Jump to content

Recommended Posts

sajith-22.jpg

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பயணத்தடை விதிக்கப்பட்டமை வருத்தமளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச தனது ருவிட்டர் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த பதிவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “இராணுவத் தளபதி சவேந்திர சில்வா பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக முன்நின்று செயற்பட்ட தளபதிகளில் ஒருவராவார்.

அந்தவகையில் நாடு என்ற ரீதியில் நாம் அவருக்கு ஆதரவாக செயற்பட வேண்டும்” என  சஜித் பதிவேற்றியுள்ளார்.

இலங்கையின் இராணுவதளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக அமெரிக்கா பயணத்தடையை விதித்துள்ளது.

அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களம் இவ்விடயம் தொடர்பான அறிவித்தலை நேற்று முன்தினம் விடுத்தது.

இந்நிலையில் அமெரிக்காவின் குறித்த செயற்பாட்டுக்கு இலங்கை கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

sajith-3.jpg

http://athavannews.com/சவேந்திர-சில்வாவுக்கு-ஆத/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சஜித் பிரேமதாசாவின் உண்மை முகம் இது தான். 

சிங்களவர்கள் எல்லாருமே தமிழர்களின் அழிவை உள்ளூர ரசிப்பவர்கள். 

Link to comment
Share on other sites

2 hours ago, nedukkalapoovan said:

சஜித் பிரேமதாசாவின் உண்மை முகம் இது தான். 

சிங்களவர்கள் எல்லாருமே தமிழர்களின் அழிவை உள்ளூர ரசிப்பவர்கள். 

இது மிக மிக தவறான வாதம்,சஜித் இப்படி தான் கூற முடியும் அவர் வேறு மாதிரி அறிக்கை விட்டால் தென் இலங்கையில் ஒரு வாக்கு கூட விழாது. எங்கட தமிழ் மக்களும் கொஞ்சமாவது அரசியல் யதார்த்தங்களை அறிந்து நடப்பதுவே  சிறந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Dash said:

இது மிக மிக தவறான வாதம்,சஜித் இப்படி தான் கூற முடியும் அவர் வேறு மாதிரி அறிக்கை விட்டால் தென் இலங்கையில் ஒரு வாக்கு கூட விழாது. எங்கட தமிழ் மக்களும் கொஞ்சமாவது அரசியல் யதார்த்தங்களை அறிந்து நடப்பதுவே  சிறந்தது.

இப்ப சஜித் இப்படி சொன்னதால் தமிழ் மக்களுக்கு என்ன நன்மை..???!

சஜித் சிங்கள மக்களின் வாக்குகளை இப்படி போலியாகப் புகழ்ந்து தான் கவர வேண்டும் என்றால்.. அவரின் அரசியல் எதிர்காலத்துக்காக அவர் தமிழ் மக்களுக்கு ஒரு குண்டூசி தானும் வழங்க முடியாது. இது தான் சொறீலங்காவின் இன்றைய யதார்த்தம். இதனை எப்படி தமிழ் மக்கள் கடந்து முன்னேறுவது..??!

Link to comment
Share on other sites

7 minutes ago, nedukkalapoovan said:

அப்படியாயின் மாற்றம் வர வேண்டியது சஜித்திடம் இருந்து அல்ல சிங்கள மக்களிடம் இருந்து....அதே போல் சஜித் தமிழருக்கு என்ன செய்தார் என்றால் வரும் தேர்தலில் மஹிந்த அடுத்த தேர்தலில் 66.66 %  மேல் எடுத்தால் அதனால் வரப் போகும் பின் விளைவுகளை முழு நாடும் அனுபவிக்க வேண்டி வரும். நல்லாட்ச்சியில் இலங்கையின் நிதி நிலை தேறி வந்த நிலையில் தான் கோத்தா வந்து வரிகளை குறைத்து பொருளாதாரத்தை பாதாளத்துக்குள் செல்ல வழி வகுத்திருக்கிறார், அதே போல் மக்கள் மறந்தாலும் இவர்களே அதீத இனவாதத்தை விதைத்து வருகின்றனர் அதால் இவற்றை தடுத்தாலே அது சஜித்தால் விளையும் நன்மையே....!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Dash said:

அப்போ கூட்டமைப்பு எதற்காக இவரை ஆதரித்து பிரச்சாரமும் செய்தது

Link to comment
Share on other sites

6 minutes ago, விசுகு said:

அப்போ கூட்டமைப்பு எதற்காக இவரை ஆதரித்து பிரச்சாரமும் செய்தது

நான் சஜித்தை பற்றி குறிப்பிடவில்லை, கோத்தா வந்தால் வரப்போகும் பாதகமான விளைவுகளையே குறிப்பிட்டுள்ளேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Dash said:

அப்படியாயின் மாற்றம் வர வேண்டியது சஜித்திடம் இருந்து அல்ல சிங்கள மக்களிடம் இருந்து....அதே போல் சஜித் தமிழருக்கு என்ன செய்தார் என்றால் வரும் தேர்தலில் மஹிந்த அடுத்த தேர்தலில் 66.66 %  மேல் எடுத்தால் அதனால் வரப் போகும் பின் விளைவுகளை முழு நாடும் அனுபவிக்க வேண்டி வரும். நல்லாட்ச்சியில் இலங்கையின் நிதி நிலை தேறி வந்த நிலையில் தான் கோத்தா வந்து வரிகளை குறைத்து பொருளாதாரத்தை பாதாளத்துக்குள் செல்ல வழி வகுத்திருக்கிறார், அதே போல் மக்கள் மறந்தாலும் இவர்களே அதீத இனவாதத்தை விதைத்து வருகின்றனர் அதால் இவற்றை தடுத்தாலே அது சஜித்தால் விளையும் நன்மையே....!!!!

சஜித்தால் தமிழ் மக்களுக்கு என்ன நன்மை..??!

கோத்தா கொடியவன் என்றால்... சஜித் கெட்டவன். அவ்வளவும் தான்.

மாறி மாறி இவர்களுக்கு வாக்குப் போட்டு சிங்கள தேசம் சீரழிவதற்கு நாம் எதற்கு வருந்தனும்.

எமக்குள்ள பிரச்சனை.. எம்மை அழித்தவர்கள் தண்டிக்கப்படுவதும்.. எமது மக்களுக்கு நீதியும் நட்ட ஈடும் கிடைப்பதோடு..  எமது தாயகம் சுயநிர்ணயம் உலகால் அங்கீகரிப்படுவதுமே ஆகும். இதில் கோத்தா.. சஜித் வேறுவேறில்லை. 

அப்ப யாருக்கு வாக்களிக்கலாம் ...?? அதே போல் சஜித் கெட்டவன் என்பதை எதை வைத்து குறிப்பிடுகிறீர்கள், எம்மை அழித்தவர்களை தண்டிக்க போவது யார் ? நட்ட ஈடு பெற்று தரப்போவது யார் ..? அதற்காக போராடப் போவது  யார்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Dash said:

அப்ப யாருக்கு வாக்களிக்கலாம் ...?? அதே போல் சஜித் கெட்டவன் என்பதை எதை வைத்து குறிப்பிடுகிறீர்கள், எம்மை அழித்தவர்களை தண்டிக்க போவது யார் ? நட்ட ஈடு பெற்று தரப்போவது யார் ..? அதற்காக போராடப் போவது  யார்??

எங்களை அழிக்க சிங்களவனுக்கு யார் முண்டுகொடுத்தார்களோ அவர்கள் தான்.

இன்று அவர்களில் ஒரு தரப்பு உண்மையை ஏற்றுக் கொள்கிறது.. நடந்தது பெரும் மனித உரிமை மீறல்... போர்க்குற்றம் என்று. ஆனால் சிங்களவனோ.. அது கோத்தா.. சஜித் ஆகட்டும் சொல்வது பயங்கரவாத அழிப்பு... மனிதபிமான நடவடிக்கை என்று.

முதலில் நாங்கள் சிங்களவனின் நடிப்பு.. நாடகத்துக்குள் இருந்து வெளி வரனும். எந்தச் சிங்களவனுக்கு வாக்குப் போட்டாலும்.. நமக்கு ஒரு நன்மையும் இல்லை. தொடர்ந்து ஏமாற்றப்படுவதிலும்..

சிங்களவன் எமக்கு எதிராக.. நிற்க துணை நின்றோரை.. நோக்கியே நாம் எமது கோரிக்கைகளை முன் வைக்க வேண்டும். அவர்கள் இன்றேல்.. சிங்களவன் எம்மை அழித்திருக்கவோ.. ஆக்கிரமித்திருக்கவோ முடியாது.

அதைவிடுத்து.. கோத்தா.. சஜித்.. சரத் பொன்சேகா என்று எம்மை அழித்தவர்களுக்கே.. அல்லது அதற்கு துணை நின்றோருக்கே.. எம் மக்களின் வாக்கைப் போடென்று கேட்பது போல் கொடுமை இந்த உலகில் வேறெதும் இல்லை. 

Link to comment
Share on other sites

3 minutes ago, nedukkalapoovan said:

என்னை அழித்தவனை   நோக்கி நியாயம் கேட்பதில் எந்த பிரியோசனமும் இல்லை. முதலில் நாம் செய்ய வேண்டியது எம்மை பொருளதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கால் ஊன்ற வேணும் அதன் பின்னர் தான் எதையும் செய்யலாம். அதை விட சஜித் அழித்தவர் என எதை வைத்த்ய் குறிப்பிடுகிறீர்கள் அதற்கான சில ஆதாரங்களை முன் வைத்தாலாவது கொஞ்சமாவது பிரியோசனமாக  இருக்கும்...!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Dash said:

சும்மா பொருளாதார ரீதியில் அரசியல் ரீதியில் கால் ஊன்ற வேண்டும் என்று எழுதலாம். ஆனால்.. இன்றைய ஆக்கிரமிப்புச் சூழலில் தாயகத்தில்.. எம்மவர்களின் எந்த எழுச்சியும் பல்வேறு வடிவங்களில் கட்டுப்படுத்தப்படுவதோடு.. நாம் நிமிர்வதற்குள்.. எம் முழு தேசமும்.. சிங்கள மற்றும் இஸ்லாமிய மயமாகிவிடும். 

சஜித் நீண்ட காலம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து தமிழ் மக்களுக்காக ஒரு வார்த்தையும் தயவாகப் பேசியது கிடையாது. மாறாக.. பயங்கரவாத அழிப்பு என்று தமிழர்களை அழிப்பதை நியாயப்படுத்திக் கொண்டு இருந்தவர். பாராளுமன்றில்.. அவசரகாலச் சட்டம்.. பயங்கரவாத தடைச் சட்டம் என்று எல்லா சிங்கள ஆதிக்க இனவழிப்பு சட்டங்களுக்கும் ஆதரவு தெரிவித்து வந்த ஒருவர்.

இப்போ.. முழு உலகுக்கும் தெரிந்த.. ஒரு போர்க்குற்றவாளிக்கு மனித உரிமை மீறலாளருக்கு.. வக்காளத்துக்கு வேறு வாங்குகிறார். இது போதாது.. சஜித் யாரென்று இனம் காண. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Dash said:

இது மிக மிக தவறான வாதம்,சஜித் இப்படி தான் கூற முடியும் அவர் வேறு மாதிரி அறிக்கை விட்டால் தென் இலங்கையில் ஒரு வாக்கு கூட விழாது. எங்கட தமிழ் மக்களும் கொஞ்சமாவது அரசியல் யதார்த்தங்களை அறிந்து நடப்பதுவே  சிறந்தது.

3 hours ago, Dash said:

அப்படியாயின் மாற்றம் வர வேண்டியது சஜித்திடம் இருந்து அல்ல சிங்கள மக்களிடம் இருந்து....அதே போல் சஜித் தமிழருக்கு என்ன செய்தார் என்றால் வரும் தேர்தலில் மஹிந்த அடுத்த தேர்தலில் 66.66 %  மேல் எடுத்தால் அதனால் வரப் போகும் பின் விளைவுகளை முழு நாடும் அனுபவிக்க வேண்டி வரும். நல்லாட்ச்சியில் இலங்கையின் நிதி நிலை தேறி வந்த நிலையில் தான் கோத்தா வந்து வரிகளை குறைத்து பொருளாதாரத்தை பாதாளத்துக்குள் செல்ல வழி வகுத்திருக்கிறார், அதே போல் மக்கள் மறந்தாலும் இவர்களே அதீத இனவாதத்தை விதைத்து வருகின்றனர் அதால் இவற்றை தடுத்தாலே அது சஜித்தால் விளையும் நன்மையே....!!!!

டாஸ் ஐயா  இலங்கையின் வரலாற்றை மனதில் இருத்தி அதன் வழி பதிலிறுப்பது நல்லது. 

இனவாதியல்லாத ஓர் சிங்கள அரசியல்வாதியைத்தானும் உங்களால் காட்ட முடியுமா ?

அதுவரையாவது சஜித்துக்கு வெள்ளையடிப்பதை நிறுத்திவைக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

1) பிரதான அரசியல் கட்சியின் தலைமைப் (?) பொறுப்பில் இருக்கும் ஒருவரின் எதிர்வினை இப்படித்தான் இருக்கலாம் என்பதற்காக 

2) இவர் இனவாதியல்ல என்பது

சரியான பார்வை அல்ல.

57 minutes ago, Dash said:

என்னை அழித்தவனை   நோக்கி நியாயம் கேட்பதில் எந்த பிரியோசனமும் இல்லை. முதலில் நாம் செய்ய வேண்டியது எம்மை பொருளதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கால் ஊன்ற வேணும் அதன் பின்னர் தான் எதையும் செய்யலாம். அதை விட சஜித் அழித்தவர் என எதை வைத்த்ய் குறிப்பிடுகிறீர்கள் அதற்கான சில ஆதாரங்களை முன் வைத்தாலாவது கொஞ்சமாவது பிரியோசனமாக  இருக்கும்...!!!

அரசியல்வாதிகள் களத்தில் நின்றுதான் அழிக்க வேண்டுமா ? 

உண்மையில் உங்கள் கேள்வி இதே அர்த்தத்தில் விடுத்தீர்களா அல்லது வேறு  ஏதும்  தொக்கு நிற்கிறதா ?

Link to comment
Share on other sites

5 hours ago, nedukkalapoovan said:

சஜித்தால் தமிழ் மக்களுக்கு என்ன நன்மை..??!

கோத்தா கொடியவன் என்றால்... சஜித் கெட்டவன். அவ்வளவும் தான்.

மாறி மாறி இவர்களுக்கு வாக்குப் போட்டு சிங்கள தேசம் சீரழிவதற்கு நாம் எதற்கு வருந்தனும்.

எமக்குள்ள பிரச்சனை.. எம்மை அழித்தவர்கள் தண்டிக்கப்படுவதும்.. எமது மக்களுக்கு நீதியும் நட்ட ஈடும் கிடைப்பதோடு..  எமது தாயகம் சுயநிர்ணயம் உலகால் அங்கீகரிப்படுவதுமே ஆகும். இதில் கோத்தா.. சஜித் வேறுவேறில்லை. 

 அமெரிக்க அரசுக்கு இருவருமே ஆதரவளிப்பார்கள் என்று அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை. ஆகவே, ராஜபக்சவை 2015லும் பின்னர்   2019லும் ஆட்சிக்கு கொண்டு வருவதை விரும்பிய தமிழ் உணர்வாளர்கள் பலர் எதிர்பார்த்த காலம் வந்துள்ளது போல தெரிகிறது.

அமரிக்கா தனது நலன் கருதி ஈழத்தமிழரை ஆதரிக்கும் சாத்தியம் தெரிகிறது. இந்த ஆதரவின் ஆழம் சிங்களவரின் அமெரிக்க எதிர்ப்பின் ஆழத்திலும் சீனாவின் ஸ்ரீ லங்கா மீதான விருப்பின் ஆழத்திலும் தங்கி இருக்கிறது. இந்த ஆழங்களை அதிகரிக்க செய்யும் முயற்சி முக்கியமானது. இந்த ஆழங்கள் உச்ச நிலையை அடைந்தால் இந்திய எதிர்ப்பையும் மீறி அமேரிக்கா ஒரு பொம்மை ஈழ அரசை தமிழ்ப் பகுதிகளில் நிறுவி நாடு கடந்த அரசை நாடு உள்ள அரசாக மாற்றி தனது தேவைகளை பூர்த்தி செய்யும் சாத்தியம் வெகுதூரத்தில் தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கற்பகதரு said:

கிறீமியா (Crimia) வை இரஸ்யா இணைத்துக் கொண்டதுபோல வட கிழக்கை இந்தியா தன்னுடன் இணைத்து கொள்ளக்கூடிய சாத்தியக் கூறுகள் வெளித் தெரிவதாக எனது நண்பர் கூறுகிறார். இதற்கு மேற்குலகு ஆதரவளிக்கும் என்றும் எதிர்வு கூறுகிறார். 

Link to comment
Share on other sites

31 minutes ago, Kapithan said:

கிறீமியா (Crimia) வை இரஸ்யா இணைத்துக் கொண்டதுபோல வட கிழக்கை இந்தியா தன்னுடன் இணைத்து கொள்ளக்கூடிய சாத்தியக் கூறுகள் வெளித் தெரிவதாக எனது நண்பர் கூறுகிறார். இதற்கு மேற்குலகு ஆதரவளிக்கும் என்றும் எதிர்வு கூறுகிறார். 

இந்தியா நேரடியாக தலையிடும் அளவுக்கு பலம் பொருந்திய நாடாக இன்று இல்லை. பாகிஸ்தானில் இருந்து பங்களாதேக்ஷ்யை பிரித்த காலத்து இந்தியா இன்று இல்லை. இதனிலும் பார்க்க, போர்க்குற்றங்களை காரணம் காட்டி நாடுகடந்த அரசை தூண்டிவிட்டு அமெரிக்கா அதனது பின்னணியில் அதனது தேவைகளை பெற்றுக்கொள்ளும் சாத்தியமே தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க ஆதரவுக்குள் தமிழர்கள் செல்வதையும் ஹிந்தியா விரும்பாது. 

அதேவேளை ஹிந்தியாவை தாண்டிய தெற்காசிய ஆசிய பசுபிக் விரிவாக்கம் அமெரிக்காவுக்கு சீனச் சவாலை சந்திக்க தேவை.

அதேபோல்.. ஹிந்தியாவையும் அமெரிக்கா பிராந்தியத்தின்.. தனிப்பெரும் சக்தியாக இருக்க அனுமதிக்காது. 

அந்த வகையில்... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, nedukkalapoovan said:

அமெரிக்க ஆதரவுக்குள் தமிழர்கள் செல்வதையும் ஹிந்தியா விரும்பாது. 

அதேவேளை ஹிந்தியாவை தாண்டிய தெற்காசிய ஆசிய பசுபிக் விரிவாக்கம் அமெரிக்காவுக்கு சீனச் சவாலை சந்திக்க தேவை.

அதேபோல்.. ஹிந்தியாவையும் அமெரிக்கா பிராந்தியத்தின்.. தனிப்பெரும் சக்தியாக இருக்க அனுமதிக்காது. 

அந்த வகையில்... 

தமிழர்கள் எப்போதும் போல கறி வேப்பிலையாக பாவிக்கப்பட்டு தூக்கி எறியப்படுவார்கள் ?

41 minutes ago, கற்பகதரு said:

இந்தியா நேரடியாக தலையிடும் அளவுக்கு பலம் பொருந்திய நாடாக இன்று இல்லை. பாகிஸ்தானில் இருந்து பங்களாதேக்ஷ்யை பிரித்த காலத்து இந்தியா இன்று இல்லை. இதனிலும் பார்க்க, போர்க்குற்றங்களை காரணம் காட்டி நாடுகடந்த அரசை தூண்டிவிட்டு அமெரிக்கா அதனது பின்னணியில் அதனது தேவைகளை பெற்றுக்கொள்ளும் சாத்தியமே தெரிகிறது.

ஆனால் இந்தியாவின் நகர்வுகளை உற்ருக் கவனித்தால் தென் இந்தியாவிலும் இலங்கையின் வட கிழக்கிலும், குறிப்பாக வடக்கிலும் வேறு ரூபம் எடுப்பதாக தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப என்னதான் நடக்கும் கெரியா சொல்லுங்கோ.இருப்புகொள்ளுதில்லை.

Link to comment
Share on other sites

3 hours ago, சுவைப்பிரியன் said:

அப்ப என்னதான் நடக்கும் கெரியா சொல்லுங்கோ.இருப்புகொள்ளுதில்லை.

Dash  அவர்கள் யதார்த்தமான வாதத்தைத்தான்  வைத்தார்। இலங்கையில் உள்ள நிலைமை அப்படி। எவ்வளவுதான் தமிழ் வாக்குகள் கிடைத்தாலும் சிங்களவர்களின் ஆதரவில்லாமல் ஆட்சியை பிடிக்க முடியாது।

இருக்கிற பிசாசில் எது நல்ல பிசாசு என்பதுதான் எமது தெரிவு। இல்லாவிடடாள் இருக்கிறதையும் இழக்க வேண்டியதுதான்। சஜித்தை பொறுத்தளவில் தமிழரை ஆதரிப்பவர் என்று சொல்ல முடியாது। அப்படி செய்வதாக இருந்தால் தனது அரசியலுக்காகத்தான் அப்படி செய்வார்। ஒன்றை நினைவில் வைத்திருக்க வேண்டும் , அவருடைய தந்தையார் புலிகளினால் கொல்லப்பட்டார்। எனவே அவருக்குள் ஒரு காயம் இருந்துகொண்டே இருக்கும்।

அமெரிக்கா எதாவது ஒரு காரியம் செய்யுமா இருந்தால் அது தனக்கு சாதகமான விளைவை தருவதாக இருக்க வேண்டும்। இதட்கு பின்னால் நிறைய காய் நகர்த்தல்கள் இருக்கின்றன। அத்துடன் சவேந்திர சில்வா சொல்லி இருக்கிறார் தனக்கோ , தனது குடும்பத்தினருக்கோ அமெரிக்கா செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று। எனவே சவேந்திர சில்வா அல்ல இங்கு பிரச்சினை। ஓர் போர் குற்றவாளியை இலங்கை அரசு ராணுவ தளபதியாக நியமித்திருக்கிறது என்பதுதான் பிரச்சினை।

 இது வருகிறதான  மனித உரிமைகள் பேரவையில் எழுப்பப்படலாம்। அமெரிக்கா ஏன் இப்போது இந்த பிரச்சினையை எழுப்பியது? தனது ராணுவ தந்திரோபாயத்தை பலப்படுத்த இலங்கையூடாக நிறையவே செய்ய வேண்டி இருக்கிறது। ரணிலின் ஆட்சி  காலத்தில் செய்ய முட்பட்டதை ராஜபக்சவின் செய்ய விடவில்லை। இவர்கள் ஆட்சியில் இப்படியான பயமுறுதல்களூடாகவே தனது காரியத்தை செய்ய முட்படுகிறது।

 மேலும் கோத்தாவின் குடியுரிமை சம்பந்தமான பெயர் பட்டியலில் இன்னும் கோத்தாவின் பெயர் வரவில்லை। எனவே அமெரிக்கா ஒரு நோக்குடன்தான் செயல்படுகிறதே ஒழிய தமிழர்களுக்கு உரிமையை பெற்றுக்கொடுக்க அல்ல। 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, சுவைப்பிரியன் said:

அப்ப என்னதான் நடக்கும் கெரியா சொல்லுங்கோ.இருப்புகொள்ளுதில்லை.

இது தொலைகாட்சி சீரியல் மாதிரி தொடர்ந்து நடக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Dash said:

நான் சஜித்தை பற்றி குறிப்பிடவில்லை, கோத்தா வந்தால் வரப்போகும் பாதகமான விளைவுகளையே குறிப்பிட்டுள்ளேன்

அதே தான்  ஐயா

சஜித்துக்கு வாக்களிக்காதீர்கள் என்ற போது அப்போ  கோத்தாவை ஆதரிக்கின்றீர்களா  என்றீர்கள்???

தமிழருக்கு சிங்களமே தலமையும் கதியும்  என்பது  போல....

அதை  தாண்டி நாம் சிந்திக்க  முடியாதா???

28 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இது தொலைகாட்சி சீரியல் மாதிரி தொடர்ந்து நடக்கும்.

அதை தாண்டி  தமிழர்கள் சிந்திப்பார்களா????

Link to comment
Share on other sites

சவேந்திர சில்வா சட்டவிரோத கொலைகளை செய்த ஒரு போர்க்குற்றவாளி என்று அமெரிக்கா அறிவிச்சுள்ள நிலைல, அந்த பேயை  சஜித் ஆதரிச்சு அறிக்கைவிட்டுள்ள நிலைல சஜித் என்ற பேயின் பின்னால அலைந்து திரிந்த சுமந்திரன்-சம்பந்தன் குரூப்பும், மனோகனேஷன்  குரூப்பும் தொடர்ந்தும் சஜித் பின்னால அலையப்போகினமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Gowin said:

அண்மையில் ஐரோப்பிய பாராளுமன்ற  வளாகத்தில்

பயங்கரவாதம்  சம்பந்தமாக  நடந்த கருத்தரங்கில்

புலம் பெயர் தமிழர்கள் ஐநா முன்றலில் கூடுவது ஒருவகை சுற்றுலா அவர்களுக்கு என்ற கருத்து

அங்கத்தவர்களால் வைக்கப்பட்டதாம்

நானறிய இந்தக்கருத்தை முதன் முதலில் பொது வெளியில் வைத்தவர் சுமேந்திரன் அவர்கள்  தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் போன்றவர்களை அகற்ற தாயகத்தில் உள்ள மக்களாலதான் முடியும்.இங்கையிருந்து குத்தி முறிஞ்சு என்னத்தை செய்ய.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் சகோதரியின் மகன் 6 ஆம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரைக்கும் சென்னையில் உள்ள பாடசாலை ஒன்றில் தமிழில் தான் படித்தார், 
    • ச‌கோ கூட‌ எழுத‌ வேண்டாம் ஒரு சுற்று சுற்றி பாருங்கோ த‌மிழ் நாட்டை................பார்த்து விட்டு யாழில் எழுதுங்கோ அத‌ற்கு நான் ப‌தில் அளிப்பேன்.............இப்ப‌ ஆளுக்கு ஒரு ஊட‌க‌ம் வைச்சு இருக்கின‌ம் அவை அடிச்சு விடுவ‌தை யாழில் வ‌ந்து க‌ருத்து என்று வைப்ப‌து அபாத்த‌ம்..............சீமான்ட‌ மூத்த‌ ம‌க‌னா அல்ல‌து உத‌ய‌நிதியா அழ‌காய் த‌மிழை வாசிக்கின‌ம் எழுதுகின‌ம் என்று பாப்போம்...............அத‌ற்க்கு பிற‌க்கு நீங்க‌ள் சீமானின் பிள்ளைக‌ளை விம‌ர்சிக்க‌ மாட்டிங்க‌ள்...............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னை ஒழுங்காய் சுத்த‌மாய் ச‌க‌ல‌ வ‌ச‌தியோடும் இருந்தால் தமிழ‌ர்க‌ள் ஏன் த‌னியார் ம‌ருத்துவ‌ம‌னைக்கு போகின‌ம்.................இப்படி ப‌ல‌ கேள்விக‌ள் இருக்கு ஆனால் அத‌ற்க்கு ஒரு போதும் விடை கிடைக்காது...........................
    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.