Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொரோனா – நாளுக்கு நாள் அதிகரிக்கும் உயிரிழப்புகள் : இதுவரையில் 1, 483 பேர் உயிரிழப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

320473_feat_img.jpg

கொரோனா – நாளுக்கு நாள் அதிகரிக்கும் உயிரிழப்புகள் : இதுவரையில் 1, 483 பேர் உயிரிழப்பு!

சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 483 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் சிலருக்கு மர்மக் காய்ச்சல் ஏற்பட்டது.

அந்த நகரில் வன விலங்குகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படும் இறைச்சி சந்தையிலிருந்து பரவிய புதிய வகை வைரஸ் மூலம் காய்ச்சல் ஏற்பட்டது ஆய்வின் ஊடாக கண்டறிப்பட்டது.

கொரோனா வகையைச் சேர்ந்த குறறித்த வைரஸ், சீனாவில் கடந்த 2002 மற்றும் 2003ஆம் ஆண்டுகளில் 774 பேரது உயிர்களை காவு கொண்ட ‘சார்ஸ்’ வைரஸின் தன்மையை ஒத்துள்ளமையினை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

இந்த வைரஸ் மனிதர்களிடையே பரவுவதாக சீன அதிகாரிகள் அறிவித்தனர். இதையடுத்து, குறித்த வைரஸ் பரவலை சர்வதேச சுகாதார அவசர நிலையாக ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு கடந்த மாத இறுதியில் அறிவித்தது.

மேலும், கொரோனா என்ற பொதுப் பெயரில் நீண்ட காலமாக அழைக்கப்பட்டு வந்த குறித்த வைரஸுக்கு ‘கொவைட்-19’ வைரஸ் என உலக சுகாதார அமைப்பு கடந்த செவ்வாய்க்கிழமை பெயரிட்டது.

சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹான் நகரில் பரவிய புதிய கொடிய வகை கொவைட்-19 என பெயரிடப்பட்டுள்ள வைரஸ், ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளிலும் வேகமாக பரவி வருகின்றது.

அத்துடன், உலகம் முழுவதும் 25 இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்த நிலையில், சீனாவில் கொவைட்-19 வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 483 ஆக அதிகரித்துள்ளது.

சர்வதேச அளவில், கொவைட்-19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64 ஆயிரத்து 600 ஆக அதிகரித்துள்ளது.

ஆனால் கடுமையான பாதிப்புக்குள்ளான ஹூபே மாகாணத்தில் வைரஸ் தொற்றுநோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக ஹூபேயில் உள்ள சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஜப்பானின் யோகோஹாமில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் 218 பேருக்கு கொவைட் -19 என்ற ‘கொரோனா’ வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

http://athavannews.com/கொரோனா-நாளுக்கு-நாள்-அதி/

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதை ஏற்றுக்கொள்ள முடியாது  சுற்றி நின்று கல்லெறி விழ விழ நடுவில் நின்று நான் எழுதி  இருக்கிறேன்  நியானி வந்து திரியை பூட்டி எல்லோரையும்  ஒடுங்கடா என்று கலைத்த  சம்பவமே நிறைய இருக்கிறது 
    • கு.சா, அப்படியெல்லாம் சொல்ல மாட்டேன், கடந்த காலத்தை விட்டு விடுங்கள். நீங்கள் சொல்வதில் உண்மையிருக்கிறது. ஆனால், சூரியன் என்பதை விட ஒளி என்று சொல்லலாம். ஒளியை எங்கள் உடல் உணர்ந்து கொண்டு எங்களுக்குள் ஒரு கடிகாரத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது. இந்தக் கடிகாரம் காரணமாகத் தான் பகலில் விழிப்பு நிலையும் இரவில் உறக்க நிலையும் வருகிறது. மின்சாரம் வருவதற்கு முதல் சூரியனே ஒளியாகப் பழக்கப் பட்டு விட்டதால் மனிதனை சூரிய ஒளி புகாத ஒரு சுரங்கத்தில் அடைத்து வைத்தாலும் அவனது உடல் இந்த விழிப்பு- தூக்க சக்கரத்தை தானே பின் தொடரும். இந்த இயற்கைக் கடிகாரத்தோடு சேர்ந்து இயங்குவதே மிக்க நலம் தரக் கூடியது. ஆனால், எங்கள் வாழ்க்கை முறை மாற்றங்களால் எல்லாருக்கும் இது இயலாது. எனவே தான் உடலை இந்தக் கடிகாரத்தில் இருந்து reset செய்து பழக்கப் படுத்தினால், சூரிய உதயம் அஸ்தமனம் என்ற சக்கரத்தில் இருந்து விலகினாலும் உடலை நலமாக வைத்திருக்கலாம்.
    • உங்க முக்கியமான விசயம் என்ன எண்டா... இந்த பங்களாதேஷ் ஆக்கள் தான் 85% சாப்பிட்டு கடையலை வச்சிருக்கினம். தங்கட சமையல் விண்ணர்களுக்கு விசா வேணும் எண்டு வாங்கி கண காலமா பேக்காட்டிக் கொண்டிருந்தவயல்... டேவிட் காமாரன் எண்ட ஒருத்தர் வந்து.... உள்ளாலை... விசாரித்து பார்த்தால்.... வருறவை ஒருத்தரும் அங்கை அதுகளை சமைச்சோ, சாப்பிடுறதோ இல்லை.... சமையல் விண்ணர் எண்டு விசா எடுத்து வந்து, பிறகு இங்க  தான் சமையலே செய்ய பழகினம் எண்டு தெரிய வந்துது. அந்தாள், 1.5 மில்லியன் பவுனை போட்டு, ஒரு ட்ரைனிங் சென்டரை துறந்து,  இனி விசா கிடையாது, உங்கண்ட ஆக்கள் கன பேர் வேலை இல்லை எண்டு பெனிபிட் எடுத்துக் கொண்டு இருக்கினம்.... அவயலை இங்க அனுப்பி, அரசாங்க செலவிலை இலவசமா கறி ட்ரைனிங் எடுப்பிச்சு, வேலையை கொடுங்கோ எண்டு சொல்லிப்போட்டார். சென்டர் பூட்டியாச்சு.... ஒருத்தரும் போகேல்ல எண்டு... இப்ப அரசாங்கம்.... நோ விசா பாலிஸி.  இப்ப அவையிண்ட சுத்துமாத்து கதை முடிஞ்சார்.... இனி எங்கண்ட ஆக்கள் தான் மார்க்கெட்டை பிடிக்க வேணும்.
    • இறைவனின் புகழ்பாட இங்கு இதயங்கள் பல கோடி குறையெல்லாம் கடந்தவனே உன் துணை ஒன்றே நாம் தேடி 1. மறைபொருள் ஆனவனே - உன்னை மனங்களில் சிறை வைத்தோம் குறையுள்ள கோவிலிலே - உன்னை கொண்டு நாம் குடிவைத்தோம் 2. அன்பு உன் பேர் அறிவோம் - தூய அறிவென்றும் நாம் தெரிவோம் இன்பம் நீ எனத் தெளிவோம் - நல்ல இரக்கம் நீ என மொழிவோம்  
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.