Sign in to follow this  
ampanai

‘மாகாண சபை என்ற அலகில் பெயரளவிலேயே அதிகாரங்கள்’

Recommended Posts

image_6903729922.jpg

ஏ.எச்.ஏ. ஹுஸைன், கே.எல்.ரி.யுதாஜித்

மத்திய அரசாங்கம்,   மாகாண சபை என்கின்ற அலகை வெறுமனே பெயரளவில் வைத்துக் கொண்டு, அதிகாரப் பகிர்வு, நிதியொதுக்கீடுகளை வெகுவாகக் கட்டுப்படுத்தியுள்ளதாக, மட்டக்களப்பு மாநகர மேயர் தி.சரவணபவன், பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்களை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் மேயர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன், மட்டக்களப்பு மாநகர சபைக்கான விஜயமொன்றை, நேற்று (11)  மேற்கொண்டார்.

இதன்போது, கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும், உள்ளூராட்சி சபைகளுக்கு மத்திய அரசாங்கத்திடமிருந்து கிடைக்கப் பெறும் ஒதுக்கீடுகள் உள்ளிட்ட மாநகர சபையின் எதிர்கால அபிவிருத்தி இலக்குகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.

அத்துடன், மாநகர சபையால் யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து செயற்படுத்தப்பட்டுவரும் சிறுவர், பெண்கள் பாதுகாப்பு நகரச் செயற்றிட்டம் தொடர்பான விடயங்களும் எடுத்துரைக்கப்பட்டன.

மாநகர சபைக்குள் மேற்கொள்ளத் திட்டமிடப்பிட்டுள்ள அபிவிருத்தி செயற்பாடுகளுக்கான முதலீட்டாளர்களைப் பெற்றுக்கொள்வதில் உள்ள பிராயத்தனங்கள் தொடர்பாகவும் உயர்ஸ்தானிகருக்கு எடுத்துக் கூறப்பட்டன.

இங்கு கலந்துரையாடப்பட்ட விடங்கள் தொடர்பில் தான் கவனம் செலுத்துவதாகவும், பிரித்தானியாவிடம் இருந்து மட்டக்களப்புக்கு முதலீடுகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் உயர்ஸ்தானிகர் உறுதியளித்தார்.

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/மாகாண-சபை-என்ற-அலகில்-பெயரளவிலேயே-அதிகாரங்கள்/73-245391

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, ampanai said:

மத்திய அரசாங்கம்,   மாகாண சபை என்கின்ற அலகை வெறுமனே பெயரளவில் வைத்துக் கொண்டு, அதிகாரப் பகிர்வு, நிதியொதுக்கீடுகளை வெகுவாகக் கட்டுப்படுத்தியுள்ளதாக, மட்டக்களப்பு மாநகர மேயர் தி.சரவணபவன், பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்துள்ளார்.

மாகாணசபையின் அதிகாரங்கள், நிதியொதுக்கீடுகள் பற்றிய உண்மைகள் கிழக்கு மாகாணத்தில் இருந்து வெளிவருகிறது.

தமிழினப் படுகொலைகாரர்களுக்கு முண்டு கொடுப்பவர்கள் இவற்றை கவனிக்காமல் சேறடிப்பதை தமது தொழிலாகக் கொண்டுள்ளனர்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, போல் said:

மாகாணசபையின் அதிகாரங்கள், நிதியொதுக்கீடுகள் பற்றிய உண்மைகள் கிழக்கு மாகாணத்தில் இருந்து வெளிவருகிறது.

தமிழினப் படுகொலைகாரர்களுக்கு முண்டு கொடுப்பவர்கள் இவற்றை கவனிக்காமல் சேறடிப்பதை தமது தொழிலாகக் கொண்டுள்ளனர்.

அது சரி। அங்கு அதிகாரத்தை சோனவனுக்கு கொடுத்துப்போட்டு இப்போ புலம்பி என்ன பிரயோசனம்? அவன் தனது பிரதேசம் முழுவதையும் வளப்படுத்தி , பெரிய நகரங்களாக எல்லா கடடமைப்புக்களுடனும் அமைத்து விடடான। நீங்கள் எல்லாத்தையும் கோடடை விட்டிடு இப்போ குய்யோ முய்யோ எண்டு சத்தம்போடத்தான் முடியும்। அவனுக்கு முடியுமெண்டால் உங்களுக்கு ஏண்டா முடியாது? இப்படியே எதிர்மறையா சிந்தித்து , கதைத்து ஒண்ணுமே நடக்கப்போவதில்லை। போய்  எதாவது வழியப்பருங்க।

Share this post


Link to post
Share on other sites

நாங்க மற்றவனை நோக்கி ஒருவிரலை நீட்டினால் மூன்று விரல்கள் எங்களை நோக்கி நீட்டும் என்பது இதுதானோ. பொதுவெளியில் தனிப்பட்ட தாக்குதல்கள் வேண்டாமே. நம்மகிட்ட ஒத்துமையே வராதா? வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனும் அண்மையில் இதே விடயங்கள் பற்றி காட்டமாக சொல்லியிருந்தார்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • அகல் விளக்குகளை  ஏற்றச் சொன்ன பிரதமர்.. பட்டாசு வெடித்துக் கொண்டாடி விட்ட மக்கள்.!! சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று இரவு 9 மணிக்கு மின்விளக்குகளை அணைத்துவிட்டு அகல் விளக்கு அல்லது செல்போன் டார்ச்சுகளை ஒளிரவிட பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இந்த நிலையில் விளக்குகளை அணைத்த கையோடு பொதுமக்கள் பட்டாசுகளையும் வெடித்தனர்.கொரோனாவை முன்னிட்டு நாடு முழுவதும் லாக்டவுன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி இன்று இரவு 9 மணிக்கு பொதுமக்கள் மின்விளக்குகளை 9 நிமிடங்கள் நிறுத்த வேண்டும்; அப்போது அகல்விளக்குகள், மெழுகுவர்த்திகள், டார்ச் லைட், செல்போன் லைட் ஆகியவற்றை ஒளிர விடவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.இதனை ஏற்று இன்று நாடு முழுவதும் 9 மணிக்கு மின்விளக்குகள் அணைக்கப்பட்டன. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தீபங்கள் ஏற்றப்பட்டு, செல்போன் லைட்டுகள் ஒளிரவிடப்பட்டன.அத்துடன் நாட்டின் பல பகுதிகளிலும் இடைவிடாமல் பட்டாசுகளும் வெடிக்கப்பட்டன. பிரதமர் மோடி இரவு 9 மணி முதல் 9 நிமிடங்களுக்குத்தான் இந்த விளக்கேற்றுதலை கடைபிடிக்க வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் பொதுமக்களோ தீபாவளியைப் போல இடைவிடாமல் பட்டாசு வெடித்தனர். தற்போதைய லாக்டவுனால் காற்றின் மாசு குறைந்திருந்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் இன்று இரவு ஒரே நேரத்தில் நாட்டின் பல பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதும் சர்ச்சையாகி உள்ளது. பட்டாசுகளுடன் அமர்க்களம் லாக்டவுனால் 10 நாட்களாக வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தனர் பொதுமக்கள். எந்த ஒரு கொண்டாட்டமும் எதுவும் இல்லை.வீட்டின் நான்கு சுவர்களையும் மோட்டு வலையும்தான் பார்த்து கொண்டிருந்தனர் பொதுமக்கள். இப்போது பிரதமர் மோடி விடுத்த அழைப்பை பயன்படுத்தி பட்டாசுகளையும் வெடித்து கொண்டாடி தீர்த்துவிட்டனர் நம்ம மகா ஜனங்கள். https://tamil.oneindia.com/news/chennai/people-celebrates-pm-modi-s-invite-with-firecrackers-381820.html
    • ஆளே இல்லாத இடத்தில் தெளித்து என்ன செய்ய? தோட்டத்துக்கு மட்டுமே நல்லது.
    • பிரித்தானியாவில் வைரஸ் தொற்றுக்காக 5G கோபுரங்கள் எரிக்கப்பட்டன! கொறோனாவைரஸ் தொற்றுக்குக் காரணமெனெ வதந்திகள் பரவியதைத் தொடர்ந்து பிரித்தானியாவில் மூன்று 5G தொலைபேசிக் கோபுரங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. 5G கோபுரங்களிலிருந்து பரிவர்த்தனையாகும் உயர் அதிர்வெண் அலைகள் வைரஸ் தொற்றைத் தீவிரமாக்குகின்றன என்ற செய்தியை யாரோ பரவவிட்டதைத் தொடர்ந்து இச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. “இது முற்று முழுதும் பொய்யான தகவல். அத்தோடு, நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு, இக் காலகட்டத்தில், எமக்கு மிகவும் அத்தியாவசியமான ஒரு கருவி அது. இது மிகவும் கோழ்த்தனமான ஒரு நடவ்டிக்கை” எனத் தேசிய சுகாதார சேவைகள் வாரியத் தலைவர் ஸ்டீபன் போவிஸ் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். சீனாவின் வூஹான் நகரில் 5G கோபுரங்களை நிறுவிய பின்னரே SARS-CoV-2 வைரஸ் சீனாவிலும், இதர நாடுகளிலும் பரவத் தொடங்கியது என்ற பொய்யான தகவல் சமீப காலங்களில் வலைத்தளங்களில் வலம் வந்துகொண்டிருக்கிறது. ஆனால் யப்பான், ஈரான் போன்ற நாடுகளில் இன்னும் 5G கோபுரங்கள் எதுவும் நிறுவப்படவில்லையாயினும் அங்கும் வைரஸ் பரவி வருகிறது என்பதைச் இச் செய்தியைப் பரப்புபவர்கள் உணரவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.   பேமிங்க்ஹாம், மேர்சிசைட் ஆகிய நகரங்களில் 5G கோபுரங்கள் தீப்பற்றி எரியும் காணொளிகள் பரவலாகி வருகிறது. 5G அலைகளினால் உடல் நலத்திற்குக் கேடு விளையாது என நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் பிரித்தானிய பத்திரிகை ஒன்று 5G அலைக்கற்றைகளினால் உடலுக்குத் தீங்கு விளையலாம் எனச் செய்தி வெளியிட்டிருந்தது. சர்வதேச வரைமுறைகளுக்கு அமையவே இத் தொழில்நுட்பம் பாவிக்கப்படுகிரது என இத்துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இப் பொய்த் தகவல், முகநூல், யூ-டியூப், இன்ஸ்டாகிராம் தளங்களினூடாகப் பல லட்சம் பாவனையாளரைச் சென்றடைந்திருக்கிறது. சில நம்பகத்தன்மையுள்ள கணக்காளர்களும் இச் செய்தியைப் பகிர்ந்து வருகிறார்கள். ஜனவரி பிற்பகுதியிலிருந்து இப்படியான செய்திகள் வலம் வருகின்றன. இச் செய்திகளில் ஒன்று, 5G அலைகள் மனிதரின் நிர்ப்பீடன ஆற்றலை (immune system) பாதிப்பதால் வைரஸ் தொற்றிக்கொள்ள ஏதுவாகிறது என்கிறது. இன்னுமொரு செய்தி, 5G அலைகள் வைரஸ்களைக் காவிச் செல்கின்றன என்கிறது. இந்த இரண்டுமே உண்மைகளற்ற குப்பைகள் எனச் சாடுகிறார் றெடிங்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, கல உயிரியல் பேராசிரியர் டாக்டர் சைமன் கிளார்க். கோவிட்-19 தொற்றுக்கு, உலகம் முழுவதும் இதுவரை 1.2 மில்லியன் மக்கள் ஆளாகியிருக்கிறார்கள். அதில் 312,000 பேர் அமெரிக்காவிலும், 130,759 பேர் ஸ்பெயினிலும், 124,632 பேர் இத்தாலியிலும், 96,000 பேர் ஜேர்மனியிலும் உள்ளனர். https://marumoli.com/பிரித்தானியாவில்-வைரஸ்-த/?fbclid=IwAR1HFxsOzCkczqaAbBkgNVg6cav-GiKLJRtDxT-gSISL6FU8XVU3VMrbo4g
    • அவர்களை பேபி பூமர்ஸ் என்று அழைப்பது உண்டு அநேகர் 55 வயதில் பென்ஷன் எடுத்தவர்கள் காப்புறுதி க்கு who  மூலம் ஆப்பு அடித்து விட்டினம் பண்டமிக் என்று தொத்து  கொள்ளை நோய் களுக்கு அநேக காப்புறுதி நிறுவனம்கள் கவர் பண்ணாது இங்கு களத்தில்  யாராவது  காப்புறுதி எடுத்து இருந்தால் பண்டமிக் எனப்படும் கொள்ளை நோய்க்கு கவர் பண்ணுமோ எண்டு உறுதிப்படுத்தவும் .
    • கொரோனா போறதுக்கு... வழியை விடுங்க(டா)