Jump to content

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 492 ஆக அதிகரிப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-1.jpg

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 492 ஆக அதிகரிப்பு!

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 490 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை உலகளாவிய ரீதியில் 23 ஆயிரத்து 865 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், 23 ஆயிரத்து 214 பேருக்கு கொரோனா வைரஸின் தொற்று ஏற்பட்டிருக்கலாமெனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை 25 நாடுகளில் கொரோனா வைரஸின் பாதிப்பு உணரப்பட்டுள்ளது.

அத்துடன், ஹொங்கொங் மற்றும் பிலிப்பைன்சில் இருவரும் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை தாய்லாந்தில் 25 ஆகவும் சிங்கப்பூரில் 24 ஆகவும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், உலகளாவிய ரீதியில் அந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 800 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜப்பானில் பயணிகள் கப்பலொன்றில் பயணிக்கும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்தக் கப்பலில் பயணிக்கும் ஏராளமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த கப்பலிலிருந்து தொற்று நோய் உறுதி செய்யப்பட்ட 10 பயணிகளும் தரைக்குக் கொண்டுவரப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் பணிகளில், ஜப்பானிய அரச அமைப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் ஆதரவுக்கு சீனா நன்றி தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சீனாவுக்கு, ஜப்பானிய அரச அமைப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களினால் முகக்கவச உறைகள், பாதுகாப்பு ஆடைகள் மற்றும் கண்ணுக்கான கவசங்கள் ஆகியன வழங்கப்பட்டிருந்தன.

சீனா நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இந்த நிலையில், ஜப்பான் வெளிப்படுத்திய இந்தப் புரிந்துணர்வினை, சீனா பாராட்டியுள்ளதுடன் அதற்காக நன்றியையும் தெரிவித்துள்ளது.

http://athavannews.com/கொரோனா-வைரஸ்-தாக்கத்தினா/

Link to comment
Share on other sites

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+80+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D+60+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
 
 
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களில் 80 வீதமானோர் 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள்
 
 
 
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 490 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 80 வீதமானோர் 60 வயதிற்கும் மேற்பட்டவர்களாவர் என சீனாவின் தேசிய சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவர்களுள், 75 வீதமானோர் இருதய மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதேநேரம், ஹ{பே மாகாணத்தில் மாத்திரம் நேற்றைய தினம் 65 உயிரிழப்புகள் பதிவானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேநேரம், சீனாவுக்கு வெளியே ஹொங்கொங்கிலும். பிலிப்பைன்ஸிலும் தலா ஒருவர் பலியானார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, 28 நாடுகளில் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று சர்வதேச ரீதியில் நெருக்கடி நிலையை அடைவதை தடுப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ரெஸ் அடெனொம் கெப்ரியேஸஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக சீனா மேற்கொண்டுவரும் முயற்சிகள் அதன் பரவலைத் தடுப்பதற்கான சிறந்த வழியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனா வேகமாய் வளர்ச்சி அடைவதை பொறுக்காத அமெரிக்காவும் ,ஜரோப்பிய நாடுகளும் ஏவி விட்ட வைரஸ் என்று சொல்லினம் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.