Jump to content

ஒட்டுண்ணி


vasee

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

ஒட்டுண்ணி

கொரிய திரைப்படமான பரசைட் திரைப்படம் அண்மையில் ஆங்கில எழுத்துருவில் பார்த்தேன் பல தரப்பும் மிக சிறந்த படைப்பு என்ற கருத்திற்கமைய இத்திரைப்படத்தை பார்த்தேன் படம் முடிவில் படம் பார்க்கலாம் இரகம் ஆனால் இன்று இத்திரைப்படம் சிற்ந்த படத்திற்கான ஒஸ்கார் விருதினைப்பெற்றுள்ள தகவலை அறிந்தேன் இத்திரைப்படம் தொடர்பாக ஒரு புது திரி ஒன்றினை ஆரம்பித்த நோக்கம் இத்திரைப்படம் தொடர்பாக கள உறவுகள் என்னநினைக்கிறீர்கள் என்ற உங்கள் பார்வை என்ன என்பதே

Parasite (2019 film).png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரைக்கதை மிக எதார்த்தமான கதை என்றாலும் படத்தின் முக்கிய பகுதியாக இறுதிப்பகுதியில் குடும்பத்தலைவனால் ஒரு சம்பவம் நிகழும் அக்காட்சி குற்ப்பிடத்தக்க கலவையான உணர்வுகளை என்னிடம் ஏற்படுத்தியிருந்தது, பலவருடங்களுக்கு முன் சேகுவேராவின் சுயசரிதையில் படித்த ஒரு விடயம் எனது நினைவில்  உள்ள ஒரு விடயம் அக்காட்சியில் ஒத்துப்போவது போல் இருந்தது ஒரு வீதி சுற்று காவலில் இருந்த படையினரை பதுங்கி தாக்குவது திட்டம் ஆனால் தாக்குதல் திட்டம் திட்டமிட்டதற்கு முன்பாக சேகுவேரா சண்டையினை ஆரம்பித்திருப்பார் பின்னர் ஏன் அவ்வாறு செய்தேன் என மீட்டுப்பார்த்த சேகுவேரா படையினன் ஒருவன் அந்த நாளை அற்புதமான நாள் என்று சொன்னதாக அதுவே அவர்களது திட்டமிட்ட படி செயற்பட முடியாமல் செய்த்து " தீதும் நன்றும் பிறர் தர வரா". மற்றும் ஒரு காட்சியில் மகன் தந்தையிடம் என்னதிட்டம் என்று கேட்டத்திற்கு தந்தை சொல்லும் பதில்.


என்னதான் தில்லு முள்ளு செய்தாலும் அவர்களது நேர்மை மனிதாபிமானம் காட்டுவதற்கு போலி சான்றிதழ் மற்றும் தமது போட்டியாளர்கள் பசியாயிருப்பார்கள் என்று உணவு கொடுத்து விடுவது.
ஒரே இரவில் இரண்டு வேறுவிதமான வாழ்க்கை முறை காட்சிப்படுத்தியிருப்பது என்பது போன்ற சில காட்சிகள் மனதில் நிற்கின்றது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.