Jump to content

சுவிஸ் தூதரக பெண் ஊழியர் தொட்பான விசாரணைகள் இடம்பெறுவதாக சி.ஐ.டி அறிவிப்பு!


Recommended Posts

கடத்தி வைக்கப்பட்டு பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்பட்ட, பொய்யான தகவல்களை வழங்கி தேசத்தை அசெளகரியபப்டுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் வீசா பிரிவின் பெண் ஊழியர் கானியா பனிஸ்டர் பிரான்சிஸ் குறித்த தொலைபேசி தரவுகளை மையப்படுத்திய விசாரணைகள் தொடர்வதாக சி.ஐ.டி. இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்தது.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய பெற்றுக்கொள்ளப்பட்ட, சுவிட்சர்லாந்து தூதரகத்தின் வீசா பிரிவின் சிரேஷ்ட குடிவரவு குடியகல்வு அதிகாரி கானியா பனிஸ்டர் பிரான்சிஸ், அவரது கணவர் மற்றும் அவரது மகளின் வகுப்பாசிரியையாக கடமையாற்றிருந்த ஆசிரியை ஒருவர் ஆகிய மூவரின் துல்லியமான தொலைபேசி அழைப்புக்கள், கோபுரத் தகவல்களை சிறப்புக் குழு ஊடாக பகுப்பாய்வு செய்து இவ் விசாரணைகள் இடம்பெறுவதாக கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்னவுக்கு சி.ஐ.டி.யினரால் அறிவிக்கப்பட்டது.

கடத்தி தடுத்து வைக்கப்பட்டு பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் வீசா பிரிவின் சிரேஷ்ட குடிவரவு குடியகழ்வு அதிகாரி கானியா பனிஸ்ட பிரான்சிஸை குற்றப்புலனாய்வு திணைக்களம் கடந்த 2019 டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி மாலை கைது செய்தது.

நீண்ட விசாரணைகளின் பின்னர் சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய தேசத்தை அசௌகரியத்துக்குட்படுத்தியமை, பொய் சாட்சியளித்தமை ஆகிய இரு குற்றச்சாட்டுக்களின் கீழ் கானியா கைது செய்யப்பட்டு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் கடந்த 2019 டிசம்பர் 30 ஆம் திகதி அவருக்கு பிணையளிக்கப்பட்டது.

இந் நிலையில் இந்த விவகாரம் குறித்த விசாரணைகள் மீள இன்று கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போதே சி.ஐ.டி. மேற்கண்ட விடயத்தை மன்றில் அறிவித்தது.

https://www.virakesari.lk/article/75413

 

Link to comment
Share on other sites

சுவிஸ் தூதரக பணியாளர் விவகாரம் - பத்திரிகையாளரிடம் சிஐடி விசாரணை

சுவிஸ் தூதரக பணியாளர் விவகாரம் தொடர்பில் பத்திரிகையாளர் ஒருவரை இலங்கை குற்றப்புலானய்வு திணைக்களத்தினர் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.

தூதரக பெண் பணியாளர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் பத்திரிகையாளர் அனுரங்கி சிங் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் என சிஐடியினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.


thumb_swiss.jpg

சண்டே ஒப்சேவரின் முன்னாள் ஆசிரியர் தரிசா பஸ்ரியன் தொடர்பிலும் சுவிஸ் தூதரக விவகாரத்தில் அவருக்;கு இருக்ககூடிய தொடர்புகள் குறித்தும் பத்திரிகையாளரிடம் விசாரணைகள் இடம்பெற்றதாக சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.

அனுரங்கி சிங் பல மணிநேரம் விசாரணைக்குட்படுத்தப்பட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://www.virakesari.lk/article/75420

Link to comment
Share on other sites

4 hours ago, ampanai said:

அனுரங்கி சிங் பல மணிநேரம் விசாரணைக்குட்படுத்தப்பட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடத்தின ஆட்களை கண்டுபிடிக்கிற ஐடியா இல்லையோ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.