• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
கிருபன்

தனி சிங்கள அரசாங்கத்தை தோற்றுவிக்க வேண்டும் என்ற கருத்தானது ஈழ போராட்டம் முன்னெடுப்பதை மேலும் வலுப்படுத்தும்

Recommended Posts

தனி சிங்கள அரசாங்கத்தை தோற்றுவிக்க வேண்டும் என்ற கருத்தானது ஈழ போராட்டம் முன்னெடுப்பதை மேலும் வலுப்படுத்தும்

ஞானசார தேரரின் தனி சிங்கள அரசாங்கத்தை தோற்றுவிக்க வேண்டும் என்ற கருத்தானது ஈழ போராட்டம் முன்னெடுப்பதை மேலும் வலுப்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார்.ஒரு நாட்டில் ஒரு சட்டத்தையே அனைத்து இன மக்களும் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையினை நிறைவேற்றுவதற்கு முழு ஒத்துழைப்பினையும் பெரும்பாலான மக்கள் வழங்க வேண்டும் என விசக்கருத்தை விதைத்திருக்கிறார்.

நாட்டின் முக்கியமான தேர்தல் ஒன்று நெருங்கும் நேரத்தில் இவ்வாறான கருத்துகளை தெரிவித்து நாட்டின் இறையாண்மையை முற்றிலும் பாதிக்க அவர்களை போன்ற தீய சக்திகளுக்கு இடமளிக்க முடியாது.தமிழ் மக்களின் தேச வழமை சட்டம், முஸ்லீம்களின் விவாக விவாகரத்து சட்டம், சிங்களவர்களின் கண்டிய சட்டம் ஊடாக நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கா வண்ணம் நாட்டின் இறையாண்மையை மதித்து சந்தோசமாக வாழும் மூவின மக்களையும் பிரித்து, நாட்டை சீரழிக்கும் வேலைத்திட்டத்தை வெளிநாட்டு நிகழ்ச்சி நிரலுக்காக ஞானசார தேரர் முன்னெடுக்கின்றாரா என சந்தேகம் எழுகின்றது.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்திருப்பதானது நாட்டின் இறையாண்மையை முற்றிலும் பாதித்து நாட்டை துண்டாடி பிரிவினைவாதத்தை முன்வைப்போருக்கு சாதகமாக அமைந்து விடும் என்பதுடன் ஈழ போராட்டம் முன்னெடுப்பதை மேலும் வலுப்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.நாட்டில் ஒரு சட்டமே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். எமது நாட்டில் இனங்களுக்கிடையில் சட்டங்கள் வேறுபடுத்தப்பட்டுள்ளன என இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.(15)
 

http://www.samakalam.com/செய்திகள்/தனி-சிங்கள-அரசாங்கத்தை-த/

Share this post


Link to post
Share on other sites
9 minutes ago, கிருபன் said:

ஞானசார தேரரின் தனி சிங்கள அரசாங்கத்தை தோற்றுவிக்க வேண்டும் என்ற கருத்தானது ஈழ போராட்டம் முன்னெடுப்பதை மேலும் வலுப்படுத்தும்

இப்பிடிச் சொல்லிச் சொல்லி நீங்க எங்க குண்டுவைக்க போறீங்கள் என்றதையும் சொன்னா என்ன?

Share this post


Link to post
Share on other sites
26 minutes ago, கிருபன் said:

 

 

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்திருப்பதானது நாட்டின் இறையாண்மையை முற்றிலும் பாதித்து நாட்டை துண்டாடி பிரிவினைவாதத்தை முன்வைப்போருக்கு சாதகமாக அமைந்து விடும் என்பதுடன் ஈழ போராட்டம் முன்னெடுப்பதை மேலும் வலுப்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

உங்களை போன்ற இன வாதிகளை விட ஞான சாரா தேரர் பரவாயில்லை। நீங்கள் தொப்பி பிரட்டாமல் , தமிழர்களின் போராட்டத்தை கட்டிக்கொடுக்காமல் இருந்திருந்தால் இலங்கை பிரச்சினை / இனப்பிரச்சினை எப்பவோ தீர்ந்திருக்கும்। இவங்கதான் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுற ஆட்கள்।

Share this post


Link to post
Share on other sites

தேரர்  சொல்வது ஒன்றும் பிரிவினையை ஏற்படுத்தாது. விளக்கம் கொடுத்து, சரித்திரத்தையும், உண்மையையும் விளக்குவோரே பிரிவினையை உருவாக்குகிறார். என்று நீதிமன்றத்தை நாடுவோரும் செய்தியாளரை கூட்டுவோரும் உள்ள விசித்திரமான நாட்டில், பிரிவினை சார்ந்து லாபம் ஈட்டுவோருக்கு உள்ள இயல்பான கவலையை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this