Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

முற்றிலும் திரவ ஹைட்ரஜனால் இயங்கும் அதிநவீன சொகுசு கப்பல்.. ரூ.4,600 கோடிக்கு வாங்கிய பில்கேட்ஸ்.


Recommended Posts

மைக்ரோசாப்ட் நிறுவனரும் உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளவருமான பில்கேட்ஸ், மிக பிரமாண்டமான சொகுசு கப்பல் ஒன்றை வாங்கியுள்ளார்.

தாராளம்:
உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான பில்கேட்ஸ், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் மற்றும் பாதிப்பு ஏற்படுத்தாத முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பது, உலகின் ஆரோக்கியத்தை மேம்படுத்த செயல்படும் நிறுவனங்களுக்கு உதவுவது உள்ளிட்ட செயல்களுக்காக தொடர்ந்து தனது பணத்தை தாராளமாக செலவிட்டு வருகிறார்.


பிரமாண்ட கப்பல்:
சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்படும் பசுமை சொகுசு கப்பல்களை வாங்குவதில் அதிக முதலீடு செய்து வருகிறார். இதன் பொருட்டு
பில்கேட்ஸ் இந்திய மதிப்பில் ரூ.4,600 கோடி மதிப்புடைய சூப்பர் கப்பல் ஒன்றை வாங்க சமீபத்தில் ஆர்டர் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹைட்ரஜனில் இயங்கும் கப்பல்:
பில்கேட்ஸ் மிகவும் விரும்பி வாங்கியுள்ளதாக கூறப்படும் பிரமாண்டமான சூப்பர் சொகுசு கப்பல், முற்றிலும் திரவ ஹைட்ரஜனால் இயங்கும் என தெரிகிறது. மேலும் இதில் பல அதிநவீன வசதிகள் இடம்பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சினோட் (Sinot) என்ற டச்சு நிறுவனதால் இந்த சொகுசு கப்பல் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த கப்பல் 3,750 நாட்டிகல் மைல்கள் வரம்பில், 17 knots டாப் ஸ்பீடில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த கப்பலின் நீளம் 112 மீட்டர், அதாவது சுமார் 367 அடியாகும்.

Aqua ship

சவால்:
எரிபொருள் கலங்களுக்கு மின் ஆற்றலை வழங்கும் திரவ ஹைட்ரஜனால் இந்த சொகுசு கப்பல் இயங்கும் என சினோட் நிறுவனம் கூறியுள்ளது. மேலும் பில்கேட்ஸ் வாங்கியுள்ள சொகுசு கப்பல் பற்றி கூறியுள்ள சினோட், தொழில்நுட்பத்தில் மட்டுமல்லாமல் அழகியல் சார்ந்தும் இந்த சொகுசு கப்பலை வடிவமைத்து வருகிறோம். தவிர முழுமையாக செயல்படும் திரவ ஹைட்ரஜன் மற்றும் எரிபொருள் கலங்களை செயல்படுத்துவதும் கூட எங்களுக்கு சவாலாக இருக்கும் என கூறியுள்ளது.

அதிநவீன வசதிகள்:
இந்த பிரமாண்டமான சொகுசு கப்பல்கள் 5 தளங்களை கொண்டது. இதில் 2 வி.ஐ.பி ஸ்டேரூம்கள், பிரமாண்டமான ஒரு உரிமையாளர் காட்சி அரங்கம், 14 இரட்டைக் குழு அறைகள், 2 அதிகாரி அறைகள் மற்றும் ஒரு கேப்டன் அறை ஆகியவை அடக்கம். மேலும் இந்த கப்பலில் ஒரு உடற்பயிற்சி கூடம், ஒரு ஹைட்ரோ-மசாஜ் அறை , யோகா ஸ்டுடியோ, நீச்சல் குளம் அடங்கிய சுகாதார மற்றும் ஆரோக்கிய மையம் அமைக்கப்படும்.

நீச்சல் குளம், ஹெலிபேட், ஸ்பா மற்றும் உட்புறக் குளம் உள்ளிட்ட பல அதிநவீன வசதிகளை பில்கேட்ஸின் இந்த புதிய சொகுசு கப்பல் கொண்டுள்ளது. மேலும் வட்ட வடிவமைப்பிலான அற்புத படிக்கட்டுகள் மேல் தளத்திலிருந்து கீழ் தளத்திற்குச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் பற்றாக்குறை காரணமாக படகில் “டீசல் பேக்அப் ” இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பல்வேறு காரணங்களால் இந்த சொகுசு கப்பல் 2024-க்கு முன்னர் கடலுக்குச் செல்ல வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.

https://www.polimernews.com/dnews/99895/முற்றிலும்-திரவ-ஹைட்ரஜனால்இயங்கும்-அதிநவீன-சொகுசுகப்பல்..-ரூ.4,600-கோடிக்குவாங்கிய-பில்கேட்ஸ்.!

 

 

 

 

Bill Gates 'not buying our hydrogen yacht'

Billionaire Bill Gates has not commissioned a hydrogen-powered superyacht from designer Sinot, the firm has told the BBC.

It has been widely reported that Mr Gates ordered a £500m ($644m) luxury vessel, based on the concept which was displayed in Monaco in 2019.

Sinot said it had "no business relationship" with Bill Gates.

It added that that the concept yacht, called Aqua, was "not linked" to either him or any of his representatives.

"Aqua is a concept under development and has not been sold to Mr Gates," a spokeswoman said.

She added that it was shown "in Monaco [and] meant to build a better future, and inspire clients and the industry."

Bill Gates has been contacted by the BBC for comment.

The finished concept vessel would be 112 metres long, according to publicity material released by Sinot - although only a two-metre model has been built so far.

It would be capable of a top speed of 17 knots, and have a range of 3,750 nautical miles (6,945 kilometres).

It would also be powered by hydrogen fuel - a relatively green alternative, compared with those that produce greenhouse gases.

https://www.bbc.com/news/technology-51446663

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:   நிவர் புயல் தென்மேற்கு வங்கக்கடலில் கடந்த 3 மணி நேரமாக அதே இடத்தில் நிலை கொண்டுள்ளதுசென்னையிலிருந்து 450 கி.மீ., புதுச்சேரியிலிருந்து 410 கி.மீ. தொலைவிலேயே கடந்த 3 மணி நேரமாக நிவர் புயல் மையம் கொண்டுள்ளது.நிவர் புயல் நாளை மாலை கரையை கடக்கும் என கணிக்கப்பட்ட நிலையில் அதன் நகரும் வேகம் குறைந்து விட்டது.புயல் கரையை கடக்கும்போது அதிகபட்சமாக 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.   https://www.maalaimalar.com/news/topnews/2020/11/24125120/2103843/Tamil-News-Nivar-cyclone-Bay-of-Bengal-centered-3.vpf
  • ஊரடங்கிலிருந்து வெளியேறுவதற்கான இங்கிலாந்து அரசின் திட்டம் அபாயங்கள் நிறைந்தது - பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் எச்சரிக்கை ஊரடங்கிலிருந்து வெளியேறுவதற்கான இங்கிலாந்து அரசின்  திட்டம் அபாயங்கள் நிறைந்தது என்றும், இதனால் தேசிய சுகாதாரத்தில்  ஏற்படக்கூடிய பாதிப்பு ஆழ்ந்த கவலைக்குரியது என்றும் பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது. மார்ச் இறுதி வரை நீடிக்கும் புதிய கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை அறிவித்ததை அடுத்து, ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலக்கட்டத்திற்குள் இங்கிலாந்து காலடி எடுத்து வைக்கிறது என்று போரிஸ் ஜான்சன் எச்சரித்தார். மேலும், டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்கும் திருத்தப்பட்ட பிராந்திய மூன்று அடுக்கு கட்டுப்பாட்டு முறை குறித்த விவரங்களை பிரதமர் வெளியிட்டார்.இந்த நிலையில் அபாயங்கள் நிறைந்த ஒரு திட்டத்தை பிரதமர் வெளிப்படுத்தியுள்ளார் என பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் கவுன்சில் தலைவர் டாக்டர் சாந்த் நாக்பால் கூறினார். மேலும் கொரோனாவுக்கு எதிராக தற்போது வரை நாடு அடைந்துள்ள முன்னேற்றத்தை தவிர்க்கும் வகையில் மற்றும் பொதுமக்கள் செய்த கடினமான தியாகங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் பிரதமரின் புதிய திட்டம் உள்ளது என விமர்சித்துள்ளார் புதிய நடவடிக்கைகள் அக்டோபரை விட கடுமையானவை என்று பிரதமர் கூறுகிறார், உண்மையில் பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது, அதே நேரத்தில் தொற்று விகிதங்கள் மற்றும் கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது  மற்றும் இறப்புகள் அதிகமாக இருக்கும். வெளிப்புறத்தில் நடக்கும் நிகழ்வுகளில் 4,000 பேர் மற்றும் உட்புறங்களில் 1,000 பேர் வரை கலந்துக்கொள்ளலாம் என பிரதமர் அறிவித்துள்ளது மிகவும் கவலைக்குரியது. இரண்டாவது முழு ஊரங்கிற்கு வழிவகுத்த மூன்று அடுக்கு கட்டுப்பாடுகள் திட்டம் எதனால் தோல்வியடைந்தது என்பது தற்போது நமக்கு தெரியும், அரசாங்கம் மீண்டும் அதே தவறுகளை செய்து கொரோனா பரவுவதை அதிகரிக்க வழிவகுக்கக்கூடாது என டாக்டர் சாந்த் நாக்பால் கூறினார். https://www.dailythanthi.com/News/World/2020/11/24153954/British-Medical-Association-warns-Boris-Johnsons-lockdown.vpf  
  • தற்போது இக்குறைகள் இல்லை. நன்றி நிர்வாகம். 😊
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.