• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
nunavilan

காலக்கெடுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது- ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இலங்கை அறிவிப்பு

Recommended Posts

காலக்கெடுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது- ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இலங்கை அறிவிப்பு

 

by : Litharsan

யுத்தத்திற்குப் பிந்திய நிலைமாறுகால நீதி நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்வதற்கான வெளிப்புற காலக்கெடுக்கள் எதனையும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இலங்கை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இடம்பெற்ற பகிரங்கக் கூட்டமொன்றில் உரையாற்றிய ஐ.நா.விற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சேனுக்கா செனவிரட்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

நிலைமாறுகால நீதி தொடர்பான நடவடிக்கைகளைப் பூர்த்திசெய்வதற்காக விதிக்கப்படும் வெளிப்புற காலக்கெடுக்கள் நல்லிணக்க முயற்சிகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யதார்த்த நிலைமையைக் கருத்திற்கொள்ளாமல் அவ்வாறான காலக்கெடுக்கள் விதிக்கப்படுவதே இதற்கு காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிலைமாறுகாலப் பொறிமுறை குறித்த கருத்துக்களை முன்வைக்கும்போது வரலாறு, கலாசார, மத உணர்வுகளைக் கருத்திற்கொள்ள வேண்டும் என இலங்கையின் ஐ.நா. பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

பலநாடுகளால் பயங்கரவாதிகள் எனப் பட்டியலிடப்பட்ட அமைப்பிற்கு எதிராக இலங்கையின் பாதுகாப்புப் படையினர் முன்னெடுத்த நடவடிக்கையானது குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்கு எதிரானது அல்ல எனவும் சேனுக்கா செனவிரட்ன குறிப்பிட்டுள்ளார்.

சமீபகால வரலாற்றில் பொதுமக்களை வேண்டுமென்றே இலக்குவைத்து பயங்கரவாதக் குழு மேற்கொண்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை தற்போது சர்வதேச அளவில் ஏனைய குழுக்களும் முன்னெடுத்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

சமாதானம், நியாயம், நல்லிணக்கம் நிலவும் சமூகத்தை உருவாக்குவது அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இறைமையுள்ள நாடு என்ற அடிப்படையில் இலங்கை இது தொடர்பான தனது முன்னுரிமைகளை தானே உருவாக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/காலக்கெடுக்களை-ஏற்றுக்க/

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, nunavilan said:

காலக்கெடுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது- ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இலங்கை அறிவிப்பு

 

ஐ.நா .. 👌

201605030825319874_Get-into-the-habit-Th

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Share this post


Link to post
Share on other sites
11 hours ago, nunavilan said:

சமாதானம், நியாயம், நல்லிணக்கம் நிலவும் சமூகத்தை உருவாக்குவது அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

இதை முதலில்   உங்கள் மாண்புமிகு ஜனாதிபதிக்கும், தேரர்களுக்கும் போதியுங்கள். ஐ நா பாதுகாப்புச் சபையில் சொல்வதொன்று, சொந்தநாட்டில் செய்வது வேறொன்று. வக்கத்த நாடுகளும் தலையாட்டி, கைதட்டி  உங்களை பாராட்டுதாம்.

Share this post


Link to post
Share on other sites

sampanthan.jpg

கோபால்....  நீங்கள் சொன்ன... வாக்குறுதி எல்லாம், வீணாய்  போச்சே.... 

டிஸ்கி: பற்கள்... வெண்மையாக விளங்க, கோபால் பற் பொடி  பாவியுங்கள்.

டிஸ்கிக்கு... டிஸ்கி: எமது கிளைகள்... சென்னை, மதுரை, டில்லி, இலங்கை, சிங்கப்பூர்,  
ஐ.நா. சபை, ஐரோப்பிய பாராளுமன்றம் எங்கும்...  உள்ளது.

Share this post


Link to post
Share on other sites

சொறீலங்காவை பொறுத்த வரை எல்லாம் அன் லிமிட்டட்டாகத் தேவைப்படுகிறது.

பொய்யும் தான். 

Share this post


Link to post
Share on other sites

     தொடர்ந்து பொறுப்புக்களை தட்டிக்கழித்தவனுக்கு கால அவகாசம் கொடுத்து காத்திருந்ததன் பலாபலன். அவனே திருப்பி அதட்டும் அளவுக்கு முன்னேற்றி இருக்கிறது. குளிரும் காய்ச்சலும் விட்டுப்போய்ச்சு.

Share this post


Link to post
Share on other sites

அந்தக் காலத்து தேர்தல் மேடைகளில் பிரபலமாகவிருந்த பின்வரும் வசனம் எனோ ஞாபகத்தில் வந்து செல்கிறது..
"பழம் பழுத்துக் கொண்டிருக்கிறது , இனி வௌவால்கள் தேடி வரும் " ...     

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • யாழ்ப்பாணம் போக ரெடியா மாம்பழம் தின்ன ஆசையா  
  • மஹிந்த ராஜபக்ஷவே மீண்டும் பிரதமராக வர அதிகம் வாய்ப்புள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். மன்னாரில் இன்று (09) இடம்பெற்ற நிகழ்வில் இதனை தெரிவித்தார். மேலும், “இம்முறை தேர்தலில் மிக பெரும்பான்மையாக மஹிந்த தரப்பினர் வருவார்கள். மூன்றில் இரண்டு பெறும்பான்மையைப் பற்றிக் கதைத்தாலும் அவர்களுக்கு 120 – 130 வரையான ஆசனங்கள் கிடைக்கும் என நம்புகின்றார்கள். இருந்தாலும் அவர்கள் அரசியல் அமைப்பின் 19வது திருத்ததை இல்லாமல் செய்வதுடன், அவர்களின் கட்சியில் உள்ள விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் 13ம் திருத்தச் சட்டத்தையும் இல்லாமல் ஆக்கும் நோக்கத்துடன் இருப்பவர்கள். ஆனாலும், இந்தியா ஒரு போதும் இதற்கு அனுமதிக்காது. இப்படியான சூழலில் தமிழ் பிரதிநிதித்துவத்தை குறைத்துவிட வேண்டும் என்ற நோக்கில் பல கட்சிகள் வடக்கு கிழக்கில் இறக்கிவிடப்பட்டுள்ளார்கள். அரசாங்கத்தைச் சேர்ந்த கட்சிகளே பல கட்சிகளாக தேர்தலில் வாக்குக் கேட்கின்றார்கள்.” – என்றார். https://newuthayan.com/பிரதமராகும்-வாய்ப்பு-ம/
  • இவர்கள் தமிழின விரோத இந்தியாவின் கைக்கூலிகளாகாவே அறிக்கைகளை விடுகிறார்கள்!
  • வேற்றுச்சேனை கிராமம் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளது. அங்கு வாழும் குடும்பங்கள் அனைத்தும் இந்து மதத்தினர். இங்கு இருக்கும் சக்திவாய்ந்த. அக்கோயிலுக்கு ஒரு நிலையான கட்டடம் இல்லை. இரண்டு உயரமான வேல்கள் உயரமான சீமெந்தினால் கட்டப்பட்ட மேடையில் நிலைக்குத்தாக நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் அண்மையில் திடுதிப்பென்று வாகனங்களில் பௌத்த தேரர்கள் வந்தார்கள. இக்கோயிலும் அதைச் சூழவுள்ள காணியும் பௌத்த பீடத்திற்கு சொந்தமானவை எனக் கூறினார்கள். இந்த சம்பவம் தொடர்பில் அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் விபரித்துக் கூறினர். இந்தக் கோயில் ஒரு புராதன கோயில். எங்களது ஊர் வளர்ச்சியைக் காணாத ஒரு ஊர். ஒரு ஆரம்பப் பாடசாலை கூட இல்லை. இந்த கோயில்களும் அதன் தெய்வங்களுமே எமக்குத் துணை. ஆண்டாண்டு காலமாக நாங்கள் வழிபாடு நடத்துகிறோம். வேளாண்மை அறுவடை முடிந்த பின் ஒரு பொங்கல் வைத்து வைரவரை வழிபடுவோம்.அது ஒரு விழா. அதற்கென குறிப்பிட்ட நாள் இருக்கிறது. அது ஆனி மாதத்தில் வரும் பூரணையாகும். வழக்கம் போல அன்றும் பூசை நடந்தது. திடுதிப்பென்று வாகனங்களில் பௌத்த தேரர்கள் வந்தார்கள. இக்கோயிலும் அதைச் சூழவுள்ள காணியும் பௌத்த பீடத்திற்கு சொந்தமானவை எனக் கூறினார்கள். நாங்கள் எங்களது கோயிலின் வரலாற்றைக் கூறினோம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அபேட்சகர் சாணக்கியனும் அங்கு வந்து விட்டார் அவர் நிலைமைகளை விபரித்தார். எமது கிராமத்தவர்கள் ஒன்றுதிரண்டு எங்களது எதிர்ப்பைத் தெரிவித்ததும் அவர்கள் திரும்பிச் சென்று விட்டனர். இதையடுத்து இக்கோயிலின் முன்னோடிகள் வெல்லாவெளி பொலிஸாரால் களவாஞ்சிகுடி நீதிமன்றத்தில் இனிமேல் இவ்விடயங்களில் தலையிடக் கூடாதென சிலருக்கு எதிராக தடையுத்தரவு பெறப்பட்டிருப்பதாக அறிய முடிந்தது. இது பற்றி மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி வண.சுமனரத்ன தேரரைச் சநதித்து உண்மை நிலையை அறிய வினவிய போது அவர், “வெல்லாவெளி வேத்துச்சேனை கிராமத்தில் நடந்தேறிய விடயத்திற்கும் தனக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்றார். “பௌத்த மதத்தின் புராதன சின்னங்கள் இருந்தால் அதனை எப்படி அணுக வேண்டும் என்ற செயற்பாடுகள் பௌத்த துறவிகளுக்குத் தெரியாததல்ல. இப்படியான போலி நடவடிக்கைகளை யாருமே அனுமதிக்க முடியாது. நான் இவ்விடயத்தைக் கேள்விப்பட்டு பக்கத்தில் இருக்கும் சின்னவத்தை விகாராதிபதியோடு தொலைபேசியில் தொடர்பு கோண்டேன். சம்பவம் பற்றி விசாரித்தேன். அவரும் எனது நிலையிலேயே ஒன்றும் அறியாதவராக இருந்தார். ஆகையால் என்ன நடைபெறுகிறதென்று பார்ப்பதற்காக ஸ்தலத்திற்குச் சென்றேன். புதையல் தோண்டுபவர்களின் போலி நாடகமாக அது இருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு அப்போதே தோன்றி விட்டது. ஆயினும் பொலிஸார் தலையிட்டிருந்ததால் அவற்றுள் நான் தலையிட விரும்பவில்லை. இதனை வேத்துச்சேனை மக்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். இது எனது கோரிக்கை”. இவ்வாறு கூறினார் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி வண.சுமனரத்ன தேரர். இதுபற்றி அப்பகுதி பிரதேச சபையின் தவைர் ரஜனி கருத்துத் தெரிவிக்கையில் “இக்கோயில் அமைந்துள்ள இடம் ஒரு பூர்வீகமானது. வேத்துச்சேனையை சேர்ந்த மு.அமுதன் என்பவருக்கு இக்காணி சொந்தமானது. இதற்கான உறுதி அவரிடம் உள்ளது. நடந்த சம்பவம் ஆச்சரியமானது. எனக்கு இவ்விடயத்தில் தலையிடக் கூடாதென நீதிமன்றத்தால் தடையுத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது. அதனால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்” என்றார். அங்கு நடந்துள்ள சம்பவம் ஒரு போலி நாடகம் என்றுதான் மக்கள் தெரிவிக்கிறார்கள்.- https://www.ibctamil.com/srilanka/80/146818