Jump to content

இந்தோனேசியாவில் வெலண்டைன்ஸ் டே கொண்டாட தடை !!


colomban

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
காதலர் தினம் என பெப்ரவரி 14 கொண்டாடப்படும் வெலண்டைன்ஸ் டே கொண்டாட்டங்களுக்கு 

இந்தோனேசியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 
“பண்டா ஆச்” பிராந்தியத்தியத்தில் இந்த தடை அமுல் படுத்தப்படும் என அந்த பிராந்திய மேயர் அமீனுல்லாஹ் உஸ்மான் அறிவித்துள்ளார்.
 
பண்டா ஆச் பிராந்தியம் இந்தோனேசியாவில் அதிகமாக முஸ்லிம்கள் வாழும் பிராந்தியமாகும் அங்கு இஸ்லாமிய சரியா சட்டம் அமுல்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
 
 
உலகில் நாளையதினம் காதலர்கள் தமக்கிடையே அன்பை பரிமாற தயாராகிவரும்வேளை பாகிஸ்தான் தலைநகரில் காதலர் தின கொண்டாட்டத்தை நடத்தக்கூடாதென நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
 
காதலர் தின கொண்டாட்டம் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்து நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்தது.
 
இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளின்படி, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், காதலர் தின கொண்டாட்டங்களை பொது இடங்களில் நடத்த முடியாது.
 
காதலர் தினம் தொடர்பான சிறப்பு நிகழ்வுகளை விளம்பரப்படுத்த கூடாது என்று நீதிமன்றம் ஊடகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
 
கடந்த ஆண்டு ஒரு அறிக்கையில், பாகிஸ்தான் ஜனாதிபதி மம்மூன் ஹுசைன் காதலர் தினத்தை பாகிஸ்தான் கலாசாரத்தின் ஒரு பகுதியாக இல்லாத ஒரு மேற்கத்திய சடங்கு என்று வர்ணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.