Jump to content

பிரதமர் மஹிந்தவின் கோரிக்கையை இந்தியா ஏற்றுக்கொள்ள வாய்ப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Mahinda-Rajapaksa.jpg

பிரதமர் மஹிந்தவின் கோரிக்கையை இந்தியா ஏற்றுக்கொள்ள வாய்ப்பு

இந்தியாவுக்கு இலங்கை தரவேண்டிய 120 மில்லியன் கடன்களை திருப்பிச் செலுத்துவதை இடைநிறுத்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த கோரிக்கைக்கு சாதகமான பதில் இந்தியாவிடம் இருந்து கிடைக்கும் என ஆங்கில ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

4 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு கடந்த வாரம் இந்தியா சென்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, டெல்லியில் இடம்பெற்ற நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போதே இக்கோரிக்கையினை விடுத்திருந்தார்.

இந்நிலையில் குறித்த கோரிக்கைக்கு இந்திய அமைச்சரவை ஒப்புதல் பெற்ற பின்னரே இந்திய அரசாங்கம் பிரதமரின் கோரிக்கைக்கு பதிலளிக்க முடியும்.

இந்தியாவிற்கு இலங்கை திருப்பி செலுத்த வேண்டிய கடன் நிலுவை வட்டியுடன் 962 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். அத்தோடு இந்த ஆண்டு மட்டும் வட்டியுடன் 169.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை திருப்பி செலுத்த வேண்டும்.

அதன்பிரகாரம் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டுக்குள் 182 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் 2022 ஆம் ஆண்டில் 168 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் திருப்பி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இலங்கை அரசாங்கம் உள்ளது.

இதேவேளை சீனாவில் இருந்தும்  மிகப்பெரிய அளவில் அதாவது 5.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை கடனாக பெற்றுள்ளது. அதில் இந்த ஆண்டு மட்டும் 674.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை அரசாங்கம் மீள செலுத்த வேண்டும்.

இருப்பினும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்காக 400 மில்லியன் டொலர்களை இந்தியா கடனாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/india-likely-to-agree-to-pms-request/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இந்நிலையில் குறித்த கோரிக்கைக்கு இந்திய அமைச்சரவை ஒப்புதல் பெற்ற பின்னரே இந்திய அரசாங்கம் பிரதமரின் கோரிக்கைக்கு பதிலளிக்க முடியும்.

பலாலியை தந்தால் இந்திய பாராளுமன்றம் கடனை தள்ளுபடி செய்யும்

Link to comment
Share on other sites

ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்। இல்லாவிட்ட்தால் இன்னும் சீன பக்கம் பொய் விடுவார்கள் எண்டு தெரியும்। ராஜபக்சேவுக்கும் தெரியும் இந்தியாக்காரனை எப்படி மடக்க வேண்டுமென்று। இந்தியாக்காரனுக்கு முந்தி சீனாக்காரன் தன்னிடம் வாங்கிய கடனுக்கு இப்படி இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் பிரச்சினையாகி விடும்। எனவே இந்தியக்காரன் அதட்கு முன்னர் சலூட் (Salute ) அடித்துவிடுவான்। 

Link to comment
Share on other sites

9 hours ago, தமிழ் சிறி said:

இதேவேளை சீனாவில் இருந்தும்  மிகப்பெரிய அளவில் அதாவது 5.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை கடனாக பெற்றுள்ளது. அதில் இந்த ஆண்டு மட்டும் 674.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை அரசாங்கம் மீள செலுத்த வேண்டும்.

இதற்கு அமெரிக்காவிடம் எம்.சி.சி. ஊடாக கடனை பெறலாம்.

பின்னர், அதை அடைக்க .... இன்னொரு நாட்டில் கடன் பெறலாம் இல்லை நாட்டை விற்கலாம்.

Link to comment
Share on other sites

14 hours ago, ampanai said:

இதற்கு அமெரிக்காவிடம் எம்.சி.சி. ஊடாக கடனை பெறலாம்.

பின்னர், அதை அடைக்க .... இன்னொரு நாட்டில் கடன் பெறலாம் இல்லை நாட்டை விற்கலாம்.

MCC  ஊடாக கிடப்பது கடன் இல்லை। அந்த 500 மில்லியன் டொலரும் அன்பளிப்பாக வழங்கப்பட இருக்கிறது। இந்த அரசுக்கு அதை வாங்க,ஒப்பந்தத்தை கைச்சாத்திட விருப்பம் இருந்தாலும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் இதைப்பற்றி அதிகம் உளறினபடியால் சிக்கலில் இருக்கிறார்கள்। இப்போது அதை ஆராய்கிறோம், குழு அமைத்திருக்கிறோம் எண்டு கதை விடுகிறார்கள்। நோக்கம் எல்லாம் எல்லாம் அதை எப்படியாவது , நாட்டிடை அடகு வைத்தாவது அதை கைப்பற்ற வேண்டுமென்பதே।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ampanai said:

இதற்கு அமெரிக்காவிடம் எம்.சி.சி. ஊடாக கடனை பெறலாம்.

பின்னர், அதை அடைக்க .... இன்னொரு நாட்டில் கடன் பெறலாம் இல்லை நாட்டை விற்கலாம்.

அண்ணை.. அந்த பழைய கடன்..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களின் உரிமைக்கு ஆதரவான வலுவான அரசு தமிழகத்தில் இல்லாத நிலையிலும்..

ஈழத்தில் ஹிந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய விடுதலைப்புலிகள் போன்ற ஒரு கொள்கை மிக்க வலுவான போராட்ட அமைப்பு இல்லாத நிலையிலும்..

ஈழத்து தமிழ் அரசியல் என்பது ஒரு ஒற்றுமையற்ற பலவீனமான சுயநலப் போக்கில் உள்ளதும்.. 

ஹிந்தியா சொறீலங்காவின் எல்லா ஆட்டத்துக்கும் துணிந்து ஆமாப் போடும் நிலை தான் இன்றுள்ளது.

இதனை மாற்றக் கூடிய வலு ஈழத்திலோ... தமிழகத்திலோ தமிழர்களுக்கு இன்றில்லை.. இதுவே யதார்த்தம்.

மற்றும்படி ஹிந்தியா ஈழத்தமிழருக்கு எதுவும் நல்லது பண்ணும் என்று இலவு காத்திருப்பது யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியாத..  தமிழர்களின் பரிதாபமே தவிர வேறில்லை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.