Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

உயிர்கொல்லும் கொரோனா வைரஸும் இணையத்தில் உலாவும் புரட்டுக்கொள்ளிகளும்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

உயிர்கொல்லும் கொரோனா வைரஸும் இணையத்தில் உலாவும் புரட்டுக்கொள்ளிகளும்

கொரொனோ வைரஸ் (வாய்க்குள் நுழையாத விஞ்ஞானப் பெயர் 2019-nCoV) கடந்த டிசம்பர் மாதம் மத்திய சீன ஹுபே மாகாணத்தின் வூஹான் நகரில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸின் மூலம் எதுவென்று சரியாக உறுதிப்ப்படுத்தப்படவில்லை. ஆனால் வூஹான் நகரில் உள்ள உள்ளூர் கடலுணவு/இறைச்சி சந்தைகளில் விற்கப்பட்ட (கொரோனா வைரஸினால்) பாதிக்கப்பட்ட விலங்குகளில் இருந்தே பரவியிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

கொரோனா வைரஸ் இப்போதும் வேகமாகப் பரவிவருகின்றது. இன்றைய நாள்வரை 636 பேருக்குமேல் மரணித்தும், 36,000 பேருக்கு மேல் தொற்றுக்கும் உள்ளாகியிருக்கின்றார்கள். எனினும் அதன் தொற்றுவீதம் எப்படி இருக்கும், எப்படிக் கட்டுப்படுத்தலாம் என்பதற்கான விடைகள் கொரோனா வைரஸ் உருவான சீனாவிடமோ உலக சுகாதார சபை (WHO) யினடமோ இதுவரை இல்லை. 

சீனாவில் பிறந்து 30 மணிநேரமே ஆன குழந்தைக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொற்று இருந்த தாயிடம் இருந்து கருப்பைக்குள் இருக்கும்போதே பரவியதா அல்லது குழந்தை பிறந்த பின்னர் பரவியதா என்பதும் தெரியவில்லை. இவையெல்லாம் எவரையுமே பீதியூட்டக்கூடிய செய்திகள். மனித குலத்திற்கே சவாலான சோதனையான காலகட்டம்!

இப்படியான நெருக்கடி மிகுந்த வேளைகளை ஒரு சிலர் தமது சுயவிளம்பரங்களுக்கும், தமது பண்பாட்டு, இன, மத மொழி அடையாளங்களை பெருமைப்படுத்துகின்றோம் என்று நினைத்து சிறுமைப்படுத்துவதற்கும், அதற்கும் மேலால் பீதிக்குள்ளான மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கவும் பயன்படுத்துகின்றனர். 

எதையும் எப்படியும் எழுதவும், பரப்பவும் வசதியுள்ள பரபரப்பு மிகுந்த சமூகவலை ஊடகங்கள் சுண்டுவிரலில் இருப்பது இப்படியான புரட்டுக்களை கொரோனா வைரஸ் பரவும் வேகத்தைவிட அதிவேகமாக பரப்ப உதவுகின்றது. எதையும் வாசித்தபின் அல்லது காணொளிகளைப் பார்த்தபின் பொறுமையாக அதன் உண்மைத்தன்மை அறிந்தபின் forward செய்யாமல் ‘என்கடன் பகிர்ந்து மகிழ்வதே’ என்று உடனடியாகவே மற்றவர்களுக்கு அனுப்பும் மந்தைக்கூட்டங்கள் இருக்கும்வரை புரளிகள் வைரலாவதையும் தடுக்கமுடியாது!

கொரோனோ வைரஸ் பற்றிய புரளிகள் சில:

* இணையத்தில் உலவும் சதிக்கோட்பாளர்கள் கொரோனா வைரஸ் வூஹானில் இரகசியாமாக (!) உள்ள உயிரியல் ஆயுதம் தயாரிக்கும் ஆய்வுகூடத்தில் இருந்து வெளியே பரவியதாகச் சொல்வது. இதனை அமெரிக்க வெளியுறவுத் துறை மறுதலித்து மலினச் செய்திகளை பரப்பவேண்டாம் என்று கேட்டுள்ளது.

* இலண்டன் Mitcham பகுதியில் சீன உணவகத்தில் வாத்துவறையும் குழைசோறும் சாப்பிட்ட தமிழர் ஒருவர் மரணம் பெயர், ஊர், வயதெல்லாம் சொல்லி வாட்ஸப்பில் உலவவிட்டது. அது உண்மையா என்று அங்கலாய்த்தவர்களும் இறந்தவரின் பிள்ளைகளுக்காக வருந்தியோரும் பலர்!

* கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க உடலில் சாணத்தைப் பூசி கோமியத்தைக் குடிக்கவேண்டும் என்று இந்தியாவில் இந்து மகாசபை தலைவர் கருத்துச் சொன்னது.

* இலங்கையில் பிக்கு ஒருவர் 2600 வருடங்களுக்கு முன்னரே புத்தபகவான் கொரோனா வைரஸ் பற்றித் தெரிந்தமையால் பாம்பு, குதிரை, வௌவால், பன்றி உள்ளிட்ட மாமிசங்களை புத்த பெருமான் தடை செய்துள்ளார் என்று உளறியது.

* அகத்தியர் ஓலைச்சுவடிகளில்/சங்கப்பாடல்களில் அப்பவே கொரோனா வைரஸின் வருகையைப் பற்றி குறிக்கப்பட்டது என்று எவரோ நையாண்டியாக எழுத அதை தலையில் தூக்கிக்கொண்டாடி அப்பவே தமிழர்கள் முக்காலமும் தெரிந்தவர்கள் என்று பிதற்றும் பித்துக்குளிகள்

* கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் ஆயுர்வேத சூரணங்கள், குளிகைகள் விற்பனைக்கு உள்ளன என்று இலங்கையில் போலி விளம்பரங்கள் செய்யப்படுவது

* இன்னும் பல....

இந்தப் புரளிகளினால் பீதியடைந்து பலநாடுகளில் சீனர்களைப் பார்த்தாலே மற்றவர்கள் ஓடுகின்றார்கள். பிரித்தானியாவில்கூட சீனர்களின் China Town பகுதி உணவகங்களிக்கும், வியாபார நிலையங்களுக்கும் மக்கள் செல்வது குறைவடைகின்றது. 
பாடசாலைகளில் சீன மாணவர்களுடன் சேராமல் இருக்குமாறு பிற இனத்தினர் தமது பிள்ளைகளுக்கு சொல்வதாகவும் தகவல் உள்ளது. 

உலகமே குழப்பத்தில் இருக்கின்றபோது, அதனை இன்னமும் சிக்கலாக்க  இணையமும் சமூகவலைத் தளங்களும் புரளிக்கொள்ளிகளால் நிறைந்துள்ளது. 

கொரோனா வைரஸ் தாக்காது என்று தட்டிக் கழிக்கலாமா?
இல்லை. எப்போதும் முன்னெச்சரிக்கையுடனும் நிதானமுடனும் இருக்கவேண்டும்.

* அரசாங்கங்கள் கூறும் விடயங்களை செவிமடுக்கவேண்டும்.

* பொறுப்புணர்வு உள்ள பத்திரிகைகள், BBC போன்ற உலக ஒலி/ஒளிபரப்புக் கூட்டுத்தாபனங்களின் செய்திகள், தகவல்களை மாத்திரம் நம்பவேண்டும்.

* இணையத்தில் உலவும் செய்திகளுக்கு source என்னவென்று சரிபார்க்கவேண்டும்.

* நம்பகத்தன்மை இல்லாத தகவல்களை கண்டுகொள்ளாமல் விடவேண்டும். அவற்றைக் கூடியவரை forward பண்ணாமல் இருக்கவேண்டும்!

கொரோனா வைரஸ் என்பது சாதாரண தடிமன் வைரஸ் போன்றதுதான். அதனால் தடிமன், காய்ச்சல் போன்ற சாதாரண குணங்குறிகள் கொரோனா வைரஸால் தொற்றுக்கு உள்ளாகியவர்களுக்கு இருக்கலாம். சிலவேளை தொற்றியிருந்தாலும் குணங்குறிகள் ஏதும் இல்லாமலும் இருக்கலாம். 

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள், நுரையீரல், சிறுநீரக நோய் உள்ளவர்கள் மரணித்துள்ளனர். 
திடகாத்திரமானவர்கள் தொற்றுக்கு ஆளாகினாலும் மரணிப்பார்கள் என்றில்லை. தொற்றுக்கு ஆளாகியவர்களினதும் இறந்தவர்களினதும் விகித்தைப் பார்த்தாலே இது விளங்கும்.

கொரோனா வைரஸ் தொற்று இன்னமும் epidemic (குறிப்பிட்ட பிரதேசத்தில் மாத்திரம் பரவுதல்) ஆகவே உலக சுகாதார சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது. தொற்றுக்கு உள்ளானவர்களில் 99 வீதத்திற்கு மேல் சீனாவில் என்பதால் epidemic ஆக உள்ளது. சீனாவுக்கு வெளியே அதிக நாடுகளில் பெருமளவு பேருக்கு தொற்று ஏற்படும்போது pandemic (பிரதேச வேறுபாடுகள் இன்றி பல நாடுகளுக்கும் பரவுதல்) ஆக அறிவிக்கப்படலாம். 

தொற்றும் வீதத்தைக் கட்டுப்படுத்தவே பயணக கட்டுப்பாடுகளை வூஹான் நகரம் அமைந்துள்ள ஹூபே மாகாணத்திலும், அதனை அண்டிய பகுதிகளிலும் சீனா அமுல்படுத்தியுள்ளது. 
ஒரு குடும்பதைச் சேர்ந்த ஒருவர் மட்டும்தான் இரண்டு நாட்களுக்கு ஒருதடவை அத்தியாவசியமான பொருட்களை வாங்க வீட்டை விட்டு வெளியே வரலாம் என்று மிகவும் இறுக்கமான கட்டுப்பாடுகளை விதித்தும், வெளிநாடுகளுக்கான விமானப்பயணங்களை நிறுத்தியும் மக்களின் நகர்வுகளைக் கட்டுப்படுத்தியுள்ளது. எனினும் தொற்றுவீதம் கட்டுக்குள் இன்னமும் வரவில்லை. 

வைரஸுக்கு மருந்து இல்லை என்பதும் vaccine (தடுப்பூசி) மூலம் மாத்திரமே புதிதாகப் பரவுவதை தடுக்கலாம் என்பதும் அடிப்படை மருத்துவ அறிவு உள்ளவர்களுக்கு தெரிந்த விடயம். கொரோனா வைரஸின் genetic sequence ஐ சீனா வெளியிட்ட இரு வாரங்களுக்குள்ளேயே இலண்டன் இம்பீரியல் கல்லூரியின் மருத்துவத் துறையினர் vaccine candidate ஒன்றைத் தயாரித்துள்ளதாக அறிவித்துள்ளனர். இதுபோலவே Oxford பல்கலைக்கழகத்திலும், அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும், அவுஸ்திரேலியாவிலும் vaccines ஐ துரிதமாகக் கண்டுபிடிக்க ஓட்டம் நடக்கின்றது. இவை அடுத்தடுத்த கட்டங்களை தாண்டி humans trials க்கு வர பல மாதங்கள் எடுக்கலாம். 

தற்போது தாய்லாந்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு HIV எயிட்ஸையும் fluஐயும் கட்டுப்படுத்தும் மருந்துகளை high doses இல் கொடுத்தபோது பத்துக்கு மேற்பட்டோர் கொரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து மீண்டுள்ளனர் என்பதும் நம்பிக்கைதரும் செய்தி.

இந்த நம்பிக்கைக்கீற்றுகள் இருப்பதனால் எத்தனையோ சவால்களைச் சந்தித்த மனிதகுலம் கொரோனா வைரஸின் பாதிப்பில் இருந்தும் விரைவில் மீண்டுவரும் என்று உறுதியாக நம்பலாம்!

அதுவரை மிகவும் எளிமையான விடயங்களையே நாம் கடைப்பிடித்தாலே போதுமானது.

* தும்மும்போதும் இருமும்போதும் வாயை கூடியவரை மூடியிருத்தல் அல்லது முழங்கையால்/ paper tissues ஆல் மூக்கையும், வாயையும் மூடுதல்.

* Paper tissues ஐ குப்பைத்தொட்டிக்குள் உடனடியாகவே போட்டு மூடுதல்.

* கைகளையும், முகத்தையும் அடிக்கடி கழுவுதல். முடிந்தால் தொற்றுநீக்கி சவர்க்காரம் பாவித்தல்.

* தடிமன், இருமல் உள்ளவர்களிடம் இருந்து குறைந்தது ஒரு மீற்றராவது இடைவெளி வைத்திருத்தல்.

 

 

 

 • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

  • By பிழம்பு
   ஃப்ளோரா கார்மிச்சேல் பிபிசி ரியாலிட்டி செக் கொரோனா வைரஸிலிருந்து 90 சதவீதம் வரை பாதுகாப்பு அளிக்கும் ஒரு தடுப்பூசி குறித்த செய்தி வெளியானவுடன் தடுப்பூசிகளுக்கு எதிரான வதந்தி, சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவ தொடங்கி விட்டன.
   தடுப்பூசி என்ற பெயரில் உடலில் மைரோசிப்ஸ்களை பொருத்தி நமது உடலின் "ஜெனிடிக்கல் கோட்" மறு கட்டமைப்பு செய்யப்படும் என்பது, அதில் முதன்மையானது.
   தடுப்பூசி தொடர்பான செய்திகள் வந்தவுடன், ட்விட்டரில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் என்ற பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது.
   கொரோனா தொற்று தொடங்கியதிலிருந்து பில் கேட்ஸ் தொடர்பான பல பொய் செய்திகள் இணையத்தில் பரவின.
   தடுப்பூசி மற்றும் பொது சுகாதாரத்திற்கு அதிக கொடையளிக்கும் காரணத்தினாலேயே அதிக சந்தேகத்துடன் அவர் இலக்கு வைக்கப்படுகிறார்.
   கொரோனா பரவத் தொடங்கியது முதல் உலா வரும் ஒரு வதந்தி, "நமது நடவடிக்கைகளைக் கண்காணிக்க, நம் உடலில் ஒரு மைக்ரோசிப் பொருத்தப்படும், இந்த செயல்திட்டத்திற்குப் பின்னால் கேட்ஸ் இருக்கிறார் என்பதுதான்."
   ஆனால், இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
   இது தொடர்பாக கேட்ஸ் அறக்கட்டளையைத் தொடர்பு கொண்டு பிபிசி விளக்கம் கேட்டது. ஆனால், அவர்கள் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துவிட்டனர்.
   இது தொடர்பான எந்த ஆதாரமும் இல்லாமல் இருந்தாலும், 1640 பேரிடம் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் 28 சதவீத அமெரிக்கர்கள் இதனை நம்புவதாகக் கூறுகிறது யோகோவ் கருத்துக் கணிப்பு.
   மாற்றி அமைக்கப்படும் டி.என்.ஏ
   டிரம்புக்கு சாதகமாக எழுதும் நியூஸ் மேக்ஸ் தளத்தின் வெள்ளை மாளிகை செய்தியாளர் எமரால்ட் ராபின்சன் பகிர்ந்த ஒரு ட்வீட்டில், "இந்த தடுப்பூசிகள் உங்கள் டி.என்.ஏவை சேதமாக்கும்," என குறிப்பிட்டு இருந்தார்.
   அவரை ட்விட்டரில் 264,000 பேர் பின் தொடர்கிறார்கள்.
   மற்ற வதந்திகளில் ஒன்று, இந்த தடுப்பூசி உங்கள் டி.என்.ஏவை மாற்றி அமைக்கும் என்பது. இது ஃபேஸ்புக்கில் பரவலாகப் பகிரப்பட்டது.
   இது தொடர்பாக மூன்று ஆய்வாளர்களிடம் விளக்கம் கேட்டது பிபிசி. அவர்கள் இந்த தகவலை மறுத்தனர்.
   "டி.என்.ஏ-வை கொரோனா தடுப்பூசி மாற்றி அமைக்காது," என்கின்றனர் அவர்கள்.
   மரபணு தொடர்பான அடிப்படை புரிதலற்ற மக்களாலேயே இவ்வாறான வதந்திகள் பகிரப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.
   வைரஸின் மரபணு தகவல்களின் பகுதிகளை அல்லது ஆர்.என்.எக்களை இந்த தடுப்பூசிகள் கொண்டிருக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
   ஆர்.என்.ஏ-வை ஒரு மனிதனிடம் செலுத்தும் போது அது மனிதனின் செல்லில் உள்ள டி.என்.ஏவை பாதிக்காது என்று கூறுகிறார் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜெஃப்ரி அல்மோண்ட்.
   பிஃபிசர் மருந்து நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஆண்ட்ரூ, "இந்த தடுப்பூசிகள் உடலின் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்குமே தவிர, உடலின் டி.என்.ஏவை மாற்றி அமைக்காது," என்கிறார்.
   இவ்வாறான செய்திகள் பரவுவது இது முதல்முறை அல்ல. மே மாதமே பிபிசி இது தொடர்பான ஒரு புலனாய்வை மேற்கொண்டிருக்கிறது.
   பக்கவிளைவுகள்
   எமரால்ட் ராபின்சன் பகிர்ந்து வைரலாக மீள் பகிரப்பட்ட மற்றொரு ட்விட்டில், "இந்த தடுப்பு மருந்துகளில் 75 சதவீதம் பக்கவிளைவுகள் கொண்டவை," என குறிப்பிட்டு இருந்தார்.
   பட மூலாதாரம்,TWITTER
   பிஃபைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கின்றன.
   தீவிரமான எந்த பக்கவிளைவுகளும் இல்லை என அவை கூறுகின்றன.
   பல தடுப்பூசிகளில் பக்கவிளைவுகள் இருக்கும். ஆனால், தடுப்பூசிக்கு எதிரான செயல்பாட்டாளர்கள் நம்புவதுபோல அவை அச்சம் தருபவை அல்ல.
   மற்ற தடுப்பூசிகளைப் போல, உடல்வலி, தலைவலி, மற்றும் காய்ச்சல் போன்ற சிறிய அளவிலான பக்கவிளைவுகள் இருக்கும் என்கிறார் லண்டன் கிங்ஸ் கல்லூரியின் வருகை பேராசிரியர் மருத்துவர் பென்னி.
   மேலும் அவர், வழக்கமாகக் காய்ச்சலுக்காகப் போடப்படும் இந்த தடுப்பூசிகளிலேயே இப்படியான பக்கவிளைவுகள் இருக்கும் என்கிறார் அவர். சாதாரண மருத்துகளை எடுத்து கொள்வதன் மூலமே இந்த பக்கவிளைவுகளைச் சரி செய்துவிடமுடியும் என்கிறார் அவர்.
   75 சதவீதம் பக்கவிளைவுகள் கொண்டவை என எப்படி ராபின்சன் கூறுகிறார் என தெரியவில்லை.அதற்கான தரவுகளை எப்படி பெற்றார் என்றும் தெரியவில்லை.
   இந்த தடுப்பூசிகளில் என்னென்ன பக்கவிளைவுகள் இருக்கும் என்பது தொடர்பான முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், பெரிதாக எந்த பக்கவிளைவுகளும் இல்லை என்கிறது பிஃபிசெர்.
   இது தொடர்பாக விளக்கம் பெற எமரால்ட் ராபின்சனை தொடர்பு கொண்டது பிபிசி. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துவிட்டார்.
   https://www.bbc.com/tamil/science-54950723
  • By பிழம்பு
   ஜேம்ஸ் கலேகர் சுகாதார மற்றும் அறிவியல் செய்தியாளர் க்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES
   புதிய தடுப்பு மருந்து ஒன்று, கொரோனா தொற்றுக்கு எதிராக கிட்டதட்ட 95 சதவீத அளவிற்குப் பலனளிக்கக்கூடியதாக உள்ளது என ஆரம்பக் கட்ட தகவல்கள் தெரிவிப்பதாக அமெரிக்க நிறுவனமான 'மாடர்னா' தெரிவித்துள்ளது.
   சில தினங்களுக்கு முன் பிஃபிசர் மற்றும் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்களின் தடுப்பு மருந்து 90 சதவீத அளவிற்கு கொரோனா தொற்றிலிருந்து காக்கும் என நம்பிக்கையுடன் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது இந்த செய்தி வந்துள்ளது.
   இந்த நிறுவனங்கள் அனைத்தும் தடுப்பு மருந்தை உருவாக்க அதிக புதுமையான மற்றும் சோதனை முறையிலான அணுகுமுறையைக் கையாண்டு வருகின்றன.
   இது தங்களுக்கு `சிறந்த ஒரு நாள்` என மாடர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த சில வாரங்களில் இந்த தடுப்பு மருந்தைப் பயன்படுத்தும் அனுமதிக்கு விண்ணப்பிக்கப்போவதாக தெரிவித்துள்ளது.
   இருப்பினும் இது ஆரம்பக் கட்ட தகவல்களே. பல முக்கிய கேள்விகளுக்கு இன்னும் விடை தெரியவில்லை.
   இது எந்த அளவிற்குப் பலனளிக்கும்?
   அமெரிக்காவில் 30 ஆயிரம் பேரிடம் இந்த தடுப்பு மருந்திற்கான சோதனை நடத்தப்பட்டது. இதில் பாதிபேருக்கு நான்கு வாரங்கள் இடைவெளியில் இரண்டு டோஸ் மருந்து வழங்கப்பட்டது. பிறருக்கு `டம்மி` ஊசிகள் வழங்கப்பட்டன.
   கோவிட் அறிகுறிகள் உருவாகிய முதல் 95 பேரைக் கொண்டு ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதில் தடுப்பு மருந்து வழங்கப்பட்ட ஐந்து பேருக்கு மட்டுமே கோவிட் கண்டறியப்பட்டது. மீதமுள்ள 90 பேர் டம்மி ஊசிகள் கொடுக்கப்பட்டவர்கள். இந்த தடுப்பு மருந்து 94.5 சதவீத அளவு பாதுகாப்பு வழங்குகிறது என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
   "இந்த தடுப்பு மருந்து பரிசோதனை சிறப்பான ஒன்றாக அமைந்துள்ளது. இது ஒரு சிறந்த நாள்," என மாடர்னாவின் தலைமை மருத்துவ அதிகாரி தால் சாக் பிபிசியிடம் தெரிவித்தார்.
   நமக்கு தெரியாத தகவல்கள் என்னென்ன?
   இந்த தடுப்பு மருந்து எவ்வளவு காலம் பலனளிக்கும் என்பது தெரியாது. அதற்குத் தன்னார்வலர்கள் நீண்ட நாட்களுக்குக் கண்காணிக்கப்பட வேண்டும். வயதான, கோவிட் தொற்றால் உயிரிழக்கக்கூடியவர்களுக்கு இது பாதுகாப்பு அளிக்கும் என்பதுபோல தெரிகிறது. இருப்பினும் அதுகுறித்த எந்த முழு தகவலும் இல்லை.
   தரவுகளின்படி, இந்த மருந்து "தனது ஆற்றலை இழப்பது போலத் தெரியவில்லை" என தால் சாக் தெரிவிக்கிறார்.
   மேலும், இந்த தடுப்பு மருந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை மோசமடையாமல் காக்குமா அல்லது கொரோனா தொற்று பரவாமல் தடுக்குமா போன்ற கேள்விகளுக்குப் பதில் இல்லை.
   இந்த கேள்விகள்தான் கொரோனா தடுப்பு மருந்து எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை விளக்கும்.
   இது பாதுகாப்பானதா?
   இதுவரை பாதுகாப்பு அச்சங்கள் எதுவும் எழவில்லை. இருப்பினும் பாராசிட்டமல் உட்பட எதுவும் 100 சதவீதம் பாதுகாப்பானது இல்லை.
   ஊசி செலுத்திய பிறகு சில நோயாளிகளுக்கு, சோர்வு, தலைவலி மற்றும் வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
   ஆனால் "இந்த தாக்கங்கள், வேலை செய்யக்கூடிய மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் ஒரு தடுப்பு மருந்தின் விளைவாக நாம் எதிர்பார்க்கலாம்," என்கிறார் லண்டன் இம்பீரியல் காலேஜின் பேராசிரிய பீட்டர் ஓபன்ஷா.
   இந்த மருந்து எவ்வாறு பிஃபிசர் தடுப்பு மருந்துடன் ஒப்பிடப்படுகிறது?
   இந்த இரு தடுப்பு மருந்துகளுமே வைரஸின் ஜெனிட்டிக் கோடை உடலில் செலுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் அணுகுமுறையைதான் கையாளுகின்றன.
   இரு தடுப்பு மருந்து சோதனை குறித்து ஆரம்பக் கட்ட தகவல்களில் பிஃபிசர் தடுப்பு மருந்து 90 சதவீத பாதுகாப்பு அளிக்கும் என்றும், மாடர்னா தடுப்பு மருந்து 95 சதவீத பாதுகாப்பு அளிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
   இருப்பினும் இரு மருந்துகளுக்கான சோதனைகளும் நடைபெற்று வருகிறது. இறுதி எண்ணிக்கை மாறக்கூடும்.
   மாடர்னா தடுப்பு மருந்தைப் பொறுத்தவரை ஆறு மாத காலத்திற்கு 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சேமித்து வைக்கலாம். மேலும் சாதாரண ஃபிரிட்ஜில் ஒரு மாதக் காலம் வரை வைத்துக் கொள்ளலாம்.
   ஆனால் பிஃபிசர் தடுப்பு மருந்தை மைனஸ் 75 டிகிரி செல்சியஸில்தான் சேமித்து வைக்க முடியும்.
   ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து குறித்த ஆரம்பக் கட்ட தகவல்கள், அது 92 சதவீத அளவு பலனளிக்கும் என்று கூறுகிறது.
   பட மூலாதாரம்,GETTY IMAGES
   எப்போது கிடைக்கும்?
   இது நீங்கள் இந்த உலகில் எங்கு உள்ளீர்கள் என்பதை பொறுத்தும் உங்களுக்கு எத்தனை வயதாகிறது என்பதை பொறுத்தும்தான் உள்ளது.
   வரும் வாரங்களில் அனுமதி கோரி அமெரிக்கக் கண்காணிப்பாளர்களிடம் விண்ணப்பிக்கப் போவதாக மாடர்னா தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்காவுக்கு 20 மில்லியன் டோஸ் மருந்துகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
   மேலும் அடுத்த வருடம் உலகம் முழுவதும் பயன்படும் வகையில் ஒரு பில்லியன் டோஸ் மருந்துகள் தயாரிக்கப்படும் என மாடர்னா நிறுவனம் நம்புகிறது. மேலும் பிற நாடுகளில் பயன்படுத்துவதற்கான அனுமதியைக் கோர திட்டமிட்டுள்ளது.
   இது எவ்வாறு வேலை செய்யும்?
   மாடர்னா ஒரு ஆர்என்ஏ தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது. இதன் பொருள் கொரோனா வைரஸ் ஜெனிட்டிக் கோடின் ஒரு பகுதி உடலில் செலுத்தப்படும். இது முழு வைரஸையும் உருவாக்காமல், வைரல் ப்ரோட்டீனை உடலில் உருவாக்கத் தொடங்கும். இதுவே நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்திற்கு ஒரு பயிற்சியாக இருக்கும்.
   இது உடலில் ஆண்டிபாடிகளை உருவாக்குவது மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஒரு பகுதியான டி செல்கள் கொரோனா வைரஸை எதிர்த்து போரிட தயார் செய்யும்.
   என்ன சொல்கிறார்கள் நிபுணர்கள்?
   "இந்த தடுப்பு மருந்து சோதனை அடுத்த சில மாதங்களில் கொரோனா தொற்றை எதிர்த்து போராடும் ஒரு தடுப்பு மருந்து நமக்கு கிடைத்துவிடும் என்ற நேர்மறையான எண்ணத்தை இது உருவாக்குகிறது" என லண்டன் இம்பீரியல் காலேஜின் பேராசிரியர் ஒபன்ஷா தெரிவிக்கிறார்.
   https://www.bbc.com/tamil/science-54962432
  • By செண்பகம்
   20 நாட்களாக இரண்டு உடைகளுடன்; தனிமைப்படுத்தல் விடுதிகளின் ‘மறுபக்கம்’ – நடப்பது என்ன? – ஓர் ஆய்வு
   Bharati November 7, 2020 20 நாட்களாக இரண்டு உடைகளுடன்; தனிமைப்படுத்தல் விடுதிகளின் ‘மறுபக்கம்’ – நடப்பது என்ன? – ஓர் ஆய்வு2020-11-07T13:11:14+05:30Breaking news, கட்டுரை FacebookTwitterMore கலாவர்ஷ்னி கனகரட்ணம் “உடுத்திய உடையுடன் தனிமைப்படுத்தல் நிலையத்திற்குச் சென்று பின்னர் தெரிந்தவர்கள் ஊடாக இன்னொரு உடை கிடைத்தது. இரண்டு உடைகளுடன் சுமார் 20 நாட்கள் இருக்கின்றேன்”
   கொழும்பிலுள்ள மொத்த விற்பனை நிலையத்தில் பணியாற்றிய ராஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தற்போது விடுதியொன்றில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளார். அவர் கூறிய விடயமே மேலே குறிப்பிடப்பட்டுள்ளது.
   கொரோனாவின் இரண்டாம் அலை இலங்கையை தாக்க ஆரம்பித்துவிட்டது. புதிய கொத்தணி தொற்றுகள் அதிகரித்துவிட்டன. அண்மையில் ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் புதிய தொற்றானது அதிக வீரியத்துடன் வேகமாகப் பரவும் ஆற்றல் கொண்டதென கூறியுள்ளமை எம்மை நாமே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளது.
   இத்தொற்றிற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், தனிமைப்படுத்தலை முன்னிறுத்திய செயற்பாடுகளே மும்முரமாக முன்னெடுக்கப்படுகின்றன. இத்தனிமைப்படுத்தல் செயற்பாடானது பல வழிகளில் முன்னெடுக்கப்படுகின்றன.
   1.தனிமைப்படுத்தல் முகாம்கள்
   2.வீட்டில் கட்டாய தனிமைப்படுத்தல்
   3.சுய தனிமைப்படுத்தல்
   நோய் அடையாளம் காணப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதோடு, பரிசோதனையின் பின்னர் சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டலில் வீட்டிலேயே சிலர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். தமக்கு ஏதேனும் அறிகுறிகள் தென்படுவதாக இருந்தால் சுயமாகவே தம்மை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகின்றது. இந்த தனிமைப்படுத்தல் அனைவருக்கும் ஒரேயளவான தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என்பதற்கு பல கதைகள் உண்டு.
   குறிப்பாக ராஜாவுடன் பணியாற்றிய 24 பேரில் ஒருவருக்கு கடந்த மாதம் 15ஆம் திகதி கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏனையோர் உடனடியாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். முதலில் கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டு அதில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து புனானை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர் தனது கதையை இவ்வாறு கூறுகின்றார்.
   “கொரோனா சந்தேகம் ஏற்பட்ட பின்னர் உடுத்திய உடையுடன் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு சென்று பின்னர் தெரிந்தவர்கள் ஊடாக இன்னொரு உடை கிடைத்தது. இரண்டு உடைகளுடன் சுமார் 20 நாட்கள் இருக்கின்றேன். எம்மை அழைத்துச் செல்லும்போது சுமார் 7, 8 மணித்தியாலங்கள் பயணம் செய்ய வேண்டியிருந்தது. எம்மால் சிறுநீர் கழிக்க முடியாமல் பெரிதும் அவதிப்பட்டோம். அங்கு சென்ற பின்னர், 3 அல்லது 4 பேருக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டது. நாம் பணிபுரிந்த இடத்தின் முதலாளியும் எம்முடன் தனிமைப்படுத்தப்பட்டதால் எமக்கு தேவையான கொத்தமல்லி, மஞ்சள் போன்ற மூலிகைகள், உணவு வகைகளைக் கொண்டுவந்து வெளியில் வைத்துவிட்டு சென்றார்கள். அவற்றை எடுத்து பயன்படுத்திக்கொண்டோம். வீட்டிலுள்ளவர்களை ரீலோட் போடுமாறு கோரி கையடக்க தொலைபேசியில் சமூக வலைத்தளங்கள் அல்லது பாடல்களைக் கேட்போம். காரணம் 24 மணித்தியாலங்களும் ஒரே இடத்தில் கழிப்பதென்பது மிகவும் சிரமமான காரியம்.
   புனானை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கியிருந்த ஓரிரு நாட்களின் பின்னர் எம்மை அருகிலுள்ள கைவிடப்பட்ட தொழிற்சாலை கட்டிமொன்றிற்கு மாற்றிவிட்டார்கள். நாம் அங்கு இருக்கும்போது மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றியோர் மற்றும் பேலியகொடை மீன் சந்தையில் பணியாற்றியோரையும் கொண்டுவந்துவிட்டார்கள். அப்போது அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்க வில்லை. தொற்று உள்ளதா இல்லையா எனத் தெரியாது. ஆனால், அங்குதானே கொத்தணியாக பரவின. ஆகையால் ஒருவேளை அவர்கள் தொற்றாளர்கள் என்றால் எமக்கும் பரவும் ஆபத்து உண்டு. ஒரே குளியலறை மற்றும் மலசலகூடத்தைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இது மிகவும் ஆபத்தானது. இறுதியில் பணம் செலுத்தி தனிமைப்படுத்தும் விடுதிக்கு மாற்றுமாறு எமது முதலாளி கேட்டுக்கொண்டார். அதன் பின்னர் கடந்த 28ஆம் திகதி புத்தளத்தில் இராணுவத்தின் கண்காணிப்பில் உள்ள விடுதிக்கு மாற்றப்பட்டோம்.
   இங்கு ஒருநாள் வாடகை ஒரு அறைக்கு 7000 ரூபாவாகும். இரண்டு பேருக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. வழமையான உணவுகள் வழங்கப்படுகின்றன. அத்தோடு, எலுமிச்சை, இஞ்சி, கொத்தமல்லி போன்ற மூலிகைகள் வழங்கப்படுகின்றன. ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்குச் செல்ல முடியாது. சி.சி.ரி.வி. மூலம் கண்காணிக்கப்படுகின்றது. ஆகவே தொலைபேசியில் கதைத்துக்கொள்வோம். ஓரிரு தினங்களுக்கு முன்னர் இங்கிருந்த ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் சற்று மனதுக்கு சங்கடமாக உள்ளது. எமது முதலாளியின் தயவால் நாம் பணம் செலுத்தி தங்கும் விடுதிக்கு வந்தாலும், ஏனையோருக்கு அந்த வசதியில்லை” என்றார்.
   தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஏனையோருடன் உரையாட முடிந்ததா என்று கேட்கும்போது, “புதிதாக வருபவர்கள் எல்லோரும் கொரோனா நோயாளர்கள் என எம்மிடம் கூறி விடுவார்கள். அந்தப் பயத்திலேயே அவர்கள் அருகில் செல்ல மாட்டோம். அதேபோல் அவர்களிடமும் நாம் கொரோனா நோயாளர்கள் என்று கூறியிருப்பார்கள் என நினைக்கின்றேன். காரணம் எம்மைக் கண்டாலும் அவர்கள் ஓடிவிடுவார்கள். இப்படித்தால் யாரைக் கண்டாலும் சந்தேகமும் பயமும் கலந்த எண்ணத்திலேயே பார்க்க வேண்டியுள்ளது” என்றார்.
   இதேவேளை, திருகோணமலையைச் சேர்ந்த ஒரு தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட பின்னர் அவருடன் நேரடித் தொடர்பிலிருந்த சிலரை அங்கு கடந்த மாதம் 27ஆம் திகதி தனிமைப்படுத்தியுள்ளனர். பின்னர் 31ஆம் திகதி அவர்களை மொரவெவ பகுதியுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு மாற்றியுள்ளனர். அவ்வாறான ஒருவரை தொடர்புகொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்தான் விமலன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அவரிடம் அங்குள்ள விடயங்கள் பற்றி வினவியபோது,
   “பாதுகாப்பு கருதி வீட்டிலுள்ளவர்களுடன் அல்லது வெளியாருடன் கதைக்க அனுமதி இல்லை. ஆனால், அருகிலுள்ளவர்களுடன் கதைக்க முடியும். நோய் பயத்தால் சகஜமாக இருக்க முடியவில்லை. பலர் பதற்றமான மனநிலையுடனேயே உள்ளனர். எனது பி.சி.ஆர். பரிசோதனை இன்னும் வரவில்லை. ஒவ்வொரு விநாடியும் பதற்றமாகவே உள்ளது” என்றார்.
   மினுவாங்கொடை கொத்தணி ஏற்பட்டு சில நாட்களில் பேலியகொடை மீன் சந்தையில் பாரியளவில் தொற்று ஏற்பட்டது. அங்கு மீன்களை வாங்கி வியாபாரம் செய்யும் மருதானையைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர் தற்போது பொலனறுவை தனிமைப்படுத்தல் முகாமில் உள்ளதோடு, மனைவியும் பிள்ளைகளும் மட்டக்களப்பிலுள்ள தனிமைப்படுத்தல் முகாமில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொற்றில்லையென பி.சி.ஆர். பரிசோதனையில் தெரிவிக்கப்பட்ட பின்னர் தற்போது வீட்டில் கட்டாய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
   நான்கு குழந்தைகளுடன் வசிக்கும் குறித்த தாய், கணவனின் தொழிலுக்கு மேலதிகமாக தையல் வேலைகள் செய்து நான்கு குழந்தைகளை படிக்க வைக்கின்றார். அத்தோடு, வாடகை வீட்டிலேயே வசிக்கின்றார். 14 நாட்கள் வீட்டை விட்டு எங்கும் செல்லக்கூடாதென அறிவுறுத்தப்பட்டு வீட்டில் கொண்டுவந்து விட்டதாகவும் தற்போது பொலிஸ் அல்லது சுகாதார பரிசோதகர்கள் அடிக்கடி வந்து கண்காணித்துச் செல்வதாகவும் குறிப்பிட்டார்.
   “யாராவது ஏதேனும் பொருட்களை வீட்டிற்கு வெளியே வைத்துவிட்டுச் செல்வார்கள். யாரிடமும் கையேந்தக் கூடாது என்பதால், கிடைப்பதை சாப்பிட்டு வாழ்கிறோம். மனதளவில் ஒவ்வொரு நொடியும் அழுகின்றேன். எனது கணவனுக்கு என்ன நடக்குமோ எமக்கு இனிவரும் காலம் எவ்வாறு அமையுமோ என்ற வேதனை காணப்படுகின்றது. பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு அவர்களின் தேவைகளை நிறைவேற்ற மிகவும் சிரமமாக உள்ளது” என்றார்.
   தனிமைப்படுத்தல் முறை சரியாக பின்பற்றப்படுகின்றதா என்பதை அரசாங்கம் இடையிடையே கண்காணித்து வருகின்றமை சிறப்பான விடயம். ஆனால், தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு தேவையான வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய முடியாமல் உள்ளது.
   தொற்று உறுதிப்படுத்தப்பட்டு  இதுவரை சுமார் 5000 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரான ஷிரான் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்புப் பிரிவில் பணியாற்றினார். தற்போது தொற்று உறுதிப்படுத்தப்பட்டு பண்டாரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாம் களப் பரிசோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில் இத்தொற்று ஏற்பட்டதாக குறிப்பிட்ட ஷிரான், தமக்கு எவ்வித அறிகுறிகளும் ஏற்படவில்லை என்றார். நான்கு வயது குழந்தையும் மனைவியும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஷிரான், தன்னை பிரிந்திருப்பது அவர்களுக்கு மிகவும் சிரமமான விடயம் எனக் குறிப்பிட்டார்.
   கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியர் ஒருவரிடம் இதுபற்றிக் கேட்டபோது,
   ‘’கொரோனா தொற்றை சாதாரணமாக இனங்காண முடியாது. மினுவாங்கொடையில் அடையாளம் காணப்பட்ட ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு சாதாரண தடிமன், காய்ச்சல் மற்றும் தொண்டை வலி மாத்திரமே இருந்துள்ளது. அப்போது பரசிற்றமோல் போன்ற மாத்திரைகளைப் பாவித்துள்ளனர். அப்போது சுகமாகிவிட்டதாக உணர்வோம் தானே. அவ்வாறுதான் இருந்துள்ளார்கள். எனினும், பெருமளவானோருக்கு இவ்வாறு ஏற்பட்ட பின்னர்தான் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
   மற்றொருவருக்கு இதனை பரப்பாமல் இருக்க தனிமையாக இருக்குமாறு கூறுகின்றோம். இதனை கடைப்பிடிக்கின்றனரா இல்லையா என நாம் வீட்டிற்கு வீடு கண்காணிப்பாளரை நியமிக்க முடியாது தானே? ஆகவே மக்கள் இதன் ஆபத்தை உணர்ந்து செயற்பட வேண்டும். தனிமைப்படுத்தல் தொடர்பாக ஒரு வீட்டில் பதாகை ஒட்டினால், தம்மையும் பாதுகாத்துக்கொண்டு அவர்களுக்கும் உதவ வேண்டும். தனிமைப்படுத்தல் மற்றும் கைகளைக் கழுவி எம்மை சுத்தமாக வைத்துக்கொள்வதே இப்போது காணப்படும் ஒரே வழி” என்றார்.
   தனிமைப்படுத்தலே தற்போது இத்தொற்றை கட்டுப்படுத்த ஒரே வழி எனக் காணப்படும் போது, தனிமைப்படுத்தலில் உள்ளவர்களின் நிலை குறித்து அதிக கவனம் செலுத்துவது அவசியம். தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் தப்பிச்செல்லாமல் இருக்கவும் தொற்றாளர்கள் தம்மைப் பயமின்றி வெளிக்காட்டிக்கொள்ளவும் இவ்விடயங்கள் உதவும்.
   கொரோனா தொற்றிற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், தனிமைப்படுத்தலை உலக நாடுகள் கடைப்பிடிப்பதோடு எங்கும் முடக்கல் நிலைகள் தொடர்கின்றன.
   சமூகத்திற்குள் ஊடுருவி பெருமளவானோர் பாதிக்கப்பட்டால், குறிப்பாக இலங்கை போன்ற ஒரு சிறிய நாடு அதனை எதிர்கொள்ள முடியாது போகும்.
    
   https://thinakkural.lk/article/86861
  • By கிருபன்
   மட்டக்களப்பில் கொரோனாவை ஒழிப்பேன் : பிள்ளையான்
   November 10, 2020 (கனகராசா சரவணன்)
   மட்டக்களப்பில் கொரோனாவை ஒழிப்போம் என முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று செவ்வாய்க்கிழமை (10) தெரிவித்தார். அதேவேளை காத்திகை 27ஆம் திகதி மாவீரர் தினத்தையும் அவர் நினைவுபடுத்தினார்.

    
   மட்டக்களப்பு மேல் நீதிமன்ற வழக்கிற்கு வருகைதந்த பிள்ளையானை வழக்கு முடிவடைந்த பின்னர் சிறைச்சாலை பஸ் வண்டியில் ஏற்றிச் செல்லும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்திரகாந்தன் மீதான வழக்கு மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பான இரு வழக்கு விசாரணைகள் இன்று மட்டக்களப்பு குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
   இந்த வழக்குகள் நீதிமன்றில் முடிந்த பிற்பாடு சிறைச்சாலை பஸ் வண்டியில் ஏறும் போது பிள்ளையான் ஊடகங்களுக்கு மட்டக்களப்பில் கொரோனாவை ஒழிப்பேன் எனக் கூறியதுடன் கார்த்திகை 27 மாவீரர் தினத்தையும் நினைவுபடுத்தினார்.
    
    
   https://thinakkural.lk/article/87984
  • By கிருபன்
   மக்கள் ஒத்துளைப்பின்றி மட்டக்களப்பில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாது- அரசாங்க அதிபர் கருணாகரன் தெரிவிப்பு
    
   BATTINEWS MAINNovember 6, 2020   அரச தரப்பினால் எவ்வளவுதான் கட்டுப்பாடுகளை விதித்தாலும் மக்கள் ஒத்துளைப்பின்றி கொரோனா வைரஸ் பரவலை மட்டக்களப்பில் கட்டுப்படுத்த முடியாது என மாவட் செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே.கருணாகரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் 4வது விசேட கூட்டம் இன்று(06) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
   மேலும் அவர் கருத்து வெளியிடுகையில்,

   கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான காரியமாகும். அரச தரப்பினால் எவ்வளவுதான் கட்டுப்பாடுகளை விதித்தாலும் மக்கள் ஒத்துளைப்பின்றி கொரோனா வைரஸ் பரவலை மட்டக்களப்பில் கட்டுப்படுத்த முடியாது. எனவே பொதுமக்கள் இதற்கு பூரண ஒத்துளைப்பினை வழங்கி வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 14 நாட்கள் தனிமையில் இருந்துகொள்ளுமாறு பொது மக்களை வேண்டுகோள் விடுத்தார்.

   மேலும் மாவட்டத்திலுள்ள 345 கிராம சேவகர் பிரிவுகளிலும் அமைக்கப்பட்டுள்ள ஐவர் கொண்ட கண்காணிப்புக் குழுக்களுக்கான விழிப்பூட்டல் பயிற்சிகள் ஒரு வாரத்திற்குள் வழங்கப்பட்டு அக்குழு மூலமாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்டத்தின் எல்லைகளில் அமைக்கப்பட்டு உள்வரும் வாகனங்கள் மற்றும் நபர்களின் விபரங்களை சேகரிக்கும் சோதனைச் சாவடிகளில் பொலிசாருக்கு மேலதிகமாக சுகாதாரப் பிரிவிலிருந்து ஒருவரும் மாவட்ட நிருவாகத்துறை சார்பாக ஒருவரும் இணைக்கப்பட்டு தகவல்கள் சேகரிக்கும் நடவடிக்கை வலுப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அரசாங்க அதிபர் கருணாகரன் தெரிவித்தார்.

   இதுதவிர தேசிய அளவில் எடுக்கப்படும் தீர்மானங்கள் மாவட்டத்தில் மிக இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படும் என்பதுடன், இம்மாவட்டத்தில் தனிமைப்டுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோறளைப்பற்று, கோறளைப்பற்று மத்தி, கோரளைப்பற்று மேற்கு மற்றும் கோறளைப்பற்று தெற்கு ஆகிய 4 பிரதேச செயலகப் பிரிவுகளில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 25 ஆயிரத்தி 296 குடும்பங்களுக்கு தாலா 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது. 

   மேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் இரண்டு கட்டங்களாக வழங்கப்பட்டு வருகின்றன என அரசாங்க அதிபர் கருணாகரன் தெரிவித்தார்.

   இவ்விசேட கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் ஏ. லதாகரன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி.கலாரஞ்சினி கனேசலிங்கம், மாவட்ட பிரதிபொலிஸ்மா அதிபர் லக்சிறி விஜயசேன, இராணுவ 231 ஆம் படைப்பரிவு அதிகாரி கேணல் எஸ்.பீ.ஜீ. கமகே, மாவட்ட செயலகம், இராணுவ மற்றும் சுகாதார திணைக்கள உயர் அதிகாரிகள், உள்;ராட்சி உதவி ஆணையாளர், பிரதேச செயலாளர்கள், அரச மற்றும் தனியார் போக்குவரத்து துறை அதிகாரிகள் உட்பட பல திணைக்கள உயர் அதிகாரிகளும் பிரசன்னமாகியிருந்தனர்.
    
    
    

       http://www.battinews.com/2020/11/blog-post_55.html
 • Topics

 • Posts

  • தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளுக்கு ரெட் அலர்ட் ; மக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் எச்சரிக்கை   சென்னை வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் இன்று பிற்பகலில் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்றி நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்றும், புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து வரும் 2 தினங்களுக்குப் பரவலாக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று மதியத்துக்கு மேல் புயல் கரையைக் கடக்கும் என்பதால் இன்று பொது விடுமுறை என முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதையடுத்து, சென்னை, வேலூர், கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னையில் கடற்கரையை ஒட்டிய காமராஜர் சாலை மூடப்பட்டது; எண்ணூர் விரைவு நெடுஞ்சாலையும் புயல் காரணமாக மூடப்பட்டது. கனமழை காரணமாக சென்னை - பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரியம் பகுதியில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதி!  மக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. பொதுமக்கள், வீட்டு மாடியில் உள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளது. புயல், கனமழையால் ஜிஎஸ்டி , ஓஎம்ஆர் ,ஈசிஆர் சாலைகளில் போக்குவரத்தை தவிர்க்க காவல்துறை அறிவுறுத்தி உள்ளனர்.   https://www.dailythanthi.com/News/TopNews/2020/11/25154441/Red-Alert-for-coastal-areas-of-Tamil-Nadu-and-Pondicherry.vpf  
  • இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!    48 Views இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை  தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையில் இது வரையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 20ஆயிரத்து 967ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் மருத்துவப் பல்கலைக்கழகமான ஜான்ஸ் ஹாப்கின்ஸ கூறும்போது, “கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவிய கொரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் 5,91,24,016 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,95,519 பேர் கொரோனாவுக்குப் பலியாகி உள்ளனர் என்று தெரிவித்துள்ளது.   https://www.ilakku.org/இலங்கையில்-அதிகரிக்கும-2/
  • தமிழர்களின் உரிமைகள் குறித்து பேச தமிழ் தலைவர்களுக்கு உரிமை இல்லை – சரத் வீரசேகர    46 Views தமிழர்களின் உரிமைகள், தமிழர்களின் தேவைகள் குறித்து வாய் திறக்க இங்குள்ள தமிழ் தலைவர்கள் எவருக்கும் உரிமை இல்லை என இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், “நாட்டில் பயங்கரவாதம் ஒன்று தலைதூக்கினால் தமிழ் மக்கள் மத்தியில் விரோதத்தை ஊக்குவிக்கும் இவர்கள் அனைவருமே பொறுப்புக்கூற வேண்டும். புலம்பெயர் அமைப்புகளிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ள நாடகமாடும் இவர்களுக்கு எந்த மரியாதையும் கொடுக்க முடியாது. இதேவேளை, சட்டத்தை மதிக்கும், சட்டதிற்கு கட்டுப்படும் சமூகமொன்றை உருவாக்க வேண்டும் என்பதே தமது அரசாங்கத்தின் நோக்கம்.    அடிப்படைவாதிகள், பயங்கரவாதிகள் உருவாவதற்கும் இடமளிக்க மாட்டோம்” என்றார்.   https://www.ilakku.org/தமிழ்-எம்-பி-க்களை-வெளியே/
  • அதி தீவிர புயலாக வலுப்பெறும் ‘நிவர் புயல்’ எதிர் கொள்ளத் தயாராகும் தமிழகம்  53 Views நிவர் புயல்  இன்று பிற்பகலுக்குள் அதி தீவிர புயலாக வலுப்பெறக்கூடும்  என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காரைக்காலுக்கும் மகாபலிபுரத்திற்கும் இடையில், புதுச்சேரிக்கு அருகில் இன்று இரவு கரையைக் கடக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 120 – 130 கி.மீ. வேகத்திலும் சில சமயங்களில் 145 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் அதி கன மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு ‘நிவர்’ என ஈரான் பெயரிட்டுள்ளது. இந்த ஆண்டு மேற்கு வங்கத்தையும் வங்க தேசத்தையும் கடுமையாக பாதித்த புயலுக்கு உம்பான் என தாய்லாந்து பெயரிடப்பட்டது. நிவர் புயல் கரையைக் கடப்பதால்,  தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திர பிரதேசம் ஆகியவற்றில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.   https://www.ilakku.org/அதி-தீவிர-புயலாக-வலுப்பெ/
  • நினைவுகூருவது தமிழர் மரபில் ஒன்றாக இருக்கிறது -எஸ்.ஏ. யோதிலிங்கம்.     42 Views இறந்தவர்களை நினைவுகூருவது என்பது ஒரு கலாசார உரிமை. அதாவது தமிழர் கலாசாரத்தில் தனியாகவும், கூட்டாகவும்  இணைந்து இறந்தவர்களை நினைவு கூருகிறோம் என அரசியல் ஆய்வாளர் எஸ்.ஏ. யோதிலிங்கம்  தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “வருடா வருடம் இந்த நடைமுறை இருந்து வருகிறது. அத்துடன் நடுகல் வழிபாடும் இருந்து வருகிறது. இவை தமிழர் மரபில் ஒன்றாக இருக்கிறது.  இவை தொடர்சியாக தமிழ் மக்களால்  பின்பற்றப்பட்டு வரும் ஒரு விடயம். இந்தக் கலாசார உரிமையை மறுப்பது என்பது இன அழிப்புக்குச் சமனானது. ஒரு இனத்தின் இருப்புக்கு நிலம், மொழி, பொருளாதாரம், கலாசாரம் இந்த நான்கும் முக்கியமானது. இதில் ஒரு விடயம் அழிக்கப்பட்டாலும் அது ஒரு வகையான இன அழிப்புத்தான். நினைவுகூருவது சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விடயம். அது மறுக்கப்படுவது அடிப்படை உரிமை மீறும் செயல் ஆகும். மேலும் ஆற்றுப்படுத்தல் உரிமை மறுக்கப்படுகிறது. அதாவது  உள ரீதியாக ஆற்றுப்படுத்தும் உரிமை மறுக்கப்பட்டு உரிமை மீறப்படுகிறது. அரசு நல்லிணக்கத்தைக் காட்டுவதென்றால், பொதுப்பிரச்சனைகளை தீர்த்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை அரசு நல்லிணக்கத்துக்குத் தயாராக இல்லை என்பதே உண்மை. நினைவேந்தல் தடை  விவகாரம் சட்டப் பிரச்சனை இல்லை. இதை அரசியல் செயற்பாடுகள் ஊடாகத்தான் தீர்க்க முடியும்.  சட்ட அணுகுமுறை தீர்வைத் தரப்போவதில்லை. அத்துடன் இதை நாம் தனியாக அணுக முடியாது. குறிப்பாக உலக முற்போக்கு ஜனநாயக சக்திகள், உலகத் தமிழர்களை இணைத்துத் தான் அணுக வேண்டும். அதற்கு முதற்கட்டமாக தாயகத்தில் உள்ள தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இந்த விடயத்தை அரசியல் கட்சிகள் தனித்தனியாக கையாள நினைத்தது துரதிஸ்டவசமானது. ஒருங்கிணைந்த அரசியல் செயற்பாட்டின் ஊடாகத் தான் இதை வெற்றிகொள்ள முடியும். தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் விடயத்தில் கட்சிகள் ஒன்றிணைந்தமை வலுவான செய்தியை உலகுக்குக் கொடுத்தது. அரசு சட்ட செயற்பாடுகளுக்கு பயப்படாது,  அரசியல் செயற்பாடுகளுக்கே பயந்துள்ளார்கள். எனவே  உலகளாவிய அரசியல் செயற்பாட்டின் ஊடாகத் தான் இதை எதிர்கொள்ள வேண்டும். எனவே தமிழ்  மக்களின் பொது விவகாரங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒருங்கிணைந்து செயற்பட்டால் மாத்திரமே இந்த விடயங்களில் முன்னேற்றம் காண முடியும்” என்றார்.   https://www.ilakku.org/நினைவுகூருவது-தமிழர்-மரப/
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.