Jump to content

'டொரோண்டோ' நூலகத்தில் தமிழ் நூல்களுக்கு ஏற்படவுள்ள முடிவு?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

'டொரோண்டோ' நூலகத்தில் தமிழ் நூல்களுக்கு ஏற்படவுள்ள முடிவு?

வ.ந. கிரிதரன்

இன்று பிற்பகல் 'ஃபிளெமிங்டன் பார்க்'கில் அமைந்திருக்கும் 'டொராண்டோ பொதுசன நூலக'க்கிளைக்குச் சிறிது நேரம் செல்லும் சந்தர்ப்பம் கிட்டியது. அவ்வப்போது இந்நூலகக்கிளையில்  தமிழ் நூல்களை இரவல் பெறச்செல்வதுண்டு. ஏதாவது புதிய தமிழ்ப்புத்தகங்கள் வந்திருக்கின்றனவா என்று பார்ப்பதற்காகச் சென்ற எனக்கு அதிர்ச்சியினையூட்டும் நிலையே ஏற்பட்டது. அங்கு தமிழ்ப்புத்தகங்கள் எவற்றையுமே காணவில்லை. அங்கு கடமையிலிருந்த இளம் பணியாளரிடம் சென்று தமிழ்ப்புத்தகங்கள் எங்கே? என்ன நடந்தது? என்று கேட்டேன். அதற்கு அவர் கூறிய பதிலே என் அதிர்ச்சிக்குக் காரணம். அவர் 'இன்னும் ஓரிரு மாதங்களில் 'டொரோண்டோ'விலுள்ள நூலகக் கிளைகளிலிருந்து அனைத்துத் தமிழ் நூல்களும் எடுக்கப்பட்டு விடும்' என்று கூறுயதை என்னால் ஒரு கணம் நம்பவே முடியவில்லை. 'என்ன! எல்லா நூலகக் கிளைகளிலிருந்தும்மா?' என்று வியப்புடன் கேட்டேன்.

என் கேள்வியில் தொனித்த வியப்பினையும், கவலையினையும் அவதானித்த அவர் 'துரதிருட்டவசமாக அதுதான் நிலை. ஃபிரெஞ்ச் & சீனமொழி நூல்களைவிட ஏனைய மொழி நூல்கள் அனைத்தையும் எடுத்துவிடப்போகின்றார்கள். இது பற்றி எங்களுக்கு அறிவித்தல் வந்திருந்தது. இன்னும் ஓரிரண்டு மாதங்களில் முழுமையாக எடுத்து விடுவார்கள்' என்று துயர் கலந்த தொனியில் பதிலிறுத்தார். பதிலுக்கு நான் அப்படியென்றால் அவ்விதம் நீக்கப்படும் தமிழ்நூல்களை வாங்க முடியுமா?' என்றன். அதற்கவர் அதே துயர் கலந்த தொனியில் 'அநேகமாக 'ரீசைக்கிள்' செய்வார்கள் 'என்றார்.

உண்மையிலேயே அதிர்ச்சியினைத்தந்த செய்திதான். எம் தலைமுறையுடன் அதிகமாக நூலகங்களில் தமிழ் நூல்களை இரவல் பெற்று யாருமே படிக்கப்போவதில்லை என்னும் எண்ணமே ஒருவிதத் துயரினைத் தந்தது.

உடனடியாக எழுத்தாளர் சின்னையா சிவனேசனின் (எழுத்தாளர் துறைவன்) நினைவு வரவே அவருக்கு இது பற்றிய செய்தியொன்றினை அனுப்பி விசாரிக்கலாம் என்றெண்ணினேன். அவரிடம் இதுபற்றி விசாரித்துத் தகவலொன்றினை அனுப்பினேன். அதற்கு அவர் இச்செய்தி தனக்குப் புதியதென்றும், அப்படி நடப்பது நம்மவர் நூலகக்கிளைகளைப் பாவிப்பதைப்பொறுத்தது. தமிழ் நூல்களுக்குத் தேவையில்லாவிடில் நூலகம் தமிழ்ப்புத்தகங்களை வாங்குவதற்கு 'ஓர்டர்' தராது. இது தமிழ் மக்களைப்பொறுத்தது என்று உடனடியாகவே பதிலை அனுப்பியிருந்தார். நூலகத்துக்குத் தமிழ் நூல்களைத் தெரிவு செய்யும் ஒருவராக அவர் விளங்கியவர் என்பதை அறிந்திருக்கின்றேன். இப்போதும் அப்பணியில் அவரிருக்கின்றாரா? என்று தெரியவில்லை.

இருந்தாலும் அந்நூலகப்பணியாளர் கூறிய பல்மொழி நூல்கள் ஓரிரண்டைத்தவிர எடுத்து விடுவார்கள் என்பதும், அநேகமாகத் தமிழ் நூல்களை மீள்சுழற்சி செய்து விடுவார்கள் என்பதும் மனத்தைச் சிறிது வருடவே செய்தன. இச்செயதி உண்மைதானா என்பதை அறிந்துகொள்ள வேண்டுமென்று எண்ணிக்கொண்டேன். 'டொரொண்டோ நூலக'த்தின் உயர் அதிகாரிகளுடன் இது பற்றித்தொடர்பு கொள்ளவேண்டுமென்றும் எண்ணிக்கொண்டேன். இருந்தாலும் 'டொரோண்டோ 'நூலகக் கிளைகளில் தமிழ் நூல்கள் இல்லாமலிருக்கும் காட்சியை நினைத்துப்பார்க்க முடியவில்லை. கடந்த பல வருடங்களாகத் தமிழ் நூல்களை அங்கிருந்து அதிகமாக இரவல் வாங்கிப்பாவிப்பவர்களில் நிச்சயம் நானுமொருவனாகவிருப்பேன்.

flemingdon_park_library_branch1.png

அங்கிருந்து திரும்புகையில் ஒன்றினை அவதானித்தேன்: முன்பு தமிழ் நூல்களிருந்த புத்தக அடுக்கத்துக்கருகிலிருந்த மேசையைச் சுற்றி நாலைந்து முதிய தமிழர்கள் அமர்ந்திருந்தார்கள். ஏதாவது நூல்களைப்பற்றி விவாதித்துக் கொண்டிருக்கின்றார்களா என்று கடைக்கண்ணால் நோக்கினேன். அவர்கள் ஊர் வம்பளந்தபடியிருந்தார்கள். கூடவே 'கார்ட்ஸ்' விளையாட்டு விளையாடுவதிலும் மும்முரமாகவிருந்தார்கள். 

https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5657:2020-02-02-05-17-19&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிஜமாகவே மனசை நெருடும் தகவல் கிருபன்.......!  🤔

Link to comment
Share on other sites

தமிழையும் தமிழர் கலாச்சாரங்களையும் மதிக்கும் தலைவரைக்கொண்ட நாட்டில் இது சாத்தியமா என்பது சந்தேகமாக இருக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Paanch said:

தமிழையும் தமிழர் கலாச்சாரங்களையும் மதிக்கும் தலைவரைக்கொண்ட நாட்டில் இது சாத்தியமா என்பது சந்தேகமாக இருக்கிறது. 

எனக்கு நன்கு அறிமுகமான தமிழ் புத்தக விற்பனையாளர் தனது வியாபாரம் மிகவும்  குறைந்து செல்வதாகவும் புத்தகம் வேண்டுவோர் இராசி பலன், கிரக மாறுதல், சமயம் தொடர்பான புத்தகங்களையே அதிகம் கொள்வனவு செய்வதாக கூறி வருத்தப் பட்டார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

நிஜமாகவே மனசை நெருடும் தகவல் கிருபன்.......!  🤔

1 hour ago, Paanch said:

தமிழையும் தமிழர் கலாச்சாரங்களையும் மதிக்கும் தலைவரைக்கொண்ட நாட்டில் இது சாத்தியமா என்பது சந்தேகமாக இருக்கிறது. 

1 hour ago, Kapithan said:

எனக்கு நன்கு அறிமுகமான தமிழ் புத்தக விற்பனையாளர் தனது வியாபாரம் மிகவும்  குறைந்து செல்வதாகவும் புத்தகம் வேண்டுவோர் இராசி பலன், கிரக மாறுதல், சமயம் தொடர்பான புத்தகங்களையே அதிகம் கொள்வனவு செய்வதாக கூறி வருத்தப் பட்டார். 

தமிழர் கொண்டாட்டங்கள் பொய்யாக்கப்பட்டு வருகின்றது.
தமிழர் வரலாறுகள் பொய்யென நிரூபிக்க முனைகின்றார்கள்.
தமிழர் மரபுவழிகள் பொய் என்கிறார்கள்.
தமிழும் பொய்யென எம்மவர்களே நிரூபிப்பர்.

 

Link to comment
Share on other sites

4 hours ago, Kapithan said:

எனக்கு நன்கு அறிமுகமான தமிழ் புத்தக விற்பனையாளர் தனது வியாபாரம் மிகவும்  குறைந்து செல்வதாகவும் புத்தகம் வேண்டுவோர் இராசி பலன், கிரக மாறுதல், சமயம் தொடர்பான புத்தகங்களையே அதிகம் கொள்வனவு செய்வதாக கூறி வருத்தப் பட்டார். 

தமிழில் அறிவியல் நூல்கள் பல உள்ளன.  தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல தமிழில் அறிவியல் நூல்கள் அதிகம் வர வேண்டும். ஆனால் தமிழ் அறிவியல் நூல்களின் விற்பனை குறைந்து வரும் போது தமிழில் அறவியல் நூல்களை எழுதுபவர்களுக்கான ஊக்கம் குறையும். அதன் பின்னர் ராசி பலன். கிரகபலன், சமயம் தொடர்ப்பான புத்தகங்கள் மட்டும் தான் இருந்தால் எதிர்காலத்தில் தமிழ் காட்டு மிராண்டி மொழியாக ஆகிவிடும் என்பது வருந்த‍த்தக்க உண்மை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனிலும் முந்தி கணக்க தமிழ் நூல்கள் இருக்கும்..உப்ப வர ,வர  குறைஞ்சு கொண்டு போகுது 
 

Link to comment
Share on other sites

Updated with the response from the City Chief Librarian:

Dear all:

I have heard back from the Chief Librarian of the City of Toronto, they are not only maintaining the collections but are buying new materials as well. There is a small reduction in the number of sites from 24 to 20 (as populations have shifted) but the materials are still available through placing hold at all locations. I will share a more detailed response from them soon. Just posting this so that we know that we don’t need to be alarmed by this now. I would like to thank City Librarian Vickery Bowles for the prompt response.

Thank you,
Neethan Shan

Email from City Chief Librarian Vickery Bowles

Hello Neethan,

It is great to connect with you again.

I understand you have some concerns about the Library’s Tamil collection.

First of all I want to assure you we are maintaining our Tamil collections.

We currently have 24 Adult Print Tamil collections at branches across the system. Four collections are really small and not well used so we are taking those collections and consolidating them into the larger 20 collections. We have been continuing to invest in the Tamil collections by selecting new books in 2019 and 2020 that customers will see arriving in branches soon.

We currently have 17 Children's Print Tamil collections at branches across the system. The five small under-used collections are being consolidated into the remaining 12 collections. We are buying new Tamil children’s materials for all of these collections.

We will be continuing to purchase Tamil DVDs for 9 branches. We heard through the consultations that the community was most interested in print materials, as they are able to stream Tamil content through various platforms.

In summary, we are not closing Tamil collections. The plan is to have 20 adult Tamil collections and 12 children’s. With these collections we will be able to buy a lot of new Tamil materials that people will see on the shelves in 2020 in these locations instead of the material being distributed more thinly across a larger number locations.

Let me know if you need any other information.

Vickery

https://www.facebook.com/profile.php?id=506776373

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் மிச்சம் பகுதி நூலகத்தில் ஒருபகுதி முழுதும் இருந்த தமிழ் நூல்கள் இப்போது இல்லை ஒரு மீற்றர் நீளத்துக்கு மட்டும் அடுக்கப்பட்டிருந்தது. ஒருமுறை கேட்டபோது மேட்டன் பரோவில் உள்ள நூலகங்களுக்கு ஒவ்வொரு ஆறு மாதமும் மாற்றுவோம் என்கிறார். அடுத்ததடவை இன்னும் குறைந்திருந்தது. தமிழர்கள் பலர் கொண்டு செல்லும் நூல்களைத் தொலைத்துவிடுகிறார்கள். அதனால் இப்போதெல்லாம் ஓடர் செய்வதில்லை என்றனர்.
எனக்குத்தெரியாத பெண்மணி ஒருவர் என்னைபோனில் அழைத்து நீங்கள் நூல்கள் வாசிப்பீர்கள் என்று என் நண்பி கூறினார். என் வீட்டில் இருந்த ஒருவர் மூன்று மாத வாடகையும் தராது தன் நூல்களை எல்லாம் இங்கேயேவிட்டுவிட்டுச் சென்றுவிட்டார். உங்களுக்கு வேண்டுமா என்றவுடன் அன்றே சென்று அத்தனை நூல்களையும் எடுத்துவந்து  எனக்குத் தேவையானதை எடுத்துவிட்டு ஒரு நூறு நூல்களை நூலகர் செல்வராஜாவுக்குக் கொடுத்தேன். மிகுதி இருந்த நூல்களில் முப்பத்தி நான்கு நூல்கள் மேட்டன் பரோவிலும் Wandsworth நூலகங்களிலும் எடுக்கப்பட்டிருந்தன. அவற்றை நேரில் கொண்டு சென்று கொடுக்க வெட்கப்பட்டு அவர்களின் நூல்கள் போடும் பெட்டியில் போட்டுவிட்டு வந்துவிட்டேன். இவற்றை எடுத்தவரைக்கூட உங்களுக்குத் தெரிந்திருக்கும். தன்னைப் பெரிய இலக்கியவாதியாகக் காட்டித்திரியும் திருமலையை அடைமொழியாகக் காவித் திரிபவர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டதட்ட இது எல்லா மொழிக்கும்தான் நடக்கிறது 
ஆங்கிலம் எல்லா துறைக்கும் உலக மொழியாக இருப்பதால் தப்பித்து கொள்ளும் 

எல்லாம் டிஜிட்டல் வடிவம் பெறுவதால் 
இந்த ஹார்ட் கொப்பி வடிவம் தொலைந்து போகிறது 

நான் நினைக்கிறேன் 2000ஆம் ஆண்டுக்கு பின்பு பிறந்த யாரும் 
ஏதும் தமிழ் புத்தகம் எடுத்து வாசிப்பார்கள் என்பது கற்பனைதான். 

தமிழ் மொழியை இசை நடனம் என்று விரிவாக்கி 
ஒரு கலைவடிவில் கொண்டு சென்றாலே அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல முடியும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.