Jump to content

இலங்கையர்கள் மூலம் வளர்ந்த பங்களாதேஷ் கிரிக்கெட் அணி


Recommended Posts

இலங்கையர்கள் மூலம் வளர்ந்த பங்களாதேஷ் கிரிக்கெட் அணி

 
Untitled-1-441-696x464.jpg
 

கடந்த வாரம் தென்னாபிரிக்காவில் நடைபெற்று முடிந்த ஐ.சி.சி. இன் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத்தினை தமது அணி வென்றதன் மூலம் இறுதியாக கிரிக்கெட் உலகக் கிண்ணம் வெல்லும் முயற்சி ஒன்றில் வெற்றி பெற்றிருக்கின்றது பங்களாதேஷ் கிரிக்கெட்.  

பங்களாதேஷின் இளம் அணியே உலகக் கிண்ணத்தை வென்ற நிலையில், ஐ.சி.சி. இன் தொடர்களில் அதன் சிரேஷ்ட கிரிக்கெட் அணியின் அண்மைக்கால பதிவுகளும் சிறப்பாகவே அமைந்திருந்தன.

இது இப்படியிருக்க, பங்களாதேஷ் நடைமுறை கிரிக்கெட் உலகில் ஒரு சவால் மிக்க கிரிக்கெட் அணியாக உருவாக இலங்கையர்கள் இருவரின் முக்கிய பங்களிப்பு காரணமாக இருந்தது. அந்த இலங்கையர்கள் யார்? அவர்கள் பற்றி ஒரு முறை நோக்குவோம்.   

மாற்றத்தை ஆரம்பித்த சந்திக ஹதுருசிங்க 

சந்திக ஹதுருசிங்க இலங்கையின் கிரிக்கெட் இரசிகர்களுக்கு பரீட்சயமான ஒரு பெயர். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளரான ஹதுருசிங்க, பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும் கூட. கடந்த 2014ஆம் ஆண்டு நிறைவடைந்த T20 உலகக் கிண்ணத்திற்கு பின்னர் பங்களாதேஷ் சிரேஷ்ட கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஹதுருசிங்க மாறினார்.  

ஹதுருசிங்க தலைமைப் பயிற்சியாளர் பதவியினை ஏற்றதன் பின்னர் தோல்விகளையே தொடர்ந்து பார்த்து பழக்கப்பட்டிருந்த பங்களாதேஷ் கிரிக்கெட் அணியினர், வேறுவிதமான அணியாக உருவெடுக்கத் தொடங்கியிருந்தனர். 

அந்தவகையில், பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பொற்காலம் ஹதுருசிங்கவின் வருகையோடு ஆரம்பித்தது. ஹதுருசிங்கவின் ஆளுகைக்குள் வந்த பங்களாதேஷ் கிரிக்கெட் அணியினர் ஒருநாள் தொடர்களில் முதல் தடவையாக இந்தியா, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளை வீழ்த்தினர். 

அதேநேரம், கிரிக்கெட்டின் நீண்ட வடிவமான டெஸ்ட் போட்டிகளிலும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியினர் ஹதுருசிங்கவின் ஆளுகையில் சிறந்த அணியாக உருவெடுத்தனர். இலங்கையினை சேர்ந்த ஏனைய சிறந்த கிரிக்கெட் வீரர்களான ஷம்பக்க ராமநாயக்க, திலான் சமரவீர ஆகியோரையும் பங்களாதேஷின் பயிற்சியாளர் குழாத்திற்குள் இணைத்த ஹதுருசிங்க, பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இலங்கை, அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளை டெஸ்ட் போட்டிகளில் முதல்முறையாக தோற்கடிக்க அவ்வணியை வழிநடாத்தியிருந்தார். 

இது மட்டுமின்றி, பங்களாதேஷ் கிரிக்கெட் அணியினர், 2017ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணம், 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ணம் போன்ற கிரிக்கெட் தொடர்களிலும் நேரடித் தகுதியினைப் பெற சந்திக ஹதுருசிங்க முக்கிய பங்கு வகித்திருந்தார். 

தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் சந்திக ஹதுருசிங்க, தான் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியினை பயிற்றுவித்த காலத்தில் பங்களாதேஷின் கிரிக்கெட் இரசிகர்கள் அவரை வாழ்த்தியதை ஒருமுறை நினைவுகூர்ந்திருந்தார். ஹதுருசிங்க அதில், பங்களாதேஷ் இரசிகர் ஒருவர் தன்னுடன் பேசிய சந்தர்ப்பத்தில் தங்களது புன்னகைக்கு காரணம் சந்திக ஹதுருசிங்க ஆகிய நீங்களே எனக் குறிப்பிட்டதாக தெரிவித்திருந்தார்.   

இவ்வாறு ஒரு கட்டத்தில் கத்துக் குட்டிகளாக இருந்த பங்களாதேஷின் சிரேஷ்ட கிரிக்கெட் அணியினை, சந்திக ஹதுருசிங்க தான் கிரிக்கெட் அரங்கில் ஏனைய அணிகள் போன்று ஒரு சவால் மிக்க அணியாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்திருக்கின்றார். அதோடு, பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு இதுவரையில் கிடைத்த தலைசிறந்த பயிற்சியாளராகவும் ஹதுருசிங்கவே இருக்கின்றார் எனக் கூறினாலும் அது மிகையாகாது. 

நவீட் நவாஸ்

நடைபெற்று முடிந்த 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டி வரை நவீட் நவாஸினை ஓரிரு பேருக்கு மாத்திரமே தெரியும். ஏனெனில், இடதுகை துடுப்பாட்ட வீரரான நவீட் நவாஸ் இலங்கை கிரிக்கெட் அணிக்காக வெறும் 4 சர்வதேசப் போட்டிகளில் மாத்திரமே ஆடியிருக்கின்றார். 

இலங்கை அணிக்காக கிரிக்கெட் போட்டிகளில் பெரிதாக ஆடியிருக்காத போதிலும், ஒரு பயிற்சியாளராக மிகப் பெரிய அனுபவத்தினை நவீட் நவாஸ் கொண்டிருக்கின்றார். இந்த அனுபவமே அவருக்கு ஒரு அணி உலகக் கிண்ணம் வெல்ல வழிகாட்டியாக இருக்க உதவியிருக்கின்றது. 

கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த நவீட் நவாஸ் 2018ஆம் ஆண்டின் ஜூலை மாதம் பங்களாதேஷ் இளம் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டிருந்தார். 

 

நவீட் நவாஸ் நியமனம் செய்யப்பட முன்னர் பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியினர் 2018ஆம் ஆண்டில் நடைபெற்றிருந்த இளையோர் உலகக் கிண்ணத்தில் 6ஆவது இடத்தினை பெற்றிருந்தனர். எனவே, ஒரு சிறந்த அணியினை கட்டமைக்க வேண்டிய தேவையும், சவாலும் அப்போது நவாஸிற்கு இருந்தது.  

பின்னர், நவீட் நவாஸின் ஆளுகைக்குள் முழுமையாக வந்த பங்களாதேஷ் இளம் கிரிக்கெட் அணியினர் முதலில் விளையாடிய கிரிக்கெட் தொடராக 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற இளையோர் ஆசியக் கிண்ணம் அமைந்தது. 

குறித்த தொடரில் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தாத போதிலும் பங்களாதேஷ் பாகிஸ்தானை தோற்கடித்தது. தொடர்ந்து, இலங்கை அணியுடன் இடம்பெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட இளையோர் டெஸ்ட் தொடரினையும் பங்களாதேஷ் 1-1 என சமநிலை செய்திருந்தது. 

இதன் பின்னர், கடந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் இடம்பெற்ற ஒருநாள், இளையோர் டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்தினை இலகுவாக வீழ்த்திய பங்களாதேஷ் இளம் அணி, அதன் பின்னர் நடைபெற்ற இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய போதிலும் அதில் இந்தியாவிடம் தோல்வியினை தழுவியது. 

எனினும், குறித்த தோல்விக்குப் பின்னர் 2020ஆம் ஆண்டின் உலகக் கிண்ணத்தினை இலக்காக வைத்த பங்களாதேஷ் வீரர்கள், தொடர் நடைபெறும் தென்னாபிரிக்காவுக்கு முன்னரே சென்றிருந்தனர். 

பின்னர், அங்கே நவீட் நவாஸின் தலைமையில் பயிற்சிகளை மேற்கொண்ட பங்களாதேஷ் இளம் அணியினர் அந்நாட்டின் நிலைமைகளுக்கு இசைவாகியிருந்தனர். 

அதேநேரம், பங்களாதேஷின் இளம் வீரர்கள் அவர்களது நாட்டில் இடம்பெறும் முதல்தரப் போட்டிகளிலும் விளையாட அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.  

இப்படியாக நவீட் நவாஸின் ஆளுகையில் பல உத்திகளை கையாண்டதே பங்களாதேஷின் இளம் அணியினர், இளம் வீரர்களுக்கான உலகக் கிண்ணத்தில் வெல்ல முக்கிய காரணமாக இருந்திருக்கின்றது.  

அதோடு, நவீட் நவாஸ் பங்களாதேஷின் இளம் கிரிக்கெட் அணியினர் தௌஹீத் ரித்தோய், அக்பர் அலி, பர்வேஸ் ஹொசைன் ஈமோன் மற்றும் தன்ஸித் ஹஸன் போன்ற எதிர்கால நட்சத்திரங்களை இனங்காணவும் உதவியிருக்கின்றார். 

இவ்வாறாக, பங்களாதேஷின் இளம் கிரிக்கெட் அணி வளர அதற்கு  பல்வேறு வகைகளிலும் உதவிய நவீட் நவாஸ் பங்களாதேஷின் கிரிக்கெட்டிற்கு கிடைத்த பெரும் சொத்து என்பதில் சந்தேகமில்லை.  

எவ்வாறிருப்பினும் பங்களாதேஷ் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு இலங்கையரின் பங்கு மிகப் பெரிய சாதகமாக இருந்தது என்பதில் இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் ஓரளவு திருப்தி காண்கின்றனர். 

http://www.thepapare.com/chandika-hathurusinghe-naveed-nawaz-bangladesh-sri-lanka-cricket-feature-tamil/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தடுப்பூசிகளுக்கு எதிராக முழங்கி விட்டு தனது மகனுக்கு மட்டும் மாசாமாசம்  போடுற எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு தம்பிகளின் அன்புக்கட்டளையை மீற முடியவில்லை என்று பம்பினாரே. அதையும் சேர் த்துக்கொள்ளுங்கள். 
    • எழுதுங்க தம்பி.....இன்னும் எழுதுங்க..... உங்களால் முடியாதது எதுவுமில்லை.
    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.