Jump to content

அவுஸ்திரேலியாவில் இருந்து குடாநாட்டை நோக்கி படையெடுக்கும் பறவைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவில் இருந்து குடாநாட்டை நோக்கி படையெடுக்கும் பறவைகள்

அவுஸ்திரேலியாவில் இருந்து குடாநாட்டை நோக்கி படையெடுக்கும் பறவைகள்

நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் யாழ்ப்பாணம் கல்லுண்டாய், வடமராட்சி வல்லைவெளி மற்றும் தீவகத்துக்கு அவுஸ்திரேலியாவில் இருந்து பிளமிங்கோ உள்ளிட்ட பல இன வெளிநாட்டுப் பறவைகள் அதிகளவில் வந்துள்ளன.

இனப்பெருக்கம் மற்றும் பருவ நிலை மாற்றங்களை அனுபவிக்க வரும் அரிய வகை வெளிநாட்டு பறவைகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக குறைந்து காணப்பட்டன.எனினும், இம்முறை சீரான மழைவீழ்ச்சி காணப்பட்டதால் யாழ்ப்பாணம் – காரைநகர் வீதி கல்லுண்டாய் பகுதி மற்றும் தீவகம் அல்லைப்பிட்டி முதல் நாரந்தனை வரையான தரவைப் பகுதி என்பவற்றில் வரத்து நீர் காணப்படுகின்றது.

சாம்பல் நாரை, அரிவாள் மூக்கன், புதிய வகையான ஆசிய ஓபன் பில் நாரைகள் அந்தப் பகுதியில் அதிகளவில் காணப்படுகின்றன. இந்த வகை நாரைகள் இந்திய துணைக் கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுவதாக கூறப்படுகிறது.இந்த நாரை தனது உணவைத் தேடி நீண்ட தூரம் பறக்கக் கூடியது. இந்த நாரைகள் தற்போது யாழ்ப்பாணத்துக்கு வந்து அதிகளவில் தனித்தனியாக ஆங்காங்கே காணப்படுகிறது. இதனை பொதுமக்கள் மிகுந்த ஆா்வத்துடன் பாா்த்துச் செல்கின்றனா்.

ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகி, மார்ச் மாதம் வரை இந்தப் பறவைகள் தமது நாடுகளிலிருந்து இனப்பெருக்கம் மற்றும் பருவ நிலை மாற்றங்களை அனுபவிக்க இடம்பெயர்ந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.மற்ற பறவைகளை போல் பிளமிங்கோ பறவைகள் மீன்களை சாப்பிடாது. கடலில் உள்ள பாசிகளையே உணவாக உட்கொண்டு வாழும் ஒரு சைவ பறவையாகும். மற்ற பறவைகளை போல் மரங்களில் கூடு கட்டி வாழாது. தண்ணீரிலேயே நின்ற படியே தூங்கும்” என்று பறவைகள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 

 

http://www.samakalam.com/செய்திகள்/அவுஸ்திரேலியாவில்-இருந்/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.