Sign in to follow this  
ampanai

சாய்ந்தமருது நகரசபை உதயமானது : பிரசுரமானது வர்த்தமானி அறிவித்தல்

Recommended Posts

சாய்ந்தமருது நகரசபை 2022, மார்ச் மாதம் 20 ஆம் திகதி அமுலாகும் வகையில் 2162/50 இலக்கம் கொண்ட அதிவிஷேட வர்த்தமானி, பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொப்பத்துடன் நேற்று நள்ளிரவு வெளியானது.

1987 ஆம் ஆண்டு கல்முனை தொகுதியில் 4 உள்ளூராட்சி சபைகள் காணப்பட்டது. அந்த நான்கு சபைகளும் முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசா கொண்டுவந்த பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டன.

அதனை மீண்டும் பிரித்து சாய்ந்தமருது பகுதியை ஒரு நகர சபையாக உருவாக்கி தருமாறு சாய்ந்தமருது மக்கள் கடந்த காலங்களில் நவம்பர் எழுச்சி, டிசம்பர் புரட்சி என பல்வேறு போராட்டம் நடாத்தியதுடன், கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்முனை மாநகரசபைக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சாய்ந்தமருது பள்ளிவாசல் சுயேற்சை குழுவை தோடம்பழம் சின்னத்தில் களமிறக்கி அதில் சாய்ந்தமருதில் உள்ள 06 வட்டாரங்களையும் வென்று விகிதாசார முறையில் 03 என மொத்தம் 09 உறுப்பினர்களை பெற்றமை விசேட அம்சமாகும்.

கடந்த நல்லாட்சி அரசில் முஸ்லிம் அமைச்சர்கள், முன்னாள் பிரதமர் ஆகியோர் நகர சபை தருவதாக பகிரங்கமாக வாக்குறுதி அளித்து ஏமாற்றி இருந்தனர்.

அதன் பின்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் சாய்ந்தமருது பள்ளிவாசல் மற்றும் 06 மக்கள் பிரதி நிதிகள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றிக்காக ஒப்பந்தம் செய்து மொட்டின் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு ஜனாதிபதியின் வெற்றியின் பங்காளர்களாக இருந்தனர்.

தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் , முயற்சியின் காரணமாக சாய்ந்தமருது நகரசபையை மலர செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த மகிழ்ச்சியை மக்கள் பட்டாசு கொளுத்தி, வானவேடிக்கைகள், இனிப்பு வழங்கி கொண்டாடி வருவதுடன் இந் நகரசபையை உருவாக்க காரணமாக இருந்த தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்வுக்கு மகத்தான வரவேற்பை வழங்கி கௌரவிக்க தயாராகி வருகிறார்கள்.

https://www.virakesari.lk/article/75672

 

Share this post


Link to post
Share on other sites

பதவியில் இல்லாட்டிலும் அதாவுல்லா போன்றோரால் சாதிக்க முடியுமென்றால், பதவியில் இருக்கும் கூட்டமைப்பால் ஏன் ஒன்றையும் தமிழ் மக்களுக்கு  பெற்றுக் கொடுக்க முடியவில்லை 

Share this post


Link to post
Share on other sites

‘தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்’

சாய்ந்தமருது, கல்முனை பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்று வந்த நிலையில், தற்போது சாய்ந்தமருது பிரதேசம் தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், கல்முனை உப தமிழ் பிரதேச செயலகமும் நிச்சயமாக தரம் உயர்த்தப்பட வேண்டுமென்று, மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

திருக்கோவில், காயத்தரி கிராமத்தில், நேற்று (16) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, மேற்படி கருத்தை அவர் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், “நாட்டில் வாழும் அனைத்துத் தமிழ் மக்களும் இந்த விவகாரங்களை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டு இருக்கின்றார்கள். இதனால் பாரிய பிரச்சினைகள் உருவாகுவதற்கு வாய்ப்புகள் காணப்படுகின்றன” என்றார்.

“நிலைமைகள் இவ்வாறு இருக்கையில் ஜனாதிபதி தீர்வொன்றை வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனவே, இந்தக் கல்முனைப் பிரச்சினையைக் கவனத்தில் கொண்டு, ஒரு தீர்க்கமான முடிவை விரைவாக வழங்க வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்தார்.

http://www.tamilmirror.lk/அம்பாறை/தரககமன-மடவ-எடகக-வணடம/74-245639

Share this post


Link to post
Share on other sites

இன்னொரு காத்தான்குடி உருவாகிறது.

குண்டு வைத்தும் அவர்கள் ஆக வேண்டியதை சிங்களவனைக் கொண்டே செய்விக்கிறார்கள்.. நாங்கள்..

இருந்த கல்முனையையும் இழந்து கொண்டிருக்கிறோம்.  

Share this post


Link to post
Share on other sites

அதாவுல்லா ,கல்முனை வடக்கை தமிழர்களுக்கு பிரித்து கொடுப்பதில் தங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்று சொல்லி இருக்கிறார் ...பொறுத்திருந்து பார்ப்போம் 

Share this post


Link to post
Share on other sites
10 hours ago, nedukkalapoovan said:

இன்னொரு காத்தான்குடி உருவாகிறது.

குண்டு வைத்தும் அவர்கள் ஆக வேண்டியதை சிங்களவனைக் கொண்டே செய்விக்கிறார்கள்.. நாங்கள்...  

யாழ் களத்தில் எழுதிக்கொண்டு இருக்கிறோமே, காணாதா? 😀

 

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, கற்பகதரு said:

யாழ் களத்தில் எழுதிக்கொண்டு இருக்கிறோமே, காணாதா? 😀

😂😂

😂 🤣 😂😂🤣😂

Share this post


Link to post
Share on other sites

சாய்ந்தமருது அடிப்படை உரிமை மனு நிறைவு

சாய்ந்தமருது அடிப்படை உரிமை மனு நிறைவு

 
 

சாய்ந்தமருது தொகுதியை பிரதேச சபையாக அறிவித்து உத்தரவு பிறப்பிக்குமாறு 2017 ஆம் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை இன்றுடன் நிறைவடைந்துள்ளது.

குறித்த பிரதேசம் நகர சபையாக தரம் உயர்த்தப்பட்டுள்ள காரணத்தால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு இன்று மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த மொஹமட் அலியார் மற்றும் மொஹமட் நௌபர் ஆகிய இருவரினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
 

Share this post


Link to post
Share on other sites

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை ஏற்க முடியாது

25_17022020_SSF_CMY.jpg?itok=9r_u17kz

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்

சாய்ந்தமருதிற்கு நகர சபை வழங்கியிருப்பதை நாங்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை. ஆனால் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை ஒரு முழுமையான பிரதேச செயலகம் ஆக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது  என தமிழ் மக்கள் கூட்டணியின் முக்கியஸ்தரும் முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். 

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் அரசியல் சூழ்நிலைகள் தொடர்பாக தமிழர் விடுதலை கூட்டணியின் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களின் பங்குபற்றலுடன்  கல்முனை பிரதேசத்தில்  இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார். 

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நாங்கள்  அம்பாறை மாவட்டத்தில் உள்ள சிவில் சமூகம் அரசியல் பிரமுகர்களை சந்தித்துள்ளோம். கல்முனை வடக்கு பிரதேச செயலகம் விடயம் மிக நீண்டகாலமாக  பிரச்சினை. கடந்த அரசாங்கமும் தமிழ் மக்களுக்கு பல உறுதிமொழிகளை வழங்கி இருந்தது. ஆனால் அவற்றை நிறைவேற்றவில்லை.

இந்த அரசாங்கமும் தேர்தல் காலங்களில் கடந்த அரசாங்கத்தைப் போல் உறுதிமொழிகளை வழங்கியிருந்தது. அந்த உறுதிமொழியை கேட்டு கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படும் என இன்றுவரை உறுதியாக நம்பி இருக்கின்றனர். பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற விடயத்தில் மிகவும் ஆவலாக இருக்கின்றனர். ஜனாதிபதியும் பிரதம மந்திரியும் கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவார்கள் என்பதை நான் உறுதிபட நம்புகிறேன்.

அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்த வரையில் ஒரேயொரு தமிழ்ப் பிரதிநிதித்துவம் தான் வரக்கூடிய சாத்தியக்கூறு இருக்கின்றது. இதனை ஏனைய அனைத்து கட்சிகளும் புரிந்துகொள்ள வேண்டும் பிரிந்தால் வரப்போகின்ற ஒரே ஒரு பிரதிநித்துவத்தை கூட இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் இதனை அனைத்து தமிழ் கட்சிகளும் சிந்தித்து செயற்பட வேண்டும். 

சாய்ந்தமருதிற்கு மாநகர சபை வழங்கியிருப்பதை நாங்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை. ஆனால் முப்பது வருடங்களாக கோரிக்கையாக இருக்கின்ற கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை இன்றுவரை ஒரு முழுமையான பிரதேச செயலகம் ஆக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

பிரதமர் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும். கருணா அம்மான் அவருக்கு இருக்கின்ற சக்தியை பிரயோகித்து அடுத்த பத்து நாட்களுக்குள் இந்த வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்திக் கொடுப்பாராக இருந்தால் நான் அவரைப் பாராட்டுவேன். 

அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இங்கு பிரதிநிதித்துவத்தை பெறுவதில் அனைத்து தரப்புடனும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் இல்லையேல் அதற்கும் முழுப் பொறுப்பு கூற வேண்டியவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே என்றார்.

http://www.thinakaran.lk/2020/02/18/அரசியல்/48511/கல்முனை-வடக்கு-பிரதேச-செயலகத்துக்கு-எதிர்ப்பு-தெரிவிப்பதை-ஏற்க-முடியாது

Share this post


Link to post
Share on other sites
On 2/15/2020 at 11:19 PM, ரதி said:

பதவியில் இல்லாட்டிலும் அதாவுல்லா போன்றோரால் சாதிக்க முடியுமென்றால், பதவியில் இருக்கும் கூட்டமைப்பால் ஏன் ஒன்றையும் தமிழ் மக்களுக்கு  பெற்றுக் கொடுக்க முடியவில்லை 

முதல் தீர்வாம் அப்புறம்தான் எல்லாமாம்.எங்கடை புட்டப் பிள்ளைகளின் காலத்திலும் நடக்காது

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this