Jump to content

அறிவித்தல்: யாழ் இணையம் 22 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்


Recommended Posts

வணக்கம்,

இதுவரை " யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் பின்வரும்  ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது.

குறிப்பு: இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 30 ஏப்ரலுடன் நிறைவுபெறும்.

கடந்த வருடங்களைப் போன்று இவ்வருடமும் அதிகமான சுய ஆக்கங்களைப் பதிந்து சிறப்பிக்குமாறு சகல கள உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கின்றோம்.

இப்பட்டியலில் தவறவிடப்பட்ட சுய ஆக்கங்களை அறியத்தந்தால், அவற்றினை "யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதிக்கு நகர்த்த உதவியாக இருக்கும்.

சக கள உறுப்பினர்கள்,  பதியப்பட்ட ஆக்கங்களுக்கான கருத்துக்களைப் பதிந்தும், விருப்பப் புள்ளிகளை இட்டும் சுய ஆக்கங்களை வரவேற்குமாறு வேண்டுகின்றோம்.

நன்றி

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

சுய ஆக்கத்தை யாரும் எழுதி போடலாமா?

அதுதான் சுமேயை இறக்கியிருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

சுய ஆக்கத்தை யாரும் எழுதி போடலாமா?

சுய ஆக்கத்தை... நீங்களும் போடலாம்.  :)

Link to comment
Share on other sites

வணக்கம்,

யாழ் இணையம் 22 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்கள் கோரப்பட்டிருந்தன. இச் சுய ஆக்கங்கள் கலை, சிந்தனை வெளிப்பாடுகளைக் கொண்ட கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் ஒளிப்படங்கள், ஓவியங்கள், காணொளிகள் ஆக எதிர்பார்க்கப்பட்டது.

எமது நோக்கம் அனைத்து கள உறவுகளையும் அவரவர் திறமைகளுக்கேற்ப சுயமான ஆக்கங்களைப் படைப்பதற்கான வெளியை யாழ் கருத்துக்களத்தில் வழங்குவதேயாகும். பலர் எமது கோரிக்கையைக் கருத்திற்கொண்டு சிறந்த சுய ஆக்கங்களைப் பதிந்திருந்தனர். அவர்களுக்கு யாழிணையம் சார்பாக நன்றிகள்.

ஆயினும் இணைக்கப்பட்ட சில பதிவுகள் அரட்டைகளை ஊக்குவிக்கும், நிகழ்கால விடயங்களாக இணைக்கப்பட்டதால் அவற்றினை " யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியிலிருந்து அகற்றி  பொருத்தமான பிரிவுகளுக்கு நகர்த்தியுள்ளோம்.

அரட்டைகளைத் தவிர்த்து நல்ல சுய ஆக்கங்களைப் படைக்க இன்னமும் நேரம் உள்ளது என்பதை கள உறுப்பினர்களுக்கு நினைவூட்டுகின்றோம்.

இதுவரை " யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் பின்வரும்  ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது.

குறிப்பு: இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 30 ஏப்ரலுடன் நிறைவுபெறும்.

இப்பட்டியலில் தவறவிடப்பட்ட சுய ஆக்கங்களை அறியத்தந்தால், அவற்றினை "யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதிக்கு நகர்த்த உதவியாக இருக்கும்.

சக கள உறுப்பினர்கள்,  பதியப்பட்ட ஆக்கங்களுக்கான கருத்துக்களைப் பதிந்தும், விருப்பப் புள்ளிகளை இட்டும் சுய ஆக்கங்களை வரவேற்குமாறு வேண்டுகின்றோம்.

நன்றி

Link to comment
Share on other sites

வணக்கம்,

யாழ் இணையம் 22 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக இதுவரை " யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் பின்வரும்  ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது.

குறிப்பு: இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 30 ஏப்ரலுடன் நிறைவுபெறும்.

இப்பட்டியலில் தவறவிடப்பட்ட சுய ஆக்கங்களை அறியத்தந்தால், அவற்றினை "யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதிக்கு நகர்த்த உதவியாக இருக்கும்.

சக கள உறுப்பினர்கள்,  பதியப்பட்ட ஆக்கங்களுக்கான கருத்துக்களைப் பதிந்தும், விருப்பப் புள்ளிகளை இட்டும் சுய ஆக்கங்களை வரவேற்குமாறு வேண்டுகின்றோம்.

நன்றி

Link to comment
Share on other sites

  • 1 month later...

வணக்கம்,

யாழ் இணையம் 22 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்கள் பலரும் இக் கொரோனா நெருக்கடிக் காலத்திலும் மிகவும் உற்சாகமாகத் தமது படைப்புத் திறனை வெளிக்கொணர்ந்து பல்வேறு வகைமைகளில் 40 சுய ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். சுய ஆக்கங்களைப் படைத்துச் சிறப்பித்த அனைத்துக் கள உறுப்பினர்களுக்கும், ஆக்கங்களை ஊக்குவித்து விருப்புக் குறிகளை வழங்கியும், பாராட்டுக் கருத்துக்கள் பதிந்தும், படைப்புக்களை மெருகூட்ட ஆக்கபூர்வமானதும் காத்திரமானதுமான கருத்துக்களையும் வைத்த கள உறுப்பினர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 30 ஏப்ரலுடன் நிறைவடைந்தமையால் புதிய ஆக்கங்களை அவற்றிற்குரிய கருத்துக்களப் பகுதிகளில் இணைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கதைக் களம்

கதைக் களம் பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள்,  மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள்  போன்றவற்றை இணைக்கலாம். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

கவிதைக் களம்

கவிதைக் களம் பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றவற்றை இணைக்கலாம். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

குறிப்பு: "கதை கதையாம்" மற்றும் "கவிதைப் பூங்காடு" பகுதிகள் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் ஆக்கங்களை இணைப்பதற்கான பகுதி என்பதாலும் அப்பகுதிகளில் இணைக்கப்படுபவை முகப்பில் காட்டப்படமாட்டா என்பதாலும் கள உறுப்பினர்கள் சுய ஆக்கங்களை கதைக் களம் மற்றும் கவிதைக் களம் பகுதிகளில் இணைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

_______________________________________________________________________________________

 

 " யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் பின்வரும் 40 ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது.

குறிப்பு:

" யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் உள்ள ஆக்கங்களுக்கு கள உறுப்பினர்கள் தொடர்ந்தும் பாராட்டுக் கருத்துக்கள், காத்திரமான கருத்துக்கள் வைக்கமுடியும். ஆனால் புதிய தலைப்புக்கள் திறக்கமுடியாது.

நன்றி

நியானி (நிர்வாகம் சார்பாக)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.