பிழம்பு

யாழ் நகரில் சூடுபிடித்த காதல் விற்பனை

Recommended Posts

நாளை நடைபெறவுள்ள காதலர் தினத்தை முன்னிட்டு, யாழ்.நகரில் திடீரென முளைத்த ‘காதல் பரிசுக் கடைகளில்’ இளைஞர், யுவதிகள் கூட்டம் அலைமோதியது.

யாழ் வைத்தியசாலை வீதியில் அமைக்கப்பட்ட இவ்வாறான அங்காடி ஒன்றில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காதல் பரிசுகளை இளையோர் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றதை அவதானிக்க முடிந்தது.
“காதலையும் வியாபாரமாக்கி விட்டார்களே” என இதனை அவதானித்த பலரும் விசனமடந்தனர்.

https://newuthayan.com/யாழ்-நகரில்-சூடுபிடித்த/

Share this post

Link to post
Share on other sites
13 hours ago, பிழம்பு said:

“காதலையும் வியாபாரமாக்கி விட்டார்களே” என இதனை அவதானித்த பலரும் விசனமடந்தனர்.

https://newuthayan.com/யாழ்-நகரில்-சூடுபிடித்த/

அது என்னமோ தெரியவில்லை யாழில் எது நடந்தாலும் விசனம்தான்.

 • Like 5
 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
4 minutes ago, சுவைப்பிரியன் said:

அது என்னமோ தெரியவில்லை யாழில் எது நடந்தாலும் விசனம்தான்.

யாழ்ப்பாணத்தானுக்கு காதலும் வரக்கூடாது ,ஒண்ணுக்கும் வரக்கூடாது என சிலர் விசனப்படுகினம் போல கிடக்கு

Share this post

Link to post
Share on other sites
Just now, putthan said:

யாழ்ப்பாணத்தானுக்கு காதலும் வரக்கூடாது ,ஒண்ணுக்கும் வரக்கூடாது என சிலர் விசனப்படுகினம் போல கிடக்கு

காதலுக்கு கண் இல்லை எண்டு சொல்லுவார்கள்। காதல் வரக்கூடாது என்பதல்ல। இந்த காதல் கைக்குழந்தையுடன் போகாமல் கலியாணத்தில் முடிந்தால் சரி।

எப்படி இருந்தாலும் நமது கலாச்சாரத்துக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும்। அதாவது மற்றவர்கள் அசவுகரியப்படாமல் , முகம் சுளிக்காமல் இருக்க பார்த்துக்கொள்ள வேண்டும்।

இங்கு அவர் விசனப்பட்ட்து காதலுக்காக அல்ல। காதலை வியாபாரமாக்கினத்துக்காகவே அவர்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்। அது உண்மை।

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, Vankalayan said:

எமது கலாச்சாரத்தை எமது பிள்ளைகளிடமே நடை முறைப்படுத்த முடியாத நிலையில் தான் இன்று நாம் இருக்கிறோம்....கலாச்சாரத்தை விடுவோம் எமது மொழியை கூட எமது பிள்ளைகளுக்கு சொல்லிகொடுக்க கூடிய நிலையில் நாம் இல்லை....

கற்பகிரகத்திலிருந்து காதல் வரை 
ஆத்மீகம் முதல் அரசியல் வரை
வியாபாரம் தான் .....உலகம் பூராவும் இது தான் நிலை ....நாங்கள் மட்டும் விதிவிலக்காக இருக்க முடியாத சூழ்நிலை....
 
Share this post

Link to post
Share on other sites

யாழில் பாடசாலை சிறுமிகளைக் குறிவைத்து காதலர் தின கொடூரம்!

பாடசாலை சிறுவர் சிறுமியரை வலிந்து இழுத்து காதலர் தின பொருட்கள் விற்பனை கோண்டாவிலில் அதிர்ச்சி சம்பவம் காதலர் தினத்தை முன்னிட்டு கோண்டாவில் டிப்போவுக்கு முன்னாள் உள்ள அழகுசாதன பொருட்கள் விற்பனை கடையில் விசேட விற்பனைக் கூடத்தில் காதலர்களுக்கான அன்பளிப்புப் பொருட்கள் விற்கப்படுகிறது இன்று பாடசாலை செல்லும் சிறுவர் சிறுமியரை வலிந்து கூவி அழைத்து அவர்களுக்கு காதலர்களுக்கு வழங்கும் பொருட்களை விற்பனை செய்வதை காணக்கூடியதாக இருந்தது பாடசாலை சீருடையுடன் சிறுவர்-சிறுமியரை ஏமாற்றிபணத்திற்காக இவ்வாறு சமூகத்தை சீரழிப்பதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர் .

84396167_1254206224784602_8890783161160564736_o.jpg?_nc_cat=107&_nc_ohc=9X1CZqu4ZoMAX8Fq8af&_nc_ht=scontent.fcmb3-1.fna&oh=1dd4c11e9c2812bb2aaefb4f86cd41bf&oe=5EC67EB5

Image may contain: 1 person, tree, plant, sky and outdoor

Image may contain: one or more people, bicycle and outdoor

Image may contain: 1 person, bicycle, sky and outdoor

https://vampan.net/?p=12813

Share this post

Link to post
Share on other sites

படங்களோட செய்தி சுடுகுது.

Share this post

Link to post
Share on other sites

படத்தில் சிறுமிகள் சிறுவர்கள் கடையில் உள்ள பொம்மைகளை ஆவலுடன் பார்த்து கொண்டிருக்கிறார்கள். அதற்க்கு போய் யாழில் பாடசாலை சிறுமிகளைக் குறிவைத்து காதலர் தின கொடூரம் பாடசாலை சிறுவர் சிறுமியரை வலிந்து இழுத்து காதலர் தின பொருட்கள் விற்பனை கோண்டாவிலில் அதிர்ச்சி சம்பவம் என்று செய்தி.

வக்கிரகம், செய்தி பஞ்சம்

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
10 hours ago, சுவைப்பிரியன் said:

அது என்னமோ தெரியவில்லை யாழில் எது நடந்தாலும் விசனம்தான்.

அது விசனம் இல்லை உள்ளூர ஒரு மனப்பயம். மேலத்தேய பழக்க வழக்கங்கள் எமது நாட்டுக்கு ஒத்து வராது. ஏனெனில் வெளிநாடுகளில் வாழும் எமக்குத்தான் அதன் பின்விளவுகள் தெரிகின்றது. அங்குள்ள  எமது மக்களும் அரசியலும் கத்தியின் நுனி மேல் இருப்பது போல்....பொருளாதாரத்தில் தன்னிறைவு அடையட்டும்.அரசியலில் தன்னிறைவு அடையட்டும். அது வரைக்கும் அமைதியான சந்தோசமும் அமையான வாழ்க்கையும் போதுமானது என நான் நினைக்கின்றேன்.
மேலைதேய நாட்டவர் வாழ்க்கை முறை வேறு. அவர்களை போல் வாழ நினைத்தால் அழிவும் சீரழிவுமே நம்மவர்களுக்கு மிஞ்சும்.அது மட்டுமல்லாமல் பணபலம் நிறையவே இவர்களிடம் இருக்கிறது.
உங்கள் கருத்தை மேற்கோள் காட்டியமைக்கு மன்னிக்கவும்.பொதுவாக எழுதினேன்.

Share this post

Link to post
Share on other sites

பொதுவாகவே பாடசாலை OL க்கு உட்பட்ட மாணவர்கள் எதை வாங்கிறதென்டாலும் பெற்றோர்களோட, பெரியவங்களோட போய் வாங்கோணும்.

இல்லை என்டா தேவையில்லாத பல பிரச்சினைகள் வர வாய்ப்பிருக்கு.

இந்த படத்தை எடுத்து போட்ட ஆட்களை பாராட்டலாம்.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
13 hours ago, சுவைப்பிரியன் said:

அது என்னமோ தெரியவில்லை யாழில் எது நடந்தாலும் விசனம்தான்.

13 hours ago, putthan said:

யாழ்ப்பாணத்தானுக்கு காதலும் வரக்கூடாது ,ஒண்ணுக்கும் வரக்கூடாது என சிலர் விசனப்படுகினம் போல கிடக்கு

Image may contain: 1 person, tree, plant, sky and outdoor

Image may contain: one or more people, bicycle and outdoor

சுவைப்பிரியன், புத்தன்....
நீங்கள் கருத்துக்களை எழுதிய பின்பு... கொழும்பான் இணைத்த படங்களை பார்த்த பின்பாவது...
நீங்கள் எழுதிய அதே... கருத்துடன்,  உடன் பட மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

அந்தப் படங்களில்....  நான்காம், ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிகளே  நிற்கிறார்கள்.
அதனைப் பார்க்க, எனக்கு மிகவும்... அதிர்ச்சியாக இருந்தது.

அந்த வயதில்... என்ன காதல் வேண்டிக் கிடக்கு. என்பதே... எமது, ஆதங்கம்.

Edited by தமிழ் சிறி

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

படத்தில் சிறுமிகள் சிறுவர்கள் கடையில் உள்ள பொம்மைகளை ஆவலுடன் பார்த்து கொண்டிருக்கிறார்கள். அதற்க்கு போய் யாழில் பாடசாலை சிறுமிகளைக் குறிவைத்து காதலர் தின கொடூரம் பாடசாலை சிறுவர் சிறுமியரை வலிந்து இழுத்து காதலர் தின பொருட்கள் விற்பனை கோண்டாவிலில் அதிர்ச்சி சம்பவம் என்று செய்தி.

வக்கிரகம், செய்தி பஞ்சம்

விளங்க நினைப்பவன் அவர்களே....
கடையில் விற்கும் பெரும்பாலான பொம்மைகள்...  சிவப்பு நிறத்தில், இதயம் போட்ட படியா இருக்கும்?
எனக்கு... இது, சிறுவர்களுக்கான பொம்மைகள்... விற்கும் கடை மாதிரி தெரியவில்லை. :)

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, Rajesh said:

பொதுவாகவே பாடசாலை OL க்கு உட்பட்ட மாணவர்கள் எதை வாங்கிறதென்டாலும் பெற்றோர்களோட, பெரியவங்களோட போய் வாங்கோணும்.

இல்லை என்டா தேவையில்லாத பல பிரச்சினைகள் வர வாய்ப்பிருக்கு.

இந்த படத்தை எடுத்து போட்ட ஆட்களை பாராட்டலாம்.

சரியாக... சொன்னீர்கள் ராஜேஷ்.
இதனை...  தமிழர் சமூகம் ஆதரித்தால், 
அதற்குப் பின் வரும், பாரிய விளைவுகளுக்கும் முகம் கொடுக்க வேண்டி இருக்கும்.

ஏற்கெனவே... தமிழர் பகுதியில்.... வாள் வெட்டு, கேரள கஞ்சா.. என்று, 
சமூகத்தை சீரழிக்கும் வேலைகளை செய்து கொண்டு இருப்பவர்கள் தான்....
இதனையும்... புது வடிவில் கொண்டு வருகின்றார்கள்.
நாங்கள் தான்... விழிப்பாக இருக்க வேண்டும். 

 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
On 2/14/2020 at 7:23 PM, தமிழ் சிறி said:

Image may contain: 1 person, tree, plant, sky and outdoor

Image may contain: one or more people, bicycle and outdoor

சுவைப்பிரியன், புத்தன்....
நீங்கள் கருத்துக்களை எழுதிய பின்பு... கொழும்பான் இணைத்த படங்களை பார்த்த பின்பாவது...
நீங்கள் எழுதிய அதே... கருத்துடன்,  உடன் பட மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

அந்தப் படங்களில்....  நான்காம், ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிகளே  நிற்கிறார்கள்.
அதனைப் பார்க்க, எனக்கு மிகவும்... அதிர்ச்சியாக இருந்தது.

அந்த வயதில்... என்ன காதல் வேண்டிக் கிடக்கு. என்பதே... எமது, ஆதங்கம்.

அந்தப் பிள்ளைகள் பாடசாலைக்கு போய் கொண்டு இருக்கிறார்கள்...போற  வழியில் புதுசாய் கடை ஒன்று இருக்கு...அழகான பொம்மைகள் இருக்குது...பார்த்து ரசிக்கிறார்கள் ...வாங்கினார்கள் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?....
மேலே ராஜேஷ் எழுதின மாதிரி நீங்கள் ஊரில் இருக்கும் போது எல்லாத்தையும் உங்கள் பெற்றோரோடு போயா வாங்கினீர்கள்?...உந்த படத்தை எடுத்தவர் மன நோயாளி     ***
 
 • Like 1
 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
10 minutes ago, ரதி said:

அந்தப் பிள்ளைகள் பாடசாலைக்கு போய் கொண்டு இருக்கிறார்கள்...போற  வழியில் புதுசாய் கடை ஒன்று இருக்கு...அழகான பொம்மைகள் இருக்குது...பார்த்து ரசிக்கிறார்கள் ...வாங்கினார்கள் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?....
மேலே ராஜேஷ் எழுதின மாதிரி நீங்கள் ஊரில் இருக்கும் போது எல்லாத்தையும் உங்கள் பெற்றோரோடு போயா வாங்கினீர்கள்?...உந்த படத்தை எடுத்தவர் மன நோயாளி என்றால் அதை விட மன நோயாளிகள் உந்த ராஜேஷ் போன்றவர்கள் 

ரதி... பகிடியா.. விடுகின்றீர்கள்❓
அந்த நகரத்தில்... பாடசாலை  முன்பு, திடீரென்று  ஒரு கடையை...
காதலர் தினத்திற்கு முன்பு திறந்து, சிவப்பு இதயத்துடன் பலூன் கட்டும்  போதே....
அந்த பாடசாலை அதிபரும், நகராட்சசியும்... விழிப்புடன் செயற் பட்டு இருக்க வேண்டும்.

அந்தப் பிள்ளைகள்... அதை, வாங்கினார்களோ.. இல்லையோ என்பது,
தேவையற்ற விதண்டாவாதம்.   

வருங்கால சந்ததியை... பாதுகாக்க வேண்டியது, எமது கடமை.
அதில்.. நானும், ராஜேஷும்.. மன நோயாளிகள் என்று, நீங்கள் கருதினால்...
அதுகும்  மனதிற்கு, மகிழ்ச்சியே... :)

 • Like 2

Share this post

Link to post
Share on other sites
On 2/15/2020 at 5:23 AM, தமிழ் சிறி said:

Image may contain: 1 person, tree, plant, sky and outdoor

Image may contain: one or more people, bicycle and outdoor

சுவைப்பிரியன், புத்தன்....
நீங்கள் கருத்துக்களை எழுதிய பின்பு... கொழும்பான் இணைத்த படங்களை பார்த்த பின்பாவது...
நீங்கள் எழுதிய அதே... கருத்துடன்,  உடன் பட மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

அந்தப் படங்களில்....  நான்காம், ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிகளே  நிற்கிறார்கள்.
அதனைப் பார்க்க, எனக்கு மிகவும்... அதிர்ச்சியாக இருந்தது.

அந்த வயதில்... என்ன காதல் வேண்டிக் கிடக்கு. என்பதே... எமது, ஆதங்கம்.

காதலர் தினத்தின் உண்மையான விளக்கம் வேறு என்று நினைக்கிறேன் .....வலன்டேன்ஸ் எனபவர் தனது கண்ணை தானம் செய்தவர் ....என்று ஒரு கதை இருக்கு அதை குறிக்கும் நாள் என்று கேள்வி பட்டேன்...

Share this post

Link to post
Share on other sites

பதின்மவயதில் காதல் வருவது இயல்பானது. யாழில் பிறந்தற்காக விதிவிலக்கு இல்லை. காதல் வரும் போது காதலிக்கோ காதலனுக்கோ பரிசுகள் வழங்க  நினைக்கதும் இயல்பானது. பரிசுப்  பொருட்களை விற்பதற்கு கடைகள் தோன்றுவதும் இயல்பானது.

இளவயது தாண்டிய காதல் வந்தும் தமது காலத்தில் இப்படி சுதந்திரமாக காதலிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில்  பின்னர் இளவயது  காதலரைப் பார்தது பொறாமையுடன் காதல்  கலாச்சாச சீர் கேடு, மேற்கத்தய கலாச்சாரம்  என்று புலம்புவதும்   இயல்பானதாக இருக்கலாம். 

மனிதன் உருவான பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பும் பதின்ம் வயதில  காதல் இருந்தது. இன்னும் பல ஆயிரம் வருடங்கள் கழிந்தாலும் இளவயதில் காதல் அரும்பத்தான்  போகிறது. ஆகவே விசனம் தெரிவிப்பர்கள் அதை தெரிவித்து  விட்டு அடுத்த விடத்திற்கு  விசனம் தெரிவிக்க செல்லாம். 

 • Like 2

Share this post

Link to post
Share on other sites

காதல் இயற்கையானது. காதல் செய்வது அவரவர் விருப்பம். செய்யாமல் விடுவதும் அவரவர் விருப்பம். காதலர் தினம் கொண்டாடுவதும் கொண்டாடாமல் விடுவதும்.. அவரவர் விருப்பம். இதற்குள் ஏன்..?! பிறர் தங்கள் எண்ணங்களை திணிக்க முனைகின்றனர்..?! 

இப்ப பிள்ளைகளே அம்மா - அப்பா லவ் பண்ணினறது பத்தல்லையே.. என்ற கவலையில் இருக்குதுகள். 

எங்கட ஆக்கள்.. இன்னும் காதலை.. காதலர் தினத்தை பிள்ளைகளின் கண்ணில் இருந்து மறைக்கப் பார்க்கினமாம்.

அம்மா - அப்பா பிள்ளைகளின் முன் உண்மையான காதலின் வடிவத்தைக் காட்டினால்.. பிள்ளையும் அதன் புரிந்து கொள்ளும்.. தெரிந்து கொள்ளும். இதில் ஒளிப்புமறைப்புக்கு எதுவும் இல்லை. 

Edited by nedukkalapoovan
 • Like 3

Share this post

Link to post
Share on other sites

கடந்த 10, 15 வருஷமா திட்டமிட்ட தமிழின அழிப்புக்கு துணைபோபவர்கள், சுமந்திரன், டக்லஸ், கருணா, ஆனந்தசங்கரி, சம்பந்தன், போன்ற ஆக்கள், அவையல ஆதரிக்கிற ஆக்கள், தமிழ் சமூகம் சீரழியோனும் என்று நினைக்கிறதில ஆச்சரியப்பட என்ன இருக்குது.  

இளசுகள் தங்கட முக்கிய குறிக்கோளான கல்வியில் பின்னடைய தேவையான அனைத்தையும் ஆதரிச்சு ஒரு சமூக விரோத குரூப் யாழில் வாள்வெட்டு, போதைப் பொருள் வியாபாரம், விபச்சார விடுதி என்று பலத்தை ஊக்குவிச்சு வரேக்க, அந்தமாதிரி குரூப்புகளுக்கு ஆதரவா அப்பிடியான சிலர் செயற்படினம். 

Share this post

Link to post
Share on other sites
16 minutes ago, Gowin said:

என்ன இடம் மாறி வந்திடீங்ளோ அல்லது நேற்றிரவு அடித்தது முறியேல்லயோ 😂

Share this post

Link to post
Share on other sites
32 minutes ago, tulpen said:

என்ன இடம் மாறி வந்திடீங்ளோ அல்லது நேற்றிரவு அடித்தது முறியேல்லயோ 😂

நீங்க ****** மாதிரி தெரியுது.  

🤣

Edited by Gowin
சுயதணிக்கை

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, Gowin said:

நீங்க *** மாதிரி தெரியுது.  

🤣

நீங்க தலையங்கத்திற்கு தொடர்பில்லாமல் எழுதியதால் சும்மா ஜோக்காக எழுதினேன். கோபப்படுத்த அல்ல் மன்னித்துக்  கொள்ளுங்கள்.  

Share this post

Link to post
Share on other sites
5 minutes ago, tulpen said:

நீங்க தலையங்கத்திற்கு தொடர்பில்லாமல் எழுதியதால் சும்மா ஜோக்காக எழுதினேன். கோபப்படுத்த அல்ல் மன்னித்துக்  கொள்ளுங்கள்.  

நானும் கடுமையா எழுதினத்தை சுயதணிக்கை செய்தாச்சு.  

Share this post

Link to post
Share on other sites

இந்தியாவிலும் கூட பாரதிக யனதா கட்சிகாரர்களுக்கு முஸ்லிம் கட்சிகளுக்கும் காதலர் தினம் எல்லாம் பிடிக்காதாம்.

Share this post

Link to post
Share on other sites

காதல் வெறுப்புநோயுள்ளவர்கள் தயவு செய்து சில்லுக்கருப்பட்டி படம் பார்க்கவும்.

அழகான அவசியமான காதலை அடக்கக முயல்வது பின்னர் பிறந்த குழந்தையின் சடலத்தை தோண்டியெடுப்பதில் வந்து முடிகிறது.

குழந்தைகளுடன் தரமான நேரத்தை செலவிட்டு அவர்கள் தேவையை அறிந்து வழிகாட்டுவது பெற்றோரின் கடமை, மாநகராட்சியினுடையது அல்ல.

ஆனால் மாநகராட்சி இப்படி மழைக்கு முளைக்கும் காளான் போல கடைகளை அமைக்க அனுமதித்து இதனால் போக்கவரத்திற்குத் தடையும், குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தையும் ஏற்படாமல் தடுத்திருக்க வேண்டும். ஆனால் அதனை எங்களில் ஒருவனான அதிகாரியிடம் அந்த எங்களில் ஒருவனான வியாபாரி வழங்கிய கையூட்டு அனுமதித்து விட்டது. (இதுவரை கையூட்டு வழங்காத அல்லது வழங்க ஊக்குவிக்காதவர்கள் இருந்தால் மன்னிக்கவும்.)

கலாச்சார காவலர்கள் அன்று தொடக்கம் இன்றுவரை நல்லூர் கோவில் திருவிழாவில் எதற்காக பொம்மை மற்றும் குளிர்களி  கடைகளை அமைத்து அங்கே துப்பாக்கி, வாள் பொம்மைகளை விற்க அனுமதிக்கிறார்கள். சாமி கும்பிட வேண்டிய இடத்தில் அவை எதற்கு என நிறுத்தியிருக்கலாமே. (செய்திருந்தால் அங்கும் தோிழுக்க டிரக்டர் தேவைப்பட்டிருக்கும்)

வாழ்வாதாரத்திற்காக ஒரு இளம் குடும்பம் (அங்கே படத்தில் தொியும் இருவரும் கணவன் மனைவி என்ற எடுகோளுக்கமைய) தனக்கு தொிந்த, முடிந்த வழியில் பொருளீட்ட முயல்வதை கேள்விகேட்பவர்கள், இளம்பெண் விபச்சாரம், இளைஞன் தற்கொலை போன்ற அவலங்களை தடுக்க யாழ்ப்பாணத்தில் உடனடி சாத்தியமான தீர்வுகளையும் தரவேண்டும்.

சிறுவர்கள் மற்றும் மாணவர்களை வழிகாட்டுவதாக கூறிக் கொண்டு மேலும் மேலும் கட்டுப்பாடுகளை விதிப்பது சிறப்பான பயன் தராது. மாறக அவர்களை சுதந்திரமாக முடிவெடுக்க அனுமதிப்பதும், சுய ஒழுக்கத்தையும், தைரியத்தையும் ஊக்குவிப்பதே சிறந்தது என எண்ணுகின்றேன். 

 • Like 3

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.