Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் எதிர்காலம் தானாகவே இல்லாமல் போய்விடும் -என்.சிறீகாந்தா


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் எதிர்காலம் தானாகவே இல்லாமல் போய்விடும் -என்.சிறீகாந்தா

தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரையில் தற்போதைய சூழ்நிலையில் தமிழ் தேசிய கட்சிகள் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு ஒன்றுபட வேண்டும் என்றே நாம் விரும்பினோம். அதனையே நாம் வலியுறுத்தி வந்தோம். அந்த அடிப்படையிலேயே தற்பொழுது நான்கு கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு மாற்றுத் தலைமையை உருவாக்கி உள்ளோம்.தமிழ் தேசிய மக்கள் முன்னணி தான், தாங்களே மாற்றுத் தலைமை என்றும் அதனை மழுங்கடிக்கவே தமிழ் மக்கள் தேசிய கூட்டணி உருவாக்கப்பட்டது என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார். அவ்வாறான எந்த தேவைகளும் எமக்கு கிடையாது ஏனெனில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் தானாகவே இல்லாமல் போய்விடும் என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் நாம் நாற்காலிகளுக்காக தேர்தலில் போட்டியிடுகிறோம் என்றால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேர்தலில் முக்காலிக்காகவா போட்டியிடுகின்றது என்பதை நாம் கேட்கவில்லை. ஏனென்றால் நமக்கென்று சில அரசியல் நாகரிகம் உள்ளது.தமிழினத்தின் தலைமைப்பதவி தங்களுடைய பரம்பரை என நினைத்துக் கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பை நாசமாக்கிய தமிழரசுக் கட்சி எமது கூட்டணிக்கு எதிராக பல விமர்சனங்களை முன்வைத்து வருகின்றது

ஒற்றுமையின் பெயரால் எம் மீது குற்றங்களை சுமத்தி வருகிறது. நாம் ரெலோவை விட்டு மூன்று தடவை வெளியேறியதாகவும் பின்னர் சேர்ந்ததாகவும் தம்பி ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளர். எனினும் நாம் இம்முறை தீர்க்கமான ஒரு முடிவிலேயே வெளியேறி இருந்தோம். ஏனெனில் தமிழ் தேசிய கூட்டமைப்பு குறிப்பாக தமிழரசுக் கட்சி அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றது.நாம் தமிழ் தேசிய அரசியல் பரப்பில் அனைத்துத் தரப்பும் குறிப்பாக தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைய வேண்டுமென வலியுறுத்தி வந்தோம் தற்போதும் கூட தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற புளொட், ரெலோ, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியன எம்முடன் இணைந்து பயணிக்க நாம் தடையாக இருக்கப் போவதில்லை. நமது கூட்டணியில் கதவுகள் திறந்தே இருக்கின்றன.

நடைபெறவுள்ள தேர்தலில் தமிழ் மக்கள் சரியான முடிவினை எடுப்பார்கள். அது தேர்தலில் நிச்சயமாக வெளிப்படும் என நம்புகின்றோம்.தமிழ் மக்கள் தேசிய கூட்டணி உருவாக்கப்பட்டு 24 மணித்தியாலத்திற்குள் தமிழ் கட்சிகளிடமிருந்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவ்வாறான விமர்சனங்களை நாம் எமது கூட்டணிக்கு கிடைத்துள்ள வாழ்த்துக்களாகவே பார்க்கின்றோம்.குறிப்பாக தமிழரசுக் கட்சியின் தலைவர் இறுமாப்புடன் எமக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளார். அதேபோல தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்மை கடுமையாக விமர்சித்துள்ளார் என யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.(15)
 

http://www.samakalam.com/செய்திகள்/தமிழ்-தேசிய-மக்கள்-முன்ன-7/

Link to post
Share on other sites

தமிழ் மக்களின் எதிர்காலத்தை இல்லாம ஆக்கித் தானே உங்கட அரசியல் இதுவரை நகர்ந்திருக்கு.
இனியாவது மக்களுக்கு எதையாவது உருப்படியாக பேச, செய்ய பாருங்கோ.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அவர்களுடைய எதிர்காலம் கிடக்கட்டும்। அதுக்கு முதல் உங்களுடைய எதிர்காலத்தை பற்றி சிந்தியுங்கள்। உங்களுக்கு மக்கள் ஒரு சந்தர்ப்பத்தை தந்து பாராளுமன்றத்துக்கு அனுப்பினார்கள்। அங்கு என்னத்தை வெட்டி விழுதினீர்கள்।

கடைசியாக பாராளுமன்றத்துக்கு ஒழுங்காக வருவதில்லை என்று அங்கிருந்து துரத்தியே விடடார்கள்। நீங்கள் மறந்திருக்கலாம் ,மக்கள் இதை எல்லாம் மறக்கவில்லை।

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவிலை சிங்கள இனவாத கட்சிகளுக்கும் இனவாத பிக்குகளுக்கும் வேலையில்லாமல் போகப்போகுது. ஏனெண்டால் தமிழினம் தனக்குள் அடிபட்டு தானகவே அழிந்து போகும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

சிறிலங்காவிலை சிங்கள இனவாத கட்சிகளுக்கும் இனவாத பிக்குகளுக்கும் வேலையில்லாமல் போகப்போகுது. ஏனெண்டால் தமிழினம் தனக்குள் அடிபட்டு தானகவே அழிந்து போகும்.

இது சம்பந்தமாக  கனக்க யோசிப்பதுண்டு

இதெற்கெல்லாம்  காரணம் கூட்டமைப்பின் சுயநல அரசியலும் சுத்துமாத்தும் தான்

ஒரு அளவுக்கு  மேல் அறுவைச்சிகிச்சை செய்து  தானே ஆகணும்???

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

நமக்கென்று சில அரசியல் நாகரிகம் உள்ளது

5-FC9-D04-C-2694-4-F99-A15-F-05-FE20-C5-

 • Haha 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வெளியேறியவரை யாரும் ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவர் தேடியதை கொடுக்காவிட்டால் புறப்பட்ட இடத்திற்கு திரும்புவது இயற்கைதானே. விழுந்தாலும் அந்த ஆள் எழும்பி வந்து விட்டாரே என்று மகிழ்ச்சியோடு  ஏற்றுக்கொண்டிருப்பினம் கட்சிக்காரர்.  அதனாலே போவதும் வருவதுமாக இருக்கிறார். வெளியேறினால் திரும்பி நுழையாதபடி ஒரு அறையை உருவாக்கவில்லை எந்தக்கட்சியும்.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!    48 Views இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை  தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையில் இது வரையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 20ஆயிரத்து 967ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் மருத்துவப் பல்கலைக்கழகமான ஜான்ஸ் ஹாப்கின்ஸ கூறும்போது, “கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவிய கொரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் 5,91,24,016 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,95,519 பேர் கொரோனாவுக்குப் பலியாகி உள்ளனர் என்று தெரிவித்துள்ளது.   https://www.ilakku.org/இலங்கையில்-அதிகரிக்கும-2/
  • தமிழர்களின் உரிமைகள் குறித்து பேச தமிழ் தலைவர்களுக்கு உரிமை இல்லை – சரத் வீரசேகர    46 Views தமிழர்களின் உரிமைகள், தமிழர்களின் தேவைகள் குறித்து வாய் திறக்க இங்குள்ள தமிழ் தலைவர்கள் எவருக்கும் உரிமை இல்லை என இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், “நாட்டில் பயங்கரவாதம் ஒன்று தலைதூக்கினால் தமிழ் மக்கள் மத்தியில் விரோதத்தை ஊக்குவிக்கும் இவர்கள் அனைவருமே பொறுப்புக்கூற வேண்டும். புலம்பெயர் அமைப்புகளிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ள நாடகமாடும் இவர்களுக்கு எந்த மரியாதையும் கொடுக்க முடியாது. இதேவேளை, சட்டத்தை மதிக்கும், சட்டதிற்கு கட்டுப்படும் சமூகமொன்றை உருவாக்க வேண்டும் என்பதே தமது அரசாங்கத்தின் நோக்கம்.    அடிப்படைவாதிகள், பயங்கரவாதிகள் உருவாவதற்கும் இடமளிக்க மாட்டோம்” என்றார்.   https://www.ilakku.org/தமிழ்-எம்-பி-க்களை-வெளியே/
  • அதி தீவிர புயலாக வலுப்பெறும் ‘நிவர் புயல்’ எதிர் கொள்ளத் தயாராகும் தமிழகம்  53 Views நிவர் புயல்  இன்று பிற்பகலுக்குள் அதி தீவிர புயலாக வலுப்பெறக்கூடும்  என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காரைக்காலுக்கும் மகாபலிபுரத்திற்கும் இடையில், புதுச்சேரிக்கு அருகில் இன்று இரவு கரையைக் கடக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 120 – 130 கி.மீ. வேகத்திலும் சில சமயங்களில் 145 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் அதி கன மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு ‘நிவர்’ என ஈரான் பெயரிட்டுள்ளது. இந்த ஆண்டு மேற்கு வங்கத்தையும் வங்க தேசத்தையும் கடுமையாக பாதித்த புயலுக்கு உம்பான் என தாய்லாந்து பெயரிடப்பட்டது. நிவர் புயல் கரையைக் கடப்பதால்,  தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திர பிரதேசம் ஆகியவற்றில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.   https://www.ilakku.org/அதி-தீவிர-புயலாக-வலுப்பெ/
  • நினைவுகூருவது தமிழர் மரபில் ஒன்றாக இருக்கிறது -எஸ்.ஏ. யோதிலிங்கம்.     42 Views இறந்தவர்களை நினைவுகூருவது என்பது ஒரு கலாசார உரிமை. அதாவது தமிழர் கலாசாரத்தில் தனியாகவும், கூட்டாகவும்  இணைந்து இறந்தவர்களை நினைவு கூருகிறோம் என அரசியல் ஆய்வாளர் எஸ்.ஏ. யோதிலிங்கம்  தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “வருடா வருடம் இந்த நடைமுறை இருந்து வருகிறது. அத்துடன் நடுகல் வழிபாடும் இருந்து வருகிறது. இவை தமிழர் மரபில் ஒன்றாக இருக்கிறது.  இவை தொடர்சியாக தமிழ் மக்களால்  பின்பற்றப்பட்டு வரும் ஒரு விடயம். இந்தக் கலாசார உரிமையை மறுப்பது என்பது இன அழிப்புக்குச் சமனானது. ஒரு இனத்தின் இருப்புக்கு நிலம், மொழி, பொருளாதாரம், கலாசாரம் இந்த நான்கும் முக்கியமானது. இதில் ஒரு விடயம் அழிக்கப்பட்டாலும் அது ஒரு வகையான இன அழிப்புத்தான். நினைவுகூருவது சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விடயம். அது மறுக்கப்படுவது அடிப்படை உரிமை மீறும் செயல் ஆகும். மேலும் ஆற்றுப்படுத்தல் உரிமை மறுக்கப்படுகிறது. அதாவது  உள ரீதியாக ஆற்றுப்படுத்தும் உரிமை மறுக்கப்பட்டு உரிமை மீறப்படுகிறது. அரசு நல்லிணக்கத்தைக் காட்டுவதென்றால், பொதுப்பிரச்சனைகளை தீர்த்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை அரசு நல்லிணக்கத்துக்குத் தயாராக இல்லை என்பதே உண்மை. நினைவேந்தல் தடை  விவகாரம் சட்டப் பிரச்சனை இல்லை. இதை அரசியல் செயற்பாடுகள் ஊடாகத்தான் தீர்க்க முடியும்.  சட்ட அணுகுமுறை தீர்வைத் தரப்போவதில்லை. அத்துடன் இதை நாம் தனியாக அணுக முடியாது. குறிப்பாக உலக முற்போக்கு ஜனநாயக சக்திகள், உலகத் தமிழர்களை இணைத்துத் தான் அணுக வேண்டும். அதற்கு முதற்கட்டமாக தாயகத்தில் உள்ள தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இந்த விடயத்தை அரசியல் கட்சிகள் தனித்தனியாக கையாள நினைத்தது துரதிஸ்டவசமானது. ஒருங்கிணைந்த அரசியல் செயற்பாட்டின் ஊடாகத் தான் இதை வெற்றிகொள்ள முடியும். தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் விடயத்தில் கட்சிகள் ஒன்றிணைந்தமை வலுவான செய்தியை உலகுக்குக் கொடுத்தது. அரசு சட்ட செயற்பாடுகளுக்கு பயப்படாது,  அரசியல் செயற்பாடுகளுக்கே பயந்துள்ளார்கள். எனவே  உலகளாவிய அரசியல் செயற்பாட்டின் ஊடாகத் தான் இதை எதிர்கொள்ள வேண்டும். எனவே தமிழ்  மக்களின் பொது விவகாரங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒருங்கிணைந்து செயற்பட்டால் மாத்திரமே இந்த விடயங்களில் முன்னேற்றம் காண முடியும்” என்றார்.   https://www.ilakku.org/நினைவுகூருவது-தமிழர்-மரப/
  • தாயகத்தில் கார்த்திகைப் பூவுக்கும் தடையா..?-கோ.ரூபகாந்    38 Views யுத்தம் முடிவடைந்து 11 ஆண்டுகள் நெருங்குகின்ற நிலையில்கூட கார்த்திகை மாதம் வந்து விட்டால் வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரை, இராணுவத்தின் நெருக்குவாரங்கள் நிறைந்த மாதமாக அமைந்து விடுகின்றது. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள்,  விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து மரணித்தவர்களை நினைவுகூரும் மாவீரர்நாள் என்பன கார்த்திகை மாதத்தில் வருவதே அதற்கு காரணம். இது தவிர, கார்த்திகை மாதத்தில் மலரும் செங்காந்தள் மலரை வைத்திருப்பதற்குகூட அஞ்சும் நிலையும் இன்று வரை தொடர்கிறது. ஏன் கார்த்திகைப் பூவுக்கும் தடையா? ஜிம்பாவே நாட்டின் தேசிய மலராகவும், தமிழகத்தின் மாநில மலராகவும் உள்ள கார்த்திகைப் பூ விடுதலைப்புலிகளால் தமிழர் தேசத்தின் தேசிய மலராக பிரகடனப்படுத்தப்பட்டது. விடுதலைப்புலிகளின் தேசியக் கொடியின் வர்ணங்களை கொண்டிருப்பதாலும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிறந்த மாதத்தில் பூத்துக் குலுங்குவதாலும், மாவீரர் நாளில் வடக்கு, கிழக்கு எங்கும் பூத்துக் காணப்படுவதாலும் இதனை புலிகளும் தமது தேசிய மலராக பிரகடனப்படுத்தினர். ஆனால் இலங்கையின் தேசிய மலராக அல்லியே விளங்குகின்றது. இக் கார்த்திகைப் பூ அச்சம் கொள்ளும் வகையில் விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்டது அல்ல. அது நீண்டகால வரலாற்றையும், சிறந்த இயல்புகளையும் கொண்ட ஒரு மலர். கார்த்திகைப் பூவினை பண்டைத் தமிழ் இலக்கியங்களிலே காந்தள் என்றே அழைப்பர். ஒற்றை வித்துத் தாவரங்களில், வெங்காயக் குடும்ப வரிசையாகிய லில்லி(Liliales)ஆசியே என்ற வரிசையில் கொல்சிகேசியே (Colchicaceae) எனப்படும் வகையினைச் சேர்ந்ததாகும். இக்கொடியின் தண்டு பசுமையானது. பலமில்லாதது. இலைகளின் நுனிகள் நீண்டு சுருண்டு பற்றுக்கம்பிகள் போல பக்கத்திலுள்ள மரஞ்செடி முதலிய ஆதாரங்களைப் பிடித்துக் கொண்டு 10-20 அடி உயரம் வளரும். கிளை விட்டுப் படரும். ஆண்டுதோறும் புதிய கொடிகள் நிலத்தினுள்ளே இருக்கும் கிழங்கிலிருந்து வளரும். கிழங்கு சாதாரணமாக இரண்டு பிரிவுள்ளதாக இருக்கும்.  6-12 அங்குல நீளமும், 1- 1.5 அங்குலத் தடிப்பும் உள்ளது. இது கலப்பை போலத் தோன்றுவதால் இதனைக் கலப்பை எனவும் அழைப்பர். காந்தள் கிழங்கின் ஒவ்வொரு பிரிவின் முனையிலும் புதிய கணு உண்டாகும். இலைகளுக்குக் காம்பில்லை எனலாம். 3அங்குலம் தொடக்கம் 6அங்குலம் வரையான நீளம், 0.75அங்குலம் தொடக்கம் 1.75அங்குலம் வரை அகலமிருக்கும். இலை அகன்ற அடியுள்ள நுனி கூராக நீண்டு பற்றுக்கொம்பு போலச் சுருண்டிருக்கும். பூக்கள் பெரியவை. கிளைகளின் நுனியில் இலைகள் நெருங்கியிருப்பதால் சமதள மஞ்சரி போலத் தோன்றும். அகல் விளக்குப் போன்ற ஆறு இதழ் கொண்ட இப்பெரிய பூக்கள் (6-7 செ.மீ நீளம்) கார்த்திகைத் திங்களில் இம் மலர் முகிழ் விடுகின்றது. பூக்காம்பு 3-6 அங்குல நீளமிருக்கும். முனையில் வளைந்திருக்கும். 2.5அங்குல நீளம், 0.3- 0.5அங்குல அகலம் கொண்டதாகும். குறுகி நீண்டு ஓரங்கள் அலைபோல நெளிந்திருக்கும். தளை அவிழ்ந்த மலர் ஏழு நாட்கள் வாடாமல் இருக்கும். இதழ்களில் நிறம் முதலில் பச்சை, பிறகு வெண்மை கலந்த மஞ்சள், பிறகு மஞ்சள், பிறகு செம்மஞ்சள், பிறகு துலக்கமான சிவப்பு, நீலம் கலந்த சிவப்பாக மாறிக்கொண்டு போகும். 6 இதழ்கள் விரிந்து அகன்றோ, பின்னுக்கு மடங்கிக் கொண்டோ இருக்கும். கேசரங்கள் 6 அங்குலம், தாள் 1.5- 1.75அங்குலம், மரகதப்பை 0.5அங்குலம், முதுகொட்டியது. சூலகம் 3 அறையுள்ளது. சூல் தண்டு 2 அங்குலம். ஒரு புறம் மடங்கியிருக்கும். பூவின் நிறம் இருவேறாக மாறுபடுவதால் இதனை வெண்காந்தள், செங்காந்தள் என்ற இரு வேறு வகைகளாக வருணிப்பார்கள். கிழங்கு பிரிந்து கணுக்கள் உள்ளதை ஆண்காந்தள் என்றும் கணுக்களில்லாததை பெண்காந்தள் என்றும் குறிப்பிடுவர். கார்த்திகைச் செடியின் கிழங்கு ஆயுர்வேதம், யுனானி முறைகளில் பலவிதமாகப் பயன்படுகின்றது. இக்கிழங்கில் காணப்படும் நச்சுப்பொருளான கொல்சிசைனே(colchicine) வைத்திய முறைகளில் பயன்படுகின்றது. மேற்கு வைத்தியத்திலும் கொல்சிசைன் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் இரு மருத்துவ முறைகளிலும் கொல்சிசைசின் பயன்பாடு வேறுபடுகின்றது. தோலைப்பற்றிய ஒட்டுண்ணி நோய்களுக்கு இதனைப் பயன்படுத்துவார்கள். தேள் கடிக்கும் இதனைப் இழைத்துப் போடுவதுண்டு. நேரடியாக இக்கிழங்கினை உட்கொள்ளின் நஞ்சாகும். சிறதளவு உட்கொண்டாலும் முடி உதிரும். கார்த்திகை திங்களில் முகிழ்விடும் இது செப்டம்பர் தொடக்கம் ஜனவரியிலும், மார்ச்சிலும் இலங்கை தவிர இந்தியா, சீனா, மலேசியா, மலாக்கா தீபகற்பம், அயனமண்டல ஆபிரிக்கா முதலான பகுதிகளிலும் காணப்படும். இதன் பூ தீச்சுவாலை போலக் காணப்படுவதால் அக்கினிசலம் எனப்படும். இதன் கிழங்கு கலப்பை வடிவமானதாக இருப்பதால் கலப்பை எனவும் இலாங்கிலி எனவும் அழைக்கப்படும். இலைகளின் முனை சுருண்டு காணப்படுவதால் தலைச்சுருளி என்றும் அழைக்கப்படும் அவற்றால் இது பற்றி ஏறுவதால் பற்றியென்றும் அழைக்கப்படும். அவ்வாறு வளைந்து பற்றுவதால் கோடல், கோடை என்று அழைக்கப்படும். கார்த்திகை மாதத்தில் மலர்வதால் கார்த்திகைப் பூ என்றும் அழைக்கப்படுகின்றது. மாரி காலத்தில் முதலிலேயே வனப்பாய்த் தோன்றுவதால், தோன்றி என்றும் அழைக்கப்படும். சுதேச மருத்துவத்திலே இதனை வெண்தோண்டி எனவும் அழைப்பர். இவ்வாறு தமிழ்மொழியில் பலபெயர்களால் அழைக்கப்படும். கார்த்திகைச் செடியானது வேலிகளிலும், பாதையோரங்களிலும், காட்டோரங்களிலும் படர்ந்து நிமிர்ந்து அழகிய விரல்கள் போலவும், சுடர்கள் போலவும் தோன்றும். ‘செங்காந்தள் ஐந்தன்ன விரலும் காட்டி’ என இம்மலரை பெண்களின் விரலுக்கும் ஒப்பிடுகின்றனர. கார்த்திகைப் பூவினை ஏனைய மொழிகளில், சிங்களம்- நியன்கல, சமஸ்கிருதம்- லன்கலி, இந்தி- கரியாரி, மராட்டி- மெத்தொன்னி, தாவரவியற் பெயர்- லல்லி ஆசியே குளோறி லில்லி (Liliaceae Glory lily) எனவும் அழைப்பர். இவ்வாறான சிறப்புக்களைக் கொண்டு தமிழர் பிரதேசங்களில் பூத்துக் குலுங்கும் கார்த்திகைப் பூ நாம் தொடுவதற்கோ, பார்ப்பதற்கோ அச்சம் கொள்ள வேண்டிய பூவல்ல. அது நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு பூ. ஏனைய பூக்களைப் போன்று நாமும் கார்த்திகைப் பூவை அச்சமின்றி பயன்படுத்தக் கூடிய ஒரு நிலை உருவாக வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பு.   https://www.ilakku.org/தாயகத்தில்-கார்த்திகைப்/
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.