Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிங்கப்பூருக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு சில நாடுகள் எச்சரிக்கை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Coronavirus-in-singapore-2.jpg

சிங்கப்பூருக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு சில நாடுகள் எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிங்கப்பூருக்கு பயணிப்பதைத் தவிர்க்குமாறு தென்கொரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளினால் பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் சிங்கப்பூரில் 47 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் 7 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன் சிங்கப்பூரிலுள்ள தமது நாட்டுப் பிரஜைகளை அமைதியாக செயற்படுமாறு சிங்கப்பூரிலுள்ள இந்தோனேசியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும் சிங்கப்பூருக்கான பயணத் தடைகள் எதுவும் விதிக்கப்படவில்லை எனவும் சிங்கப்பூரில் உள்ள இந்தோனேசியப் பிரஜைகள் மீண்டும் இந்தோனேசியாவுக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கப்படுமெனவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சீனாவுக்கு வெளியே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக சிங்கப்பூர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அங்கு தற்போது செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Coronavirus-in-singapore.jpg

http://athavannews.com/சிங்கப்பூருக்குச்-செல்வ/

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மிகவும் முட்டாள்தனமான வேண்டுகோள். தமிழை அரச கரும மொழியாக ஏற்றுகொள்வதென்பது தமிழில் வாக்குமூலம் வழங்குவதை அனுமதிப்பதுடன் நின்றுவிடாது.  சாட்சியாளர் சொன்ன அந்த வாக்குமூலத்தை  சொன்னது பிசகாமல் தமிழில் பதிவு செய்வதும் இதில் அடங்கும். சாட்சி தமிழில் வாக்குமூலம் வழங்க அதை பெறும் நபர்அல்லது ஒரு மொழிபெயர்ப்பாளர் அதைக்கேட்டு  மொழிபெயர்ப்பு செய்து சிங்களத்திலோ அல்லது ஆங்கிலத்திலோ வக்குமூலத்தை பதிவுசெய்வது எந்தவகையிலும் ஏற்புடையதாகாது. தமிழில் பதிவுசெய்யப்பட்ட வாக்குமூலத்தின் மூலப்பிரதியை அதை வழங்கியவர் அல்லது அவரின் சட்டதரணி வாசித்து சரிபார்த்தபின்னரே அவரின் கையொப்பம் பெறப்படுதல் வேண்டும். "எனது தாய் மொழி தமிழ்.  அம்மொழியிலேயே கல்வி கற்றேன். தமிழ் மொழி அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மொழி.  எனக்கு தமிழில் சாட்சியமளிக்க சந்தர்ப்பம் தாருங்கள்." இவர் சொல்லாமல் விட்டது: "முதலில் முஸ்லிம் அப்புறம் தேவைப்படும்போது மட்டும் நான் தமிழன்".
    • நீதிமன்றின் கட்டளையை மீறாது எமது நினைவேந்தலை உணர்வுபூர்வமாக அனுசரிப்போம்: சட்டத்தரணி அன்ரனி றொமோல்சன்   (மன்னார் நிருபர்) தமிழர்கள் இருக்கும் இடத்திலேயே சுகாதார முறைகளைக் கடைப்பிடித்து உணர்வுபூர்வமான நினைவேந்தலை நினைவு கூருவதற்கு சட்ட ரீதியாக எந்தவிதத் தடையும் இல்லை என மன்னார் சட்டத்தரணி அன்ரனி றொமோல்சன் தெரிவித்தார். மன்னார் மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஊடகச் சந்திப்பு இன்றைய தினம் புதன்கிழமை(25) காலை மன்னாரில் இடம்பெற்றது.இதன் போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், மாவீரர் நினைவு தொடர்பாக எல்லா இடங்களிலும் நீதிமன்றமானது அதை நினைவு கூர்வதற்கு தடை விதித்துள்ளமை அனைவரும் அறிந்த விடயம். இது சம்பந்தமாக மன்னார் மாவட்டத்தில் கடந்த வாரம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பத்துக்கு அமைவாக இந்த நீதி மன்றத்தினால் நினைவு கூர தடை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான எமது சட்டத்தரணிகள் எமது சார்பாக ஒரு நகர்த்தல் பத்திரத்தை தாக்கல் செய்து தடைக்கு எதிராக எமது ஆட்சேபனையை நாங்கள் தெளிவாகக் கூறியிருந்தோம். ஆனாலும் அதனைத் தொடர்ந்தும் இந்த நீதிமன்றமானது இந்தத் தடை உத்தரவை நீடித்துள்ளது. இந்த நிலையிலேயே இந்த நீதிமன்றத்தின் கட்டளையை நாங்கள் மதிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. அதே நேரத்தில் எமது மாவீரர்களின் உயிர் தியாகங்களையும் நாங்க மதிக்க வேண்டிய தேவை உள்ளது. எனவே சட்ட ரீதியாக இந்த நீதிமன்றத் தடையானது எமது உறவுகளின் நினைவு நிகழ்வை பொது இடத்தில் மக்களை ஒன்றுகூட்டி செய்வதற்குத்தான் தடை விதித்துள்ளனர். ஆகவே உணர்வுள்ள தமிழர்கள் அனைவரும் நீங்கள் இருக்கும் இடத்திலேயே சுகாதார முறைகளைக் கடைப்பிடித்து உணர்வுபூர்வமான நினைவேந்தலை நினைவு கூர சட்ட ரீதியாக எந்தவிதத் தடையும் இல்லை. எனவே எதிர் வரும் 27 ஆம் திகதி நாங்கள் அனைவரும் உணர்வுபூர்வமாக எமது இடங்களிலே இருந்தவாறு சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி பொது இடங்களில் ஒன்றுகூடாமல் நீதிமன்றத்தின் கட்டளையை மீறாது எமது நினைவேந்தலை உணர்வுபூர்வமாக அனுசரிப்போம் என்றார். நீதிமன்றின் கட்டளையை மீறாது எமது நினைவேந்தலை உணர்வுபூர்வமாக அனுசரிப்போம்: சட்டத்தரணி அன்ரனி றொமோல்சன் – Thinakkural
    • கட்டுப்பாடுகள் தளர்த்த தீர்மானிக்கப்பட்ட நிலையில் ஜேர்மனியில் மேலும் 410 இறப்புக்கள் பதிவு           by : Jeyachandran Vithushan கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த கடந்த 24 மணி நேரத்தில் ஜேர்மனியில் 410 இறப்புக்கள் பதிவாகியுள்ளன. கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து பேச ஜேர்மனியின் 16 மாநில முதல்வர்களுடன் சந்திப்பிற்கு முன்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் புதிதாக 18 ஆயிரத்து 633 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 961,320 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு எண்ணிக்கை 410 ஆக உயர்ந்ததை அடுத்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்து 771 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை ஒரு வாரத்திற்கு முன்பு 305 ஆக இருந்தது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய முடக்கம் டிசம்பர் 20 வரை நீடிக்க மத்திய மாநிலங்கள் இன்று புதன்கிழமை முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது. கட்டுப்பாடுகள் தளர்த்த தீர்மானிக்கப்பட்ட நிலையில் ஜேர்மனியில் மேலும் 410 இறப்புக்கள் பதிவு | Athavan News
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.