Jump to content

இந்தியாவின் இராணுவ உதவியில்லாமல் யுத்தம் முடிந்திருக்காது – மஹிந்த


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

mahindha-3.jpg

இந்தியாவின் இராணுவ உதவியில்லாமல் யுத்தம் முடிந்திருக்காது – மஹிந்த

இந்தியாவின் உதவியில்லாமல் 2009 ஆண்டு யுத்தத்தை நிறைவு செய்திருக்க முடியாதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்துஸ்தான் ரைம்ஸ் செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த செவ்வியில் “இந்தியாவும் பாகிஸ்தானும் இலங்கையின் 30 ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உதவி உள்ளன.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் எங்களுக்கு ஆயுதங்களையும் விமானங்களையும் பாகிஸ்தான் அளித்தது. இந்தியாவும் கூட இலங்கைக்கு உதவி செய்தது. ஆனால் அதை நாங்கள் பகிரங்கப்படுத்தவில்லை.

இந்தியாவின் உதவி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தில் நாங்கள் வெற்றி பெற்றிருப்போம் என நினைக்கவில்லை.

இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக இந்தியா முன்னரே எச்சரிக்கை விடுத்தது. ஆனால் அப்போது இலங்கையில் இருந்த அரசாங்கம் இதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது. இது தொடர்பாக விசாரணைகளை நடத்தி வருகிறோம்.

எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் இந்தியாவின் உள்விவகாரங்களில் ஒருபோதும் தலையிடமாட்டோம். எங்களுடன் நட்பாக இருக்கும் நாடுகளுக்கு ஒவ்வொரு பார்வை இருக்கலாம். ஆனால் இந்திய விவகாரங்களில் தலையிடுவதில்லை என்பது எங்கள் நிலைப்பாடு.

ஏனெனில் இந்தியா எங்களது உறவு நாடு. மற்றவை நட்பு நாடுகள். இதைநான் பல முறை குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறேன். யுத்தத்தால் இலங்கை மிக மோசமாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டது. ஆகையால் நாட்டை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்ப வேண்டிய அவசியம் எங்களுக்கு இருக்கிறது.

இதற்கு சீனா உதவ முன்வரும் போது அதை நாங்கள் தவிர்க்க முடியாது. இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் நாங்கள் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள முயற்சிக்கிறோம். இதற்காகவே நிதியையும் ஒதுக்கியிருக்கிறோம்.

ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற தமிழர் அரசியல் கட்சிகள் வளர்ச்சியை விரும்பவில்லை. அதிகாரப் பகிர்வு, இனப் பிரச்சினைக்கு தீர்வு என்றே அவர்கள் பேசி வருகின்றனர். இவ்வாறு மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

http://athavannews.com/இந்தியாவின்-உதவி-இல்லாமல/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த இதைச் சொல்லிச் சொல்லியே போர்க்குற்றங்களில் இனப்படுகொலை குற்றங்களில்.. இருந்து தன்னையும் தான் சார்ந்தோரையும் ஹிந்தியாவை வைச்சே பாதுகாத்துக் கொள்வார். 

மகிந்த பலே கில்லாடி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இந்தியாவின் உதவியில்லாமல் 2009 ஆண்டு யுத்தத்தை நிறைவு செய்திருக்க முடியாதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இப்பிடி சொல்லிச்சொல்லியே காலத்தை கடத்திடுவாங்கள்.
நம்ம தல அடுத்த தீபாவளிக்கிடையிலை தீர்வு கிடைக்கும் எண்டு ரீல் விடுறமாதிரி....

Link to comment
Share on other sites

1 hour ago, nedukkalapoovan said:

மகிந்த இதைச் சொல்லிச் சொல்லியே போர்க்குற்றங்களில் இனப்படுகொலை குற்றங்களில்.. இருந்து தன்னையும் தான் சார்ந்தோரையும் ஹிந்தியாவை வைச்சே பாதுகாத்துக் கொள்வார். 

மகிந்த பலே கில்லாடி. 

எப்படி காப்பாற்றுவது ...???? இந்தியாவை எவரும் எடுக்க முடியாது.. மஹிந்த இந்தியவை பகைத்தால் போர் குற்ற விசாரணை அவரை தேடி வரும்.

Link to comment
Share on other sites

3 hours ago, தமிழ் சிறி said:

இந்தியாவின் இராணுவ உதவியில்லாமல் யுத்தம் முடிந்திருக்காது – மஹிந்த

முக்கிய போர்க்குற்றவாளிகளில் ஒருவரால் இந்தியாவும் இலங்கையும் கூட்டு போர்க்குற்றவாளிகள் என்று வாக்குமூலம் அளிக்கப்பட்டுள்ளது. 

Link to comment
Share on other sites

4 hours ago, தமிழ் சிறி said:

ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற தமிழர் அரசியல் கட்சிகள் வளர்ச்சியை விரும்பவில்லை.

வட ஹிந்திய கயவர்களும் தமிழின விரோதிகளும் ராஜபக்ச கொலைகாரக் கும்பல் கூறுவதில் திருப்பதி கொள்ளலாம்.

பழியை கூட்டமைப்பின் மீது போட்டு தப்ப முயலும் சிங்கள-பௌத்த அரச கொலைகாரக் கும்பலை அனைவரும் ஒன்றிணைந்து கண்டிக்க, போலிப்பிரச்சாரங்களை முறியடிக்க முன்வர வேண்டும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருநாள் இந்தியா உலகநாடுகளால் தூக்கி எறியப்படும் நாள் வரும். அப்போ இந்த சிங்களவன் தன் ஒரே எதிரி ஒழிந்தான், என்று பதிலுக்கு தானும் ஒரு குற்றச் சாட்டை இந்தியாமேல் போட்டுவிட்டு திரும்பிப் பாக்காமலே போய்விடும். அப்ப இந்தியா  கூவியோ குற்றம் சாட்டியோ பயனில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.