Jump to content

தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் மோதல்; 3 ஆசிரியர்கள் காயம்


Recommended Posts

-எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணம் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் இருவருக்கிடையில் உருவான தர்க்கம் வாள்வெட்டு மோதலாக மாறிய நிலையில், 3 ஆசிரியர்கள் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம், இன்று பிற்பகல் 5 மணயளவில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தையடுத்து,  மோதலில் ஈடுபட்ட தொழிநுட்ப கல்லூரி மாணவனும் தாக்குதல் நடத்த வந்த வாள்வெட்டு குழுவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் இருவருக்கிடையில் தர்க்கம் உருவாகியுள்ளது. இதனையடுத்து கல்லூரி வளாகத்துக்குள்ளேயே இரு மாணவர்களும் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

மோதலில் ஈடுபட்ட மாணவா்களில் ஒருவர், வெளியில் இருந்து ரவுடி கும்பல் ஒன்றை உள்ளே அழைத்து வந்து, மோதலில் ஈடுபட்டுள்ளார்.

இதனை அவதானித்த ஆசிரியர்கள் சிலர், மோதலில் ஈடுபட்டவர்களை தடுக்க முயன்றபோது , ஆசிரியர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் 3 ஆசிரியர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு பொலிஸாரும் இராணுவத்தினரும் வந்த நிலையில், வாள்வெட்டுக் குழுவினர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். அதில் ஒருவர் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

மேற்படி சம்பவத்தையடுத்து, கல்வூரி வளாகத்தில், இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/தழலநடப-கலலர-வளகததல-மதல-3-ஆசரயரகள-கயம/71-245534

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடக்கு முறையில் இருந்து பழகிப்போச்சு மாறுவது கஷ்ரந்தான்.

Link to comment
Share on other sites

வாள்வெட்டு சம்பவத்தை கண்டித்து கவனயீர்ப்பு

-எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன், என்.ராஜ்

யாழ்ப்பாணம், தொழில் நுட்பக் கல்லூரியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தைக் கண்டித்தும் அதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து, பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியும் இன்று (18) காலை கவனயீர்ப்பு போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.

image_1b843afcc7.jpg

தொழில் நுட்பக் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட முரண்பாடு வாய்த்தர்க்கமாக மாறி அடிதடி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வாள்வெட்டுக் குழுவினர் சென்று கல்லூரியில் அடாவடித்தனங்களில் ஈடுபட்டனர்.

இதில், ஆசிரியர்கள் மூவர் காயமடைந்தனர். வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தார். இவ்வாறான சம்பவங்களால் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டிருந்தது.

இந்த வன்முறைக் குழுவின் சம்பவங்களைக் கண்டித்தும் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதுடன் பாதுகாப்பை உறுதியப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுமே இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மாணவர்கள் மத்தியில் ஏற்படிருக்கும் அச்ச உணர்வைப் போக்கி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென, வடக்கு மாகாண ஆளுநர், பிரதிப் பொலிஸமா அதிபர் உள்ளிட்ட தரப்பினர்களுக்கு மகஐரொன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/வாள்வெட்டு-சம்பவத்தை-கண்டித்து-கவனயீர்ப்பு/71-245695

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.