Jump to content

3,700 பேருடன் பயணித்த கப்பலை தடுத்து நிறுத்திய ஜப்பான் ; 14 நாட்கள் தனிமைப்படுத்த உத்தரவு


ampanai

Recommended Posts

சுமார் 3700 பேருடன் யோகோஹாமா துறைமுகத்தை வந்தடைந்த 'டைமண்ட் பிரின்சஸ்' என்ற கப்பலை ஜப்பான் நாட்டு அதிகாரிகள் தனிமைப்படுத்தி வைத்துள்ளதுடன், அதில் பயணித்த பயணிகளுக்கும், ஊழியர்களுக்கும் தரையில் இறங்குவதற்கு இதுவரை அனுமதியும் வழங்கப்படவில்லை.


http___cdn.cnn.com_cnnnext_dam_assets_20

கடந்த மாதம் 20 ஆம் திகதி ஜப்பானின் 2 ஆவது மிகப்பெரிய நகரமான யோகோஹாமாவில் இருந்து ஹொங்கொங்கிற்கு மேற்படி கப்பல் சென்றது.

இந்த கப்பலில் சுமார் 2,666 பயணிகளும், 1,045 ஊழியர்களும் பயணித்தனர். இந்த கப்பல் கடந்த 25 ஆம் திகதி ஹொங்கொங் சென்றடைந்தது.

இதன்போது கப்பலில் பயணம் செய்த ஹொங்கொங்கைச் சேர்ந்த 80 வயது முதியவர் தரையில் இறங்கினார். அதன் பின்னர் அந்த கப்பல் ஹொங்கொங்கிலிருந்து இருந்து மீண்டும் ஜப்பானுக்கு புறப்பட்டது.


efdf3140-dd5b-4195-be22-4bf7b1141139.jpe

இதனிடையே ஹொங்கொங்கில் கப்பலில் இருந்து இறங்கிய 80 வயதுடைய ஹொங்கொங் பிரஜை கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருப்பது 30 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இது தொடர்பான தகவல் டைமண்ட் பிரின்சஸ் கப்பல் அதிகாரிகளுக்கு இம் மாதம் முதலாம் திகதி அறிவிக்கப்பட்டது.

அப்போது இந்த கப்பல் ஜப்பானின் ஒகினாவா மாகாணத்தை வந்தடைந்திருந்தது. இதுபற்றி ஜப்பான் அதிகாரிகளுக்கு தெரியவந்ததும் மாகாண தலைநகரான நாகாவில் உள்ள துறைமுகத்துக்கு அருகே கப்பலை தடுத்து நிறுத்தி தனிமைப்படுத்தினர்.

எனினும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கப்பலில் இருக்கும் யாருக்கு எந்த பாதிப்பும் இல்லை, அவர்கள் அனைவரும் தரையில் இறங்கலாம் என அதிகாரிகள் சான்றிதழ் வழங்கினர்.

அதன்பிறகு டைமண்ட் பிரின்சஸ் கப்பல் அங்கிருந்து யோகோஹாமா நகருக்கு புறப்பட்டது. அதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை யோகோஹாமா துறைமுகத்துக்கு கப்பல் வந்து சேர்ந்தது.

இதன் பின்னர் கப்பலில் பயணித்தவர்கள் நோய் வாய்ப்பட்டனர். இதனால் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

இதனால் கப்பலில் உள்ள 2,666 பயணிகள் மற்றும் 1,045 ஊழியர்களை தரையில் இறங்குவதற்கு தடை விதித்த ஜப்பான் அரசாங்கம் கப்பலை துறைமுகத்தில் இருந்து சில மைல் தொலைவில் நடுக்கடலில் நிறுத்தி தனிமைப்படுத்தி வைத்துள்ளது.

இதன் பின்னர் கப்பலில் பயணித்தவர்களில் 273 பேருக்கு விசேட பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதில் 31 பேரின் முடிவுகள் திரும்பி வந்துள்ள நிலையில் அவர்களில் 10 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.


e55c9c1a-58a9-40bc-9515-c60df9ab5a11.jpe

இந்த 10 பேரில் இரண்டு அவுஸ்திரேலியர்களும்,  ஜப்பானியர்கள் மூவரும், ஹொங்கொங்கைச் சேர்ந்த மூவரும், அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஒவ்வொருவரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இதன் பின்னர் இவர்கள் கப்பலிலிருந்து வெளியேற்றப்பட்டு, உள்ளூர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக யோகோஹாமா கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.


கப்பலில் பயணம் செய்த ஏனையோரையும் பரிசோதனைக்குட்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், கப்பலில் பயணித்த அனைவரும் கப்பலில் 14 நாட்கள் தங்க வேண்டியிருக்கும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அவர்களுக்கான உணவு மற்றும் ஏனைய வசதிகளையும் செய்து கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


200203234900-03-coronavirus-cruise-ship-
                   

https://www.virakesari.lk/article/74910

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.