Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Picture1.jpg&key=a590aa3e80084064fdbd7a50c74fde1b4810ba80b5662fe19074fdbc5aca2d64

Ragging-at-UP-college-150-freshers-made-to-tonsure-735x389.jpg

 

Continued..Part:3

நள்ளிரவு 12:45 மணி..

பயணப் பொதிகளை தூக்கிக்கொண்டு நான்காம் ஆண்டு சீனியர் மாணவரோடு விடுதி அலுவலகத்திற்கு சென்றால் அங்கே கதவு பூட்டியிருந்தது.

சீனியர் மாணவர், எனது கல்லூரி அனுமதி கடிதத்தை வாங்கி அதிலுள்ள அனுமதி எண்களை பார்த்துவிட்டு அருகிலுள்ள தகவல் பலகையில் ஒட்டியிருந்த சமீபத்திய அறிவிப்புகளை நோட்டம் விட்டர். என்னைப் போன்றே சில முதலாம் வருட மாணவர்களும் அங்கே கூடிவிட்டனர். ஒருவழியாக எனது பெயரை பார்த்துவிட்டு,

"டேய்.. ஒனக்கு முதலாம் வருட விடுதியில் முதல் தளத்தில் அறை எண்... தற்காலிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. நீ இன்னமும் விடுதிக்கு பணம் கட்டலையா..?" எனக் கேட்டார்.

“இல்லை சார், இப்போதானே வரேன், பணம் என்னிடம் இருக்கு..” என்றேன்.

“சரி,என்னுடன் வா, எனக்குத் தெரிந்த இரண்டாம் வருட ஜூனியர் அறையில் இன்று இரவு தங்க ஏற்பாடு செய்றேன், நாளை காலை முதல் வேலையா கல்லுரி முதல்தளத்திலிருக்கும் வங்கியில் இந்த அனுமதி கடிதத்தைக் காட்டி விடுதிக்கு பணம் கட்டிவிடு..” என்றவர், என்னை அழைத்துக்கொண்டு இரண்டாம் வருட மாணவர் தங்கியிருக்கும் அறைக்கு கூட்டிச் சென்றார்.

கதவை தட்டியவுடன் ஒருவர் திறந்து பார்த்துவிட்டு என்ன சார்… இன்னேரம்..? யார் இது ஃபர்ஸ்ட் இயரா..?” என சிரித்தார்.

“ஆமான்டா.. இவனை இன்னைக்கு ஒன் ரூமில் சேர்த்துக்கொள், நாளை பேங்க் கவுண்டர் இருக்குமிடத்தை காட்டி பணத்தை கட்டி ரூம் ஒதுக்கீட்டை வாங்கிக் குடு”  என சொல்லிவிட்டு அங்கிருந்து விடை பெற்றார்.

“ம்ம் உள்ளே வாடா, ஒன் பேர் என்ன..?” எனக் கேட்டவாறு என்னுடைய பெட்டிகளை உள்ளே எடுத்துகொண்டு அழைத்துச் சென்றார்.

உள்ளே தயங்கியவாறு சென்றவுடன் அறையை பார்த்தேன்.. பெரிய அறையில் நான்கு இரண்டாம் ஆண்டு பயிலும் சீனியர் மாணவர்கள் அவர்களின் கட்டிலில் உட்கார்ந்திருந்தனர்.

“ஒன் பேரு என்னடா..? எந்த ஊர்..?” என நால்வரும் விசாரித்தனர். நான் ஒருவித மன அழுத்தத்தில் மெதுவாக சொல்ல, டேய் சத்தமா சொல்லுடா..” என மிரட்டினர்.

“இருங்கடா..” என அவர்களை அடக்கிவிட்டு ம்..ஒன் பெட்டியை தொறந்து டிரஸ்ஸை மாத்திக்கோ.. “ என முதலில் கதவைத் திறந்தவர் கூறினார்.

 

நானும் கூலாக பெட்டியை திறந்து சட்டையை மாத்திவிட்டு லுங்கியை எடுத்து மாத்த ஆரம்பித்தேன்.

அவ்வளவுதான்.. கட்டிலிலிருந்த இருவர் பாய்ந்து என்னை நோக்கி வந்து லுங்கியை பிடுங்கி என் பெட்டி மீது வீசிவிட்டனர்.

"ஏன்டா என்ன தில்லு இருந்தால் எங்கள் முன் நீ லுங்கி கட்டுவே..?" என சத்தம் போட்டனர்.

நான் அதிர்ந்து முழிக்க, மேலே சட்டையுடனும், கீழே உள்ளாடையுடனும் கூனிக் குறுகி நின்றேன்.

"சட்டையைக் கழட்டுடா" அடுத்த உத்தரவு.

இப்பொழுது வெறும் உள்ளாடைகளுடன் நான் நிற்க, நால்வருக்கும் ஒரே சிரிப்பு.

அச்சமயம் அறைக்கு வெளியே பல கூக்குரல்களும், அதட்டும் சத்தமும், அதற்கு பதிலாக சில மாணவர்களின் கெஞ்சலும் ஒலித்தன.

“டேய் வாங்கடா வெளியே போவோம்.. இவனையும் கூட்டுக்கொண்டு போகலாம்..” என்றவாறு சொல்லிவிட்டு அந்த நால்வரும் என்னை நெட்டித் தள்ளி அறைக்கு வெளியே அழைத்துச் சென்றனர்.

வெளியே வந்து பார்த்தால் ஏறக்குறைய இருபத்தைந்து முதலாமாண்டு மாணவர்கள் ஜட்டி பனியனோடு குழுவாக வராந்தாவில் நின்றிருந்தனர்.

அவர்களை சுற்றி ஐம்பது அறுபது இரண்டாமாண்டு மாணவர்கள் ஒரே கொக்கரிப்புடன்...!

அதில் இருவர் அன்றைய ராகிங்கிற்கு தலைமை ஏற்பது போல சொற்பொழிவாற்ற ஆரம்பித்தார்.

என்னையும் அந்த முதலாமாண்டு மாணவர்கள் கூட்டத்தில் இணைத்தனர்.

“டியர் ஃபர்ஸ்ட் இயர் எஞ்சினியர்ஸ்..! வெல்கம் டு ஃபெகல்டி ஆஃப் எஞ்சினியரிங்..”

“டுடே இஸ் வெரி ஸ்பெசல் டே, டு ப்ளே..” என்றவர்,

"டேய் எல்லோரும் ரெயிலை பார்த்திருக்கீங்களா..?"

"யெஸ் சார்" என நாங்கள் மெதுவாக தலையாட்ட,

 

"பே......களா, நாங்கள் இப்போ சொல்றபடி நீங்கள் செய்யணும்.. ஓ.கே..?" என அரட்டினார்.

"ஓ.கே சார்" என நாங்கள் ஈனஸ்வரத்தில் பதிலலிக்க,

சில இரண்டாமாண்டு மாணவர்கள் உள்ளாடைகளுடன் நின்ற எங்களை வரிசையாக ஒருவர் பின் ஒருவராக நிற்கச் சொன்னார்கள்.

எப்படி..?

ஒவ்வொருவரின் பின்னாடி நின்றுகொண்டு முன்னாலிருப்பவரின் ஜட்டியின் மேல்விளிம்பை இறுக்க பிடித்துக்கொள்ள வேண்டும்..

நின்றோம்.. ரெயில் மாதிரி...!

 வேறு வழி..?

அந்த விடுதியின் அமைப்பு, மூன்று தளங்கள் கொண்ட செவ்வக வடிப்பைக் கொண்டது.. நடுவில் விளையாட சிறு மைதானமும், செடிகொடிகளும்..

முதலாமாண்டு மாணவர்களின் ரெயில், இப்பொழுது புறப்பட தயாரானது..

தலமை ஏற்ற இரண்டாமாண்டு மாணவர், கட்டளையிட்டார்.

நாங்கள் மைதானத்தில் ரெயில் மாதிரி உள்ளாடைகளுடன் ஓட ஆரம்பித்தோம்..

உடனே அதட்டல் வந்ததது.

"டேய் பரதேசிகளா..ரெயில் என்னடா சத்தமே போடாமல் ஓடுது..?" என அவர் கத்த, அந்த கட்டிடம் முழுவதும் மாடிகளின் வராந்தாவில் பல இரண்டாமாண்டு மாணவர்களும் நின்றுகொண்டு கூச்சலிட்டனர்.

தலமை எற்ற மற்றொரு சீனியர், எங்கள் முன் வந்து இதோ பாருங்கடா.. ரெயில் போகும்போதுகட கட”வென போகும்தானே..? ஆனால் அந்த சத்தத்திற்கு பதிலாக நாங்கள் சொல்வதை சத்தமாக எல்லோரும் சேர்ந்து கத்தியவாறு நீங்கள் இந்த மைதானத்தை பத்து முறை சுத்தி வரணும்..” என அந்த சொற்களை சொல்லிக் கொடுத்தார்..

அது..

"டக்கு......... க்கு.........."

"கூ.........."

பாலத்தின் மீது ரெயில் ஓடும்போது,

"............................."

விதியே என நினைத்துக்கொண்டு எங்கள் ரெயில், அவர்கள் சொல்லிக் கொடுத்த அந்த தகாத வார்த்தைகளின் ஓங்கிய குரலோடு ஓட ஆரம்பித்தது..

அத்தனை சீனியர்களுக்கும் ஒரே மகிழ்ச்சி, ஆரவாரம், கைதட்டல்கள்...

மணி அதிகாலை மூன்று ஆகிவிட்டது..

ராகிங்கின் அடுத்த கட்டம் ஆரம்பமானது..!

 (தொடரும்..)

Link to comment
Share on other sites

  • Replies 63
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

வெளியே வந்து பார்த்தால் ஏறக்குறைய இருபத்தைந்து முதலாமாண்டு மாணவர்கள் ஜட்டி பனியனோடு குழுவாக வராந்தாவில் நின்றிருந்தனர்.

தனியே என்றால்த் தான் ரொம்ப கஸ்டம் ஊரோடு என்றால் பரவாயில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

தனியே என்றால்த் தான் ரொம்ப கஸ்டம் ஊரோடு என்றால் பரவாயில்லை.

என்ன சார், குழுவோடு என்றால பரவாயில்லையா..? அன்றைக்கு நான் அவமானபட்டது போல என்றும் வாழ்க்கையில் சந்தித்ததில்லை. :(

 

பின்னர் எனக்கு அன்றிரவு ரூம் கொடுத்த இரண்டாமாண்டு சீனியர் மாணவர், பின்னாளில் சொன்னது,

"எலேய்.. ஒங்களை 'நிர்வாணமாக ஓட வைக்கவில்லையே' என சந்தோசப் படு...! மற்ற கல்லூரிகளில் ராகிங் நம்ம கல்லூரியை விட மிக மோசமாக இருக்கும், இங்கே யாரும் யாரையும் அடிப்பதில்லை, குறிப்பிட்ட அளவுக்கு மேல் கொடுமை செய்வதில்லை, நானும் சென்ற வருடம் இதே போல இங்கே உள்ளாடைகளுடன் ஓடியிருக்கிறேன்.." என்றார்.

அதற்கு நான் "ஏன் சார், நீங்க பட்டதை ஏன் எங்களிடம் காட்டுகிறீர்கள்...?" என்றேன்..

"இது ஒரு செயின் ரியாக்சன் மாதிரி.. யாம் பெற்ற துன்பத்தை மற்றவரிடம் செய்து பார்க்கும் ஒரு குரூர திருப்தி.." என்றார்.

டிஸ்கி:

(கல்லூரி படிப்பு முடிந்து, பின்னாளில் பொறியாளர்களாக, ஒரே அரசு அலுவலகத்தில் இருவரும் சில வருடங்கள் பணியாற்றியபோது, அவரை நான் கிண்டலடித்து காலை வாருவது வழக்கம் என்பது வேறு கதை..! :))

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ராசவன்னியன் said:

அதற்கு நான் "ஏன் சார், நீங்க பட்டதை ஏன் எங்களிடம் காட்டுகிறீர்கள்...?" என்றேன்..

வன்னியன் நீங்க இரண்டாம் மூன்றாம் ஆண்டு மாணவனாக இருந்த போது புதிதாக வந்த முதலாமாண்டு மாணவரிடம் எப்படி நடந்து கொண்டீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ஈழப்பிரியன் said:

வன்னியன் நீங்க இரண்டாம் மூன்றாம் ஆண்டு மாணவனாக இருந்த போது புதிதாக வந்த முதலாமாண்டு மாணவரிடம் எப்படி நடந்து கொண்டீர்கள்?

நான் ராகிங் செய்ததில்லை என சொன்னால் அது உண்மையில்லை.

நாங்கள் விடுதியில் தங்கியிருக்கும்போது ஒரு அறையில் நான்கு பேர் இருப்பார்கள்..

இரண்டாம், மூன்றாம், நான்காம் வருடங்கள் படிக்கும்போது எங்கள் அறைக்கு சக ரூம்  தோழர்கள் முதலாமாண்டு மாணவர்களை அழைத்து வருவதுண்டு.

என் ரூம்  தோழர்கள், வேண்டுமென்றே என்னிடம் அவர்களை அனுப்பி "சார் சொல்வது மாதிரி செய்..!" என சீண்டுவதுண்டு. நானும் சில கேள்விகளை கிண்டலாக கேட்க, அவர்கள் முழிக்க, நான் பட்ட துன்பங்கள் நினைவுக்கு வரும், "அவர்களிடமே போங்கடா..!" என அனுப்பிவிடுவதுண்டு.

ராகிங் செய்வதற்கும் சில திறமைகள்(?) வேணும் சார்,  நிச்சயம் எனக்கில்லை...!:)

சிலருக்கு என்னுடைய புத்தகங்கள், நோட்ஸ்களை கொடுத்திருக்கிறேன்.

(பெரும்பாலும் ஐந்தாம் ஆண்டு பொறியியல் மாணவர்கள் முதிர்ச்சி (Well matured Engineers..!) அடைந்திருப்பார்கள், அவர்கள் அதிகம் ராகிங் செய்வதில்லை, ஆனால் அகப்பட்டால், சில நேரம் அதோ கதிதான்..!)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ராசவன்னியன் said:

முதலாமாண்டு மாணவர்களின் ரெயில், இப்பொழுது புறப்பட தயாரானது..

தலமை ஏற்ற இரண்டாமாண்டு மாணவர், கட்டளையிட்டார்.

நாங்கள் மைதானத்தில் ரெயில் மாதிரி உள்ளாடைகளுடன் ஓட ஆரம்பித்தோம்..

அட.... இவ்வளவும் நடந்த பின்பும்,  அந்த ரயிலுக்கு....
முதலாமாண்டு மாணவர்களின் ரயில், 🚂🚞🚋 என்று பெயரும் வைத்தாச்சு.:grin:

அந்த ரயிலில்.... ராஜவன்னியர்  எத்தனையாவது பெட்டி.  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியர் உங்களுக்கு செய்த ராகிங்கும் பத்தாது, நீங்கள் செய்த ராகிங்கும் பத்தாது. நீங்கள் சும்மா படிக்கிறதுக்கு மட்டும்தான் லாயக்கு. அதுக்கு சரிவர மாட்டியள் .......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

அட.... இவ்வளவும் நடந்த பின்பும்,  அந்த ரயிலுக்கு....
முதலாமாண்டு மாணவர்களின் ரயில், 🚂🚞🚋 என்று பெயரும் வைத்தாச்சு.:grin:

அந்த ரயிலில்.... ராஜவன்னியர்  எத்தனையாவது பெட்டி.  🤣

 

பதினைந்தோ, பதினாறாவது ஆளாக(ரெயில் பெட்டியாக) இருக்கும் என நினைக்கிறேன், தமிழ் சிறி..! :)

 

சமீபத்தில் நடந்த சுவாரசியமான விடயம்:

சமீபத்தில் தொலைபேசியில் ஒரு குரல் என்னை அழைத்தது..!

'இது என்னடா, புது நம்பரா இருக்கே..?' என எடுத்து "ஹலோ.." சொன்னேன்.

"டேய் யார் பேசுறது, தெரியுமாடா..?" என்றது மறுமுனையில் குரல்..!

குரலை எங்கோ கேட்டது மாதிரி இருந்தது ஆனால் உடனே நினைவிற்கு வரவில்லை.

"தெரியலையே, நீங்கள் யாரு..?" என்றேன்.

"அடப்பாவி, ஃபர்ஸ்ட் இயரில் ஒன் ஜட்டியை பிடித்துக்கொண்டு ஓடி வந்தேனடா... மறந்துட்டையே..?" என மறுமுனையில் குரல் சிரித்தது. ஆனால் குரலில் சிறிது தடுமாற்றம் தெரிந்தது..

எனக்கு புரிந்துவிட்டது, ஆள் தீர்த்தம் போட்டிருக்கிறார்.. அடுத்தடுத்து இரண்டு குரல்கள் அவனுக்கடுத்து பேசினர்.

'அடடா.. இவன் நம்ம ........னந்தன்'ஆச்சே..? இவன் எப்படி துபாயில்..?' என அதிசயித்து "டேய் .........னந்தன்,  நீ எங்கேடா இந்தப் பக்கம்..?" என ஆவலுடன் கேட்டேன்..

"இல்லையடா, நாங்கள் அரசுப் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டோம், சும்மா ஜாலியாக ஒரு ரவுண்டு துபாயை பார்க்க வந்தோம், நீயும் இங்கே வாடா.." என அழைத்தனர்.

அடுத்து வழக்கம் போல கல்லூரி நண்பர்களின் சந்திப்பு, இத்தியாதிகள்..!  feux-artifice.gif

இந்த பகுதியை எழுதும்போது அன்று என்னை பின் தொடர்ந்த அந்தக் கல்லூரி நண்பனின் ஞாபகம் வந்தது.

( கொசுறு: என்னுடைய உள்ளாடையை பிடித்துக்கொண்டு, பின்னாடி அடுத்த ரெயில் பெட்டியாக வந்த அந்த நண்பன், மூன்று வருடங்களுக்கு முன் அரசின் ஒரு துறையில் தலைமை பொறியாளராக உயர்பதவியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றான். )

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Picture1.jpg&key=a590aa3e80084064fdbd7a50c74fde1b4810ba80b5662fe19074fdbc5aca2d64

1513077158phpuJPj5y.jpeg

Continued..Part: 4

அதிகாலை மூனு மணிக்கு மேல் நடந்த ராகிங் வதைகளை இங்கே எழுத இயலாது, ஏனெனில் அவ்வளவு கொடுமை..! :(

பொழுதும் விடிந்துவிட்டது..!

'சரி எல்லாம் முடிஞ்சது' என அறைக்கு போய் மறுபடியும் லுங்கியை எடுத்து கட்டலாமென நினைத்து எடுத்தால், மறுபடியும் அறையிலிருந்த சீனியர்கள்,

"டேய் ஹாஸ்டல்ல இருக்குற இன்னும் ரெண்டு மாசத்துக்கு நீ லுங்கியே கட்டக் கூடாது..!" என 144 தடை போட்டனர்..!

இதென்ன புதுக்கூத்து..?

"ஏன் சார்.. ஏன் லுங்கி கட்டக்கூடாது, பின் எப்படிதான் ரூமில் இருப்பது..?" என வினவினேன்..

"இங்கிருக்கும் பொறியியல் கல்லூரி வளாகத்தினுள் ஒவ்வொரு வருட மாணவர்களுக்கும் தனித்தனி விடுதிகள் இருந்தாலும், அனைத்தும் ஒரே காம்பவுண்ட்க்குள் தான் இருக்கின்றன. எங்களுக்கு முதல் வருட மாணவர்கள் யார், மற்ற வருட மாணவர்கள் யாரென அடையாளம் தெரிய வேணுமே..? தவறுதலாக மற்ற வருட மாணவர்களை ராகிங் செய்துவிட்டால், பெரிய கலவரமே மூண்டுவிடும்..அதை தடுக்கவே இந்த ஏற்பாடு.. அதுவரை நீங்கள் வேட்டிதான் கட்ட வேணும்டா..!" என்று சிரித்தனர்.

அதைக் கேட்டவுடன், முந்தின நாள் பகலில், மதுரை ரெயில் நிலையத்தில் நான் வேட்டியுடன் ரெயிலுக்கு காத்திருந்த நேரம், அந்த இரண்டு சீனியர் மாணவர்கள் "முன்னாடியே ஒனக்கு தெரியுமா.. வேட்டியுடன் வந்திருகே..?" என சிரித்து நக்கலடித்த காரணம் புரிந்தது.

'ஆகா என்ன கண்டுபிடுப்பு..!' என நொந்துகொண்டு, மறுபடியும் வேட்டியை கட்டிக்கொண்டு குளிக்கப் போனேன்.

குளித்து முடித்து வந்தவுடன், அறையிலிருந்த நான்கு சீனியர் மாணவர்களும் என்னை மெஸ்ஸுக்கு சாப்பிட அழைத்துச் சென்றனர். அங்கே பார்த்தால் எனக்கு முன்னதாக சாப்பிட வந்திருந்த சில முதலாமாண்டு மாணவர்கள் கையில் இலையை வைத்துக்கொண்டு மற்ற சீனியர் மாணவர்களின் அதட்டல்படி பிச்சை எடுத்துக்கொண்டிருந்தனர்.

மெஸ் ஊழியர்களுக்கு, 'இது ஒவ்வொரு வருடமும் நடக்கும் வழக்கமான நிகழ்ச்சி' என்பதால் யாரும் தடுக்க வரவில்லை.சிரித்துக்கொண்டு அவர்களின் வேலைகளை கவனித்தனர்.

அன்று முழு இரவும் தூங்கவில்லை, முந்தைய நாள் பிரயாணக் களைப்பு...! எனது கண்கள் தூக்கத்திற்கு ஏங்கின.

'முதல்நாள் கல்லூரி வகுப்புகள் ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கும், முதல் வருட மாணவர்கள் எல்லோரும் முதல் மாடியிலிருக்கும் குறிப்பிட்ட லெக்சர் ஹாலுக்கு வரச் சொல்லி' அறிவிப்பு அங்கே ஒட்டப்பட்டிருந்தது.

அறையிலிருந்த அந்த இரண்டாம் வருட சீனியர், "சீக்கிரம் சாப்பிடு, ஒனக்கு கல்லூரியிலிருக்கும் 'பேங்க் கவுண்டரை' காட்டுறேன், விடுதிக்கும் கல்லூரிக்கும் பணத்தைக் கட்டிவிட்டு, ஒன் அறையின் சாவியை விடுதி அலுவலகத்தில் வாங்கி தாரேன்" என சொல்லி அழைத்துச் சென்று அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார்.

இந்த அலுவல்களை முடித்து கல்லூரி முதல் மாடியிலுள்ள லெக்சர் ஹாலுக்கு போய் அமர்ந்தேன். தூக்கம் கண்ணை சொக்கியது.

ஒரு மணி நேரத்தில், முதல் வருட மாணவர்களின் வரவேற்பு நிகழ்ச்சியை கல்லூரி முதல்வரும், மற்றைய பேராசிரியர்களும் வாழ்த்தி வரவேற்றுவிட்டு கல்லூரியில் பல வசதிகள், வழிகாட்டல்களை மாணவர்களுக்கு வழங்கினர்.

'எல்லாம் சரி இந்த ராகிங் பற்றி ஏதாவது சொல்வார்'களென பார்த்தால் ஒருத்தரும் மூச் விடவில்லை..!

அறிமுக வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து, நான்கு வகுப்பு குழுக்களாக நாங்கள் பிரிக்கப்பட்டு அவரவர் வகுப்புகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

நான் எனது வகுப்பிற்கு சென்று இரண்டாம் வரிசையிலுள்ள மேசை இருக்கையில் உட்கார்ந்தேன். அப்பொழுதைய வகுப்பு 'எலெக்ட்ரிகல் எஞ்சினீயரிங்' பற்றியது..

உதவி பேராசிரியர் வந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, ஓவ்வொரு மாணவர்களையும் எழுந்து பெயர், இதற்கு முன் படித்த கல்லூரி, சொந்த ஊர் முதலியவற்றை சொல்லி அறிமுகப்படுத்திகொள்ள சொன்னார்.

அனைத்து முடிந்ததும் கரும்பலகையில் அடிப்படை மின்சாரப் பொறியியல் பற்றி சிறிது விளக்கிவிட்டு, 'என்னென்ன புத்தகங்களை இதற்கு படிக்க வாங்க வேண்டு'மென விளக்கினார்..

எனக்கு அசதியில் பயங்கர தூக்கம்..

அவர் கூறியவைகள் அரைகுறையாக காதில் விழ, கொஞ்ச நேரம் அசந்துவிட்டேன்..!

திடீரென அப்பேராசிரியர் என்னை நோக்கி அழைத்து எழச் சொல்லி, தான் சற்றுமுன் படிக்கக் கூறிய புத்தக ஆசிரியரின் பெயரை கூறச் சொன்னார்.

நான் காதில் அரைகுறையாக விழுந்த அவரின் சொற்களை நினைவுபடுத்தி "தண்டோரா, சார்.." என்றேன்.

வகுப்பு முழுவதும் 'கொல்'லென சிரித்துவிட்டது..!

ஏனெனில் அவர் கூறிய புத்தக ஆசிரியரின் பெயர் "டெல்டோரா.."

பேராசிரியர் என் கண்களைப் பார்த்து நிலமையை உணர்ந்திருக்க வேண்டும், சிரித்துவிட்டு உட்கார சொல்லிவிட்டார்..

அந்நிகழ்ச்சியை இன்றளவும் என்னால் மறக்க முடியவில்லை.  5.gif

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/18/2020 at 12:57 PM, ராசவன்னியன் said:

ராகிங் செய்யபட்டதினால் சில நல்ல விசயங்களும், பயன்களும் கிட்டின.

அழகான அந்த பழைய நினைவுகளை மீண்டும் நினைக்க வைக்கிறது உங்களது இந்த பதிவு அங்கிள்.. 

ராகிங்கினால் நீங்கள் கூறிய நன்மைகள் உண்டு .. அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.. 

ஆனால் இப்பொழுது உள்ள மாணவர்கள்  வரம்பை/மரபை மீறுவதால் ராகிங்கை ஆதரிக்க முடியவில்லை.. 

ஆனாலும் பல்கலைகழக வாழ்க்கையில் அந்த முதலாமாண்டு ராகிங்கும் ஒரு இனிமையான காலப்பகுதி ..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

அழகான அந்த பழைய நினைவுகளை மீண்டும் நினைக்க வைக்கிறது உங்களது இந்த பதிவு அங்கிள்.. 

ராகிங்கினால் நீங்கள் கூறிய நன்மைகள் உண்டு .. அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.. 

ஆனால் இப்பொழுது உள்ள மாணவர்கள்  வரம்பை/மரபை மீறுவதால் ராகிங்கை ஆதரிக்க முடியவில்லை.. 

ஆனாலும் பல்கலைகழக வாழ்க்கையில் அந்த முதலாமாண்டு ராகிங்கும் ஒரு இனிமையான காலப்பகுதி ..

உண்மைதான் அம்மணி.

'ராகிங்' ஒரு எல்லைக்குள் உடல், உளவியல் ரீதியாக துன்புறுத்தல் இல்லாமல், மென்மையாக இருந்தால் அறிமுகப்படுத்திக்கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும், வரவேற்கலாம்.

நானும் பல சுவாரசியமான, சிலசமயம் ரொம்ப நகைச்சுவையாக அனுபவித்த வதைகளும் உண்டு. பல நிகழ்வுகள் மறந்தே போச்சு.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரானா பாதிப்பின் அவசர நிலையை கவனத்தில் கொள்வோம்.

நேரமிருக்கும் பட்சத்தில் பிறிதொரு சமயத்தில் தொடர்கிறேன்.

இதுவரை பார்வையிட்டு, ஊக்குவித்த அனைவருக்கும் மிக்க நன்றி..!

 

End.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இலங்கையில் கல்லூரி சென்றதில்லை  ஆதலால் 
இந்த ராகிங் பற்றி தெரியவும் இல்லை புரியவும் இல்லை 

இன்னொருவரை வதை செய்வது என்பது எந்த கோணத்திலும் ஏற்பு உடையது அல்ல. 
இது ஒரு மனித அறிவின் குன்றிய நிலை என்பது எனது கருத்து 

ஈழத்தில் இயக்கங்கள் தொடங்கிய காலங்களில் (ஆரம்ப காலம் இல்லை)
போராடத்தில் இணைந்து பயிற்சிக்கு சென்ற இளைஞர்களை 
ஏற்கனவே பயிற்சி எடுத்த போராளிகள் இப்படி அநியாயமாக புதியவர்களை அடிப்பதுண்டு 
சில இயக்கங்களில் டெலோ ஈப்பி ஆர் எல் வ்  புளொட் போன்ற இயக்கங்களில் 
பல இளைஞர்கள் பயிற்சி காலத்தில் கைகால் முறிந்தது கூட உண்டு 
எனது நண்பர் ஒருவருவருக்கு பயிற்சி முகாமில் மண்டையில் அடித்து அவருக்கு புத்தியே தடுமாறி போய் விட்டது  பின்பு (மந்திகை) மன நல மருத்துவமனை ஒன்றில் சேர்த்தார்கள் பெரிதாக பலன் கிடைக்கவில்லை. 

புலிகள் சுய ஒழுக்கம்  பக்குவம் போன்றவற்றையே கடுமையாக கற்பித்தார்கள் 
இவ்வாறான வன்முறைகள் மிக மிக குறைவு 
பின்னாளில் யாரும் யாருக்கும் அடிக்க முடியாது என்று சட்டம் போன்று கட்டளையை பிரபாகரன் பிறப்பித்து 
இருந்ததாக அறிந்துகொண்டேன். மாறாக பனிஸ்மென்ட் கொடுப்பார்கள் 

இவர்கள் மாறாக மூத்தவர்கள் சீக்ரெட்டை ஊதிக்கொண்டே இருப்பார்கள் 
ஊரில் சீகிரெட் பிடிக்காத வயதில் குறைந்தவர்கள் கூட பின்பு இவர்களை பார்த்து பழகியதுண்டு 
இந்த லட்ஷணத்தில் புதியவர்களை அடிப்பார்கள்.

அவர்களின் தனிப்பட்ட குறையாக இப்போது என்னால் இதை பார்க்க முடியவில்லை 
பிற மனிதர்களிடம் சாதி கொடுமை செய்வது துன்புறுத்துவது 
என்று எல்லாமே எமது இனத்தில் இருந்த அறிவற்ற ஒரு மடமை தானம் என்றுதான் நான் எண்ணுகிறேன்.
நாங்கள் ஆண்கள் என்பதால் மிக மிக குறைவு 
இந்த சமூகத்த்தில் பெண்கள் எவ்ளவு கொடுமைகளை பூட்டிய வீடுகளுக்குள் அனுபவித்து இருப்பார்கள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ராசவன்னியன் said:

அதிகாலை மூனு மணிக்கு மேல் நடந்த ராகிங் வதைகளை இங்கே எழுத இயலாது, ஏனெனில் அவ்வளவு கொடுமை..! :(

வெளியிலை சொல்லேலாத அளவுக்கு மதுரைக்காரரை உருட்டி பிரட்டி காய்ச்சி எடுத்திருக்கிறாங்கள்.படுபாவியள்.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

வெளியிலை சொல்லேலாத அளவுக்கு மதுரைக்காரரை உருட்டி பிரட்டி காய்ச்சி எடுத்திருக்கிறாங்கள்.படுபாவியள்.😁

யப்பா.. 'பரிமளம் சாமிகளுக்கு' எவ்வளவு சந்தோசம்...!  vil-marre.gif

வாழியவே..!

Link to comment
Share on other sites

நாவல்கள், கட்டுரைகள் படிக்கும்போது அவைகளில் வரும் கதாபாத்திரங்களாக, அவைகளை வாசிக்கும் வாசகர்களை மாற்றிவிடும் திறன் கொண்ட எழுத்தாளர்களே சிறந்த எழுத்தாளர்களாக வரலாற்றில் நிலை பெறுகிறார்கள். அந்தவகையில் ராசவன்னியரின் ராக்கிங் அனுபவக் கட்டுரை என்னைமட்டுமல்ல, கள உறவுகள் பலரையும் ராசவன்னியராகவே மாற்றிவிட்டதை அவர்கள் கருத்துக்கள் வெளிப்படுத்தி உள்ளதை, இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்.

ரவுசர் போடு, டைகட்டு என்று சொல்லாமல், வேட்டிகட்டு என்று ராசவன்னியரை ஒரு பச்சைத் தமிழனாகப் பார்த்து, ராக்கிங்செய்த அந்த பழைய மாணவர்களையும் நான் பாராட்டியே ஆகவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Paanch said:

நாவல்கள், கட்டுரைகள் படிக்கும்போது அவைகளில் வரும் கதாபாத்திரங்களாக, அவைகளை வாசிக்கும் வாசகர்களை மாற்றிவிடும் திறன் கொண்ட எழுத்தாளர்களே சிறந்த எழுத்தாளர்களாக வரலாற்றில் நிலை பெறுகிறார்கள். அந்தவகையில் ராசவன்னியரின் ராக்கிங் அனுபவக் கட்டுரை என்னைமட்டுமல்ல, கள உறவுகள் பலரையும் ராசவன்னியராகவே மாற்றிவிட்டதை அவர்கள் கருத்துக்கள் வெளிப்படுத்தி உள்ளதை, இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்.

ரவுசர் போடு, டைகட்டு என்று சொல்லாமல், வேட்டிகட்டு என்று ராசவன்னியரை ஒரு பச்சைத் தமிழனாகப் பார்த்து, ராக்கிங்செய்த அந்த பழைய மாணவர்களையும் நான் பாராட்டியே ஆகவேண்டும்.

ஊக்க கருத்துக்களுக்கு நன்றி, திரு.பாஞ்.

வேட்டி கட்டும் சூழல் இங்கே வந்ததிலிருந்து எல்லாம் மாறிப் போச்சு..!

அலுவலக மீட்டிங்களுக்கு சென்றால் சூட், டை மற்றும் திட்டப்பணிகளுக்கு சென்றால் முழு பாதுகாப்பு கவசங்களுடன்(PPE) தான் செல்ல வேண்டுமென அலுவலக வழிகாட்டல்கள்..

வேட்டிக்கு மாற தமிழகம்தான் செல்ல வேண்டும்..! :(

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

அந்தக் கால ராக்கிங்க்கும் இந்த கால ராகிங்க்கும் எக்கசக்க வித்தியாசம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Kali said:

அந்தக் கால ராக்கிங்க்கும் இந்த கால ராகிங்க்கும் எக்கசக்க வித்தியாசம். 

அப்படியா..? கொடுமைகள் குறைந்துள்ளனவா..?

பாலியல் ரீதியாக துன்புறுத்தல்கள் இருக்காது என எண்ணுகிறேன்.

Link to comment
Share on other sites

4 minutes ago, ராசவன்னியன் said:

அப்படியா..? கொடுமைகள் குறைந்துள்ளனவா..?

பாலியல் ரீதியாக துன்புறுத்தல்கள் இருக்காது என எண்ணுகிறேன்.

இப்ப எல்லாமே கூடியிருக்கு. 
யுனி போக முதலே போன் நம்பர் கண்டுபிடிச்சு ஆரம்பிச்சிடும். 
மனுஷ வேஷத்தில் இருக்கிற மிருகங்களை கஷ்டமேயில்லாமல் அடையாளம் கண்டிடலாம். 

On 1/4/2020 at 23:15, ராசவன்னியன் said:

PPE) தான் செல்ல வேண்டுமென

அங்கே ஒரு PPEஇன் விலை என்ன? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Kali said:

..அங்கே ஒரு PPEஇன் விலை என்ன? 

தரமான PPE வேண்டுமெனில் 800 திர்ஹாமிலிருந்து கிடைக்கிறது.

செலவழிக்கும் கம்பெனியை பொறுத்து வாங்கிக் கொடுக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

21 hours ago, ராசவன்னியன் said:

தரமான PPE வேண்டுமெனில் 800 திர்ஹாமிலிருந்து கிடைக்கிறது.

செலவழிக்கும் கம்பெனியை பொறுத்து வாங்கிக் கொடுக்கிறார்கள்.

நன்றி!

பயங்கர விலையா இருக்கே!

200 டொலருக்கு மேல 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kali said:

நன்றி!

பயங்கர விலையா இருக்கே!

200 டொலருக்கு மேல 

நான் சொல்வது தலை, முகம், கண்கள், கைகள், உடைகள் மற்றும் பாதணிகளையும் சேர்த்து..
('கேட்டர் பில்லர்' - Caterpillar நிறுவன பொருட்கள்..)

இந்த நிறுவன பொருட்கள் பெரும்பாலும் அரச நிறுவனகளில் அங்கீகரிக்கப்பட்ட பொருட்களாக இருக்கும். அனைவரும் அரசு அங்கீகரித்த பொருட்களையே தங்கள் திட்டப்பணிகளுக்கு பயன்படுத்த வேண்டுமென்பது முக்கிய நிபந்தனையாகும்.

Link to comment
Share on other sites

இப்ப தான் ராகிங் பாகங்களை முழுமையா படிச்சு முடிச்சன்.
வன்னி அண்ணை சூப்பர் பதிவு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவரெவரெல்லாம் என்னை அதிகமாக ராகிங் செய்தார்களோ அவர்களே என்னுடன் அதிக நட்புடன் இருக்கிறார்கள், தற்போதும் 😀.

அந்த இனிய நாட்களை மீளவும் இங்கே திரும்பவும் கொண்டுவந்ததற்கு இராச வன்னியருக்கு நன்றிகள். 👏

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.