Jump to content

அமைச்சரவை மறுசீரமைப்பில் ஜூலியன் ஸ்மித் – ஆன்ட்ரியா லீட்சம் – எஸ்தர் மக்வே நீக்கம்


Recommended Posts

அமைச்சரவை மறுசீரமைப்பில் ஜூலியன் ஸ்மித் – ஆன்ட்ரியா லீட்சம் – எஸ்தர் மக்வே நீக்கம்

 

by : S.K.Guna

Julian-Smith-720x450.jpg

பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அமைச்சரவை மறுசீரமைப்பைத் தொடங்கியுள்ள நிலையில் வடஅயர்லாந்துக்கான அமைச்சர் ஜூலியன் ஸ்மித் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ஆன்ட்ரியா லீட்சம் ஆகியோர் பதவிகளை இழந்துள்ளனர்.

பதவி நீக்கம் செய்யப்பட்ட முதல் சிரேஸ்ர அமைச்சர் ஜூலியன் ஸ்மித் 204 நாட்கள் குறித்த அமைச்சு பொறுப்பில் இருந்தார்.

இந்நிலையில், வீடமைப்பு அமைச்சராக இருந்த எஸ்தர் மக்வே அமைச்சரவை மறுசீரமைப்பின்போது தனது பதவியை இழந்துள்ளார்.

பதவி நீக்கம் செய்யப்பட்ட வடஅயர்லாந்துக்கான அமைச்சர் ஜூலியன் ஸ்மித் குறித்து ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியின் தலைவி ஆர்லீன் ஃபொஸ்ரர் கூறுகையில்;

வடஅயர்லாந்துக்கான அதிகாரப் பகிர்வை மீட்டெடுப்பதில் ஜூலியன் ஸ்மித் செய்த உதவிக்கு நன்றி தெரிவிக்க சிறிது நேரத்திற்கு முன்பு அவருடன் உரையாடினேன்.

அந்த அமைச்சுக்காக அவரின் அர்ப்பணிப்பு அளவிட முடியாதது. அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள். எப்போதும் அவரை வரவேற்க வடஅயர்லாந்து தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.

நன்றி standard.co.uk

http://athavannews.com/அமைச்சரவை-மறுசீரமைப்பில/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் மட்டுமல்ல.. பாகிஸ்தான் பின்னணி நிதியமைச்சரும் (யாவிட்) பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்.

இவரின் இடத்துக்கு பஞ்சாபிய பின்னணியில் வந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.