Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யானையும் இல்லை, இதயமும் இல்லை; அன்னமே இறுதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் போது, அன்னம் சின்னத்திலேயே போட்டியிடுவதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் அணியும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அணியும் தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது.

image_7e64b9b00f.jpg

இன்று மாலை, ரணிலுக்கும் சஜித்துக்கும் இடையே இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/யனயம-இலல-இதயமம-இலல-அனனம-இறத/150-245533

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சின்னம் குறித்த இறுதி முடிவு திங்கட்கிழமை - ஐ.தே.க.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலானகூட்டணியின் சின்னம் குறித்து இருதரப்பினருக்கும் இடையில் நிலவிய கருத்து வேறுப்பாடுகள்ஆராயப்பட்டு 90சதவீதம் தீர்வு எட்டப்பட்டுள்ளதாகவும், திங்களன்று இறுதி தீர்வு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும்என ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

புதியகூட்டணி தொடர்பில்எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும்ஐக்கிய தேசிய கட்சியின்பாராளுமன்ற குழுஉறுப்பினர்களுக்கும்இடையிலான சந்திப்பு இன்று காலை 10 மணியளவில் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது.

இந்தசந்திப்பினை தொடர்ந்துஐக்கிய தேசிய கட்சியின்தொகுதி அமைப்பாளர்களின் சந்திப்பும் இடம் பெற்றுள்ளது. இதன்போது பொதுத்தேர்தலில் புதிய கூட்டணியில் எச்சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது குறித்துகவனம் செலுத்தப்பட்டுள்ளது.

செயற்குழுவில்நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படவேண்டுமாயின்புதிய கூட்டணியின் சின்னம் யானை சின்னமாககாணப்பட வேண்டும் எனஎதிர்க்கட்சிதலைவர் சஜித்பிரேமதாஸமுன்வைத்த கோரிக்கையினைஐக்கிய தேசிய கட்சியின்தலைவர் ரணில் விக்ரமசிங்க நிராகரித்தார்.

இதனை தொடர்ந்து ஏற்பட்டகருத்து முரண்பாடுகளினால் எதிர்கட்சிதலைவர் சஜித் பிரேமதாசகடந்தசெயற்குழு கூட்டத்தில் இருந்துஇடை நடுவேவெளியேறினார்.

யானைசின்னம் வேண்டுமாயின்அனைவரும்ஐக்கிய தேசிய கட்சியின் கீழ் போட்டியிட வேண்டும் எனசெயற்குழுவில்ரணில் அணியினர் குறிப்பிட்டதை சஜித்அணியினர் எதிர்த்தமையினால் எவ்வித தீர்மானங்களுமின்றிகடந்த10 ஆம் திகதிகூடிய ஐக்கிய தேசிய கட்சியின்செயற்குழுமுடிவடைந்தது.

இந் நிலையில் சின்னம் தொடர்பிலான முரண்பாடுகள்ஐக்கிய தேசிய கட்சியகட்சியின் ஆலோசனை குழுவினால் ஆராயப்பட்டு இன்று இறுதிதீர்மானம்செயற்குழுவின் ஊடாகஅறிவிக்கப்படும் என்றுகுறிப்பிடப்பட்ட நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுஇன்று கூடாமல்திங்கட்கிழமை கூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/75667

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.