• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
ampanai

படையினரிடம் சரணடைந்தவர்களின் பட்டியலை காணாமல்போனவர்களின் உறவுகளிடம் கையளிக்கவேண்டும்- மன்னிப்பு சபை வேண்டுகோள்

Recommended Posts

இலங்கை அரசாங்கம்; வலுக்கட்டாயமாக காணாமல்போகச்செய்யப்பட்டவர்களின் குடும்பத்தவர்களிற்கு நீதி உண்மை மற்றும் இழப்பீடு ஆகியவற்றை வழங்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொழும்பில் இன்று காணாமல்போனவர்களின் உறவினர்கள் மேற்கொள்ளவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக வெளியிட்டுள்ள அறிக்கையில் சர்வதேச மன்னிப்புச்சபை இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

இன்றைய நினைவுகூறல் என்பது தங்கள் அன்புக்குரியவர்கள் குறித்த பதிலுக்காக  வலுக்கட்டாயமாக காணாமல்போகச்செய்யப்பட்டவர்களின் உறவினர்களின் வலிமிகுந்த நீண்ட கால காத்திருப்பை நினைவுபடுத்துகின்றது என சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான இயக்குநர் பிராஜ் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

உலகின் பல பகுதிகளை சேர்ந்தவர்கள் காதலர் தினத்தை கொண்டாடும்இந்த தருணத்தில் இலங்கையில் காணாமல்போகச்செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் தங்கள்குடும்ப உறவுகளை நினைவுகூறுவதுடன் அவர்கள் குறித்த பதில்களை கேட்க முனைகின்றனர் என மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.


missing_people.jpg

காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்கள் உண்மையை அறிவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளிற்கு அரசாங்கம் ஆதரவு வழங்கவேண்டும் என தெரிவித்துள்ள பிராஜ்பட்நாயக் இதன் ஆரம்பமாக அதிகாரிகள் இலங்கையின் உள்நாட்டுயுத்தத்தின் இறுதியில் படையினரிடம் சரணடைந்தவர்களி;ன் பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியலை காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களிடம் கையளிக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


amnesty_international_l_new.jpg

காணாமல்போகச்செய்யப்படுதலிற்கு காரணமானவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் குறித்து  அரசாங்கம் சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

https://www.virakesari.lk/article/75639
          

 

Share this post


Link to post
Share on other sites

Demanding Justice for disappeared…

image_0b303621a8.jpg

Families of the Disappeared staged a protest march from Viharamahadevi Park to the Presidential Secretariat demanding for justice. They also handed over a petition to the Presidential Secretariat. Pix by Pradeep Dilrukshana

image_828035ce03.jpg

image_66d44c8604.jpg

image_ca7396c192.jpg

image_8fafc63f79.jpg

image_3b2a8ab464.jpg

http://www.dailymirror.lk/caption_story/Demanding-Justice-for-disappeared/110-183131

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • ஏனுங்க அம்மணி மினுமினுக்குது தாவணி எங்கே கிளம்பி போகிறிங்கிலாக்கு பட்டணத்துக்கு சினிமா மொத ஆட்டத்துக்கு போறேனுங்கோ ஆகட்டும் அது சரி ஊருக்குள்ள உங்களப்பத்தி ஏதோ பேசிக்கிட்டாங்கோ நீங்கள் யாரையோ காதலிக்கிறதாகவும் சீக்கிரம் அவரையே கண்ணாலம் செய்துகிறதாகவும் அது அம்புட்டும் உண்மையாங்க ? அப்படியெல்லாம் எதுவுமில்லிங்க முச்சுட்டும் புரளிங்க மக்க இப்படியெல்லாம் இல்லாத பொல்லாததெல்லாம் பேசி ஊர்குடியை கெடுப்பதாலே பலர் வாழ்வில் இழப்புகள் மட்டுமே மிஞ்சுமுங்க நேரங்கணக்க பேசிக்கிட்டிருந்ததால தாமதமாயிடுச்சிங்க படம் முடிச்சிடுங்கோ நான் போயி வாறேனுங்கோ எனக் கூறி வறப்பிலே ஓடினால் அம்மணி…….
    • காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை மக்கள் எதிர்பார்ப்பது வழக்கமானதே. நிலைமைகள் மாறும் போது பெயர்களும் அதற்கு தக மாற்றம் அடைகின்றன. தமிழ் பிரேதச செயலர் பதவியில் இருப்பதால் அவர் தமிழ் பேசும் மக்களுடன் உரையாடி அவர்களின் எதிர்பார்ப்பின் படி செயற்படுவார் என்று எதிர்பார்க்கலாம்.
    • இரண்டாம் நாள் அண்மையில் இருந்த அரண்மணையைப் பார்க்கப் போயிருந்தோம். அது பார்க்கவேண்டிய இடமா என்று கேட்பீர்கள். கடடாயம் பார்க்கவேண்டிய இடம் இல்லை. ஆனால் நாம் தங்கியிருந்த விடுதிக்கு அண்மையில் இருந்ததனால் அதையும் பார்த்துவிடுவோம் என்று எண்ணி சென்றோம். நடந்து செல்லும் தூரம்தான். அரண்மனைக்கு கிட்டச் செல்லச் செல்ல வழிகாட்டிகள் பேரம் பேசுவது அதிகரிக்க நாமே போய்க்கொள்கிறோம் என்றுவிட்டு ஒருவருக்குப் 10 டொலேர்ஸ் நுழைவுச் சீட்டை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றுவிட்டோம். அங்கங்கே ஆட்கள் சுத்தப்படுத்தும் வேலை கட்டடவேலை என்று செய்துகொண்டிருந்தார்கள். அந்நாட்டு ராஜா இறந்துவிட்டார். ராணியார் மட்டுமே இப்போது உயிருடன் இருப்பதாகக் கூறினர். அரண்மனை வளாகத்தினுள் சென்றால் தெற்குப் பகுதியில் சில்வர் பக்கோரா ஏற்று அழைக்கப்படும் பெளத்த விகாரை ஒன்று உண்டு.அதனுள்  தங்கத்தினால் ஆன புத்தர் சிலைகள், ஆபரணங்கள் என்பன பேணப்படுகின்றன என்றும் 5000 இற்கும் மேற்பட்ட வெள்ளி ஓடுகளினால் வேயப்பட்ட கூரை அது என்று கூறினாலும் எம்மால் அவற்றைப் பார்க்க முடியவில்லை. எங்கு பார்த்தாலும் புத்தரின் முகங்கள் தான். அதன் ஒருபுறம் பெரிய ஏரி ஒன்று அமைந்திருந்தாலும் அரண்மனை பெரு மதிலால் சூழப்பட்டுப் பாதுகாப்புடன் இருப்பதனால் ஏரி கண்ணுக்குத் தெரியவில்லை. இன்னொருபுறம் அரசரின் சிம்மாசன அரிகாணப்படுகிறது. தங்கத்தினால் ஆன இருக்கைகள், மின் விளக்குகள், அலங்கார பொருட்களுடன் காணப்படுகின்றது. தூரத்திலிருந்து அவற்றைப் பார்க்க முடியும். மறுபக்கம் போனால் கம்போடியா மன்னரின் உத்தியோகபூர்வ இல்லமான கெமரின் அரண்மனை காணப்படுகின்றது. இன்னொரு பக்கத்தில் சாம்பல் நிறத் தூபிகள் காணப்படுகின்றன. அதில் ஒன்றைப் பார்த்தால் தமிழர்களின் கோவில்த் தூபிகளின் அமைப்பைப் போன்றே இருக்கின்றது. சில கோபுர நுனியை பிள்ளையாரே அலங்கரித்தபடி இருந்தார்.   மதிய நேரம் என்பதால் கொளுத்தும் வெய்யிலில் இருக்கும் சிலமுறை நிழல்களிலும் கட்டட நிழலிலும் பார்வையாளர்கள் ஒதுங்கி நிற்கின்றனர். இரு பெரிய நாகலிங்கப் பூ மரங்கள் பூக்களுடன் மனதை மயக்குகின்றன. மலசலகூடங்கள் உடனுக்குடன் சுத்தமாகக் கழுவித் துடைத்தபடி நன்றாகவே இருக்கிறது. அங்கங்கே இளைப்பாறுவதற்கு சில இடங்களை அமைத்திருந்தனர். அங்கு போய் சிறிதுநேரம் அமர்ந்துவிட்டு உணவகத்துக்குப் போக ஆயத்தமானோம்.