Jump to content

ஆஸ்கர் விருது விழா:வெல்லப்போவது யார்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்கர் விருது விழா:வெல்லப்போவது யார்?

36.jpg

 

உலகம் முழுவதுமுள்ள, திரைத்துறையினர் ஆர்வமுடன் காத்திருக்கும் ஒரு நிகழ்ச்சி என்றால் அது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தான்.

ஒரு திரைப்படம் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்படுகிறது என்றாலே, அதன் உயர்ந்த தரத்தை எளிமையாகக் கணித்துவிடமுடியும். அனைத்து திரைக்கலைஞர்களின் மனதிலும் இருக்கும் ஒரு உயரிய கனவு என்றால் அது ஆஸ்கார் மேடை தான். கடந்த ஜனவரி மாத துவக்கத்திலேயே 92-ஆவது ஆஸ்கர் விருதுகளுக்கான நாமினேஷன் பட்டியல் வெளியிடப்பட்டது.

 

அப்போது துவங்கி, இந்த விருதுகளை வெல்லப் போவது யார் என்ற விவாதமும் ஆரம்பமாகிவிட்டது. அனைத்து விவாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாக ஆஸ்கர் விருது நிகழ்ச்சி நாளைய தினம் நடைபெறவுள்ளது. நாளை(பிப்ரவரி 10) காலை 6:30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஆரம்பமாகவுள்ளது. கடந்த வருடம் விழாவைத் தொகுத்து வழங்கிய கெவின் ஹார்ட் மூலம் சில பிரச்னைகள் ஏற்பட்டதால், இம்முறை தொகுப்பாளர் இல்லாமலேயே ஆஸ்கர் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

நாளை நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் ஆஸ்கர் விருதுகளை வெல்லப்போவது யார் என்னும் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. ஆஸ்கர் விருதுக்கான நாமினேஷனில் இடம்பிடித்த திரைப்படங்களின் பட்டியல் கீழே இடம்பெற்றுள்ளது.

சிறந்த திரைப்படம்

Ford v Ferrari

The Irishman

Jojo Rabbit

Joker

Little Women

Marriage Story

1917

Once Upon a Time in Hollywood

Parasite

சிறந்த நடிகர்

Antonio Banderas - “Pain and Glory”

Leonardo DiCaprio - “Once Upon a Time in Hollywood”

Adam Driver - “Marriage Story”

Joaquin Phoenix - “Joker”

Jonathan Pryce - “The Two Popes”

சிறந்த நடிகை

Cynthia Erivo - “Harriet”

Scarlett Johansson - “Marriage Story”

Saoirse Ronan - “Little Women”

Charlize Theron - “Bombshell”

Renee Zellweger - “Judy”

சிறந்த துணை நடிகர்

Tom Hanks -“A Beautiful Day in the Neighborhood”

Anthony Hopkins - “The Two Popes”

Al Pacino - “The Irishman”

Joe Pesci - “The Irishman”

Brad Pitt - “Once Upon a Time in Hollywood”

சிறந்த துணை நடிகை

Kathy Bates - “Richard Jewell”

Laura Dern - “Marriage Story”

Scarlett Johansson - “Jojo Rabbit”

Florence Pugh - “Little Women”

Margot Robbie - “Bombshell”

சிறந்த இயக்குநர்

Martin Scorsese - “The Irishman”

Todd Phillips - “Joker”

Sam Mendes - “1917”

Quentin Tarantino - “Once Upon a Time in Hollywood”

Bong Joon Ho - “Parasite”

சிறந்த அனிமேஷன் திரைப்படம்

“How to Train Your Dragon: The Hidden World” - Dean DeBlois

“I Lost My Body” - Jeremy Clapin

“Klaus” - Sergio Pablos

“Missing Link” - Chris Butler

“Toy Story 4” - Josh Cooley

அனிமேஷன் குறும்படம்

“Dcera” - Daria Kashcheeva

“Hair Love” - Matthew A. Cherry

“Kitbull” - Rosana Sullivan

“Memorable” - Bruno Collet

“Sister” - Siqi Song

திரைக்கதை தழுவல் (Adapted Screenplay)

“The Irishman” - Steven Zaillian

“Jojo Rabbit” - Taika Waititi

“Joker” - Todd Phillips, Scott Silver

“Little Women” - Greta Gerwig

“The Two Popes” - Anthony McCarten

ஒரிஜினல் திரைக்கதை

“Knives Out” - Rian Johnson

“Marriage Story” - Noah Baumbach

“1917” - Sam Mendes and Krysty Wilson-Cairns

“Once Upon a Time in Hollywood” - Quentin Tarantino

“Parasite” - Bong Joon-ho, Jin Won Han

சிறந்த ஒளிப்பதிவு

“The Irishman” - Rodrigo Prieto

“Joker” - Lawrence Sher

“The Lighthouse” - Jarin Blaschke

“1917” - Roger Deakins

“Once Upon a Time in Hollywood” - Robert Richardson

சிறந்த முழு நீள ஆவணப்படம்

“American Factory” - Julia Rieichert, Steven Bognar

“The Cave” - Feras Fayyad

“The Edge of Democracy” - Petra Costa

“For Sama” - Waad Al-Kateab, Edward Watts

“Honeyland” - Tamara Kotevska, Ljubo Stefanov

சிறந்த ஆவணக் குறும்படம்

“In the Absence” - Yi Seung-Jun and Gary Byung-Seok Kam

“Learning to Skateboard in a Warzone” - Carol Dysinger

 

“Life Overtakes Me” - Kristine Samuelson and John Haptas

“St. Louis Superman” - Smriti Mundhra and Sami Khan

“Walk Run Cha-Cha” - Laura Nix

சிறந்த Live Action குறும்படம்

“Brotherhood” - Meryam Joobeur

“Nefta Football Club” - Yves Piat

“The Neighbors’ Window” - Marshall Curry

“Saria” - Bryan Buckley

“A Sister” - Delphine Girard

சிறந்த சர்வதேச முழுநீள திரைப்படம்

“Corpus Christi” - Jan Komasa

“Honeyland” - Tamara Kotevska, Ljubo Stefanov

“Les Miserables” - Ladj Ly

“Pain and Glory” - Pedro Almodovar

“Parasite” - Bong Joon Ho

சிறந்த படத்தொகுப்பு

“Ford v Ferrari” - Michael McCusker, Andrew Buckland

“The Irishman” - Thelma Schoonmaker

“Jojo Rabbit” - Tom Eagles

“Joker” - Jeff Groth

“Parasite” - Jinmo Yang

சவுண்ட் எடிட்டிங்

“Ford v Ferrari” - Don Sylvester

“Joker” - Alan Robert Murray

“1917” - Oliver Tarney, Rachel Tate

“Once Upon a Time in Hollywood” - Wylie Stateman

“Star Wars: The Rise of SkyWalker” - Matthew Wood, David Acord

சவுண்ட் மிக்ஸிங்

“Ad Astra”

“Ford v Ferrari”

“Joker”

“1917”

“Once Upon a Time in Hollywood”

புரொடக்‌ஷன் டிசைன்

“The Irishman” - Bob Shaw and Regina Graves

“Jojo Rabbit” - Ra Vincent and Nora Sopkova

“1917” - Dennis Gassner and Lee Sandales

“Once Upon a Time in Hollywood” - Barbara Ling and Nancy Haigh

“Parasite” - Lee Ha-Jun and Cho Won Woo, Han Ga Ram, and Cho Hee

ஒரிஜினல் இசை

“Joker” - Hildur Guðnadóttir

“Little Women” - Alexandre Desplat

“Marriage Story” - Randy Newman

“1917” - Thomas Newman

“Star Wars: The Rise of Skywalker” - John Williams

ஒரிஜினல் பாடல்

“I Can’t Let You Throw Yourself Away” - “Toy Story 4”

“I’m Gonna Love Me Again” - “Rocketman”

“I’m Standing With You” - “Breakthrough”

“Into the Unknown” - “Frozen 2”

“Stand Up” - “Harriet”

மேக்கப் & சிகை அலங்காரம்

“Bombshell”

“Joker”

“Judy”

“Maleficent: Mistress of Evil”

“1917”

காஸ்ட்யூம் டிசைன்

”The Irishman” - Sandy Powell, Christopher Peterson

“Jojo Rabbit” - Mayes C. Rubeo

“Joker” - Mark Bridges

“Little Women” - Jacqueline Durran

“Once Upon a Time in Hollywood” - Arianne Phillips

விஷுவல் எஃபெக்ட்ஸ்

“Avengers Endgame”

“The Irishman”

“1917”

“The Lion King”

“Star Wars: The Rise of Skywalker”

 

https://minnambalam.com/entertainment/2020/02/09/36/oscar-award-announcement

Link to comment
Share on other sites

%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81
 
தென்கொரிய திரையுலகிற்கு கிடைத்திருக்கும் முதல் ஆஸ்கர் விருது
 
 
 
உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்று ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. இந்த விருதை வெல்வது படைப்பாளிக்கு மிகப்பெரிய கௌரவமாக கருதப்படுகிறது.

அந்த வகையில் 92வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று பிரமாண்டமாக நடைபெறுகிறது.

கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் தொகுப்பாளர்கள் இல்லாமல் விழா நடைபெறுகிறது.

சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டுக்கு வழங்கப்பட்டது. “ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்” (Once Upon a time in Hollywood) என்ற படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பிராட் பிட்டுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான விருதும் இந்த படத்திற்கு கிடைத்துள்ளது.

சிறந்த திரைக்கதைக்கான விருது கொரியன் படமான “பாராசைட்” திரைப்படத்துக்கு கிடைத்துள்ளது.

தென்கொரிய திரையுலகிற்கு கிடைத்திருக்கும் முதல் ஆஸ்கர் விருது இதுவாகும். ஹன் ஜின், போங் ஜூன் ஹோவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

சிறந்த ஆடை வடிவமைப்புக்காக “லிட்டின் வுமன்” படத்திற்கு விருது கிடைத்தது. இப்படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய ஜாக்லின் டூரானுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. மேரேஜ் ஸ்டோரி படத்திற்காக லாரா டெர்னுக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது கிடைத்துள்ளது.

சவுண்ட் எடிட்டிங்கிற்கான ஆஸ்கர் விருதை “Ford Vs Ferrari” படம் வென்றது. விருதை டொனால்டு சில்வஸ்டர் பெற்றார். சிறந்த சவுண்ட் மிக்சிங், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் “1917” என்ற படம் விருதுகளை வென்றுள்ளது. ஒளிப்பதிவுக்கான விருது ரோஜர் டீக்கின்சிடமும், சவுண்ட் மிக்சிங் விருதை மார்க் டெய்லர் மற்றும் ஸ்டுவார்ட் வில்சன் ஆகியோரிடமும் வழங்கப்பட்டது.

சிறந்த அனிமேசன் திரைப்படத்திற்கான விருதை “டாய் ஸ்டோரி-4” தட்டிச்சென்றது. இப்படத்தில் ஜோஷ் கூலே, மார்க் நீல்சன், ஜோனஸ் ரிவேரா ஆகியோர் நடித்திருந்தனர். சிறந்த ஆவணப்படத்திற்கான விருது “அமெரிக்கன் பேக்டரி” என்ற படத்திற்கும், சிறந்த ஆவண குறும்படத்திற்கான விருது, “லேர்னிங் டு ஸ்கேட்போர்ட் இன் ஏ வார்ஜோன்” என்ற படத்திற்கும் வழங்கப்பட்டது. சிறந்த குறும்படத்திற்கான விருது, “தி நெய்பர்ஸ் விண்டோ” என்ற படத்திற்காக மார்ஷல் கரிக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

234105_1.jpg234105_2.jpg234105_3.jpg234105_4.jpg234105_5.jpg234105_6.jpg234105_7.jpg
 
Link to comment
Share on other sites

பாராசைட்: 4 ஆஸ்கர் விருதுகளை வென்ற படத்தின் உண்மை களம் இதுதான்

பாராசைட்: 4 ஆஸ்கர் விருதுகளை வென்ற படத்தின் உண்மை களம் இதுதான்படத்தின் காப்புரிமை CJENM/BBC

கேன்ஸ் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களின் அங்கீகாரத்தை தொடர்ந்து, இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற அகாடமி அவார்ட்ஸ் நிகழ்வில், நான்கு ஆஸ்கர் விருதுகளை பெற்று திரைப்பட ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது தென்கொரிய திரைப்படமான 'பாராசைட்'.

இதன் மூலம் 92 ஆண்டுகால ஆஸ்கர் விருதுகள் வரலாற்றில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை பெறும் முதல் ஆங்கிலம் அல்லாத திரைப்படமாக பாராசைட் உருவெடுத்துள்ளது.

தென்கொரியாவின் சோல் நகரில், போதிய இடவசதியற்ற அடித்தள வீட்டில் வசிக்கும் ஏழை குடும்பத்தையும், அதே நகரில் ஆடம்பர வீட்டில் வசிக்கும் குடும்பத்தினரையும் ஒப்பிட்டு, ஒருவரது வாழ்க்கையில் பணம் ஏற்படுத்தும் தாக்கத்தை அரசியல் பின்னணியுடன் பாராசைட் விளக்குகிறது.

பாராசைட் திரைப்படம் வேண்டுமானால் கற்பனை கதையாக இருக்கலாம், ஆனால் அந்த படத்தில் மையப்படுத்தப்படும் வீடுகள் சோல் நகரத்தின் உண்மை முகத்தை வெளிப்படுத்துகிறது.
பாராசைட்: 4 ஆஸ்கர் விருதுகளை வென்ற படத்தின் உண்மை களம் இதுதான்

தென் கொரியாவின் தலைநகரான சோலில் ஆயிரக்கணக்கான மக்கள் பஞ்சிகா என்றழைக்கப்படும் சூரிய ஒளிப் புக முடியாத இந்த அடித்தள வீடுகளில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிபிசி கொரிய சேவையின் செய்தியாளர் ஜூலி யூன், சோல் நகரத்திலுள்ள சில பஞ்சிகா வீடுகளுக்கு சென்று, அங்கு வசிப்பவர்களின் கதையை இந்த கட்டுரையில் பட்டியலிடுகிறார்.

ஓ கீ-செயோலின் பஞ்சிகாவில் சிறு தாவரம் வளர்வதற்கு தேவையான சூரிய ஒளி கூட வருவதில்லை.

இவரது வீட்டை ஜன்னல்களின் வாயிலாக சாலையில் செல்பவர்கள் எளிதாக பார்க்க முடியும். இந்த பகுதி இளைஞர்கள் பொதுவாக இவரது வீட்டிற்கு வெளிப்புறம்தான் புகைப்பதுடன், எச்சிலும் துப்புவார்களாம்.

கோடைகாலங்களில் தாங்க முடியாத ஈரப்பதத்தாலும், அதன் காரணமாக உருவாகும் பூஞ்சைகளாலும் தான் பாதிக்கப்படுவதாக அவர் கூறுகிறார்.

பாராசைட்: 4 ஆஸ்கர் விருதுகளை வென்ற படத்தின் உண்மை களம் இதுதான்

வீட்டின் தரைப்பரப்பிலிருந்து அரை மீட்டர் உயரத்தில் இருக்கும் சிறிய கழிவறையில் நீர்த்தொட்டி எதுவும் இல்லை. அதுமட்டுமின்றி, கழிவறையின் உயரம் குறைவாக இருப்பதால், தலையில் இடித்து கொள்வதை தவிர்க்க, தாங்கள் இரு கால்களையும் அகல விரித்து நிற்க வேண்டியது அவசியம் என்று அவர் கூறுகிறார்,

"இந்த வீட்டிற்கு குடியேறிய புதிதில், சுவர்களில் அடிக்கடி தெரியாமல் இடித்துக்கொண்டு எனக்கு உடலின் பல பகுதிகளில் காயமும், சிராய்வுகளும் ஏற்பட்டன" என்று கூறும் 31 வயதாகும் ஓ தளவாடத் துறையில் பணிபுரிகிறார்.

ஆனால், இப்போது அனைத்தும் பழகிவிட்டதாக அவர் கூறுகிறார்.

பாராசைட்: 4 ஆஸ்கர் விருதுகளை வென்ற படத்தின் உண்மை களம் இதுதான்

புகழ்ப்பெற்ற இயக்குநர் போங் ஜோன்-ஹோ இயக்கிய பாராசைட் திரைப்படம், சமூகத்தின் இருவேறுபட்ட நிலைகளை சேர்ந்த குடும்பங்களை அவர்களது வீடுகளை முதலாக வைத்து விளக்குகிறது.

இதுபோன்ற பஞ்சிகாகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வசிக்கின்றனர். ஆனால், இது நவீனகால சோல் நகரத்தின் வடிவமைப்பை பிரதிபலிக்கும் ஒரு விடயமாக நினைத்துவிடாதீர்கள். இவற்றின் வரலாறு இரு கொரிய நாடுகளுக்கிடையே நடந்த சண்டையிலிருந்து தொடங்குகிறது.

1968ஆம் ஆண்டு வட கொரியாவின் கமாண்டோக்கள் தென் கொரியாவின் அப்போதைய அதிபர் பார்க் சங்-ஹீயை கொலை செய்யும் நோக்கத்துடன் சோல் நகரத்துக்குள் நுழைந்தனர்.

இந்த முயற்சி முறியடிக்கப்பட்டுவிட்டாலும், இரு கொரிய நாடுகளுக்கிடையேயான பதற்றம் மென்மேலும் அதிகரித்தது. மேலும், ஆயுதமேந்திய வட கொரிய முகவர்கள் தென் கொரியாவில் ஊடுருவியதுடன், அதைத்தொடர்ந்து பல்வேறு பயங்கரவாத சம்பவங்களும் நடந்தன.

பாராசைட்: 4 ஆஸ்கர் விருதுகளை வென்ற படத்தின் உண்மை களம் இதுதான்

அதைத்தொடர்ந்து, தனது நாட்டின் மீதான தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தென் கொரியா எடுக்க தொடங்கியது. குறிப்பாக, 1970ஆம் ஆண்டு சோல் நகரத்தில் இனி புதிதாக கட்டப்படும் அனைத்து கட்டடங்களிலும், அவசர காலத்தில் பதுங்கி குழிகளை போன்று செயல்படும் அடித்தளம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று தென் கொரிய அரசு உத்தரவிட்டது.

இந்த அறிவிப்பு அமலுக்கு வந்த சமயத்தில், பஞ்சிகாவை வாடகைக்கு விடுவது சட்டவிரோதமானதாக இருந்தது. ஆனால், 1980களில் சோலில் வீடுகளுக்கான பற்றாற்குறை ஏற்பட்டதால், பஞ்சிகாவை சட்டபூர்வமாக்கும் நிலைக்கு தென் கொரிய அரசு தள்ளப்பட்டது.

உலகின் 11ஆவது மிகப் பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடாக தென் கொரியா விளங்கினாலும், அங்கு மலிவான வீட்டுவசதிக்கு நிலவும் பற்றாற்குறை இளைஞர்களுக்கும், வறியவர்களுக்கு மிகுந்த பிரச்சனையை ஏற்படுத்துவதாக ஐக்கிய நாடுகள் சபை 2018ஆம் ஆண்டு வெளியிட்ட குறிப்பு ஒன்று கூறுகிறது.

பாராசைட்: 4 ஆஸ்கர் விருதுகளை வென்ற படத்தின் உண்மை களம் இதுதான்

கடந்த பத்தாண்டுகளில் பார்க்கும்போது, சோல் நகரத்தில் வசிக்கும் 35 வயதுக்கு உட்பட்டவர்களின் வருமானத்தில் சராசரியாக 50 சதவீதம் வீட்டு வாடகைக்கு சென்றுவிடுகிறது. எனவே, தொடர்ந்து அதிகரித்து வரும் வீடுகளின் வாடகையை சமாளிப்பதற்கு இதுபோன்ற அடித்தளங்களில் அமைந்துள்ள வீடுகளை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர்.

ஆனால், அதே சமயத்தில் பஞ்சிகாவில் வசிக்கும் பலரும் சமூகத்தில் இழிவுப்படுத்தப்படுகிறார்கள்.

"எனது வீடு எனக்கு முற்றிலும் போதுமானது. இதன் மூலம் நான் நிறைய பணத்தை சேமிக்க முடிகிறது. ஆனால், இதுபோன்ற வீட்டில் வசிப்பதால் என்னை சிலர் பரிதாபத்திற்குரியவனாக பார்ப்பதை என்னால் நிறுத்த முடியவில்லை" என்று ஓ கூறுகிறார்.

"கொரியாவில் ஒருவர் நல்ல காரையும், வீட்டையும் கொண்டிருப்பது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதனால்தான், நான் வசிக்கும் இடம் என் மீதான சமூகத்தின் பார்வையை மாற்றுகிறது."

https://www.bbc.com/tamil/arts-and-culture-51440576

Link to comment
Share on other sites

ஒஸ்கார் விருதினை வென்றது ஜோக்கர் திரைப்படம்

image_2aa94cd932.jpg92-வது ஒஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக தொடங்கியது. 

இந்த விருது விழாவை உலகமே ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டு ஹொலிவுட் சினிமாதுறையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. 

ஹொலிவுட் சினிமாவின் உயரிய விருது விழாவான இதில், கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. 

மேலும் இந்த விழா கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தொகுப்பாளர் இல்லாமல் நடைபெற்று வருகிறது.

விருதுகள் விவரம்:

* சிறந்த பின்னணி இசைக்கான ஒஸ்கார் விருதினை வென்றது ஜோக்கர் திரைப்படம்

* சிறந்த சர்வதேச படத்திற்கான ஒஸ்கார் விருதை வென்றது கொரியா படமான பாரசைட்

* சிறந்த அனிமோஷன் குறும்படத்துக்கான விருதை தட்டி சென்றது ஹேர் லவ்.

* சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதை தட்டி சென்றது ஜோஜோ ராபிட் திரைப்படம்.

* நடிகர் பிராட்பிட்டுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது.

* லாரா டெர்ன்-க்கு சிறந்த துணை நடிகைக்கான விருது.

* சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருது லிட்டில் வுமன் திரைப்படத்திற்காக ஜாக்குலின் டுரனுக்கு வழங்கப்பட்டது.

* சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான விருது 'ஒன்ஸ் அப் ஆன் அ டைம் இன் ஹொலிவுட்' திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.

* அமெரிக்கன் ஃபேக்டரி திரைப்படத்திற்கு சிறந்த ஆவணப் படத்திற்கான ஒஸ்கார் விருது.

* THE NEIGHBOURS WINDOW திரைப்படத்துக்கு சிறந்த அக்ஷன் குறும்படத்துக்கான விருது.

* சிறந்த ஒலி கலவைக்கான விருதை ‘1917’ திரைப்படம் வென்றது.

*  சிறந்த ஒலித்தொகுப்புக்கான ஒஸ்கார் விருதை போர்ட் v பெராரி திரைப்படம் வென்றத.

*  டாய் ஸ்டோரி-4 திரைப்படத்துக்கு சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கான ஒஸ்கார் விருது.

* 1917 திரைப்படத்துக்கு சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலிக்கலவை மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் என 3 பிரிவுகளில் ஒஸ்கார் விருதை பெற்றது.

* சிறந்த ஒப்பனை, சிகை அலங்காரத்துக்கான ஒஸ்கார் விருதை 'பாம் ஷெல்' திரைப்படம் தட்டிச் சென்றது.

* சிறந்த பாடலுக்கான ஒஸ்கார் விருதினை வென்றது ராக்கெட் மேன் திரைப்படத்தில் இடம்பெற்ற LOVE ME Again பாடல்..! 

http://www.tamilmirror.lk/cinema/ஒஸகர-வரதன-வனறத-ஜககர-தரபபடம/54-245215

Link to comment
Share on other sites

Oscars winners

Category winners are in bold.

Best picture 

1917
The Irishman
Jojo Rabbit
Joker
Little Women
Marriage Story
Once Upon a Time… in Hollywood
Parasite
Ford v Ferrari

Best actress 

Cynthia Erivo, Harriet
Renée Zellweger, Judy
Scarlett Johansson, Marriage Story
Charlize Theron, Bombshell
Saoirse Ronan, Little Women

Best actor 

Joaquin Phoenix, Joker
Leonardo DiCaprio, Once Upon a Time… in Hollywood
Antonio Banderas, Pain and Glory
Adam Driver, Marriage Story
Jonathan Pryce, The Two Popes

Best director 

Bong Joon-ho, Parasite
Sam Mendes, 1917
Todd Phillips, Joker
Martin Scorsese, The Irishman
Quentin Tarantino, Once Upon a Time… in Hollywood

Music (original song)

"I'm Standing With You" from Breakthrough
"Into The Unknown" from Frozen II
"Stand Up" from Harriet
"(I'm Gonna) Love Me Again" from Rocketman
"I Can't Let You Throw Yourself Away" from Toy Story 4
"Glasgow" from Wild Rose

Music (original score)

Joker
Little Women
Marriage Story
1917
Star Wars: The Rise of Skywalker

International feature film

France, Les Misérables
North Macedonia, Honeyland
Poland, Corpus Christi
South Korea, Parasite
Spain, Pain and Glory

Makeup and hairstyling 

Bombshell
Joker
Judy
Maleficent: Mistress of Evil
1917

Visual effects

Avengers: Endgame
The Irishman
The Lion King
1917
Star Wars: The Rise of Skywalker

Best film editing

The Irishman
Jojo Rabbit
Joker
Ford v Ferrari
Parasite

Best cinematography 

Roger Deakins, 1917
Rodrigo Prieto, The Irishman
Lawrence Sher, Joker
Jarin Blaschke, The Lighthouse
Robert Richardson, Once Upon a Time… in Hollywood

Best sound mixing

Ad Astra
Joker
1917
Ford v Ferrari
Once Upon a Time… in Hollywood

Best sound editing

1917
Ford v Ferrari
Joker
Once Upon a Time… in Hollywood
Star Wars: The Rise of Skywalker

Best supporting actress

Laura Dern, Marriage Story
Florence Pugh, Little Women
Margot Robbie, Bombshell
Kathy Bates, Richard Jewell
Scarlett Johansson, Jojo Rabbit

Documentary short feature 

In the Absence
Learning to Skateboard in a Warzone (If You're a Girl)
Life Overtakes Me
St. Louis Superman
Walk Run Cha-Cha

Documentary feature

American Factory
The Cave
The Edge of Democracy
For Sama
Honeyland

Best costume design

Sandy Powell & Christopher Peterson, The Irishman
Mark Bridges, Joker
Arianne Phillips, Once Upon a Time… in Hollywood
Jacqueline Durran, Little Women
Mayes C. Rubeo, Jojo Rabbit

Best production design 

Once Upon a Time… in Hollywood
The Irishman
1917
Jojo Rabbit
Parasite

Live-action short film 

Brotherhood
Nefta Football Club
The Neighbors' Window
Saria
A Sister

Best adapted screenplay

Steven Zaillian, The Irishman
Greta Gerwig, Little Women
Taika Waititi, Jojo Rabbit
Anthony McCarten, The Two Popes
Todd Phillips & Scott Silver, Joker

Best original screenplay

Rian Johnson, Knives Out
Noah Baumbach, Marriage Story
Sam Mendes & Krysty Wilson-Cairns, 1917
Quentin Tarantino, Once Upon a Time… in Hollywood
Bong Joon-ho, Parasite

Animated short film 

Dcera (Daughter)
Hair Love
Kitbull
Memorable
Sister

Animated feature film

How to Train Your Dragon: The Hidden World
I Lost My Body
Klaus
Missing Link
Toy Story 4

Best supporting actor 

Brad Pitt, Once Upon a Time… in Hollywood
Al Pacino, The Irishman
Joe Pesci, The Irishman
Anthony Hopkins, The Two Popes
Tom Hanks, A Beautiful Day in the Neighborhood

https://www.cnet.com/news/oscars-2020-winners-the-full-list-of-results/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.