் கூற்று அவர்களது பிரச்னை என்றாலும், இதனால் நுகர்வோர்களுக்கும்(ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தும் சாதாரண மக்களுக்கும் சில பாதிப்புகள் இருக்கின்றன). ஐரோப்பிய யூனியனின் புதிய சட்ட வரைவுப்படி, இனி மார்க்கெட்டுக்கு வரும் ஸ்மார்ட்ஃபோன் பாக்ஸில் சார்ஜர் இடம்பெறாது. ஒரே சார்ஜர் என்பதால் ஏற்கனவே பயன்படுத்திய சார்ஜரையே புதிய மாடல்களில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற வகையில் ஐரோப்பிய யூனியனின் சட்ட வரைவு அமைந்திருக்கிறது. ஆனால், புதிய ஸ்மார்ட்ஃபோன் வாங்குபவர்களிடம் ஏற்கனவே சார்ஜர் இருக்கிறதா? என்பதை விற்பனை செய்யும் கம்பெனிகள் எப்படித் தெரிந்துகொள்ளும் என்பது, அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்ந்துகொண்டிருக்கும் ஸ்மார்ட்ஃபோன் தொழில்நுட்பத்தினை ஒரு எல்லையில் நிறுத்தி வைப்பது என பல விதமான கேள்விகளுடன் தயாராகிவருகிறது ஆப்பிள் நிறுவனம்.

 

https://minnambalam.com/entertainment/2020/02/01/138/European-Commission-passed-order-for-universal-charger-for-all-smarphones

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this