Jump to content

3 வருடங்கள் வரை கெடாத இட்டலி கண்டுபிடிப்பு..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

3 வருடங்கள் வரை கெட்டுப்போகாத இட்டலி கண்டுபிடிப்பு ! விண்வெளியில் கூட பயன்படுத்தலாம்.!

vaishalimumbaiuniversity-1580547033.png

தமிழர்களின் உணவுகளில் மிக முக்கியமான ஒரு உணவு தான் இட்டலி, சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரின் ஆரோக்கியத்திற்கும் ஏற்ற உணவாக இந்த இட்டலி இருக்கிறது. உலக சுகாதார அமைப்பு உயர்ந்த ஊட்டச்சத்து கொண்ட உணவுப் பண்டங்களின் பட்டியலில் இட்டலியை சேர்த்துள்ளது. உலகம் முழுதும் இட்டலிக்கென்று தனியாகச் சிறப்புத் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது.

இத்தகைய சிறப்பம்சம் கொண்ட இட்டலியை தினந்தோறும் செய்து சாப்பிடுவதில் சிறிது சிக்கல் உள்ளது. வீட்டில் தினமும் இதற்கான மாவு தயார் செய்து இட்டலியை தயாரிப்பது சிக்கலாக உள்ளது. அதோடு சமைத்து வைக்கப்படும் இட்டலியும் நீண்ட நேரம் கெடாமல் இருப்பதில்லை. உணவு பண்டங்களைக் கெடாமல் பார்த்துக்கொள்ள ஒரு புதிய முறையை மும்பையைச் சேர்ந்த பேராசிரியை கண்டுபிடித்துள்ளார்.

இவர் கண்டுபிடித்துள்ள முறைப்படி, இட்டலியை சுமார் 3 வருடங்கள் வரை கேடாமல் பார்த்துக்கொள்ள முடியுமென்று கூறியுள்ளார். மும்பை பல்கலைக்கழக பேராசிரியையான வைஷாலி பம்போல், எந்தவொரு ரசாயன முறையையும் பயன்படுத்தாமல், இட்டலியை சுமார் மூன்று ஆண்டுகள் வரை கெடாமல் பார்த்துக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் வைஷாலி

vaishalimumbai-1580547152.jpg

மும்பை பல்கலைக்கழக பேராசிரியை கூறியதாவது, 2013 ஆம் ஆண்டிலிருந்து தனது குழுவுடன் வைஷாலி இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதாகவும். எலக்ட்ரானிக் பீம் ரேடியேஷன் முறையைப் பயன்படுத்தி உணவுப் பொருட்களைக் கெட்டுப்போகாமல் பதப்படுத்த முடியும் என்று கண்டுபிடித்துள்ளோம், என்று கூறியுள்ளார்.

ராணுவ & விண்வெளி வீரர்கள்

vaishalimumbaiuniversityidlyspace-158054

தற்பொழுது இவர்கள் கண்டுபிடித்துள்ள இந்த எலக்ட்ரானிக் பீம் ரேடியேஷன் முறை, ராணுவ வீரர்கள் மற்றும் விண்வெளி வீரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. விண்வெளியில் கூட உணவு பண்டங்கள் கெடாமல் பார்த்துக்கொள்ள இந்த் முறை பெரிதும் பயனுள்ளதாய் இருக்கும் என்று தெரிகிறது.

அதேபோல் உணவு பண்டங்களின் ஏற்றுமதி / இறக்குமதிக்கும், இயற்கை பேரிடர்களின் போதும் இந்த புதிய முறை கைகொடுக்கும் என்று நம்புவதாக அவர் கூறியுள்ளார். இந்த முறையை பயன்படுத்தி அனைத்து உணவு பண்டங்களையும் இன்னும் கூடுதல் நாட்களுக்கு கெடாமல் பார்த்துக்கொள்ளும் புதிய ஆராய்ச்சியை தற்பொழுது துவங்கியுள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்

https://tamil.gizbot.com/news/idly-can-be-preserved-for-upto-3-years-by-using-electronic-beam-radiation-024489.html

டிஸ்கி

http://www.kadalpayanangal.com/2014/07/blog-post_22.html?m=1

ராமசேரி இட்டலிதான் இதுவரை அதிக நாள் கெடாமல் இருக்கும் என்டு நினைத்தேன்.. புதுசு புதுசா கிளம்புறாங்கப்பா.. அப்படியே புட்டு ,பணியாரம், இடியாப்பம் .. எல்லாம் கண்டு பிடியுங்கப்பா..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமணத்திற்கு சீர்தனமாக இப்படி கெட்டுப் போகாத உணவுவகைகளை கொடுத்தால் கல்யாணத்தின்பின் அடுத்த பல வருடங்களுக்கு வீட்டில் சமையல் பிரச்சனை இல்லா !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/8/2020 at 7:00 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

3 வருடங்கள் வரை கெட்டுப்போகாத இட்டலி கண்டுபிடிப்பு ! விண்வெளியில் கூட பயன்படுத்தலாம்.!

அய்யோ கடவுளே இந்த திரியை ஒருத்தர்ரை கண்ணிலையும் படாமல் ஒளிச்சு வையுங்கோப்பா..... 3 நாளிலை பழுதாகிற இட்டலியையே  6 நாள் வைச்சு சாப்பிட வேண்டிக்கிடக்கு....இந்த திறத்திலை 3 வருசம் பழுதாகாமல் இருக்கிற இட்டலி எண்டால்???????? 😵

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நோமலாய் இங்கு சரவணபவான் போன்ற உணவகங்களுக்கு போனாலே பிரீஸரில் இருந்து சூடாக்கிய இட்டலி[எத்தனை மாதம் வைத்திருப்பாங்களோ :37_disappointed:] தான் வரும்...இனி சொல்லி வேலை இல்லை

Link to comment
Share on other sites

On ‎2‎/‎8‎/‎2020 at 1:00 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

மும்பை பல்கலைக்கழக பேராசிரியை கூறியதாவது, 2013 ஆம் ஆண்டிலிருந்து தனது குழுவுடன் வைஷாலி இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதாகவும். எலக்ட்ரானிக் பீம் ரேடியேஷன் முறையைப் பயன்படுத்தி உணவுப் பொருட்களைக் கெட்டுப்போகாமல் பதப்படுத்த முடியும் என்று கண்டுபிடித்துள்ளோம், என்று கூறியுள்ளார்.

எலக்ட்ரானிக் பீம் ரேடியேஷன்  ...  புற்று நோய் வரலாம் ??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.