Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

உயிர்கொல்லும் கொரோனா வைரஸும் இணையத்தில் உலாவும் புரட்டுக்கொள்ளிகளும்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

உயிர்கொல்லும் கொரோனா வைரஸும் இணையத்தில் உலாவும் புரட்டுக்கொள்ளிகளும்

கொரொனோ வைரஸ் (வாய்க்குள் நுழையாத விஞ்ஞானப் பெயர் 2019-nCoV) கடந்த டிசம்பர் மாதம் மத்திய சீன ஹுபே மாகாணத்தின் வூஹான் நகரில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸின் மூலம் எதுவென்று சரியாக உறுதிப்ப்படுத்தப்படவில்லை. ஆனால் வூஹான் நகரில் உள்ள உள்ளூர் கடலுணவு/இறைச்சி சந்தைகளில் விற்கப்பட்ட (கொரோனா வைரஸினால்) பாதிக்கப்பட்ட விலங்குகளில் இருந்தே பரவியிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

கொரோனா வைரஸ் இப்போதும் வேகமாகப் பரவிவருகின்றது. இன்றைய நாள்வரை 636 பேருக்குமேல் மரணித்தும், 36,000 பேருக்கு மேல் தொற்றுக்கும் உள்ளாகியிருக்கின்றார்கள். எனினும் அதன் தொற்றுவீதம் எப்படி இருக்கும், எப்படிக் கட்டுப்படுத்தலாம் என்பதற்கான விடைகள் கொரோனா வைரஸ் உருவான சீனாவிடமோ உலக சுகாதார சபை (WHO) யினடமோ இதுவரை இல்லை. 

சீனாவில் பிறந்து 30 மணிநேரமே ஆன குழந்தைக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொற்று இருந்த தாயிடம் இருந்து கருப்பைக்குள் இருக்கும்போதே பரவியதா அல்லது குழந்தை பிறந்த பின்னர் பரவியதா என்பதும் தெரியவில்லை. இவையெல்லாம் எவரையுமே பீதியூட்டக்கூடிய செய்திகள். மனித குலத்திற்கே சவாலான சோதனையான காலகட்டம்!

இப்படியான நெருக்கடி மிகுந்த வேளைகளை ஒரு சிலர் தமது சுயவிளம்பரங்களுக்கும், தமது பண்பாட்டு, இன, மத மொழி அடையாளங்களை பெருமைப்படுத்துகின்றோம் என்று நினைத்து சிறுமைப்படுத்துவதற்கும், அதற்கும் மேலால் பீதிக்குள்ளான மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கவும் பயன்படுத்துகின்றனர். 

எதையும் எப்படியும் எழுதவும், பரப்பவும் வசதியுள்ள பரபரப்பு மிகுந்த சமூகவலை ஊடகங்கள் சுண்டுவிரலில் இருப்பது இப்படியான புரட்டுக்களை கொரோனா வைரஸ் பரவும் வேகத்தைவிட அதிவேகமாக பரப்ப உதவுகின்றது. எதையும் வாசித்தபின் அல்லது காணொளிகளைப் பார்த்தபின் பொறுமையாக அதன் உண்மைத்தன்மை அறிந்தபின் forward செய்யாமல் ‘என்கடன் பகிர்ந்து மகிழ்வதே’ என்று உடனடியாகவே மற்றவர்களுக்கு அனுப்பும் மந்தைக்கூட்டங்கள் இருக்கும்வரை புரளிகள் வைரலாவதையும் தடுக்கமுடியாது!

கொரோனோ வைரஸ் பற்றிய புரளிகள் சில:

* இணையத்தில் உலவும் சதிக்கோட்பாளர்கள் கொரோனா வைரஸ் வூஹானில் இரகசியாமாக (!) உள்ள உயிரியல் ஆயுதம் தயாரிக்கும் ஆய்வுகூடத்தில் இருந்து வெளியே பரவியதாகச் சொல்வது. இதனை அமெரிக்க வெளியுறவுத் துறை மறுதலித்து மலினச் செய்திகளை பரப்பவேண்டாம் என்று கேட்டுள்ளது.

* இலண்டன் Mitcham பகுதியில் சீன உணவகத்தில் வாத்துவறையும் குழைசோறும் சாப்பிட்ட தமிழர் ஒருவர் மரணம் பெயர், ஊர், வயதெல்லாம் சொல்லி வாட்ஸப்பில் உலவவிட்டது. அது உண்மையா என்று அங்கலாய்த்தவர்களும் இறந்தவரின் பிள்ளைகளுக்காக வருந்தியோரும் பலர்!

* கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க உடலில் சாணத்தைப் பூசி கோமியத்தைக் குடிக்கவேண்டும் என்று இந்தியாவில் இந்து மகாசபை தலைவர் கருத்துச் சொன்னது.

* இலங்கையில் பிக்கு ஒருவர் 2600 வருடங்களுக்கு முன்னரே புத்தபகவான் கொரோனா வைரஸ் பற்றித் தெரிந்தமையால் பாம்பு, குதிரை, வௌவால், பன்றி உள்ளிட்ட மாமிசங்களை புத்த பெருமான் தடை செய்துள்ளார் என்று உளறியது.

* அகத்தியர் ஓலைச்சுவடிகளில்/சங்கப்பாடல்களில் அப்பவே கொரோனா வைரஸின் வருகையைப் பற்றி குறிக்கப்பட்டது என்று எவரோ நையாண்டியாக எழுத அதை தலையில் தூக்கிக்கொண்டாடி அப்பவே தமிழர்கள் முக்காலமும் தெரிந்தவர்கள் என்று பிதற்றும் பித்துக்குளிகள்

* கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் ஆயுர்வேத சூரணங்கள், குளிகைகள் விற்பனைக்கு உள்ளன என்று இலங்கையில் போலி விளம்பரங்கள் செய்யப்படுவது

* இன்னும் பல....

இந்தப் புரளிகளினால் பீதியடைந்து பலநாடுகளில் சீனர்களைப் பார்த்தாலே மற்றவர்கள் ஓடுகின்றார்கள். பிரித்தானியாவில்கூட சீனர்களின் China Town பகுதி உணவகங்களிக்கும், வியாபார நிலையங்களுக்கும் மக்கள் செல்வது குறைவடைகின்றது. 
பாடசாலைகளில் சீன மாணவர்களுடன் சேராமல் இருக்குமாறு பிற இனத்தினர் தமது பிள்ளைகளுக்கு சொல்வதாகவும் தகவல் உள்ளது. 

உலகமே குழப்பத்தில் இருக்கின்றபோது, அதனை இன்னமும் சிக்கலாக்க  இணையமும் சமூகவலைத் தளங்களும் புரளிக்கொள்ளிகளால் நிறைந்துள்ளது. 

கொரோனா வைரஸ் தாக்காது என்று தட்டிக் கழிக்கலாமா?
இல்லை. எப்போதும் முன்னெச்சரிக்கையுடனும் நிதானமுடனும் இருக்கவேண்டும்.

* அரசாங்கங்கள் கூறும் விடயங்களை செவிமடுக்கவேண்டும்.

* பொறுப்புணர்வு உள்ள பத்திரிகைகள், BBC போன்ற உலக ஒலி/ஒளிபரப்புக் கூட்டுத்தாபனங்களின் செய்திகள், தகவல்களை மாத்திரம் நம்பவேண்டும்.

* இணையத்தில் உலவும் செய்திகளுக்கு source என்னவென்று சரிபார்க்கவேண்டும்.

* நம்பகத்தன்மை இல்லாத தகவல்களை கண்டுகொள்ளாமல் விடவேண்டும். அவற்றைக் கூடியவரை forward பண்ணாமல் இருக்கவேண்டும்!

கொரோனா வைரஸ் என்பது சாதாரண தடிமன் வைரஸ் போன்றதுதான். அதனால் தடிமன், காய்ச்சல் போன்ற சாதாரண குணங்குறிகள் கொரோனா வைரஸால் தொற்றுக்கு உள்ளாகியவர்களுக்கு இருக்கலாம். சிலவேளை தொற்றியிருந்தாலும் குணங்குறிகள் ஏதும் இல்லாமலும் இருக்கலாம். 

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள், நுரையீரல், சிறுநீரக நோய் உள்ளவர்கள் மரணித்துள்ளனர். 
திடகாத்திரமானவர்கள் தொற்றுக்கு ஆளாகினாலும் மரணிப்பார்கள் என்றில்லை. தொற்றுக்கு ஆளாகியவர்களினதும் இறந்தவர்களினதும் விகித்தைப் பார்த்தாலே இது விளங்கும்.

கொரோனா வைரஸ் தொற்று இன்னமும் epidemic (குறிப்பிட்ட பிரதேசத்தில் மாத்திரம் பரவுதல்) ஆகவே உலக சுகாதார சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது. தொற்றுக்கு உள்ளானவர்களில் 99 வீதத்திற்கு மேல் சீனாவில் என்பதால் epidemic ஆக உள்ளது. சீனாவுக்கு வெளியே அதிக நாடுகளில் பெருமளவு பேருக்கு தொற்று ஏற்படும்போது pandemic (பிரதேச வேறுபாடுகள் இன்றி பல நாடுகளுக்கும் பரவுதல்) ஆக அறிவிக்கப்படலாம். 

தொற்றும் வீதத்தைக் கட்டுப்படுத்தவே பயணக கட்டுப்பாடுகளை வூஹான் நகரம் அமைந்துள்ள ஹூபே மாகாணத்திலும், அதனை அண்டிய பகுதிகளிலும் சீனா அமுல்படுத்தியுள்ளது. 
ஒரு குடும்பதைச் சேர்ந்த ஒருவர் மட்டும்தான் இரண்டு நாட்களுக்கு ஒருதடவை அத்தியாவசியமான பொருட்களை வாங்க வீட்டை விட்டு வெளியே வரலாம் என்று மிகவும் இறுக்கமான கட்டுப்பாடுகளை விதித்தும், வெளிநாடுகளுக்கான விமானப்பயணங்களை நிறுத்தியும் மக்களின் நகர்வுகளைக் கட்டுப்படுத்தியுள்ளது. எனினும் தொற்றுவீதம் கட்டுக்குள் இன்னமும் வரவில்லை. 

வைரஸுக்கு மருந்து இல்லை என்பதும் vaccine (தடுப்பூசி) மூலம் மாத்திரமே புதிதாகப் பரவுவதை தடுக்கலாம் என்பதும் அடிப்படை மருத்துவ அறிவு உள்ளவர்களுக்கு தெரிந்த விடயம். கொரோனா வைரஸின் genetic sequence ஐ சீனா வெளியிட்ட இரு வாரங்களுக்குள்ளேயே இலண்டன் இம்பீரியல் கல்லூரியின் மருத்துவத் துறையினர் vaccine candidate ஒன்றைத் தயாரித்துள்ளதாக அறிவித்துள்ளனர். இதுபோலவே Oxford பல்கலைக்கழகத்திலும், அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும், அவுஸ்திரேலியாவிலும் vaccines ஐ துரிதமாகக் கண்டுபிடிக்க ஓட்டம் நடக்கின்றது. இவை அடுத்தடுத்த கட்டங்களை தாண்டி humans trials க்கு வர பல மாதங்கள் எடுக்கலாம். 

தற்போது தாய்லாந்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு HIV எயிட்ஸையும் fluஐயும் கட்டுப்படுத்தும் மருந்துகளை high doses இல் கொடுத்தபோது பத்துக்கு மேற்பட்டோர் கொரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து மீண்டுள்ளனர் என்பதும் நம்பிக்கைதரும் செய்தி.

இந்த நம்பிக்கைக்கீற்றுகள் இருப்பதனால் எத்தனையோ சவால்களைச் சந்தித்த மனிதகுலம் கொரோனா வைரஸின் பாதிப்பில் இருந்தும் விரைவில் மீண்டுவரும் என்று உறுதியாக நம்பலாம்!

அதுவரை மிகவும் எளிமையான விடயங்களையே நாம் கடைப்பிடித்தாலே போதுமானது.

* தும்மும்போதும் இருமும்போதும் வாயை கூடியவரை மூடியிருத்தல் அல்லது முழங்கையால்/ paper tissues ஆல் மூக்கையும், வாயையும் மூடுதல்.

* Paper tissues ஐ குப்பைத்தொட்டிக்குள் உடனடியாகவே போட்டு மூடுதல்.

* கைகளையும், முகத்தையும் அடிக்கடி கழுவுதல். முடிந்தால் தொற்றுநீக்கி சவர்க்காரம் பாவித்தல்.

* தடிமன், இருமல் உள்ளவர்களிடம் இருந்து குறைந்தது ஒரு மீற்றராவது இடைவெளி வைத்திருத்தல்.

 

 

 

 • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

  • By ampanai
   அறிவியல் சாதனையினால் வெல்ல முடியாத சவால்!
   இதுவரை காலமும் உலகமயத்தின் அருமை பெருமைகளைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்த உலகம், இப்போதுதான் அதன் மறுபக்கத்தைச் சந்திக்கத் தொடங்கியிருக்கிறது. உலகில் ஏதாவது ஒரு மூலையில் உள்ள நாட்டில் தடிமன் ஏற்பட்டால், உலகமே தும்மத் தொடங்கும் அவலத்தை எதிர்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. சீனாவின் வூஹான் நகரில் உருவான நோய்த் தொற்று இப்போது ஒட்டுமொத்த உலகத்தையும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
   கொரோனா நோய்த்தொற்றால் பொருளாதாரம் எதிர்கொள்ள இருக்கும் பாதிப்பை எதிர்கொள்வதற்காகத் தனது வட்டி வீதத்தை அமெரிக்காவின் பெடரல் வங்கி குறைத்திருக்கிறது. ஏற்கனவே 0.5% வட்டி வீதக் குறைப்பை அவுஸ்திரேலியா அறிவித்து விட்டது. ஜி-7 என்று அழைக்கப்படும் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா அடங்கிய ஏழு நாடுகளும் அந்த அமைப்பின் அவசரக் கூட்டத்தைக் கூட்டி, கொரோனா பாதிப்பு குறித்து விவாதித்திருக்கின்றன.
   கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாட்டுக்கு வராவிட்டால், எதிர்வரும் ஜூலை 24-ஆம் திகதி தொடங்க இருக்கும் ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்படலாம் என்று ஜப்பானிய விளையாட்டுத் துறை அமைச்சர் ஷிக்கோ ஹாஷிமோட்டோ அறிவித்திருக்கிறார். சீனாவுக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய பாதிப்புகளை எதிர்கொள்ளும் நாடுகளாக இத்தாலியும், ஈரானும் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. ஈரானில் இதுவரை 66 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 1,501 பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெறுகிறார்கள்.
     உலகம் இதுவரையில் கண்டிராத அளவிலான நோய்த்தொற்று என்று கொரோனாவை உலக சுகாதார நிறுவனம் அடையாளம் கண்டிருக்கிறது; உலகம் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. கடந்த புதன்கிழமை முதல் ‘ட்விட்டர்’ நிறுவனம் தனது ஊழியர்களை வீட்டிலிருந்தவாறு பணியாற்ற உத்தரவிட்டிருக்கிறது. தடிமனால் பாதிக்கப்பட்டிருக்கும் போப்பாண்டவர் கொரோனா நோய்த்தொற்றுக்காகப் பரிசோதனை மேற்கொண்டதாக இத்தாலியப் பத்திரிகைகளில் செய்தி வெளிவந்திருக்கிறது. கொரோனா நோய்த் தொற்றுக்கு 77 நாடுகளைச் சேர்ந்த 94,166 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்; 3,218 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்பது இப்போதைய புள்ளிவிவரம். நாளும் பொழுதும் இதன் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது என்பதை நாம் மறந்து விடக் கூடாது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு உலகை அச்சுறுத்திய ஸ்பானிஷ் காய்ச்சலில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அப்போது உலகம் உலகமயமாகவில்லை. இப்போது அப்படியில்லை.
   ஒன்றை மட்டும் நாம் மறந்து விடலாகாது. மனித இனம் தனது விஞ்ஞான, நாகரிக வளர்ச்சியினால் இறுமாப்பு மிகுந்த மாயையில் சிக்கிக் கிடக்கிறது. ஆனாலும் மனித இனத்தினால் கொரோனா அச்சுறுத்தலை வெற்றி கொள்ள முடியாதிருக்கிறது. உயிரழிவுகளையும் தடுத்து நிறுத்த முடியவில்லை. நம்மால் வெல்ல முடியாத விடயங்களும் உள்ளன என்பதை உணர வேண்டிய தருணம் இது.
    
   http://www.thinakaran.lk/2020/03/06/கட்டுரைகள்/49203/மனித-இனத்தின்-மாயை-அகல்கிறது
  • By கிருபன்
   கொரோனா வைரஸ்: உயிரியல் யுத்தமா?
   ஒரு நோய்த்தொற்று, உலகையே திகிலிலும் திக்குமுக்காட்டத்திலும் விட்டிருக்கிறது. அதன் பெயரைக் கேட்டாலே, எல்லோரும் பதறுகிறார்கள். சீனர்களைக் கண்டால், தலைதெறிக்க ஓடுகிறார்கள். பரவுமா, பரவாதா என்ற வினாவுக்கு, பதிலளிக்க இயலாமல், அரசாங்கங்கள் திணறுகின்றன. உலகத்தின் பொருளாதாரமே ஸ்தம்பித்து நிற்கிறது.   
   கொரோனா வைரஸ் (உலக சுகாதார நிறுவனம் சூட்டிய பொதுப்பெயர் Covid-19 ஆகும்) குறித்து, வெளிவரும் செய்திகளில் உண்மை பாதியாகவும் பொய் மீதியாகவும் இருக்கின்றன. 
   இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, சீனா மீதான குரோதம், புதிய வழிகளில் வெளிப்படுகிறது. அறிவியல் ரீதியாக, தன்னை உயர்ந்த இடத்தில் வைத்திருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் மனிதகுலம், விக்கித்து நிற்கிறது.   
   கொரோனா வைரஸ், இன்று உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பு மிகப் பெரிது. அதேவேளை, இதை மய்யப்படுத்தி ஊடகங்களின் வழி பரப்பப்படும் செய்திகளும் சமூக வலையமைப்புகள் வழி பரிமாறப்படும் தகவல்களும், பெரும்பாலும் பொய்யாகவே இருக்கின்றன.   
   இவை ஒருவகையான பீதி கலந்த மனநிலையை, சமூகத்தில் உருவாக்கியுள்ளன. “அஞ்சத் தேவையில்லை” என்று, அச்சமூட்டப்படுவது போல, உலக சுகாதார நிறுவனம், பலமுறை திரும்பச் திரும்பச் சொல்லிவிட்டது. ஆனால் யாரும் கேட்டபாடில்லை.   
   இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் போது, இந்த வைரஸ் தாக்கத்தால் சீனாவில் 1,868 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். சீனாவுக்கு வெளியே ஐந்து பேர் உயிரிழந்திருக்கிறார்கள். சீனாவில் மொத்தமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72,436.   
   இந்த நோய் பரவத் தொடங்கியது முதல், நாளொன்றுக்கு 2,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வந்தனர். நேற்றுமுன்தினம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, முதன்முறையாக 2,000யை விடக்குறைந்து, 1,886 ஆக இருந்தது. இது கொஞ்சம் ஆறுதலான விடயம்.   
   இவ்வாறாக, வைரஸ் எனப்படும் நுண்ணியிரிகள் மனிதர்களைத் தாக்கி, பாரிய சேதங்களை உருவாக்கியது, மனிதகுல வரலாற்றில்  தொடர்ச்சியாக நடைபெற்று வரும் ஒன்றே!   
   ஆனால், அண்மைக் காலங்களில் இது அதிகரித்துள்ளது. பொதுவாக, இந்த வைரஸ்கள், குறிப்பிட்ட சில விலங்குகளிடம் இருந்து, தனது பாதையை மாற்றிக்கொண்டு, வீரியம் மிக்கதாக மனிதனைத் தாக்கும். குறிப்பாக, முதலாம் உலகப் போரின் போது, ஐரோப்பாவை ‘இன்ப்ளூயன்சா வைரஸ்’ தாக்கி, பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காவு வாங்கியது.   
   பொதுவான கருத்து யாதெனில், இவ்வகையான வைரஸ்கள் ஒவ்வொரு நான்கு தசாப்தங்களுக்கு ஒருமுறை, தம்மைத் தகவமைத்துக் கொண்டு வந்து, தாக்கும் என்பதாகும்.   
   ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. கடந்த இரண்டு தசாப்தங்களில், இவ்வாறாக எட்டு வைரஸ்கள் மனிதகுலத்தைத் தாக்கியுள்ளன. இவை புதிய கேள்விகளை எழுப்பியுள்ளன.   
   இந்தக் கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டதா?  
   ஒருபுறம், இந்த வைரஸின் தாக்குதல்களில் இருந்து, தற்காத்துக் கொள்வதற்கான முயற்சிகளில் உலக நாடுகள் இறங்கியுள்ளன. அதேவேளை, இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளில் அறிவுலகம் ஈடுபட்டுள்ளது.   
   மறுபுறம், இது இயற்கையாகவே உருவானதா, திட்டமிட்டு உருவாக்கப்பட்டதா என்ற வாதங்களும் நடந்தவண்ணம் உள்ளன. இந்த வைரஸ்களின் பரவும் தன்மை குறித்துக் கருத்துரைக்கும் நிபுணர்கள், சில முக்கியமான அவதானங்களை முன்வைக்கிறார்கள்.   
   1. 2000ஆம் ஆண்டுவரை, எந்தவொரு கொடிய வைரஸும் மனிதனில் இருந்து மனிதனுக்குப் பரவவில்லை. மனிதர்கள் ஒருவரோடொருவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார்கள். இதுவரையான வைரஸ்கள், விலங்குகளில் இருந்து மனிதர்களுக்குத் தொற்றுபவையாகவே இருந்திருக்கின்றன. இப்போதைய வைரஸ்கள், மனிதனில் இருந்து மனிதனுக்குப் பரவுகின்றன.   

   2. இது, ஓர் இயற்கையான விளைவு என்பதை, நம்புவதற்கான எந்தக் காரணிகளும் இல்லை. இது, மனிதனால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும்.  
   ஏனெனில், இதன் தாக்கத்தையோ அதற்கான தீர்வையோ கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறது. விலங்குகளில் இருந்து பரவும் வைரஸ்களுக்கு, இப்படி நடப்பதில்லை. அதன் மூலங்களும் மருந்துகளும் உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டுவிடும்.   
   3. கடந்த காலங்களில், உயிரியல் ஆய்வுகூடங்களில் இருந்துதான், இவ்வாறான வைரஸ்கள் திட்டமிட்டு வெளிவிடப்படுகின்றன என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.  
   குறிப்பாக அமெரிக்கா, தனக்கு வெகுதொலைவில் இவ்வகையான ஆய்வு கூடங்களை வைத்துள்ளது. முக்கியமாக, இவை கிழக்கு ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் உள்ளன.   
   இவ்வாறான 400 ஆய்வுகூடங்களை, அமெரிக்கா வைத்துள்ளது. இதற்கு முந்தைய, பல வைரஸ்களின் தோற்றுவாயாக, இவையே திகழ்ந்துள்ளன. ஆனால், இவை தொடர்பான செய்திகள் எதுவும், பொதுவெளியில் பகிரப்படவில்லை.   
   இது ஒருபுறமிருக்க, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வல்லரசுப் போட்டியின் ஒருபகுதி இதுவென, சில பூகோள மூலோபாய சிந்தனையாளர்களும் இராணுவ வல்லுநர்களும் கருதுகிறார்கள். அவர்களின் கருத்துகளின்படி,   
   1. இந்தக் கொரோனா வைரஸ் உருவான இடம், உருவான காலம் போன்றன, பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன. இது, உச்சபட்ச சேதத்தை உருவாக்கும் வகையில் திட்டமிட்டுச் செய்யப்பட்டுள்ளது.   
   இது, பரவத் தொடங்கிய காலம், சீனர்கள் புத்தாண்டை எதிர்நோக்கியிருந்த காலம் ஆகும். சீனர்கள், அவர்களது நாட்காட்டியின் படி, புத்தாண்டைக் கொண்டாடும் காலத்தில் இது உருவானது. இந்தப் புத்தாண்டு விடுமுறைக் காலத்தில் சீனர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழமை.   
   சீனாவின் மிகப்பெரிய உள்நாட்டு இடப்பெயர்வு, இக்காலத்தில் ஏற்படும். எனவே, இக்காலத்தில் இது நாடெங்கும் பரப்பப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.   
   இன்று, இந்த வைரஸின் மய்யமாக இருக்கும் வூகான் மாநிலம், சீனாவின் மிகப்பெரிய போக்குவரத்து மய்யம்; மிகப்பெரிய விமான நிலையத்தைக் கொண்டது; இங்கிருந்து உலகின் 60 நாடுகளுக்கும் விமானங்கள் செல்கின்றன.   
   2. அமெரிக்காவால் உருவாக்கப்பட்டுள்ள ‘புதிய அமெரிக்க நூற்றாண்டுக்கான திட்டத்தின்’ (Project for the New American Century) ஒரு பகுதியாக, உயிரியல் யுத்தம் முன்மொழியப்பட்டுள்ளது.   
   ‘அமெரிக்காவின் பாதுகாப்பை மீளக்கட்டுதல்’ என்ற உபதலைப்பின் கீழ், பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது: ‘உயர்தரமான வகையில் அமைந்த ‘குறிப்பிட்டு’த் தாக்கக்கூடிய உயிரியல் ஆயுதங்கள் அவசியமானவை மட்டுமன்றி, அரசியல் ரீதியாகப் பயனுள்ள கருவியுமாகும்’ என்பதாகக் காணப்படுகின்றது.   
   3. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், அமெரிக்க இராணுவத்தால் வெளியிடப்பட்ட நூலொன்று, சில முக்கியச் செய்திகளைச் சொல்கிறது. உயிரியல் யுத்தத்தில் மருத்துவ அம்சங்கள் (Medical aspects of biological warfare) என்ற அந்நூலில் Leonard Horowitz, Zygmunt Dembek ஆகிய இரு விஞ்ஞானிகளும், புதிய உயிரியல் ஆயுதங்கள் கொண்டிருக்க வேண்டிய இரண்டு அவசியமான பண்புகளை அடையாளப்படுத்துகிறார்கள்.   

   (1) புதிய, கண்டுபிடிக்க முடியாத, மூலத்தை அடையாளம் காணவியலாத, நோய்த்தொற்றியலை ஆராய முடியாததாக இருத்தல் வேண்டும்.  
    (2) குறித்த புவியியல் பிரதேசத்தை, இனக்குழுவைக் குறிவைத்துத் தாக்கக் கூடியதாக இருத்தல் வேண்டும்.   
   பொருளாதாரப் பாதிப்புகள்   
   உலகம் சுருங்கிவிட்டது என்றும் வர்த்தகமும் தொடர்பாடலும் இலகுவாகிவிட்டன என்றும் நாம் அடிக்கடி பேசிக் கொள்வதுண்டு. இதை உலகமயமாக்கலின் வரமாகப் பார்ப்பவர்களும் உண்டு. 
   ஆனால், கொரோனா வைரஸ், இதன் மறுபக்கத்தை, இப்போது வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது. இது, எவ்வாறு என்று நீங்கள் கேட்கக்கூடும். உதாரணங்கள் இதோ.   
   1. சுனாமியால் பாதிக்கப்பட்ட ஜப்பானின் புகுயாமா: அணுமின் நிலையத்தைச் சுத்தம் செய்யும் பணிகள், இப்போதும் நடைபெறுகின்றன. இதில் பணியாற்றும் பணியாளர்கள், கதிரியக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளச் சிறப்பு மேலங்கிகளைப் பயன்படுத்தி வருகிறார்கள். நாளொன்றுக்கு 6,000 மேலங்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை சீனாவில் இருந்து பிரத்தியேகமாகத் தருவிக்கப்படுபவை.  
    இப்போது சீனாவில் இருந்து, பொருள்கள் வருவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில், மேலங்கிகளுக்குப் பற்றாக்குறை நிலவுவதால், பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஆனால், கதிரியக்கத்தைக் குறைக்க, தொடந்து பணியாற்ற வேண்டிய இக்கட்டான சூழல் நிலவுகிறது.   
   2. இன்று உலகளாவிய ரீதியில், நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளுக்கான (antibiotics) தட்டுப்பாடு நிலவுகிறது. இதைப் பெருமளவில் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், சீனாவில் இருக்கின்றமையால் இத்தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது. இதே நிலைமையே, வேறு பல தொழிற்றுறைகளுக்கும் ஏற்பட்டுள்ளன.   
   3. இவ்வாண்டின் முதல் நான்கு மாதங்களில், அலைபேசிகளின் விற்பனை 50சதவீதத்தால் வீழ்ச்சியடையும் என எதிர்வு கூறப்படுகின்றது. சீனாவில் இருந்து ஏற்றுமதியாகும் அலைபேசிகளும் அதன் உதிரிப்பாகங்களும் 30 தொடக்கம் 50சதவீதத்தால் குறைவடைய உள்ளமையால் இது நிகழ்ந்துள்ளது.   
   4. கடந்த செவ்வாய்கிழமை (18) ஆசியாவின் பங்குச்சந்தைகள் அனைத்தும் சரிவைச் சந்தித்தன. இதைவிட, சீனாவிடம் பொருளாதார ரீதியாகத் தங்கியுள்ள அனைத்து நாடுகளும் நெருக்கடியை எதிர்நோக்குகின்றன.   
   இவற்றைவிட, சீனா மிகப்பெரிய பொருளாதார சவால்களை எதிர்நோக்கியுள்ளது. இந்தச் சவால்கள் சீனாவின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்புகளை நிச்சயம் ஏற்படுத்தும். 
   இந்த வைரஸ், இன்னொரு வகையான உலகப் பொருளாதார நெருக்கடியை உருவாக்கிவிடக் கூடியது என, பல பொருளியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். அதற்குச் சில முக்கிய தரவுகளை அடுக்குகிறார்கள்:  
   1. பிரபல கார் உற்பத்தி நிறுவனமான Hyundai, அதன் சீனத் தொழிற்சாலையில் இருந்து உதிரிப்பாகங்கள் வராமையால், தென்கொரியாவில் அமைந்துள்ள அதன் மிகப்பெரிய தொழிற்சாலைப் பணியாளர்களில் 25,000 பேரை, தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்துள்ளது. இதனால், இந்நிறுவனத்துக்கு வாரமொன்றுக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டமேற்படுகிறது. Nissan போன்ற பிற கார் உற்பத்தி நிறுவனங்களும் இதைப்போல தற்காலிக ஆட்குறைப்புச் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.   
   2. உலகளாவிய கப்பல் போக்குவரத்து, பாரிய சரிவைக் கண்டுள்ளது. பல கப்பல்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதோடு, பொருள்கள் ஏற்றுவது தடைப்பட்டு உள்ளன.   
   சீனாவின் இரண்டு முக்கிய துறைமுகங்களான ஷங்காய், ஹொங்  கொங்கில் அரைவாசிக்கும் குறைவான பணியாளர்களே கடந்த திங்கட்கிழமை (17) பணிக்குத் திரும்பியிருந்தனர்.    
   உலகளாவிய கப்பல் சரக்குப் போக்குவரத்துத் தரவுகளை வெளியிடும் டென்மார்க் நிறுவனமான Sea Intelligence, கொரோனா வைரஸ் தாக்கம் ஆரம்பித்தது முதல், வாரமொன்று 350 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான வர்த்தகம் இல்லாமல் போயுள்ளது என அறிவித்துள்ளது.   
   3. எண்ணெய் விலைகள், கடந்த மாதம் 20சதவீதம் சரிந்துள்ளன. சீனாவின் அன்றாட எண்ணெய்ப் பாவனை, வெகுவாகக் குறைந்துள்ள நிலையில், இது உலகளாவிய தாக்கத்தைக் கொண்டுள்ளது.   
   4. கடந்த ஒரு தசாப்த காலமாக, சீனர்களின் வெளிநாடுகளுக்கான சுற்றுலா அதிகரித்திருந்தன. குறிப்பாக, வளர்ச்சியடைந்து வரும் சீன மத்தியதர வர்க்கம், ஆண்டுதோறும் சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது. கொரோனா வைரஸின் விளைவால், இவ்வாண்டு, இவ்வாறான பயணங்கள் நிகழவில்லை. இதனால், 2020ஆம் ஆண்டு, உலகளாவிய சுற்றுலாத்துறைக்கு 80 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பு ஏற்படுகிறது.   
   கொரோனா வைரஸை, வெறுமனே ஒரு தொற்றுநோயாகவும் தீர்வுக்காக அறிவியலில் தங்கி நிற்கின்ற ஒன்றாகவும் மட்டும் பார்க்கும் பார்வையை, மாற்றியாக வேண்டும்.   
   இது மனிதர்களால் உருவாக்கப்பட்டதாயின், மனித குலத்தின் எதிரிகள், மனித குலத்தின் மீது தொடுத்திருக்கும் ஒரு போராகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது.   
   இலாபவெறியும் அதிகார போதையும் எதையெல்லாம் செய்ய வைக்குமோ என்று எமக்குக் கலக்கமே எஞ்சுகிறது. இன்று, சீனர்களுக்கு எதிரான பொறாமையும் வெறுப்பும் கலந்த மனநிலை, எங்கும் கட்டமைக்கப்பட்டு உள்ளது.   
   சீனாவின் பொருளாதாரத்தைச் சிதைப்பதன் மூலம், பிற பொருளாதாரங்கள் மேல்நிலையாக்கம் அடையலாம் என்ற வாதமும் ஆசையும் எதிர்பார்ப்பும் இருக்கிறது. ஆனால், இது சாத்தியமாகாது.   
   சீனாவின் பொருளாதாரச் சரிவு, முழு உலகுக்குமானது. எல்லா வழிகளிலும் அபாயகரமான எதிர்வு கூறவியலாத எதிர்காலத்தை நோக்கி, நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.  
    
   http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கொரோனா-வைரஸ்-உயிரியல்-யுத்தமா/91-245796
    
  • By தமிழ் சிறி
   சீனாவில் இருந்து பிரித்தானியப் பிரஜைகள் வெளியேறவேண்டும் : வெளியுறவு அலுவலகம்
   கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான சீனாவில் இருந்து பிரித்தானியப் பிரஜைகள் அனைவரும் வெளியேறவேண்டும் என பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
   வைரஸ் பாதிப்புக்குள்ளான ஹூபே மாகாணத்திலிருந்து பிரித்தானியர்களை வெளியேற்றுவதற்கான பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
   வைரஸால் பாதிப்பு அபாயத்தைக் குறைக்க சீனாவில் உள்ள பிரித்தானியப் பிரஜைகளை விரைவாக நாட்டை விட்டு வெளியேறும்படி அறிவுறுத்துகிறோம் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.
   ஹூபே மாகாணத்தில் இருந்து வெளியேற விரும்பும் பிரித்தானியப் பிரஜைகளுக்கு உதவுவதற்காக நாங்கள் தொடர்ந்து பணியாற்றிவருகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
   சீனாவில் இன்னும் 30,000 பிரித்தானியப் பிரஜைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது என அமைச்சர் ஞாயிற்றுக்கிழமை பிபிசியிடம் கூறினார்.
   உலகநாடுகளில் 20,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நோய்ப் பாதிப்பினால் சீனாவில் 400 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
   http://athavannews.com/சீனாவில்-இருந்து-பிரித்த/
  • By ampanai
   கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க சுமார் நூறு கோடி ரூபாய் நிதியை, அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர் ஜாக் மா சீன அரசுக்கு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
   வேகமாக பரவி வரும் இந்த வைரசால் சீனாவில் இதுவரை 170 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் சீனாவின் பெரும் பணக்காரரான ஜாக் மா, தனது தொண்டு நிறுவனம் வாயிலாக சீன அரசுக்கு நிதியுதவி அளித்துள்ளார்.
   இதில் சுமார் 41 கோடி ரூபாய் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள, இரண்டு அரசு ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு வழங்கப்பட உள்ளது. மீத தொகை நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் என, அமெரிக்க நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
   https://www.polimernews.com/dnews/98719/கொரோனா-வைரஸ்-தடுப்புமருந்தை-கண்டுபிடிக்க--ரூ.100கோடியை-அளித்த-அலிபாபாநிறுவனர்
    
    
   கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவில் 2,000 கிளைகளை மூடிய Starbucks
   கொரோனா வைரஸ் பீதியால் ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனம் சீனாவில் தனது 2 ஆயிரம் கிளைகளை மூடியுள்ளது.
   அமெரிக்க கார்பரேட் நிறுவனமான ஸ்டார்பக்ஸ், சீனாவில் 4 ஆயிரத்து 292 கிளைகளை இயக்கி வந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 50 சதவீத கடைகளை மூடியுள்ளது.
   நோய் பரவலை தடுக்கும் அரசின் நடவடிக்கைகளுக்கு  ஒத்துழைப்பு வழங்கும் வகையிலும் பொது சுகாதாரத்தை கருத்தில் கொண்டும் தனது கடைகளை மூடியுள்ளதாக ஸ்டார்பக்ஸ் விளக்கம் அளித்துள்ள நிலையில், பங்கு சந்தையில் அந்த நிறுவனம் படு வீழ்ச்சியை கண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
   https://www.polimernews.com/dnews/98628/கொரோனா-வைரஸ்-தாக்குதலால்சீனாவில்-2,000-கிளைகளை-மூடியStarbucks
    
    
   கொரோனா வைரஸ் பரவுவதால் சீனாவில் திரையரங்குகள் மூடல்
   கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவில் திரையரங்குகள் ஒட்டுமொத்தமாக மூடப்பட்டுள்ளதால், பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
   சர்வதேச திரைப்படங்களின் வருவாயில் சீனா முக்கிய பங்களித்து வருகிறது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரவதால், சீனாவில் சுமார் 70 ஆயிரம் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
   இதே நிலை தொடர்ந்தால் 200 கோடி டாலர் வரை இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல் 3 நாள் புத்தாண்டு விடுமுறை கொண்டாட்டத்தில் மட்டும், திரைப்படங்கள் வாயிலாக 50 கோடி டாலருக்கு மேல் வசூல் ஆன நிலையில், தற்போது வெறும் 20 லட்சம் டாலரே கிடைத்து இருக்கிறது. சீனாவில் தயாரிக்கப்பட்ட 6 பெரிய திரைப்படங்களின் வெளியீடு காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
   https://www.polimernews.com/dnews/98756/கொரோனா-வைரஸ்-பரவுவதால்சீனாவில்-திரையரங்குகள்மூடல்
    
   சீனாவில் ஹூபே மாகாணத்தில் மெக்டோனால்டு உணவகங்கள் மூடல்
   அமெரிக்க துரித உணவு நிறுவனமான மெக்டொனால்ட்ஸ் சீனாவின் ஹூபே மகாணத்தில் உள்ள அனைத்து உணவகங்களையும் மூடியுள்ளது.
   அந்த மாகாண தலைநகரான ஊகானில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மெக்டோனால்டு நிறுவனம் கூறியுள்ளது.
   இதுகுறித்த தகவல் மெக்டொனால்டின் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ் கெம்ப்சின்ஸ்கி தெரிவித்துள்ளார். ஆனால் சீனாவின் பிற இடங்களில் மூவாயிரம் விற்பனை நிலையங்கள் திறந்த நிலையில் உள்ளதாகவும், அவர் கூறினார்.
   https://www.polimernews.com/dnews/98731/சீனாவில்-ஹூபே-மாகாணத்தில்மெக்டோனால்டு-உணவகங்கள்மூடல்
  • By தமிழ் சிறி
   கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த, மந்திரத்தை உச்சரியுங்கள் – தலாய் லாமா!
   கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ‘ஓம் தரே டுட்டாரி ட்டுரு சோஹா’ என்ற மந்திரத்தை உச்சரிக்குமாறு தலாய் லாமா தெரிவித்துள்ளார்.
   சீனாவிலுள்ள புத்தமதத்தை பின்பற்றும் சிலர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அறிவுரை வழங்குமாறு தலாய் லாமாவிடம் முகநூல் மூலம் வேண்டுகோள் விடுத்தனர்.
   இதையடுத்து, கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மக்கள் ‘ஓம் தரே டுட்டாரி ட்டுரு சோஹா’ என்ற மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து மன அமைதி மற்றும் கவலையில் இருந்து விடுபடலாம்.
   இந்த மந்திரத்தை உச்சரித்தால் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தி நன்மையை அளிக்கும் என தலாய் லாமா தெரிவித்துள்ளார்.
   இதேவேளை, சீனாவில் உருவான கொரோனா வைரஸ் மேலும் 17 நாடுகளில் பரவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
   சீனாவில் மாத்திரம் 5 ஆயிரத்து 974 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
   அத்துடன், இந்த வைரஸ் தாக்கம் காரணமாக சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது.
   நேற்றைய தினத்தில்(செவ்வாய்கிழமை) மாத்திரம் 26 பேர் உயிரிழந்துள்ளதாக சீன தகவல்கள் தெரிவிக்கின்றன.
   http://athavannews.com/கொரோனா-வைரஸ்-பரவுவதை-கட்/
 • Topics

 • Posts

  • கடவுளும் மதமும் என்பதற்கப்பால் சீமான் போன்ற அரசியல்வாதிகள் இந்தியாவிற்கு தேவை.
  • பிரதேச வாதம் இல்லை. சலுகைகளுக்கும்,  சுயநலத்திற்கும் சாய்பவர்கள். அதை மறைக்க கையாளும் சொல் அது. எதிரி நம்மை  பிரித்து லாபமடைய பாவிக்கும் ஆயுதங்களில் இதுவும் ஒன்று. அதையே பிரட்டி பாவித்து தம்மை மறைத்துக்கொள்கிறார்கள். எஜமானர்கள் என்ன செய்கிறார்கள்?  தர்மத்தை போதிக்க வேண்டியவர்கள், குடி  மக்களை இனபேதம் இன்றி  சமமாக நடத்த வேண்டியவர்கள் எங்கும் எதிலும் கக்குவது இனவாதம். நாங்களும் இந்நாட்டின் மூத்த குடிகளே, என்று தத்துவார்த்தமாகவிளக்குபவருக்கு, தாம் தமது ஆதாரத்தை காட்டி நிரூபிப்பதை விடுத்து, இனவாதி என்று மாற்றி சித்தரிக்கவில்லையா? அவர்களின் தொண்டர்களும், அடிமைகளும் அதைத்தானே பிரதிபலிப்பார்கள். இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சினால்,  அவர்கள் சொல்வது சரி என்றாகிவிடும். எஜமானரின் ஆயுதம் இனவாதம், அவர் தொண்டரின் வாதம் பிரதேசவாதம்.
  • நான் ஒருக்கால் வெம்பிளியிலை சாப்பிடு மூண்டு நாள் காணாமலே போயிட்டன். நல்லகாலம் இரண்டு கிழமை லீவிலை வந்தபடியாலை தப்பீட்டன்.இனிமேல் பைப் தண்ணியை குடிச்சாலும் பரவாயில்லை வெளியிலை போய் சாப்பிடுறேல்லை எண்டு முடிவெடுத்துட்டன் 🙃
  • ம். க்...க்கும் .... கொப்பிழக்க கூடாது... நாதர்.... ஜொனி வால்கரை கண்ணெடுத்தும் பாரன்... ஜொனியிண்ட தங்கச்சி ஜென் வால்கெர் தான் இப்ப என்னை வைச்சிருக்கிறா... ரச போசன.... நல்லம் தான். நேரத்துக்கு போய்..... ஒரு பிரண்டோட,  மூலையில இருந்து.... தண்ணியும் அடித்து புபேயும் எடுத்தம்.... நல்ல டீல்....  எனக்கு பக்கத்தில குடுமியர்.... ஈஸ்டர்ன் பயர் பிடிக்கும். நெத்தலிப்பிட்டும்.... ரொட்டியும் மலேசியன் சம்பலும் எண்ட விருப்பம். எனக்கு சிங்கள சாப்பாடு எண்டால்... சட்பறி ஹில் பப் முந்தி பிடிக்கும்.... இப்ப இது பரவாயில்லை. ரெய்னர்ஸ் லேன் பிஸ்சா ஹட் பக்கத்தில் பூட் கோர்னெர், சனி, ஞாயிறு லம்ப்ரைஸ் போடுவார்கள். நல்லா இருக்கும். ஹாரோ வீல்ஸ்டோன் ஸ்டேஷனுக்கு முன்னால, டேஸ்ட் ஒப் ஆசியா எண்டு எங்கண்ட நானா கடை. அவர் கட்டினது ஈரான் பக்கம். ஆனா நானா தான் சமையல். சபன் எண்டு அவயட (இலங்கை முஸ்லீம்) சாப்பாடு ஓடர் பண்ணி பாருங்ககோ. 7 முதல் 8 பேர் சாப்பிடலாம்.... நல்லா இருக்கும்.  முந்தி ஈஸ்ட் ஹாம் பக்கம், காதரின் ரோட்டில உதயா ரெஸ்டூரண்ட் எண்டு சேட்டன் மாரிண்ட கடை இருந்தது.... அங்க ஒரு மீன் பொழிச்சதும், ரொட்டியும், றால் பிரையும் அடித்தால்.... அந்த மாதிரி. பிறகு அந்த கடையை ஒரு சிங்களவர் எடுத்து, நாத்தி.... இப்ப வேற மலையாளிகள் எடுத்து பழைய லெவெலிலை செய்யினமாம். போகவில்லை....   
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.