Sign in to follow this  
போல்

பிரித்தானியாவில் சுமந்திரனை தேடித்திரியும் தமிழ் இளைஞர்கள்!!

Recommended Posts

த.தே.கூட்டமைப்பின் பேச்சாளரும், சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இன்று மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொள்வதான அழைப்பு சமூக ஊடகங்களில் வெளியாகி இருந்தது.

பிரித்தானியாவின் New Molden, Kentan போன்ற இடங்களில் நடைபெற இருப்பதாகக் கூறப்பட்ட மக்கள் சந்திப்புக்களில் சுமந்திரன் கலந்துகொள்ளவில்லை என்ற விடயம், அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவென்று சென்றிருந்த இளைஞர்களை கோபப்பட வைத்திருந்தது.

இன்றைய அரசியல் சூழ்நிலைகள் பற்றிய தெளிவைக் கேட்டறிந்துகொள்வதற்காக தாம் அங்கு சென்றிருந்த போதும், சுமந்திரன் மக்களைச் சந்திக்க வராதது தமக்கு கவலை அளிப்பதாக அங்கு வந்தவர்கள் தெரிவித்திருந்தார்கள்.

சுமந்திரன் தொடர்பான தமது கருத்துக்களை, நிகழ்வு நடைபெற இருப்பதாகக்கூறப்பட்டிருந்த கட்டிடத்தில் அவர்கள் எழுதிவிட்டும் சென்றிருந்தார்கள்.

இந்த சந்திப்புத் தொடர்பாக த.தே.கூட்டமைப்பின் லன்டன்கிளையிடம் கேட்டபொழுது, இந்தச் சந்திப்பு தமது கிளையினால் ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும், தனிப்பட்ட இருவரினாலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எதிராக தமது கோபத்தை தமிழ் இளைஞர்கள் வெளிப்படுத்திய வீடியோ இது:

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

Share this post


Link to post
Share on other sites

😂😂😂இவங்களோட பெரிய தொல்லை கூத்தமைப்பு மக்கள் முன்னால் வரப்போவது இல்லை வெறும் அறிக்கை விடுவாங்கள் எல்லோரும் இப்போ கோடீஸ்வர வியாபாரிகள் தமிழ் மக்கள் இரத்தம் விற்பதில் கில்லாடிகள் வாக்குகளை உடைக்க மட்டும் முன்னுக்கு நிற்கும் கூட்டங்கள்

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

சுமந்திரன் ஒரு வெத்து வேட்டு. அது சும்மா தன் தேவைக்கு ஏற்ப சவுண்டு விடும். இதெல்லாம்... தமிழ் மக்களின் பிரதிநிதி என்று பேசப்படுவதற்கே லாய்க்கற்றது என்பது தான் உண்மை.

ஆனாலும் சுமந்திரனின் சிங்களத் தேசத் தொடர்புகளை பயன்படுத்துவோர்... அவரை போற்றிப் புகழச் செய்வதை காண்கிறோம். அகில இலங்கை கம்பன் கழகக் கூத்தாடிகள்.. அண்மையில்.. இவருக்கு ஏதோ போராளின்னு.. பட்டம் வழங்கி கெளரவித்திருந்தனர். அவர்களும் சரி.. இவரும் சரி.. என்ன போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்களோ யாருக்குத் தெரியும்.

எல்லாம்.. உள்ளுக்குள்ளால்.. ஆளையாள் முதுகு சொறிவதாக இருக்கும். 

Share this post


Link to post
Share on other sites

roflphotos-dot-com-photo-comments-201712

 • Haha 3

Share this post


Link to post
Share on other sites

தலைப்பைப் பார்த்து நானும் சேர்ந்து தேடுவோம் என ஓடி வந்து பார்த்தால் வழமைபோல தலைப்பிற்கும் உள்ளடக்கத்திற்கும் தொடர்பில்லை. 

Share this post


Link to post
Share on other sites
On 2/16/2020 at 12:20 PM, மார்த்தாண்டன் said:

😂😂😂இவங்களோட பெரிய தொல்லை கூத்தமைப்பு மக்கள் முன்னால் வரப்போவது இல்லை வெறும் அறிக்கை விடுவாங்கள் எல்லோரும் இப்போ கோடீஸ்வர வியாபாரிகள் தமிழ் மக்கள் இரத்தம் விற்பதில் கில்லாடிகள் வாக்குகளை உடைக்க மட்டும் முன்னுக்கு நிற்கும் கூட்டங்கள்

இவர்களில் முக்காவாசி பேர் இயக்கத்தில் இருந்து கொள்ளையடித்துக்கொண்டு ஓடின கூடடம்। இப்படியே நாட்டில பிரச்சினை இருந்தால் அதுகளுக்கு கொண்டாடடம்தானே। அதுதான் சும்மா துள்ளுதுகள்। மத்தபடி ஒன்றுக்கும் உதவாத நபர்கள்। 

Share this post


Link to post
Share on other sites
29 minutes ago, Vankalayan said:

இவர்களில் முக்காவாசி பேர் இயக்கத்தில் இருந்து கொள்ளையடித்துக்கொண்டு ஓடின கூடடம்। இப்படியே நாட்டில பிரச்சினை இருந்தால் அதுகளுக்கு கொண்டாடடம்தானே। அதுதான் சும்மா துள்ளுதுகள்। மத்தபடி ஒன்றுக்கும் உதவாத நபர்கள்। 

யாரைச்சொல்கிறீர்கள்:???

கூட்டமைப்பையா?

அவர்களைத்தேடிய கூட்டத்தையா???

Share this post


Link to post
Share on other sites

ஒரு காலம்   புலிகள் தவிர்ந்த ஈழ  அரசியல்வாதிகள் எவரும் புலம் பெயர் தேசம் வரகூடாது என்று கொள்கை வைத்திருந்தோம்.

வந்தாலும் மக்கள் அவர்களை சந்திக்க கூடாது என்றும் கொள்கை வைத்திருந்தோம்...

இன்று ...

ஒருகாலம் நாங்கள் வெறுத்தவர்களெல்லாம் லண்டன் வந்தும் ஏன் எம்மை சந்திக்கவில்லையென்று  மானசீக போர் தொடுக்கிறோம்...

கொஞ்சம் காலம் நகர்ந்தாலும்  தடுமாறும்  இந்த கோமாளி தமிழர் கூட்டத்தை தலைவர் மூன்று தசாப்தங்களாய் மான ரோஷத்துடன்  தன் கை பிடியில் வைத்திருந்தது ...

ஏன் அவரை நாங்கள் என்றும்  அவரை மட்டுமே தேசிய தலைவர் என்று சொல்கிறோம் என்பதற்கு சாட்சி.

Share this post


Link to post
Share on other sites
17 minutes ago, விசுகு said:

யாரைச்சொல்கிறீர்கள்:???

கூட்டமைப்பையா?

அவர்களைத்தேடிய கூட்டத்தையா???

உங்களுக்கு விளங்கினாள் சரி। விளங்கவிடால் பிரச்சினை இல்லை। 

Share this post


Link to post
Share on other sites
6 minutes ago, Vankalayan said:

உங்களுக்கு விளங்கினாள் சரி। விளங்கவிடால் பிரச்சினை இல்லை। 

சரியுங்க

அப்போ  உங்க கருத்தை உங்க கருத்துக்களத்தில் பதிவதேன்???

Share this post


Link to post
Share on other sites
Just now, விசுகு said:

சரியுங்க

அப்போ  உங்க கருத்தை உங்க கருத்துக்களத்தில் பதிவதேன்???

சிலருக்கு விளங்கும் சிலருக்கு விளங்காது। அதுக்காக வகுப்பு வைத்து சொல்லிக்கொடுக்க முடியாது।

Share this post


Link to post
Share on other sites
3 minutes ago, Vankalayan said:

சிலருக்கு விளங்கும் சிலருக்கு விளங்காது। அதுக்காக வகுப்பு வைத்து சொல்லிக்கொடுக்க முடியாது।

நான் நினைச்சன்

உங்களுக்கே  நீங்க எழுதியது  புரியாத  மாதிரி தடுமாற்றமா  இருக்கோ என்று....

எதுவாகினும் வாழ்க  நலமுடன்

டொட்.

Share this post


Link to post
Share on other sites
3 minutes ago, விசுகு said:

நான் நினைச்சன்

உங்களுக்கே  நீங்க எழுதியது  புரியாத  மாதிரி தடுமாற்றமா  இருக்கோ என்று....

எதுவாகினும் வாழ்க  நலமுடன்

டொட்.

உங்களுக்கு நல்ல விளக்கம் இருக்கு। முன்னேற இடமுண்டு। நீங்கள் நினைக்கிறதை  எல்லாம் எழுதக்கூடாது பாருங்கோ। நீங்கள் எவ்விடம்?

Share this post


Link to post
Share on other sites
4 minutes ago, Vankalayan said:

உங்களுக்கு நல்ல விளக்கம் இருக்கு। முன்னேற இடமுண்டு। நீங்கள் நினைக்கிறதை  எல்லாம் எழுதக்கூடாது பாருங்கோ। நீங்கள் எவ்விடம்?

கருத்து மோதலில்  உங்கள் கோவம் நியாயமானதுதான்...

ஆனாலும் இன பற்றாளர் எங்கிற ரீதியில் விசுகு அண்ணா ஒரு உயர்ந்த இடத்திலிருப்பவர்..

அவருடன் தர்க்கம் புரியும்போது வார்த்தைகளில் கொஞ்சம் கடும்போக்கை குறையுங்கள்.

Share this post


Link to post
Share on other sites

கடந்த 10 வருஷத்துக்கு மேல  திட்டமிட்ட தமிழின அழிப்புக்கு துணைபோற சுமந்திரன் குரூப்புக்கு விசுவாச சேவை செய்ய ஒரு குரூப் இருக்கு. அந்த குரூப் தாங்கள் அடிச்ச கொள்ளையைப் போலத்தான் புலம்பெயர் தமிழரும் அடிச்சிருப்பீனும் என்று நினைக்கீனம். எல்லாம் ஒரு மனச்சிக்கல் தான்.

Share this post


Link to post
Share on other sites
Just now, Gowin said:

புலம்பெயர் தமிழரும் அடிச்சிருப்பீனும் என்று நினைக்கீனம்.

நாங்கள் நினைக்கவில்லை । அதுதான் உண்மை।

Share this post


Link to post
Share on other sites
3 minutes ago, Vankalayan said:

நாங்கள் நினைக்கவில்லை । அதுதான் உண்மை।

ஓஓ!
எவ்வளவு காலமா உண்மையை மொத்தமா குத்தைக்கு எடுத்து வைச்சிருக்கீகள்?

திட்டமிட்ட தமிழின அழிப்புக்கு 10 வருஷத்துக்கு மேலா துணைபோகும்,  சுமந்திரன் என்ற பேர்வழியைப்பற்றிய உண்மைகளையும் எடுத்துவிடுறது.

Share this post


Link to post
Share on other sites
Just now, Gowin said:

ஓஓ!
எவ்வளவு காலமா உண்மையை மொத்தமா குத்தைக்கு எடுத்து வைச்சிருக்கீகள்?

திட்டமிட்ட தமிழின அழிப்புக்கு 10 வருஷத்துக்கு மேலா துணைபோகும்,  சுமந்திரன் என்ற பேர்வழியைப்பற்றிய உண்மைகளையும் எடுத்துவிடுறது.

பொய் எழுத வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை

Share this post


Link to post
Share on other sites
1 minute ago, Vankalayan said:

பொய் எழுத வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை

திட்டமிட்ட தமிழின அழிப்புக்கு 10 வருஷத்துக்கு மேலா துணைபோகும்,  சுமந்திரன் என்ற பேர்வழியைப்பற்றிய உண்மைகளையும் எடுத்துவிடுறது.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

மேலே இருப்பவர்கள் முகநூலுக்காகப் பந்தா காட்டும் கோஷ்டி. இவர்கள் எல்லாம் ஒரு ஆட்கள் என்று இதை பெரிதாக்கி இதில் போட்டிருக்கிறீர்கள். சுமந்திரனைச் சந்தித்தவர்களும் சரி இதில் நிற்கும் ஆட்களும் சதி ஆரோ ஏவிவிட்டதற்காகச் செய்பவர்கள் மட்டும்தான். போட ஒண்டும் இல்லாட்டில் நல்லதாக ஒன்றைத் தேடிப் போடுங்கள் போல்.

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, Vankalayan said:

உங்களுக்கு நல்ல விளக்கம் இருக்கு। முன்னேற இடமுண்டு। நீங்கள் நினைக்கிறதை  எல்லாம் எழுதக்கூடாது பாருங்கோ। நீங்கள் எவ்விடம்?

புரியுது?

நான்  புங்குடுதீவு

இப்ப  உங்களுக்கு அவல்  கிடைத்திருக்குமே???

Share this post


Link to post
Share on other sites
10 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மேலே இருப்பவர்கள் முகநூலுக்காகப் பந்தா காட்டும் கோஷ்டி. இவர்கள் எல்லாம் ஒரு ஆட்கள் என்று இதை பெரிதாக்கி இதில் போட்டிருக்கிறீர்கள். சுமந்திரனைச் சந்தித்தவர்களும் சரி இதில் நிற்கும் ஆட்களும் சதி ஆரோ ஏவிவிட்டதற்காகச் செய்பவர்கள் மட்டும்தான். போட ஒண்டும் இல்லாட்டில் நல்லதாக ஒன்றைத் தேடிப் போடுங்கள் போல்.

உங்களுக்கு அந்த ஆட்களை நேரடியாக தெரியுமா?
சுமந்திரன் நல்லவரா கெட்டவரா?

Share this post


Link to post
Share on other sites
22 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மேலே இருப்பவர்கள் முகநூலுக்காகப் பந்தா காட்டும் கோஷ்டி. இவர்கள் எல்லாம் ஒரு ஆட்கள் என்று இதை பெரிதாக்கி இதில் போட்டிருக்கிறீர்கள். சுமந்திரனைச் சந்தித்தவர்களும் சரி இதில் நிற்கும் ஆட்களும் சதி ஆரோ ஏவிவிட்டதற்காகச் செய்பவர்கள் மட்டும்தான். போட ஒண்டும் இல்லாட்டில் நல்லதாக ஒன்றைத் தேடிப் போடுங்கள் போல்.

நீங்களும் எழுத  ஒன்றும்  இல்லாட்டில் 

ஏதாவது  எழுதணும்  என்பதற்காக உண்மையை  மறைக்கலாமா???

பிரான்சில் நடைபெற்ற சுமேந்திரனின்  கூட்டத்துக்கு

முகநூல் பிரபலங்களுக்கு மட்டும்

முகநூல் மூலம் மட்டுமே அறிவிக்கப்பட்டு நடைபெற்றது

எனவே அவருக்கேற்ற  கூட்டம் தானெ அதே வழியில் சேரும்???

Share this post


Link to post
Share on other sites

சுமந்திரன் போன்றவர்களை அகற்ற தாயகத்தில் உள்ள மக்களாலதான் முடியும்.இங்கையிருந்து குத்தி முறிஞ்சு என்னத்தை செய்ய.

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • நமது அதிகாரிகள்,  வறுமைப்பட்டவர்களின்   வயித்தில் அடிக்கவும், தமக்கு பிடிக்காதவை, தங்கட வாலுகளுக்கு பிடிக்காதவையை  பழிவாங்கவும் இதுதான் சரியான நேரம். இப்பிடியான நேரத்தை பாத்துக்கொண்டு இருந்தவை. இன்றைய தேவை அறிந்து சேவை செய்யும் இளைஞர் எங்கே . இதுகள் கூலியில் சுரண்டும் கொள்ளைக் கூட்டம்.
  • கடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரி கொடுக்க மாட்டான் என்பதுபோல இப்படி நெருக்கடியான நிலமையில் வறுமைப்பட்ட மக்களின் வயித்தில் அடிக்கும்  இந்த கேவலம் கெட்ட ஈனப்பிறவி உத்தியோகத்தர்களை தட்டிக்கேட்கக் கூட கூத்தமைப்பு மாணவர் ஒன்றியங்களுக்கு துப்பில்லையா ?.. 
  • தமிழர்களின் இன்றைய ஆகக்குறைந்த வாழ்வாதாரமும் முற்றிலும் முடக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் அறிவித்த சலுகைகள் முழுமையாக மக்களுக்கு கிடைக்கப்பெறவில்லை என்று வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அமைப்பின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் திருமதி பத்மநாதன் கருணாவதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கொவிட்-19 என்னும் கொரோனா வைரஸின் கோரத்தாண்டவத்தில் உலகமெல்லாம் சிக்குண்டு கிடக்கிறது. இதற்கு இலங்கையும் விதிவிலக்கின்றி உள்ளது. தொடர்ச்சியாக ஊரடங்குச் சட்டமும் அமுல்படுத்தப்பட்டு நோயின் தாக்கம் தொடர்பான அச்சமும் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில் அன்றாடம் உழைத்து வாழ்ந்த மக்களும், பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் உழைப்புமின்றி, பொருளாதார பலமுமின்றி, பாரிய பட்டினி நிலையையும் எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, போரின் வடுக்களிலிருந்து மீளமுடியாத துன்பத்தில் வாழும் வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதியின் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் பாரிய பட்டினிப் பிரச்சினையை இன்று எதிர்கொண்டுள்ளனர். இலங்கை அரசாங்கம், சலுகைகள் என அறிவித்த விடயங்கள் எவையும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மீன் ரின், பருப்பு, முட்டை போன்ற பொருட்கள் சகாய விலையில் கிடைக்கும் எனக்கூறியதும், வங்கிக் கடன்கள் தொடர்பாக அறிவிக்கப்பட்ட சலுகை விடயங்களும் ‘கோட்டாவின் அதிரடி சலுகைகள்’ என ஊடகங்களில் வெளிவந்த செய்தியாக மட்டுமே உள்ளன. அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.   http://thinakkural.lk/article/38065  
  • சுயபொருளாதார நீக்கமும் கையேந்தும் அரசியலும்… பாரிஸிலிருந்து சுதன்ராஜ் கொரோனாவுக்கு முன்னால் எல்லா வல்லரசுகளும் அம்மணமாகி ஓடி ஒளிந்து தமது குடிமக்களுக்கு முன்னால் நிர்வாணமாக நிற்கின்ற காலம் இது. ஏப்ரலின் முதல் இரண்டு வாரங்கள் அமெரி;காவுக்கு வாழ்வா-சாவா என்ற போராட்டம், 1 இலட்சத்தில் இருந்து 2 இலட்ம் பேர் வரை மடியலாம் என எந்த வெட்கமும் இன்றி அமெரிக்க அதிபர் ரம்ப் கூறுகின்றார். இதுபோலவே பிரான்சின் பிரதமரும் ஏப்ரல் முதல் இரண்டு வாரங்கள் பிரான்சுக்கு கடினமான காலம் என்கின்றார். பிரித்தானியாவிலும் இவ்வாறே எதிரொலிக்கின்றது. இவ்வாறு உலக வல்லரசுகளின் தலைவர்கள் பலரும் தமது குடிமக்களை பரபரப்புக்கும் அச்சத்துக்குள்ளும் தள்ளிவிட்டு, தம்மை தாப்பாளிட்டு தனிமைப்படுத்திக் கொண்டுவிட்டனர். பாவப்பட்ட மக்கள் கூட்டம், தொலைக்காட்சிகளில் துடுப்பாட்ட போட்டிகளின் ஸ்கோர்களை எண்ணுவதுபோல், நாளாந்தம் உயிரிழப்புக்களை ஸ்கோர் கணக்காக எண்ணிக்கொண்டுள்ளனர். இரவும் பகலும் ஊடகங்கள் பலவும் “கொரோனா, கொரோனா” என்று மக்களை ஒருவித பதட்டத்துக்குள் வைத்திருக்க, புலம்பெயர் தமிழர்கள்பலரும் உளவியல்ரீதியாக தம்மை பலிகொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இங்கே பிரான்சில் 50க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி சிகிச்சைபெற்று வருவதோடு, பலரும் உயிரிழந்துள்ளனர். பலரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பின், அது கொரோனாவுக்கு உரியதா என்ற சோதனை செய்யுமாறு அரசாங்கம் அறிவுறுத்தியபோதும், தமிழர்கள் பலரும் “தமக்குத் தெரிந்த” கைவைத்தியத்துடன் நாட்களைகடத்தி, கடைசியில் நோய் உச்சம் பெற மருத்துமனைக்கு போய் உயிர்மடிந்த கதைகளும் காணப்படுகின்றது. பலர் தமக்கு கொரோனா வந்திட்டுது என்ற சொல்வதனை அல்லது அதற்கு சிகிச்சைபெறுவதனை “ஒரு அவமானமாக அல்லது கௌரவக்குறைச்சலாக” நினைத்து மருத்துமனைகளுக்கு செல்லாமல் இருந்த நிலையும் கவலைதருகின்றது. வீடுகளில் முடக்கப்பட்டிருக்கும் பொதுமக்கள், தொலைக்காட்சிகளின் முன்னால் பொழுதினைக்கழிக்க வேண்டிய கட்டத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். தொலைக்காட்சி சேவைகளும் பரபரப்பாக கொரோனா செய்திகளை வழங்குவதும், நாளாந்த மருத்துமனை உயிரிழப்புக்களும் திரும்பத்திரும்ப சொல்லப்பட, பலரும் மருத்துமனைக்கு சென்றால் உயிர்திரும்பாது என்ற ஓர் அச்ச நிலையும் காணப்படுகின்றது. அரசாங்கங்களும் இதனைத்தான் விரும்புகின்றது போல் உள்ளது. பிரான்சில் கொரோனாவுக்கு முன்னராக அரசாங்கத்துக்கு எதிரான பிரான்ஸ் மக்கள் தமது பொருளாதார வாழ்வியல் இறைமைக்காக மஞ்சள் அங்கிப் போராட்டத்தினை தீவிரமாக முன்னெடுத்து வந்திருந்தனர். இதுபோலவே பிரான்சின் ஓய்வூதிய மறுசீரமைப்புக்காக தொடர் ஆர்பாட்டங்களும், வேலைநிறுத்தப் போராட்டங்களும் நடந்து கொண்டிருந்தன. ஆனால் அரசாங்கத்துக்கு எதிராக இருந்த அழுத்தங்கள் எல்லாம் “கொரோனாவால்” அடிபட்டுப் போக, மக்களை கொரோனா தொடர்பான மிகைப்படுத்தப்பட்ட அச்சத்தை அரசாங்கம் ஏற்படுத்துகின்றது என்ற குற்றச்சாட்டும் காணப்படுகின்றது. இந்த வைரஸ் பாம்பில் இருந்து வெளவாலில் இருந்து உருவான கதையெல்லாம் கடந்து, தற்போது மனிதத்தவறு என்ற நிலையில், இதற்கான பொறுப்பு யார்? சீனாவும் அமெரிக்காவும் இடையில் இது தொடர்பில் நிகழுகின்ற கருத்து மோதல்களுக்கு பின்னால் மறைக்கப்படும் உண்மை என்ன ? போன்ற கேள்விகள் விவாதங்களாக மாறாமல், கொரோனா தொடர்பான விழிப்பும், தடுப்பு மருந்து தொடர்பான விடயங்களுமே பெரிதாக பேசப்படுகின்றன. அல்லது பேசிவிக்கப்படுகின்றன. கொரோனாவில் இருந்து தன்னை பெரும்பாலும் விடுவித்துக் கொண்ட சீனா, கொரோனாவில் இருந்து உலகைக் காப்பாற்ற வறிய நாடுகளுக்கு மருத்துவவர்களையும், மருத்துவ உபகரணங்களையும் இலவசமாக அனுப்பிக் கொண்டுள்ளது. கடன்களையும் வாரி வழங்குகின்றது.     வளர்ந்த நாடுகள் தமது வெட்கத்தைவிட்ட சீனாவிடம் இருந்து பல ஆயிரம் கோடி, சுவாசக்கவசங்களையும், செயற்கைசுவாச வழங்கிகளையும் சீனாவிடம் இருந்து வாங்குகின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. சீனா பொருளதாரரீதியான தன்னை வளப்படுத்துவதற்கு அப்பால் தன்னை நம்பியிருக்க வேண்டிய கட்டத்துக்கு உலகத்தை தள்ளிவிட்டுள்ளது. அதாவது சீனா கொரோனா நெருக்கடியினை “அரசியல் முதலீடாக்கி” தன்னை உலகில் தவிக்கமுடியாத சக்தி என்ற நிலையினை உலகமக்களுக்கு உணர்த்தியுள்ளது. மக்களின் உயிர்களை காப்பாற்றுவதற்கு பிற நாடுகளிடம் கையேந்தும் நிலைக்கா பிரான்ஸ் தள்ளப்பட்டுள்ளது என்ற கேள்வி எழுந்த வேளையில், அரசாங்கத்தின் மீதான விமர்சனங்களை பின்னர் வையுங்கள், தற்போதும் நாம் அனைவரும் ஒன்றுபட்டு உயிர்களை காப்போம் என பிரான்ஸ் அதிபர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கடும் தொனியில் கருத்தொன்றினை பதிவு செய்திருந்தார். இதனை அவர் பதிவு செய்ய இடம், பிரான்சில் இருக்கின்ற ஒரேயொரு சுவாசக்கவசங்கள் உற்பத்தி செய்கின்ற தொழிற்சாலை. பிரான்சின் உற்பத்திகளை வரும் வாரங்களில் பல மடங்கு உயர்த்துவதாக அறிவித்த அதிபர், “மேட் இன் பிரான்ஸ்” என்ற பிரான்சின் உற்பத்திகளை சுகாதாரத்துறையில் பெருக்க மிகப்பெரும் திட்டமொன்றினை அறிவிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். உலகமயமாகிய வர்த்தகம், பொருளதாரத்த சந்தையில் பிரான்சில இருந்து பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு உற்பத்தி செலவு குறைந்த நாடுகளுக்கு மாற்றப்பட்டதன் ஒரு தொகுதி விளைவிளை தற்போது கொரோனாவை எதிர்கொள்ள முடியாமல் பிரான்ஸ் அனுபவத்திக் கொண்டுள்ளது. மருத்துமனைகளில் கட்டில்கள் வீணாக இருக்குதென்று கடந்த 14 ஆண்டுகளில் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட கட்டில்களை மருத்துமனைகளில் நீக்கம் செய்தததான் விளைவினை தற்போது பிரான்ஸ் அனுபவித்துக் கொண்டுள்ளது. இப்படி சுதேசிய பொருளாதார கொள்கையினை கைவிட்டு, உலகமயம் என்ற மாயைக்குள் சென்றதன் விளைவே “சீனாவை” கையேந்தும் உலகின் பல நாடுகளை தள்ளியிருப்பது போலவே, கையேந்தும் நிலையில் உள்ள ஒரு தொகுதி தமிழர் தாயக தமிழர்களின் நிலையினை அவதானிக்க கூடியதாகவுள்ளது. “எங்களுக்கு எந்த உதவியும் வந்து சேரேல. அரசாங்கத்தின் உதவிகளும் இல்லை. வருமானம் இல்லை. லோன்காசு கட்டவேணும். பட்டினிதான் இருக்க வேணும்.” இதுபோல் பலரும் தமிழர் தாயகத்தில் உதவிகளுக்காக தாங்கள் காத்திருப்பதான மன்றாட்ட காணொளிகளை சமூகவலைத்தளங்களில் காணக்கிடைக்கின்றது. கொனோரா ஊரடங்குசட்டம் காரணமாக “கையேந்தும் நிலையில்” தாயக உறவுகளின் நிலைகண்டு எழுகின்ற கோபமும், கவலையும் எழுகின்றது. போர்க்காலத்தில் சிறிலங்கா அரசாங்கம் விதித்திருந்த பல்வேறு பொருளாதார நெருக்கடிகள், தடைகளுக்கு மத்தியிலும் தாயக மக்கள் வாழ்வாதாரத்தை கையாண்டார்கள். அதாவது யாழ்பாணத்தை பட்டினி போடமுடியாது என்ற கருத்து சிங்கள அரசிடம் அன்று இருந்தது. காரணம், தன்னிறைவான வளங்களை உருவாக்கவும், அதன் வழியே தன்னிறைவான பொருளாதார குடும்ப கட்டமைப்புக்கும் போர், போராட்டம் அவர்களை தள்ளியிருந்தது. ஆனால் , இன்று போருக்கு பிந்திய இந்த 10 ஆண்டு காலத்தில் தாயகசமூகம் தன்னிறைவான பொருளதாரத்தை நோக்கி செயற்படாமல், கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனரோ என்ற கேள்வி எழுகின்றது. சுயவளங்களை உருவாக்க போர் அவர்களை அன்று தள்ளியது…ஆனால் இன்றைய போரற்ற நிலை கையேந்தும் நிலைக்கு தள்ளியுள்ளது. தாயக மக்களுக்கான பெருவாரியாக வழங்கப்படுகின்ற வாழ்வார உதவிகள் என்பது அன்றாடம் தேவைகளை பூர்த்தி செய்கின்றனவையாக இருந்தன் விளைவே, இன்று கொரோனா தாக்கதில் மட்டுமல்ல, வெள்ளப்பெருக்கு காலத்திலும் பலரை கையேந்தும் நிலைக்கு தள்ளியுள்ளது. தேசமாக சிந்தித்து தாயகமக்களின் தேவைகளை மட்டுமல்ல, தாயகத்தின் தேவைகளை கடந்த பத்து ஆண்டுகளில் செய்யாததன் விளைவே இது. கையேந்துகின்ற நிலைக்கு அவர்களை பழக்கப்படுத்தி விட்டது. தாயக அரசியல் தலைமைகள், வாக்குவங்கி அரசியலை மையப்படுத்தி செயற்பட்டனவே அன்றி, அரசிலையும் அவர்கள் தேசமாக சிந்தித்து செய்யவில்லை…. மக்களுக்கான வாழ்வாதார கட்டுமானத்துக்கும் தேசமாக சிந்திக்கவில்லை. சுனாமிக்கு பின்னராக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், மக்களை மீளகட்டியெழுப்ப பொதுக்கட்டமைப்பொன்றினை உருவாக்கி சர்வதேச சமூகத்திடம் முன்வைத்திருந்து. சுனாமியை விட மிக மோசமான பேரிழிவாக அமைந்த முள்ளிவாய்காலுக்கு பின்னராக , தாயக அரசியல் தலைமைகள் உடனடியாக செய்திருக்க வேண்டியிருக்க வேண்டியது ‘ தாயக மக்களுக்கான ஓர் வாழ்வாதார கட்டமைப்பு’ அதனை செய்யாது, சிறிலங்காவின் பாராளுமன்ற நிதிஒதுக்கீட்டினை வைத்துக் கொண்டு தங்களுடைய வங்குரோத்து அரசியலை செய்ததன் விளைவுதான் தமிழர்களை கையேந்துகின்ற நிலைக்கு அரசியலை மட்டுமல்ல, வாழ்வாதாரத்தையும் தள்ளியுள்ளது. முதலில் சிறிலங்காவின் பாராளுமன்றத்தை விட்டு வெளியே வந்து தேசமாக இனியாவது சிந்தித்து தாயகத்தின் அரசியலை மட்டுமல்ல, மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் கட்டமைக்க வேண்டிய பொறுப்பு தாயக அரசியல் தலைமைகளுக்கு உண்டு. அதற்கு புலம்பெயர் தமிழர்களின் பங்கும் உண்டு. தற்போது கொரோனா மட்டுமல்ல இனிஎக்காலத்தில் எந்த சவால்கள் வந்தாலும், அதனை எதிர்கொள்வதற்கான முதற்படியாக இது இருக்கட்டும். இல்லையெனில், தேசமாக சிந்திக்காமல், தமது சுதேசிய கொள்கைகளை கைவிட்டதன் விளைவாக சீனாவிடம் கையேந்தும் நிலைக்கு உலகம் தள்ளப்பட்டதோடு, அதுபோலவே நாமும் தமிழர்களை கையேந்த வைத்துக் கொண்டிருப்போம்.   http://thinakkural.lk/article/38068