Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒட்டு மொத்த தமிழக மக்களின் நலனுக்கு எதிராக தி.மு.க.செயற்படுகிறது- ஜி.கே.வாசன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

vasan.jpg

ஒட்டு மொத்த தமிழக மக்களின் நலனுக்கு எதிராக தி.மு.க.செயற்படுகிறது- ஜி.கே.வாசன்

விவசாயிகளுக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழக மக்களின் நலனுக்கும் எதிராக தி.மு.க.செயற்படுகிறது என த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ”விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று காவிரிடெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதன்மூலம் விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்துக்கு அ.தி.மு.க.அரசு உத்தரவாதம் கொடுத்துள்ளது.

முதல்வரின் இந்த அறிவிப்புக்கு அரசியல் வேறுபாடின்றி அனைத்து விவசாய சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், எதிர்க்கட்சியான தி.மு.க.விவசாயிகளுக்கு எதிரிக்கட்சியாக செயற்பட்டு வருகிறது.

நல்லது நடக்கக் கூடாது என்ற நோக்கத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற அறிவிப்பு குறித்து விவசாயிகளுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் தி.மு.க.செயற்பட்டு வருகிறது.

முக்கியமான இந்தப் பிரச்சினையில் அரசியலைப் புகுத்தி, வாக்குகளைப் பெறும் நோக்கத்திலேயே தி.மு.க.வின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.

விவசாயிகளின் பாதுகாப்புக்காக சட்டங்களை கொண்டு வரும்போதும், மத்திய அரசிடம் கோரிக்கைகளை முன்வைக்கும்போதும் அதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் தி.மு.க.செயற்படுவது ஏற்புடையது அல்ல.

தமிழக விவசாயம் சார்ந்த பிரச்சினைக்கு ஆதரவு அளிக்காத தி.மு.க.வின் நியாயமற்ற செயல் கண்டனத்துக்குரியது.

தமிழக அரசின் விவசாய நலன் சார்ந்த போக்கை ஆதரிக்கவில்லை என்றாலும், விவசாயிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி, அவர்களின் நம்பிக்கையை வீணாக்கும் முயற்சியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக தி.மு.க.செயற்பட வேண்டும்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் உள்ளிட்ட தமிழக அரசின் திட்டங்களுக்கு தி.மு.க.எதிர்ப்பு தெரிவித்து வருவது விவசாயிகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்கள் நலனுக்கும் எதிராக செயற்படுவதையே இது காட்டுகிறது “என குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/ஒட்டுமொத்த-தமிழக-மக்களின/

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கட்டுப்பாடுகள் தளர்த்த தீர்மானிக்கப்பட்ட நிலையில் ஜேர்மனியில் மேலும் 410 இறப்புக்கள் பதிவு           by : Jeyachandran Vithushan கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த கடந்த 24 மணி நேரத்தில் ஜேர்மனியில் 410 இறப்புக்கள் பதிவாகியுள்ளன. கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து பேச ஜேர்மனியின் 16 மாநில முதல்வர்களுடன் சந்திப்பிற்கு முன்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் புதிதாக 18 ஆயிரத்து 633 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 961,320 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு எண்ணிக்கை 410 ஆக உயர்ந்ததை அடுத்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்து 771 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை ஒரு வாரத்திற்கு முன்பு 305 ஆக இருந்தது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய முடக்கம் டிசம்பர் 20 வரை நீடிக்க மத்திய மாநிலங்கள் இன்று புதன்கிழமை முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது. கட்டுப்பாடுகள் தளர்த்த தீர்மானிக்கப்பட்ட நிலையில் ஜேர்மனியில் மேலும் 410 இறப்புக்கள் பதிவு | Athavan News
    • சர்வதேச ரீதியாக இலங்கைக்கு எந்தவொரு அழுத்தமும் இனிமேல் ஏற்படாது – நாடாளுமன்றில் தினேஸ்! இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின், இணை அனுசரணையில் இருந்து இலங்கை தற்போது விலகியுள்ளமையால், இலங்கைக்கு சர்வதேச ரீதியாக எந்தவொருப் பிரச்சினையும் ஏற்படாது என்று வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற குழுநிலை விவாதத்திலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நல்லாட்சி அரசாங்கத்தால்தான் நாடு கடந்த காலங்களில் காட்டிக்கொடுக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக சர்வதேசத்தினரால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு அவர்கள் அன்று இணை அனுசரணை வழங்கினார்கள். இது உலகிலேயே எங்கும் நடக்காத ஒரு விடயமாகும். இது இராணுவம் பெற்றுக் கொடுத்த அனைத்து வெற்றிகளையும் காட்டிக்கொடுக்கும் செயற்பாடாகும். எனினும், நாம் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த இணை அனுசரணையில் இருந்து விலகியுள்ளோம். எனவே, இதனால் நாட்டுக்கு எந்தவொரு ஆபத்தும் வராது. இதனை கடந்த ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். கடந்த அரசாங்கம் நாட்டுக்கு செய்த அநியாயத்தை மாற்றியமைக்கும் பொருட்டே, எமது ஆட்சியைக் கொண்டுவந்தார்கள். நாம் பயங்கரவாதத்தை தோற்கடித்தவுடன், ஐ.நா.வின் அன்றைய பொதுச் செயலாளர் இலங்கைக்கு வந்தார். ஆனால், நாம் அவருடன் அன்று எந்தவொரு ஒப்பந்தங்களையும் செய்துகொள்ளவில்லை. மாறாக இணைந்த பத்திரிகையாளர் மாநாடொன்றை நடத்தி, ஒருங்கிணைந்த கருத்துக்களை மட்டும்தான் வெளியிட்டோம். இதனை திரிபுபடுத்தி, சொந்த நாட்டுக்கு எதிராகவே கருத்து வெளியிடக்கூடாது. நாடாளுமன்றுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், சர்வதேசம் என்று வரும்போது நாம் அனைவரும் ஒன்றிணைந்துதான் ஒரு பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார். சர்வதேச ரீதியாக இலங்கைக்கு எந்தவொரு அழுத்தமும் இனிமேல் ஏற்படாது – நாடாளுமன்றில் தினேஸ்! | Athavan News
    • தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.