• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
nunavilan

2020 ஐ.பி.எல் தொடருக்கான முழு போட்டி அட்டவணை வெளியீடு

Recommended Posts

2020 ஐ.பி.எல் தொடருக்கான முழு போட்டி அட்டவணை வெளியீடு

 
EQ1IopHU4AAddw9-696x472.jpg

lg.php?bannerid=59408&campaignid=7337&zo

எதிர்வரும் மார்ச் மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள 13ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கான முழு போட்டி அட்டவணை இன்று (15) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் வெளியிடப்பட்டுள்ளது. 

கிரிக்கெட் உலகில் நடைபெறும் லீக் தொடர்களில் அதிகமான ரசிகர்கள் கூட்டத்தை கொண்ட தொடராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் கடந்த 2007ஆம் ஆண்டிலிருந்து வருடா வருடம் நடத்தப்பட்டுவரும் இந்தியன் ப்ரீமியர் லீக் அமைந்துள்ளது. 

 

கடந்த 2007ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் வெற்றிகரமாக நடைபெற்றுவருகின்ற இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் 13ஆவது பருவகாலத்திற்கான தொடர் எதிர்வரும் மார்ச் 29ஆம் திகதி மும்பை வாங்கடே மைதானத்தில் ஆரம்பமாகிறது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது முழு போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள போட்டி அட்டவணையின்படி இறுதி 56ஆவது லீக் போட்டியானது எதிர்வரும் மே மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ளது. முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சம்பியனான ரோஹிட் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எம்.எஸ் டோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் அணி எதிர்த்தாடுகிறது. 

முழுப்போட்டி அட்டவணை பின்வருமாறு,

  1. 29 மார்ச் – மும்பை இந்தியன்ஸ் எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – மும்பை
  2. 30 மார்ச் – டெல்லி கெபிடல்ஸ் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – டெல்லி  
  3. 31 மார்ச் – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பெங்களூர்
  4. 1 ஏப்ரல் – சன்ரைஸஸ் ஹைதராபாத் எதிர் மும்பை இந்தியன்ஸ் – ஹைதராபாத் 
  5. 2 ஏப்ரல் – சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் – சென்னை 

  1. 3 ஏப்ரல் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் டெல்லி கெபிடல்ஸ் – கொல்கத்தா 
  2. 4 ஏப்ரல் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் சன்ரைஸஸ் ஹைதராபாத் – மொஹாலி
  3. 5 ஏப்ரல் – மும்பை இந்தியன்ஸ் எதிர் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – மும்பை (பகல்)
  4. 5 ஏப்ரல் – ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர் டெல்லி கெபிடல்ஸ் – ஜெய்பூர் 
  5. 6 ஏப்ரல் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – கொல்கத்தா 
  6. 7 ஏப்ரல் – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சன்ரைஸஸ் ஹைதராபாத் – பெங்களூர் 
  7. 8 ஏப்ரல் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் மும்பை இந்தியன்ஸ் – மொஹாலி 
  8. 9 ஏப்ரல் – ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ஜெய்பூர்
  9. 10 ஏப்ரல் – டெல்லி கெபிடல்ஸ் எதிர் ரோயல்ஸ் செலஞ்சர்ஸ் பெங்களூர் – டெல்லி 
  10. 11 ஏப்ரல் – சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – சென்னை 
  11. 12 ஏப்ரல் – சன்ரைஸஸ் ஹைதராபாத் எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் – ஹைதராபாத் (பகல்)
  12. 12 ஏப்ரல் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா 
  13. 13 ஏப்ரல் – டெல்லி கெபிடல்ஸ் எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – டெல்லி 
  14. 14 ஏப்ரல் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் ரோயல்ஸ் செலஞ்சர்ஸ் பெங்களூர் – மொஹாலி 
  15. 15 ஏப்ரல் – மும்பை இந்தியன்ஸ் எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் – மும்பை 
 

16 ஏப்ரல் – சன்ரைஸஸ் ஹைதராபாத் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ஹைதராபாத்

  1. 17 ஏப்ரல் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – மொஹாலி 
  2. 18 ஏப்ரல் – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் – பெங்களூர் 
  3. 19 ஏப்ரல் – டெல்லி கெபிடல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – டெல்லி (பகல்) 
  4. 19 ஏப்ரல் – சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர் சன்ரைஸஸ் ஹைதராபாத் – சென்னை 
  5. 20 ஏப்ரல் – மும்பை இந்தியன்ஸ் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – மும்பை 
  6. 21 ஏப்ரல் – ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர் சன்ரைஸஸ் ஹைதராபாத் – ஜெய்பூர் 
  7. 22 ஏப்ரல் – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் டெல்லி கெபிடல்ஸ் – பெங்களூர்
  8. 23 ஏப்ரல் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – கொல்கத்தா
  9. 24 ஏப்ரல் – சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் – சென்னை 
  10. 25 ஏப்ரல் – ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – ஜெய்பூர் 
  11. 26 ஏப்ரல் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மொஹாலி (பகல்)
  12. 26 ஏப்ரல் – சன்ரைஸஸ் ஹைதராபாத் எதிர் டெல்லி கெபிடல்ஸ் – ஹைதராபாத் 
  13. 27 ஏப்ரல் – சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – சென்னை
  14. 28 ஏப்ரல் – மும்பை இந்தியன்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை 

  1. 29 ஏப்ரல் – ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – ஜெய்பூர் 
  2. 30 ஏப்ரல் – சன்ரைஸஸ் ஹைதராபாத் எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – ஹைதராபாத் 
  3. 1 மே – மும்பை இந்தியன்ஸ் எதிர் டெல்லி கெபிடல்ஸ் – மும்பை 
  4. 2 மே – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் – கொல்கத்தா
  5. 3 மே – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – பெங்களூர் (பகல்)
  6. 3 மே – டெல்லி கெபிடல்ஸ் எதிர் சன்ரைஸஸ் ஹைதராபாத் – டெல்லி
  7. 4 மே – ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – ஜெய்பூர் 
  8. 5 மே – சன்ரைஸஸ் ஹைதராபாத் எதிர் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – ஹைதராபாத் 
  9. 6 மே – டெல்லி கெபிடல்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி
  10. 7 மே – சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சென்னை
  11. 8 மே – கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் – மொஹாலி  
  12. 9 மே – மும்பை இந்தியன்ஸ் எதிர் சன்ரைஸஸ் ஹைதராபாத் – மும்பை 
  13. 10 மே – சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர் டெல்லி கெபிடல்ஸ் – சென்னை (பகல்) 
  14. 10 மே – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா
  15. 11 மே – ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் – ஜெய்பூர் 
 
  1. 12 மே – சன்ரைஸஸ் ஹைதராபாத் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – ஹைதராபாத்  
  2. 13 மே – டெல்லி கெபிடல்ஸ் எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் – டெல்லி
  3. 14 மே – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – பெங்களூர்
  4. 15 மே – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சன்ரைஸஸ் ஹைதராபாத் – கொல்கத்தா
  5. 16 மே – கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் டெல்லி கெபிடல்ஸ் – மொஹாலி  
  6. 17 மே – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் மும்பை இந்தியன்ஸ் – பெங்களூர்

http://www.thepapare.com/indian-premier-league-2020-full-schedule-tamil/

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, ஈழப்பிரியன் said:

இந்த போட்டியை நடாத்த கிருபன் முன்வர வேண்டும்.

நீங்களே நடாத்துங்கள் ஈழப்பிரியன் அண்ணா! எப்போதும் போல உதவிக்கு நாங்கள் இருக்கின்றோம்

  • Like 2

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, கிருபன் said:

நீங்களே நடாத்துங்கள் ஈழப்பிரியன் அண்ணா! எப்போதும் போல உதவிக்கு நாங்கள் இருக்கின்றோம்

வணக்கம் கிருபன்.
பேரப்பிள்ளைகளுடன் பொழுது போவதால் கணனி தொலைபேசி தொட முடிவதில்லை.இந்த நிலையில் எப்படி என்னால் போட்டியை நடாத்தலாம்?

பையனுக்கு கிரிக்கட்டில் நல்ல ஆர்வமும் நுணுக்கங்களும் தெரிந்திருக்கிறது.எனவே இம்முறை பையனோ வேறு யாராவதோ முன்வரமாட்டார்களா?

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா இன்னும் 8மாச‌த்தில் உல‌க‌ கோப்பை தொட‌ங்க‌ இருக்கு , அதுக்கு அட்ட‌காச‌மாய் போட்டியை வைப்போம் , ஜ‌பிஎல்லை பொழுது போக்குக்காக‌ பாப்போம் , உல‌க‌ கோப்பை விளையாட்டில் தான் யாழ் க‌ள‌ போட்டியும் சூடு பிடிக்கும் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
On 2/16/2020 at 3:36 PM, பையன்26 said:

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா இன்னும் 8மாச‌த்தில் உல‌க‌ கோப்பை தொட‌ங்க‌ இருக்கு , அதுக்கு அட்ட‌காச‌மாய் போட்டியை வைப்போம் , ஜ‌பிஎல்லை பொழுது போக்குக்காக‌ பாப்போம் , உல‌க‌ கோப்பை விளையாட்டில் தான் யாழ் க‌ள‌ போட்டியும் சூடு பிடிக்கும் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா 

பையா உலகக்கோப்பை ஒவ்வொரு வருடமும் நடப்பதல்ல.ஆனால் இந்திய ஐபிஎல் ஒவ்வொரு வருடமும் நடைபெறுவதால் உலகக்கோப்பை போட்டி இந்த வருடம் நடப்பதால் ஐபிஎல் ஐ கைவிடலாமா?எனவே தான் யாராவது எடுத்து நடத்தினால் நல்லது.

Share this post


Link to post
Share on other sites

முடிவாக என்ன சொல்லுகின்றீர்கள்? 😀பத்துபேர் ஆதரவு காட்டினால் கேள்விக்கொத்து தயாரிக்கலாம்😬

Share this post


Link to post
Share on other sites

ஆதரவு உண்டு தொடங்குங்கள் கிருபன்.

Share this post


Link to post
Share on other sites
17 hours ago, கிருபன் said:

முடிவாக என்ன சொல்லுகின்றீர்கள்? 😀பத்துபேர் ஆதரவு காட்டினால் கேள்விக்கொத்து தயாரிக்கலாம்😬

நானும் வாறேன் சார்.

Share this post


Link to post
Share on other sites

உள்ளுக்கு வரவிட்டுட்டு  ஈவிரக்கம் இல்லாமல் மொங்க மாட்டியள்  எண்டால் நானும் வாறன் 😎

  • Like 1
  • Haha 1

Share this post


Link to post
Share on other sites
10 minutes ago, குமாரசாமி said:

உள்ளுக்கு வரவிட்டுட்டு  ஈவிரக்கம் இல்லாமல் மொங்க மாட்டியள்  எண்டால் நானும் வாறன் 😎

ஒண்டுக்கும் யோசிக்காதையுங்கோ.இந்த முறையும் ஒருத்தன் மாட்டமாட்டானா

 

14 minutes ago, குமாரசாமி said:

உள்ளுக்கு வரவிட்டுட்டு  ஈவிரக்கம் இல்லாமல் மொங்க மாட்டியள்  எண்டால் நானும் வாறன் 😎

 

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, குமாரசாமி said:

உள்ளுக்கு வரவிட்டுட்டு  ஈவிரக்கம் இல்லாமல் மொங்க மாட்டியள்  எண்டால் நானும் வாறன் 😎

தாத்தா அப்ப‌டியே அடிச்சு விட‌ப்பா , பின‌லில் ( மும்மாய் இன்டிய‌ன் எதிர் சென்னை சூப்ப‌ர் கிங்ஸ் என்று , கோப்பையை மும்மாய் தான் தூக்கும் என்று 💪

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

எனக்கு IPL ஐ கண்ணிலும் காட்டக்கூடாது என்றாலும் கிருபனுக்காக போட்டியில் கலந்து கொள்ள தயார் !!!

  • Like 2

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, Eppothum Thamizhan said:

எனக்கு IPL ஐ கண்ணிலும் காட்டக்கூடாது என்றாலும் கிருபனுக்காக போட்டியில் கலந்து கொள்ள தயார் !!!

என‌க்கும் ஜ‌பிஎல்ல‌ சுத்த‌மாய் பிடிக்காது , நான் நேசிக்கும் உற‌வுக‌ள் போட்டியில் க‌ல‌ந்து கொள்ளின‌ம் அவையின் ச‌ந்தோச‌த்துக்காக‌ க‌ல‌ந்து கொள்கிறேன் 💞

On 2/18/2020 at 2:28 AM, ஈழப்பிரியன் said:

பையா உலகக்கோப்பை ஒவ்வொரு வருடமும் நடப்பதல்ல.ஆனால் இந்திய ஐபிஎல் ஒவ்வொரு வருடமும் நடைபெறுவதால் உலகக்கோப்பை போட்டி இந்த வருடம் நடப்பதால் ஐபிஎல் ஐ கைவிடலாமா?எனவே தான் யாராவது எடுத்து நடத்தினால் நல்லது.

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா இந்த‌ ஆண்டு ந‌ட‌க்கும் t20 உல‌க‌ கோப்பை 58 மாத‌ம் க‌ழித்து ந‌ட‌க்குது , கிட்ட‌ த‌ட்ட‌ 4ல‌ர‌ வ‌ருட‌த்துக்கு பிற‌க்கு , ஜ‌பிஎல் தான் வ‌ருட‌ம் வ‌ருட‌ம் ந‌ட‌க்குது ,

உல‌க‌ கோப்பை போட்டியில் தான் யாழ் க‌ள‌ போட்டியும் சூடு பிடிக்கும் ,

ச‌ரி கிருப‌ன் அண்ணா முன் வ‌ந்து போட்டியை ந‌ட‌த்துகிறார் , எல்லாரும் க‌ல‌ந்து கொள்ளுவோம் 🤞🙏👏

Edited by பையன்26
  • Like 1
  • Haha 1

Share this post


Link to post
Share on other sites
20 hours ago, பையன்26 said:

என‌க்கும் ஜ‌பிஎல்ல‌ சுத்த‌மாய் பிடிக்காது , நான் நேசிக்கும் உற‌வுக‌ள் போட்டியில் க‌ல‌ந்து கொள்ளின‌ம் அவையின் ச‌ந்தோச‌த்துக்காக‌ க‌ல‌ந்து கொள்கிறேன் 💞

பையனை... நினைக்க, பரிதாபமாக உள்ளது. :grin:

எனக்கு... கிரிக்கெட், விளையாட்டை  கண்ணிலையும்  காட்டக்  கூடாது, 
ஏனென்றால்.. சின்ன வயசில் கிரிக்கெட்  விளையாடும்  போது...
பந்து... வந்து, முக்கிய இடத்தில்... பட்டு விட்ட  வேதனையை... 😫 இன்றும் மறக்க முடியாது. 

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites
17 hours ago, தமிழ் சிறி said:

பையனை... நினைக்க, பரிதாபமாக உள்ளது. :grin:

எனக்கு... கிரிக்கெட், விளையாட்டை  கண்ணிலையும்  காட்டக்  கூடாது, 
ஏனென்றால்.. சின்ன வயசில் கிரிக்கெட்  விளையாடும்  போது...
பந்து... வந்து, முக்கிய இடத்தில்... பட்டு விட்ட  வேதனையை... 😫 இன்றும் மறக்க முடியாது. 

கொக் வோலில் விளையாடுவில் , ஆண் உட‌ம்புக்கு ர‌வ‌ர் வைக்க‌னும் சிறி அண்ணா , த‌லை க‌வ‌ச‌ம் போட‌னும் , ஏன் கொக் வோலில் விளையாடி முன்னால் அவுஸ்ரேலியா வீர‌ர் உயிர் இழ‌ந்த‌து ப‌ல‌ரை சோக‌த்தில் ஆத்திய‌து ,

உந்த‌ ப‌ந்தில் விளையாடும் போது க‌வ‌ன‌மாக‌ இருக்க‌னும் த‌மிழ் சிறி அண்ணா 

நான் இங்லாந் ம‌ற்றும் அவுஸ்ரேலியா உள்ளூர் கில‌ப்புக‌ள் விளையாடும் போது அதிக‌ம் பார்ப்ப‌து உண்டு , ஜ‌பிஎல் தொட‌ங்கின‌ ஆர‌ம்ப‌த்தில் பார்த்தேன் பிற‌க்கு பெரிசா பார்ப்ப‌து இல்லை , த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ள் விளையாடும் போது பார்ப்ப‌து உன்டு 

Share this post


Link to post
Share on other sites
17 hours ago, தமிழ் சிறி said:

பையனை... நினைக்க, பரிதாபமாக உள்ளது. :grin:

எனக்கு... கிரிக்கெட், விளையாட்டை  கண்ணிலையும்  காட்டக்  கூடாது, 
ஏனென்றால்.. சின்ன வயசில் கிரிக்கெட்  விளையாடும்  போது...
பந்து... வந்து, முக்கிய இடத்தில்... பட்டு விட்ட  வேதனையை... 😫 இன்றும் மறக்க முடியாது. 

இப்படியான தருணங்களில் இன்னெருவர் தடவி விட்டிருந்தால் இப்படி ஒதுங்கியிருக்க மாட்டீர்கள்.

  • Haha 2

Share this post


Link to post
Share on other sites
On 2/20/2020 at 9:05 AM, Eppothum Thamizhan said:

எனக்கு IPL ஐ கண்ணிலும் காட்டக்கூடாது என்றாலும் கிருபனுக்காக போட்டியில் கலந்து கொள்ள தயார் !!!

எனக்கு துடுப்பாட்டத்தையே கண்ணில் காட்டக்கூடாது. இதில் போட்டி வேறயா ? 

(ச்சும்ம்மாமா😜😜😜தான் யாரோடையும் கொழுவுவோமென்று)

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.