Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திரு.காளி, திரு.கபிதன் இருவரின் கருத்துக்களுக்கும் நன்றி.

கள உறுப்பினர்களும் தங்களுக்கு ஏற்பட்ட ராகிங் அனுபவங்களையும் இங்கே பகிர்ந்துகொண்டால், இன்னும் சுவாரசியமாக இருக்கும்.

இன்னும் சில அனுபவங்கள் இருந்தாலும் இந்த கொரானா தொற்று முடிந்து எல்லாம் சுமூகமாக முடியட்டும் என காத்திருந்தால் இந்த வருடம் முழுவதும் கொரானா துயரம் தொடரும் போலிருக்கே..! 🙄

Link to comment
Share on other sites

  • Replies 63
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 உண்மைதான் ராகிங்  ஒரு அதிர்ச்சியான   பட்ட்றிவு  பின் வரும்
யுனிக் காலத்தை கடந்து செல்ல .உதவும். .  கொரோன முடியட்டும் என் நினைத்தால்  
இப்படியான  ஓய்வு  நேரம் கிடைக்காமல் போக கூடும் கூடியவரை எழுதுங்கள்
நாங்கள் இருக்கிறோம் ஆதரவு  தருவதற்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/4/2020 at 02:15, நிலாமதி said:

 உண்மைதான் ராகிங்  ஒரு அதிர்ச்சியான   பட்டறிவு  பின் வரும்
யுனிக் காலத்தை கடந்து செல்ல உதவும். .  கொரோன முடியட்டும் என் நினைத்தால்  
இப்படியான  ஓய்வு  நேரம் கிடைக்காமல் போக கூடும் கூடியவரை எழுதுங்கள்
நாங்கள் இருக்கிறோம் ஆதரவு  தருவதற்கு .

ஊக்கத்திற்கு மிக்க நன்றி.

நேரம் கிட்டும்பொழுது தொடர்கிறேன். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே சொன்னது மாதிரி பொதுவெளியில் எழுதக்கூடிய இன்னும் ரெண்டு மூனு சுவாரசியமான ராகிங் சம்பவங்கள் நினைவிற்கு வந்துள்ளன.. தொகுத்து போட்டு இந்த திரியை விரைவில் நிறைவு செய்யுறேன்..!

கிராமத்து வாசகசாலையில் அம்புலிமாமா, முத்து காமிக்ஸ் புத்தகங்களை படித்த எனக்கு சரோஜாதேவி ன்னு ஒரு வாழ்க்கை வழிகாட்டல் (???) புத்தகத்தை படிக்க வைத்த ராகிங் சம்பவமும் நிகழ்ந்தது..! 🙄😟😋

 

49FJ_V.gif

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ராசவன்னியன் said:

ஏற்கனவே சொன்னது மாதிரி பொதுவெளியில் எழுதக்கூடிய இன்னும் ரெண்டு மூனு சுவாரசியமான ராகிங் சம்பவங்கள் நினைவிற்கு வந்துள்ளன.. தொகுத்து போட்டு இந்த திரியை விரைவில் நிறைவு செய்யுறேன்..!

கிராமத்து வாசகசாலையில் அம்புலிமாமா, முத்து காமிக்ஸ் புத்தகங்களை படித்த எனக்கு சரோஜாதேவி ன்னு ஒரு வாழ்க்கை வழிகாட்டல் (???) புத்தகத்தை படிக்க வைத்த ராகிங் சம்பவமும் நிகழ்ந்தது..! 🙄😟😋

 

49FJ_V.gif

 

அவர்கள் ஒரு புத்தகம்தானே உங்களை படிக்க வைத்தார்கள்......பிறகு நீங்கள் எத்தனை புத்தகம் வாங்கிப் படித்தீர்கள்.....அது வாரத்துக்கு ஒன்று என்று வந்திருக்குமே.....!   😇

Govinda, Karishma Kapoor, Shakti Kapoor, Raja Babu - Comedy Scene ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/4/2020 at 19:45, ராசவன்னியன் said:

வேட்டிக்கு மாற தமிழகம்தான் செல்ல வேண்டும்..! :(

தமிழகத்தில் அரசியல்வாதிகளை தவிர வேறு யாரும் வேட்டி கட்டுவதாக தெரியவில்லையே? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Picture1.jpg&key=a590aa3e80084064fdbd7a50c74fde1b4810ba80b5662fe19074fdbc5aca2d64

Continued..Part: 5

விடுதியில் 'ராகிங் தொல்லை'களினால் முதல் ஒருவாரம் பிற்பகல் 3 மணிக்கு கல்லூரி வகுப்புகள் முடிந்தவுடன் விடுதிக்கு திரும்புவதில்லை..!

புத்தக பையோடு அப்படியே நகருக்குள் சென்று கடைவீதி, கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு தொடர்ச்சியாக இரண்டு சினிமா காட்சிகளும் பார்த்துவிட்டு நள்ளிரவு ஒரு மணிக்கு மேல்தான் மெதுவாக விடுதிக்கு திரும்புவதுண்டு. 🙄

இதே உத்தியை இதற்கு முன் கல்லூரியில் படித்த சீனியர்களும் அவர்கள் முதலாமாண்டு படிக்குபோது கையாண்டிருப்பர்கள் தானே..? ஆகவே இதற்காகவே அவர்களும் நள்ளிரவு வரை விழித்திருந்து எங்களை  களவாக ஒளிந்திருந்து பிடித்து 'ராகிங்' செய்வது வழக்கம்..!

முதல் ஒருவாரம் கல்லூரி வாழ்க்கை பயத்துடனேயே கழிந்தது..ராகிங்கும் மிகக் கடுமையாக தொடர்ந்தது..!

இரண்டாவது வாரம், திங்கள் கிழமை..

மதியம் ஒரு உதவிப் பேராசிரியர் வந்து "முதல் வருட மாணவர்கள் எல்லோரும் தவறாமல் கல்லூரி என்.சி.சி.(National Cadet Corps) யில் சேர வேண்டும், ஆகவே பிற்பகல் கல்லூரி வகுப்புகள் முடிந்தவுடன் தரை தளத்திலிருக்கும் என்.சி.சி அலுவலக அறைக்கு வந்து மாணவர்கள் அவரவர்களின் பெயரை கொடுத்து சேர்ந்துவிட்டு பேராசிரியர் கொடுக்கும் என்.சி.சி உடுப்புகள், தொப்பி, பெல்ட் மற்றும் ஷூக்களை வாங்கிக்கொண்டு செல்லவேண்டும்" என அறிவுறுத்தப்பட்டோம்..

'இதென்னடா கொடுமை..? இன்றைக்கு நகர்வலம் போக முடியாதா..? இவர்கள் கொடுக்கும் உடுப்புகளை கையிலெடுத்துக்கொண்டு எப்படி நகருக்குள் போவது..? இன்னைக்கு ராகிங்கில் மாட்டினால் தொலைந்தோம்..!' என மனம் விசனப்பட்டது.

  images?q=tbn:ANd9GcRvVHVv474d4MXBMOiXAE8     images?q=tbn:ANd9GcQcuJ-ClJ8Qwkbl3MOx799

வேறு வழியில்லாமல் பிற்பகல் வகுப்புகள் முடிந்தவுடன் என்.சி.சி அறைக்கு சென்று பெயரும் கொடுத்து, அவர்கள் கொடுத்த உடுப்புகள் அடங்கிய பொதியையும், கல்லூரி புத்தக பொதியையும் சுமந்துகொண்டு பம்மிக்கொண்டு குழுவாக ஒரு முப்பது பேர் விடுதிக்கு திரும்பிக்கொண்டிருந்தோம்.

முதல் வருட மாணவர்களின் விடுதிக்கு செல்லவேண்டுமெனில் இரண்டே வழிகள்தான் உண்டு. ஒன்று நான்காம் வருட விடுதியின் வழி அல்லது மூன்றாம் வருட விடுதியின் வழி..ஏனெனில் அனைத்து வருட விடுதிகளையும் வளைத்து பாதுகாப்புக்காக காம்பவுண்ட் சுவர் எழுப்பபட்டிருந்தது.

நாங்கள் பொதிகளை சுமந்துகொண்டு குழுவாக மூன்றாம் வருட விடுதி வாசல் வழியாக சத்தம் போடாமல் அமைதியாக நுழைந்தோம்..

விதி யாரை விட்டது..?

மூன்றாம வருட மாணவர்கள் குழாம் ஒன்று விடுதி நுழைவாயிலில் இதற்காகவே காத்துக்கொண்டிருந்தது போல உடனே பறந்து வந்து எங்களை வளைத்துக்கொண்டனர்..!

விடுதியின் ஒலிபெருக்கியில் ஆங்கிலப்பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது..

"வாங்கப்ப பெரிய மனுசங்களா..! எங்கேயடா இத்தனை பேரும் கிளம்பிவிட்டீர்கள்..?" என அதட்டல்..

"இல்லை சார், என்.சி.சி.. உடுப்புகள் கொடுத்தார்கள் ரூமில் கொண்டுபோய் வைக்க வேணும்..!" என்றோம்.

"இருங்கடா.. அவ்வளவு சீக்கிரம் இங்கேயிருந்து ஒங்களை விட்டுடுவோமா..? எல்லோரும் அவரவர் தலையில் பொதிகளை தூக்கி வைத்து பிடித்துக்கொண்டு வரிசையாக நில்லுங்கடா.." என்றனர்.

நாங்கள் முப்பது பேரும் தலையில் என்.சி.சி உடுப்புகளின் பொதியையும், புத்தக பொதியையும் தலையில் வைத்துக்கொண்டு வரிசையாக நின்றோம்..

நல்லவேளை கல்லூரி முடிந்து நேரடியாக விடுதிக்கு திரும்பிக்கொண்டிருந்ததால் நாங்கள் வேட்டி கட்டியிருக்கவில்லை. இல்லையெனில் அதனை உருவியிருப்பார்கள்..! :)

வரிசையாக அனைவரும் நின்றவுடன், ஒரு சீனியர் எங்களை உரக்க பாடச்சொன்னார்..!

"தில்லையம்பல நடராசா..
செழுமை நாதனே பரமேசா..
அல்லல் தீர்த்தாண்டவா..
வா வா.. அமிழ்தானவா.."

'இறை வணக்கம் (?)' முடிந்தவுடன் நாங்கள் கிளம்ப எத்தனிக்கையில், "இருங்கடா பே....களா, என்னடா அவசரம்..?"

மறுபடியும் ரெயில் மாதிரிதான்.. ஆனால் இம்முறை ஒருவரையொருவர் பிடித்துக்கொண்டல்ல..! 😋

தலையில் பொதிகளை பிடித்துக்கொண்டு, வரிசையாக அனைவரும் கோரசாக பாடிக்கொண்டு நடக்க சொன்னார்கள்..

அது..

"பள்ளிக்கட்டு சபரி மலைக்கு..
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை..
சாமியோ ஐயப்போ.. ஐயப்போ சாமியோ.."

இப்படி அத்தனை பேரும் வரிசையாக நடந்துகொண்டு மூன்றாம் வருட விடுதியின் மூன்று தளங்களையும், நாலாவதாக மொட்டை மாடியிலும் ஏறி சுற்றி வரச் சொன்னார்கள்..😟

நடந்தோம், பக்தி பரவசத்தோடு.. ராகிங் பயத்தோடு..!

புண்ணியமாவது கிட்டட்டுமென வேண்டினோம்..!!

ஆனால் அன்று இறுதியில் புண்ணியம் கிட்டவில்லை, கண்ணீர்தான் கிடைத்தது..! 😢

 

('வதைகள்' தொடரும்..)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, suvy said:

அவர்கள் ஒரு புத்தகம்தானே உங்களை படிக்க வைத்தார்கள்......பிறகு நீங்கள் எத்தனை புத்தகம் வாங்கிப் படித்தீர்கள்.....அது வாரத்துக்கு ஒன்று என்று வந்திருக்குமே.....!   😇

Govinda, Karishma Kapoor, Shakti Kapoor, Raja Babu - Comedy Scene ...

இல்லை சுவி, அதற்கு பிறகு அம்மாதிரி புத்தகங்களை படிக்கவில்லை. ஏனெனில் அவைகள் கிடைக்குமிடம் தெரியாது. ( அப்பொழுது மிக இளவயசு, இதில் 'வெட்கப்பட ஒன்றுமில்லை' என நினைக்கிறேன். :)

அந்த புத்தகங்களை வைத்திருந்தது ஒரு சென்னை குறூப் சீனியர்கள். ஒருவேளை அவர்கள் அதை சென்னையில் வாங்கி வந்திருக்கலாம்.

17 hours ago, குமாரசாமி said:

தமிழகத்தில் அரசியல்வாதிகளை தவிர வேறு யாரும் வேட்டி கட்டுவதாக தெரியவில்லையே? :(

இல்லையே, கு.சா..

பலரும் வேட்டியை இன்னமும் கட்டுகிறார்கள்..கிராமங்களில் கலாச்சாரம் மாறவில்லை. பெரிய நகரங்களில் ஆங்கிலேயர்களின் வழியை பின்பற்றுவதால் வேலைக்கு செல்வோர் பேன்ட் சர்ட் அணிகிறார்கள்.

நான் நல்ல நாட்கள், பண்டிகைகளின்போது கட்டுவதுண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ராசவன்னியன் said:

"தில்லையம்பல நடராசா..
செழுமை நாதனே பரமேசா..
அல்லல் தீர்த்தாண்டவா..
வா வா.. அமிழ்தானவா.."

நானெண்டால் வன்னியருக்கு ஒரு நாலு முழத்தை கட்டிக்கொண்டு இந்த பாட்டை பாடச்சொல்லியிருப்பன்..😎

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, குமாரசாமி said:

நானெண்டால் வன்னியருக்கு ஒரு நாலு முழத்தை கட்டிக்கொண்டு இந்த பாட்டை பாடச்சொல்லியிருப்பன்..😎

நன்றி கு.சா..

அந்த பாடலை சீனியர்கள் குறிப்பிட்டு தேர்ந்தெடுத்து பாட சொன்னதற்கு வரலாற்றுக் காரணம் உண்டு.

அன்னை மடியில் கண் திறந்தோம்..🙏
தந்தை மடியில் கல்வி பயின்றோம்..
🙏

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ராசவன்னியன் said:

நன்றி கு.சா..

அந்த பாடலை சீனியர்கள் குறிப்பிட்டு தேர்ந்தெடுத்து பாட சொன்னதற்கு வரலாற்றுக் காரணம் உண்டு. 🙏

அந்த வரலாற்றை  சொன்னியளெண்டால் நாங்களும் தெரிஞ்சு கொள்ளலாமெல்லோ :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

அந்த வரலாற்றை  சொன்னியளெண்டால் நாங்களும் தெரிஞ்சு கொள்ளலாமெல்லோ :)

இதென்ன சார், வெளிப்படையா சொன்னேனல்லோ, ஒங்கள் பெயரைக் கொண்டவரின் அப்பா ஊர் சார் அது..!
அங்கே அவருக்குதானே முதல் மரியாதை தரவேணும்..? 😋

1 hour ago, ராசவன்னியன் said:

அன்னை மடியில் கண் திறந்தோம்..🙏
தந்தை மடியில் கல்வி பயின்றோம்..
🙏

சின்ன புதிர்தானே..? 🤩

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு சிதம்பர சக்கரத்தை பார்த்ததுபோல் இருக்கு.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

அவருக்கு சிதம்பர சக்கரத்தை பார்த்ததுபோல் இருக்கு.....!  😁

 

9 hours ago, குமாரசாமி said:

அந்த வரலாற்றை  சொன்னியளெண்டால் நாங்களும் தெரிஞ்சு கொள்ளலாமெல்லோ :)

 

சிவமயமே எங்கும் சிவமயமே...!  இனி பவபயம் இல்லை எங்கும் சிவமயமே ..!! 🙏

test.jpg   தந்தைக்கு மந்திரம் சொன்ன குமாரசாமி, பழைய நினைவுகளை மீட்டெடுங்கோ! :)

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.