Jump to content

இலங்கை தேசிய கீதமும் தமிழர்களும்!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தேசிய கீதமும் தமிழர்களும்!!

மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பதுபோல இலங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வு முடிந்தும் அது தொடர்பான சச்சரவுகள் இன்னும் முடிந்தபாடில்லை.

சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசியகீதம் பாடவில்லை என்று பலரும் போர்க்கொடி தூக்குகிறார்கள். புதிய அரசு இப்படி செய்துவிட்டதே என்று குற்றம் சுமத்துகிறார்கள். 

கொடி பிடிப்பவருள் புலம்பெயர் தமிழர்கள் யாருமே தமது நிகழ்வுகளில் இலங்கைக் கொடியையும் பயன்படுத்துவதில்லை. இலங்கையின் தேசிய கீதத்தையும் பாடுவதில்லை. ஏன் அதை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. 

அது ஒரு புறம் இருக்க இலங்கை தேசிய கீதத்தின் வரலாற்றைப் பார்க்கலாம்.

1949 இல்தான் முதலில் இரு மொழிகளிலும் தேசியகீதம் பாடப்பட்டது. உண்மையில் இரண்டு தேசிய கீதங்கள், ("Namo Namo Matha" and "Sri Lanka Matha Pala Yasa Mahima") இரண்டு மொழிகளிலும் பாடப்பட்டன. (முதலாவது ஆனந்த சமரக்கோன் எழுதியது. இரண்டாவது P.B. Illangasinghe மற்றும் Lionel Edirisinghe எழுதியது).

1950 இல்தான் "Namo Namo Matha" தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. எனினும் அதில் மாற்றங்கள் செய்யப்பட்டு 1951 நவம்பர் மாதம் அரசினால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அது தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டது.  

1952 இல் D.S. சேனநாயக்க குதிரைவண்டி விபத்திலும் S.W.R.D. பண்டாரநாயக்க 1959இல் சுடப்படும் கொல்லப்பட்டதால் தேசிய கீதத்தில் உள்ள “Namo Namo Matha, Apa Sri Lanka" என்ற முதல்வரி துரதிர்ஷ்டமாக கருதப்பட்டு (அதனால்தான் இரண்டு பிரதம மந்திரிகள் இறந்ததாக எண்ணினர்) “Sri Lanka Matha, Apa Sri Lanka” என்று 1961 இல் மாற்றப்பட்டது. 

இதை ஏற்றுக் கொள்ள முடியாத, தேசிய கீதத்தை எழுதிய ஆனந்த சமரகோன் மனமுடைந்து ஏப்ரல் 1962 இல் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது.
 
இலங்கை தேசியகீதம் தமிழில் நல்லதம்பிப் புலவரால் மொழி பெயர்க்கப்பட்டிருந்தாலும் முதலில் 1949 க்குப் பின்னர் 2016 இல்தான் சுதந்திரதின நிகழ்வில் சுதந்திரச் சதுக்கத்தில் முதலில் தமிழில் பாடப்பட்டது என்று சொல்கிறார்கள்.

ஆனாலும் அதற்கு முன்னர் நீண்டகாலமாகவே வடக்கு கிழக்கில் நடைபெற்ற நிகழ்வுகளில் தமிழில் பாடப்பட்டு வந்துள்ளது.

இதற்கிடையில் 2009 இல், போர் முடிவடைந்த சூழலில் மகிந்த அரசு வடக்கிலும் கிழக்கிலும் தேசிய கீதம் தமிழில் பாடப்படுவதை விரும்பவில்லை. 

அரசு 2009 இல் போர் முடிந்த பின்னர் வடகிழக்கில் நிகழ்ந்த நிகழ்வுகளில் இராணுவ பிரசன்னத்தை உறுதிபடுத்திய அரசு, அத்தோடு  சிங்களத்தில் தேசியகீதம் பாடப்படுவதையும் உறுதிப்படுத்திக் கொண்டது. 

நல்லாட்சி அரசின் காலத்தில் கடந்த நாலு வருட காலத்தில் தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டு வந்தது. ரணில் – சம்பந்தன் ஐயாவின் தேனிலவின் பின்னர் 2019 இறுதியில் பதவிக்கு வந்த புதிய அரசு அதை முன்னெடுக்க விரும்பவில்லை. 

ஆனால் இவ்வருடம் கொழும்பில் தமிழில் பாடப்படாதபோதும் வவுனியாவில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் பாடப்படுள்ளது. 

கடந்த நாலு வருடங்களாக தேசியகீதம் தமிழிலும் பாடப்பட்டது மகிழ்ச்சியான விடயம்தான். ஆனால், அதனால் “நல்லாட்சி” நடைபெற்ற அந்த நாலு வருடங்களிலும் தமிழர்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட்டனவா? 

சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டார்களா? சுயாட்சி கிடைத்ததா? 

தமிழ் மொழி பேசும் மக்களுக்குள்ள பிரச்சனைகள் தீர்க்கப்பட்டனவா?. 

தமிழில் தேசிய கீதம் பாடப்படவில்லை என்கிற விடயத்தைத் தூக்கிப் பிடிப்பதற்கு அப்பால், நாம் பேச வேண்டிய, போராட வேண்டிய, பெற வேண்டிய பல விடயங்கள் இருக்கின்றனவே? 

அப்படியிருக்க தமிழில் பாடவேண்டும் என்று சண்டையிட்டு என்ன கிடைக்கப் போகிறது?   

1952 இல் D.S. சேனநாயக்கவும் 1959 இல் S.W.R.D. பண்டாரநாயக்கவும் கொல்லப்பட காரணமாக இருந்ததென்று நம்பப்படும் ஒரு தேசிய கீதம், அதை எழுதியவரே தற்கொலை செய்யக் காரணமாயிருந்த ஒரு தேசிய கீதத்தை தமிழில் பாடத்தான் வேண்டுமா?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கு பிலாப்பழத்தை விட பெரிய பிரச்சனை இருக்க....
பாதி கதலி வாழைப்பழ பிரச்சனையை தூக்கிப்பிடிச்சுக்கொண்டு சனம் திரியுது...
ஒரு கோட்டுக்கு பக்கத்திலை அதை விட பெரிய கோடு கீறி உள்ள பிரச்சனையும் இல்லாமல் பண்ணப் போகுதுகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.